பொறுப்பெடுத்தல் என்றால் என்ன ?
பொறுப்பெடுத்தல் என்றால் என்ன ?
உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம் என்னும் சத்தியத்தை உணர்ந்து, அதனால், 'உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு' என்ற உணர்வுத்தெளிவிலிருந்து சிந்தித்தல், பேசுதல், இயங்குதல் மற்றும் மற்றவர்களையும் இயக்குவித்தல் !
முன்னொரு காலத்தில் யாராவது, எவருமே இல்லை, யாராகிலும் மற்றும் எல்லோரும் என்னும் பெயர்களுடைய நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை ஒரு முக்கியமான வேலை செய்து முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அதை யார் செய்வது ? என்ற கேள்வி எழுந்தது.
'யாராவது' இதைச் செய்ய முடியும், 'யாராகிலும்' இதைச் செய்திருக்க முடியும், ஆனாலும்'எவருமே' இதைச் செய்யவில்லை என்று 'எல்லோரும்' உறுதியாக நம்பினார்.
'யாராவது'க்கு உடனே கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அது 'எல்லோருடைய' வேலை என்று எண்ணினார்.
'யாராகிலும்' இதைச் செய்ய முடியும் என்று 'எல்லோரும்' நினைத்தார், ஆனால் 'எல்லோரும்' அதைச் செய்யப் போவதில்லை என்பதை 'எவருமே' உணர்ந்து கொள்ளவில்லை.
இறுதியில், 'யாராகிலும்' செய்து முடித்திருக்க முடிந்த ஒன்றை, 'எவருமற்றவா்' செய்து முடித்தபோது, 'எல்லோரும்' யாராவது'வைத் திட்டுவதில் தான் இது முடிந்தது.
மூன்று வகையான மனிதர்கள்:
தன்னுடைய சொந்த செயல்களுக்கு தானேதான் பொறுப்பு என்பதை உணராதவன் மிருகம் போல் வாழ்கிறான்- அவன் தாழ்நிலை விழிப்புணர்வில் வாழ்கிறான். தன்னுடைய சொந்த செயல்களுக்கு மட்டுமே தான் பொறுப்பு என்று உணர்பவன் மனிதன்- அவர் நடுத்தரமான விழிப்புணா்வில் வாழ்கிறான். மற்றவர்களின் செயல்களுக்குக் கூட பொறுப்பெடுப்பவன் இறைவனாகிறான்- அவன் தலைமைப் பண்பு விழிப்புணர்வில் வாழ்கிறான்.
சிலவற்றுக்கு, உங்களுடைய செயல்கள் பொறுப்பாகவிட்டாலும் கூட, மற்றவர்களுடைய அந்த அசிரத்தைக்கும் பொறுப்பின்மைக்கும் பொறுப்பெடுப்பது உங்களை ஒரு தலைவனாக்கும்.