Chapter 21

மூன்றாவது அடையாளம் -அன்யகாரம்

2 sections

மூன்றாவது அடையாளம் -அன்யகாரம்

இந்த இரண்டைக்காட்டிலும் மூன்றாவதாக அன்யகாரம் என்ற ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள் அன்யகாரம் எனப்படுகிறது. மற்றவர்கள் உங்களை எப்படி உணர்கிறார்களோ அது, நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொள்கிறீர்களோ அதைக் காட்டிலும் வேறானதாக இருக்கலாம். ஏனெனில் மற்றவர்கள், நீங்கள் காட்டும் சூட்சுமமான சமிக்ஞைகளை வைத்துத்தான் உங்களைப்பற்றிய கருத்துக்களை உருவாக்குகிறீர்களே தவிர, நீங்கள் வெளிப்படையாகக் காட்டும் சமிக்ஞைகளை வைத்து அல்ல. நீங்கள் சொல்லாதவற்றையும் கூட புரிந்துகொள்வதில் மனிதர்கள் போதுமான அளவு புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்! ஆம், முக்கியமாக நீங்கள் சொல்லாத விஷயங்களைப் புரிந்துகொள்வதில் !

நான்காவது அடையாளம் ஸ்வ-அன்யாகாரம்:

வாழ்க்கையைப்பற்றிய கருத்து அதாவது ஸ்வ-அன்யகாரம், மிகவும் குட்சுமமான ஒரு அடையாளம், ஏனெனில் இது நேரடியாக உங்களோடு சம்பந்தப்பட்டது அல்ல. ஸ்வ-அன்யகாரம் என்பது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து; வாழ்க்கை, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று நீங்கள் உணரும் உணர்வு.

உதாரணத்திற்கு, வாழ்வு தனிமையானதுதான், வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான், வாழ்க்கை பயம் நிறைந்தது என்றும் நினைக்கலாம்; வாழ்க்கை புனிதமானது, நான் எதையெல்லாம் விரும்புகின்றேனோ, அவற்றையெல்லாம் எனக்கு அது வழங்குகிறது என்றும் நினைக்கலாம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மக்களிடமிருந்தும், சூழ்நிலைகளிடமிருந்தும் பெறப்போகும் அனுபவங்களை இது வரையறுப்பதால், இதுகூட உங்களுடைய அடையாளமே!