பவளக் குன்றில் சுவாமிகள்
பவளக் குன்றில் சுவாமிகள்
"இதையெல்லாம் எப்படி நம்புவது?" என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடக்கில், வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அகங்காரம் அற்றுப் போனால் உயரே பறக்க முடியும்" என்று யோகி கூறினார். சொன்னது மட்டு மில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து புமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். "நேரம் வரும்போது எல்லாம் புரியும்" என்று புன்முறுவலோடு யோகி கூறினார்.
4. சிறுவனின் புழை
தனக்குப் பரிசாக கிடைத்த விக்ரகம், தான் செய்த விக்ரகங்கள் என்று விக்ரகங்களைத் தனியே ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். களி மண்ணைக் குழப்பி, உழப்பி விளையாடும் வயதில் ராஜசேகரன் தான் கோயிலில் பார்த்த தெய்வ விக்ரகங்களின் உருவத்தைக் களி மண்ணில் செய்து பார்த்து மகிழ்நீது கொண்டிருந்தான்.
்ட நேரம் போவது தெரியாமல் சில நேரம் மணிக்கணக்கில் ராஜசேகரன் பூஜையில் ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் சிறுவன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பூஜையில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வான். குடும்பத்தார் இந்தச் சிறு பிள்ளையின் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அகம் மகிழ்ந்து கலந்து கொள்வார்கள்.
- மாதாஜி குப்பம்மாளுடன்
அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சிறுவன் ஜெயம், பிரார்த்தனை என்று ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஒர் அற்புத முக்கோண வடிவம் தரிசனத்தில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தவுடன் தான் தரிசனத்தில் கண்ட வடிவத்தை வரைபடமாக்கி விட்டான் சிறுவன்.
தங்கள் குடும்பத்திற்கு நட்பு முறையில் அறிமுகமாகி இருந்த மாதாஜி குப்பம்மாளிடம் ராஜசேகரனின் பாட்டி தன் பேரன் வரைந்த வரைபடத்தை காண்பித்தார். பார்த்த மாத்திரத்தில் வெகு ஆச்சரியத்தோடு, "இது "ஸ்ரீ சக்கரம்! ஸ்தபதிகளும், ஆச்சாரியர்களுமே வரையக் கஷ்டப்படும் இந்த ஸ்ரீ சக்கரத்தை இந்தச் சிறுவனால் எப்படி இவ்வளவு தெளிவாக வரைய முடிந்தது?" என்றார். சிறுவனுக்கோ தான் வரைந்திருப்பது "ஸ்ரீ சக்கரம்" என்ற விஷயம் தெரியாது. மாதாஜி குப்பம்மாள் ஆச்சர்யம் நிறைந்த பார்வையோடு சிறுவனை, "நாங்கள் எவ்வளவோ தியானம், பூஜைகள் செய்தும் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பக்தி கலந்த குரலில் கேட்டார்கள். இது போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்போது சிறுவன் ராஜசேகரனுக்குப் புரியாது.
அதன் பின் மாதாஜி குப்பம்மாள் சிறுவனுக்கு "சக்தி மந்திரத்தையும்", 'ஸ்ரீ சக்கர பூஜை" செய்யும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.