அசிரத்தை, உங்கள் சிந்தனை சக்தியை எப்படி விழுங்குகிறது ?
அசிரத்தை, உங்கள் சிந்தனை சக்தியை எப்படி விழுங்குகிறது ?
நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தீர்களானால், உங்கள் 4 அடையாளங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளிலிருந்தே உங்கள் பிரச்சனைகள் எழுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். உங்களுடைய 4 அடையாளங்களும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து செல்லாதபோது, அது உங்கள் வாழ்வில் நோய்களையும் துக்கங்களையும் குறைவுணர்வுகளையும் விளைவிக்கிறது.
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், உண்மையில் நீங்கள் கொண்டிருக்கும் இந்த அடையாளங்கள் அனைத்துமே, உங்களைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ண மனப்பாங்குகளே! மற்றவர்கள் உங்களைப் பற்றி கொண்டிருக்கும் அடையாளங்கள் கூட, அவர்களுக்குள் நீங்கள் உருவாக்கியதுதான். அதனால், உங்களுடைய எல்லா அடையாளங்களையும் படைத்த படைப்பாளி நீங்கள்தான்! புரிந்ததா?
இப்போது, ஒரு அடையாளம் மற்றொரு அடையாளத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களுடைய சிந்தனையை எப்படி ஒருங்குவிக்க முடியும் ? உங்களுடைய மொத்த சக்தியுமே, சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அடையாளங்களைச் சமாதானப்படுத்தவும் சமரசப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டுவிடும்.
உங்களுடைய அடையாளங்கள் ஒன்றுக்கொன்று இசைவுடன் இருந்தால், உங்களுடைய சிந்தனை முழுவதையுமே நீங்கள் ஒரே திசையில் குவிக்க முடியும். அப்போது உங்கள் சிந்தனை ஒரு லேசர் தூண் போல் தெளிவானதாகவும், கூர்மையானதாகவும் ஆகிவிடும்; உங்கள் சிந்தனைச் சக்தியை நீங்கள் விழிப்படையச் செய்கிறீர்கள்.
நீங்கள் சிரத்தையில் வாழும்போது, அங்கு விழிப்பற்ற சிந்தனைக்கோ, வாழ்க்கைக்கோ இடமில்லை, ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்வில் விளையாடும் காரண காரியங்களைப் பற்றி முழுமையாக அறிந்தவராகவே இருப்பீர்கள்.
உங்களை நீங்கள் எப்படிக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த முறையிலேயே உங்கள் சிந்தனைப்போக்கும் செல்கிறது. உங்கள் விருப்பத்துடன் சிந்தனைப்போக்கு கைகோர்த்துக் கொள்கிறது. அதனால், சிந்தனையின் இந்த 4 பகுதிகளுமே முழுமையாகத் தூய்மையாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உங்களுக்குள் பார்த்து, உங்களைப்பற்றி நீங்களே உங்களுக்குள் கொண்டிருக்கும் அடையாளங்களை அடையாளம் காணுங்கள்.
பிறகு, இந்த அடையாளங்களுடைய உச்சபட்ச சாத்தியக்கூறுகள் என்று நீங்கள் உணர்பவற்றையும், உங்களால் உடமையாக்கிக் கொள்ள முடியும் என்று உணர்கின்ற சிறந்த குண நலன்களையும் மீண்டும் எழுதிக் கொள்ள முடியும். உங்களுடைய சிந்தனை எப்போதுமே உங்கள் உச்சபட்ச மமகாரம், உச்சபட்ச அகங்காரம், உச்சபட்ச அன்யகாரம் மற்றும் உச்சபட்ச ஸ்வ-அன்யகாரங்களுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கட்டும்.
பொதுவாக உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்து, உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் அடையாளத்தைவிட மிகவும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் இந்த முக்கியமான சத்தியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் உங்களைப்பற்றி ஒரு உயர்வான சிறந்த அடையாளத்தைக் காண்பிக்க முடிகிறதென்றால், அந்த உயர்வான அடையாளம் ஏற்கெனவே உங்கள் பாவனை தளத்தில், உங்கள் சிந்தனை தளத்தில் இருக்கிறது என்பதே அதன் பொருள். 'நீங்கள்' என்று எதைவெல்லாம் நீங்கள் நினைக்க முடிகிறதோ, அதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றலை நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கிறீர்கள்!
உங்கள் மமகாரத்தையும் அகங்காரத்தையும் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி:
-
மமகாரம், அகங்காரம் என்ற தலைப்பிட்ட இரண்டு பத்திகளை உருவாக்குங்கள்.
-
முதல் பத்தியில் நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள முதல் பத்து உள்-அடையாளங்களை, நம்பிக்கைகளைப் பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன், நான் நட்புடன் பழகக் கூடியவன், நான் துரதிர்ஷ்டசாலி...
இரண்டாவது பத்தியில் நீங்கள் மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் வெளி-அடையாளங்களைப் பட்டியலிடுங்கள். அதாவது முதல் பத்தியில் எழுதப்பட்டி ருக்கும் உள்-அடையாளங்களுக்குப் பதிலாக நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டும் வெளி-அடையாளங்களை எழுதுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன் என்பது உங்கள் உள்-அடையாளமாக இருந்தால், வெளி-அடையாளமாக என்ன காட்டுகிறீர்கள் என்பதை இரண்டாவது பத்தியில் எழுதுங்கள். சில சமயங்களில் உள்-அடையாளமும் வெளி-அடையாளமும் ஒரே மாதிரியாகக் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் உள்-அடையாளம், 'நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்று இருந்து, வெளி-அடையாளமாகவும் உங்களை 'நட்பு மிக்கவராகக் காட்டிக் கொண்டிருந்தால், இரண்டாவது பத்தியிலும் 'நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்றே எழுதுங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை எழுதுங்கள்.
3.மமகாரம், அகங்காரம் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடுங்கள். இரண்டு அடையாளங்களும் ஒத்திசைந்து இருந்தால், அதைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த அடையாளத்திற்குச் செல்லுங்கள்.
4.எங்கெல்லாம் இரண்டு அடையாளங்களும் முரண்படுகிறதோ அந்த இரண்டையும் இசைவு செய்யுங்கள். மமகாரம், அகங்காரம் இந்த இரண்டினுள் எது உயர்வான கருத்தாக இருக்கிறதோ, அதையே தேர்ந்தெடுங்கள்.
5.உதாரணத்திற்கு எங்கெல்லாம் உங்களுடைய வெளி அடையாளம், உள் அடையாளத்தைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் உள்-அடையாளத்தை, வெளி அடையாளத்துடன் இசைவு செய்ய முடிவெடுங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அந்த வெளி அடையாளத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ அந்த உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இங்கு, உங்களுடைய வெளி-அடையாளமே அளவுகோலாக இருக்கட்டும்.
-
இதையே ஒவ்வொரு அடையாளத்துக்கும் தொடருங்கள். இரண்டு அடையாளங்களையும் ஒப்பிடுங்கள், இரண்டில் எந்த பண்பு நலன் உயர்வாக இருக்கிறதோ, அதையே தேர்வு செய்யுங்கள். எந்த உள் அடையாளம் உயர்வானதாக இருக்கிறதோ அதனருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள். அதே போல் உங்கள் வெளி-அடையாளங்களில் எவையெல்லாம் உயர்வானவையாக இருக்கின்றனவோ அவற்றுக்கருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள்.
-
உங்கள் உள் அடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால், அவற்றுக்கு இணையாக உங்கள் வெளி-அடையாளத்தை உயர்த்துங்கள். அதே போல் உங்கள் வெளிஅடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால் அவற்றுக்கு இணையாக உங்கள் உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இந்தப் பயிற்சி பட்டியலை, உங்கள் உயர் அடையாளத்துடன் இசைவு செய்து கொள்ளும் வரை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.