எண்ணமனப்பாங்கு - முரண்பாடுகளின் ஆதாரம்
எண்ணமனப்பாங்கு - முரண்பாடுகளின் ஆதாரம்
கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்வி, நிராகரிப்பு, தண்டிக்கப்பட்ட அனுபவம், அவதூறுக்குட்படுதல், அன்பானவர்களின் மரணத்தைப் பார்த்தது போன்ற ஏதாவதொரு ஆழமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் வாழ்வில் நிகழும் எந்த ஒரு சூழ்நிலைக்கும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வகையில் பதில்செயல் புரிவதைத்தான் 'எண்ணப்பாங்கு' என்கிறோம்.
நம்முடைய பதில்செயல்கள், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நெருக்கடியான தருணங்களின்போது, நீங்கள் 'நான் பலவீனமானவன், தோல்வியாளன், யாருமே என்னிடம் அன்பாக இல்லை, வாழ்க்கையே அபாயகரமானதுதான், அதனால் நான் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்' என்று இப்படிப் பல கருத்துக்களை உங்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் உருவாக்குகிறீர்கள்.
கிட்டத்தட்ட எல்லா எண்ண மனப்பாங்குகளுமே எதிர்மறையானவையே, அவை உங்களை வாழ்க்கையில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாலும் கூட! ஏனெனில் அவை உங்களை நீங்கள் சக்தியற்றவராக உணர்ந்த சூழ்நிலைகளிலிருந்து எழுந்தவை!
பொதுவான சில மூல மனப்பாங்குகள்:
-
- நான் ஒரு தோல்வியாளன்
- யாருமே என்னிடம் அன்பாக இல்லை 2.
-
- நான் தனியாள்
-
- நான் அசிங்கமாக இருக்கிறேன்
-
- வாழ்க்கை என்னை ஏமாற்றுவதற்கென்றே இருக்கிறது
- நான் பலஹீனமாகவும், ஆரோக்கியமற்றும் இருக்கிறேன் 6.
- நான் சக்தியற்றவனாக இருப்பதால், நான் மற்றவர்களைச் சார்ந்தே 7. இருக்கவேண்டியுள்ளது
- வாழ்க்கை கடினமானதாகையால், நான் இன்னும் அதிக சாமர்த்தியசாலியாக 8. இருக்க வேண்டும்
- நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கை விசாலமானதாக 9. இருக்கிறது.
எல்லா எண்ண மனப்பாங்குகளுமே குறை புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஏனெனில் வாழ்க்கை கணத்திற்கு கணம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தன்னிச்சையான இயல்புடன் உடனுக்குடன் பதில்செயல் புரிய வேண்டியுள்ளது. ஆனால் தற்போதைக்கு நீங்கள், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட செயல்கள் மற்றும் மனப்பாங்குகளின் ஒரு தொகுப்பே! ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட செயல்களும் மனப்பாங்குகளும் வாழ்க்கை உங்களுக்கு எப்படி நிகழ்கிறதோ அப்படியே அதனுடன் தொடர்புகொள்ள உங்களை அனுமதிப்பதில்லை.
உங்களுக்கு பல எண்ண மனப்பாங்குகள் இருக்கலாம். ஆனால், உங்களுடைய அறிவுக்கு கொண்டு வராமலேயே உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் மூலமனப்பாங்கு ஒன்றுதான்!
உங்கள் அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகள்கூட, மூல-மனப்பாங்கின் விளைவே தவிர வேறொன்றல்ல. உங்களுக்குள் உங்களைப் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்துவிட்டு, ஆனால் வெளியில் வேறொரு மாதிரி உங்களைக் காட்டிக் கொள்வதே அசிரத்தை.