முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?
முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?
முழுமைப்படுத்தல் என்பதன் பொருள், கடந்த கால வாழ்க்கையின் நிகழ்வுகள், வார்த்தைகள், செயல்கள், நினைவுகள் - அவை உங்களுடையதாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடையதாக இருந்தாலும் சரி, அவற்றைப் பற்றிய தொக்கிய விளைவுகள் இல்லாமல் வாழ்வதும் செயல்புரிவதும்தான்.
'தொக்கிய விளைவுகள் இல்லாமல்' இருக்க வேண்டுமென்பதன் பொருள், நீங்கள் கடந்த காலத்தையே மறந்து விட வேண்டும் என்பது அல்ல. நீங்கள் முழுமையுடன், நிறைவுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் கடந்த கால நிகழ்வுகளையும் செயல்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்குள் வலியையோ, கோபத்தையோ, குற்றவுணர்ச்சியையோ ஏற்படுத்துவதற்குரிய சக்தியைப் பெற்றிருக்காது.
உங்களுக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் அபூர்ணத்துவத்தை உருவாக்காமல் இருப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் ஒரே அழகான வழி ஒருங்குவித்தலே!
பூரணத்துவத்திற்கான இரண்டு நுட்பங்கள்:
வாழ்க்கையை அது எப்படி நிகழ்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களைத் துடுக்கும் கடந்தகால நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அது குறைவுணர்வே. அதனால் உங்களுக்குள் துக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி, அதை மீண்டும் அப்படியே வாழ்ந்து, அதிலிருந்து உங்களை நீங்களே விடுபடுத்திக்கொள்ளும்போது நிறைவணர்வு அரம்பிக்கிறது.
கடந்த காலத்தை மாற்றியமைக்க, உங்களால் முடிந்த ஒரே வழிமுறை நிறைவுப்படுத்துதலே !
கண்ணாடியின் முன் சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள்.
- உங்களுடைய முழு உருவத்தையும் பார்க்கக்கூடிய அளவிற்கு கண்ணாடி பெரியதாக இருக்க வேண்டும்.
கண்ணாடியில் தெரியும் உங்களுடைய பிம்பத்தை கண்ணோடு கண்ணாகப் பாருங்கள்.
ஆழமாக, கண்ணோடு கண் தொடர்பு கொண்ட அந்தக் கணம்மே நடக்கும் முதல் விஷயம் உங்கள் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிய ஆரம்பிப்பதுதான்.
- அதை அனுமதியுங்கள்.
கண்ணாடி முன் அமர்ந்து உங்களுக்கு நீங்களே என்னென்ன சொல்ல விரும்புகிறீர்களோ, அதைப் பேசுங்கள்.
- உங்களுடன் நேரத்தை செலவழியுங்கள். பேசுங்கள். பேசுங்கள்.
இந்தக் குறையுணர்வை, இந்தக் குறை புரிந்துணர்தலை உங்களுக்குள் உருவாக்கிய முதல் நிகழ்வை அடையாளம் காணுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவே, உங்கள் துக்கங்களுக்கெல்லாம் காரணமான மூல மனப்பாங்கை உருவாக்குகிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முதன் முதன் முரண்பாடுகளை அனுபவித்த சில நிகழ்வுகளுக்குள் செல்லுங்கள் இந்த நிகழ்வுகள் சரியாக உங்கள் 3 வயதிலிருந்து 5 வயதிற்குள் நடந்திருக்கலாம். அந்த நிகழ்வை மீண்டும் வாழுங்கள்.
கண்ணீர் வந்தாலும், கோபம் வந்தாலும், அவற்றை அனுமதியுங்கள்.
- உங்கள் கடந்தகாலத்தை நேருக்கு நேர் துணிவுடன் சந்திக்கும்பொழுது வலி மறைந்து விடுகிறது, கோபம் மறைந்து விடுகிறது! கோபம் மறையும்பொழுது அது அன்பாக மாறுகிறது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சக்தி, கோபமாக வெளிப்படும்போது, அந்தச் சக்தியிலிருந்து கோபத்தை விலக்கி விட்டால், அது அப்படியே அன்பாக மாறிவிடும்.
மூலமனப்பாங்குகளின் மீது வேலை செய்வதன் மூலம் மட்டுமே, உங்களுள் நிறைவுத் தன்மை நிகழ்ந்துவிடுவதில்லை. அந்த மூலமனப்பாங்கிலிருந்து முளைத்த ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும். நீங்கள், உங்கள் நினைவுக்கு எட்டியவரை பின்னோக்கிச் சென்று, உங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை மேலே எடுத்து வாருங்கள். அதை முழுமைப்படுத்துங்கள். இதேபோல் ஒவ்வொரு மூலமனப்பாங்கையும், அதிலிருந்து இன்றுவரை முளைத்த நிகழ்வுகளின் பதிவுகளையும் நிறைவுசெய்யுங்கள்.