சொன்ன வார்த்தையை நிறைவேற்ற முடியாவிட்டால் என்ன ஆகும்?
சொன்ன வார்த்தையை நிறைவேற்ற முடியாவிட்டால் என்ன ஆகும்?
உங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற நீங்கள் உங்களால் ஆன எல்லா மயற்ச் களைப் போட்டும், உங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அதை முன்கூட்டியே உங்களுடனும், மற்றவர்களுடனும் தெரிவித்து விடுவதன் மூலம், நீங்கள் உங்களுடனும் மற்றவர்களுடனும் முறையேற்றிக் கொள்ளலாம்.
பிறகு நீங்கள் அந்த வாக்குறுதியைப் பற்றிய குற்றவுணர்ச்சியோ, வலியோ, தொக்கி நிற்கும் நினைவுகளோ இல்லாமல், அடுத்தடுத்து தொடர்ந்து சென்றுகொண்டே இருங்கள்!
ஒன்று, சொன்ன வார்த்தையை செய்துமுடித்து நிறைவேற்றுங்கள்; அல்லது செய்துமுடிக்க முடியவில்லையென்றால், அதை முன்கூட்டியே உங்களுடனும், மற்றவர்களுடனும் தெரிவித்து முறையேற்றுங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முறையேற்றுதல்கூட ஒருங்குவித்தல்தான்!
உங்களுக்குள்ளும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசிய வார்த்தைகளை முழுமைபடுத்துதலை நோக்கி ஒழுங்குப்படுத்துவதே ஒருங்குவித்தல் எனப்படுகிறது !