99. இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்
# இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்
Even though you are a man now, you are a reflection of super consciousness
ஒரு பத்து வயது இருக்கும். சிறு வயதிலிருந்தே அண்ணாமலையார் கோவிலுக்குத் தினமும் சென்று சேவை செய்வோம். சேவை செய்வதென்றால் அங்குத் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்வது, தரையைக் கழுவி விடுவதற்காக பைப் பிடிப்பது என இப்படி
ஏதேரைம் ஒரு காரணக்கை உருவாக்கியாவது தொடர்ந்து கோவிலுக்குச் சென்று சேவை செய்வோம். பள்ளி மாணவா்கள் போன்று விளையாடிக்கொண்டிருந்த காலம் அது.
இப்போதுதான் ..... கதைக்குள்ளே நுழைகிலே றாம்.
இதைச் சொல்லிய பிறகுதான் பிறப்பையே சொல்லியிருக்க வேண்டும்.
இந்தக் கதை புரிந்தால்தான் பிறப்பின் இரகசியமே புரியும்.
விரிவாகச் பிறப்பை சொல்லவேண்டும் என்று நினைக்கேன். இந்தக் ஆனால், கதை புரிந்தால்கான்

அருணகிரியோகீஸ்வரர் மண்டபம் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.

அந்தக் கதை புரியும். அதனால்தான் பலவிதங்களில் எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி க்கி ரேன்.
அதுகான் இறுதியான நாடகம் (Ultimate Drama).
ஒரு நாள் என்ன ஆனது, ரொம்பத் தீவிரமாக, எப்படியாவது கடவுள் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை
தீவிரமாக எழுந்தது. அப்பொழுதே ஒரு ஆழமான தேடுதலும், ஏக்கமும் இருந்ததினாலே, கோயிலுக்குப் பின்புறம் இருக்கின்ற அண்ணாமலையார் சந்நிதிக்குப் பின்புறம் அமர்ந்து இதையே சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
அங்கே ஒரு சின்ன குகைமாதிரி இருந்தது. அந்தக் குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒருவர் வெளிவந்தார். ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு சன்யாசி அவர்.
தகதகவென்று பொன்மேனி, பொன்னிறம், கண் அவ்வளவு பளபள வென்று பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருந்தார். இடுப்பில் ஒரு காவி. தோளில் ஒரு காவி. கையிலும் கழுத்திலும் ருத்ராக்ஷம். நீண்ட விரிந்த கூந்தலோடு வந்தார்.
அவர் வந்த உடனே நான் கேட்டேன், ''சாமி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் யார்?'' அவர் சொன்னார், ''நான் அருணகிரியோகீஸ்வரர். நான் இங்கேதான் இருக்கி றன்.''
'அது ஒரு குகை. அதன் உள்ளே ஒரு வழி இருக்கும். அந்தக் கதவை திறந்தவுடனே குகை மாதிரி போகும், அதிலிருந்துதான் வருகிறார்' என்று நான் நினைத்தேன்.

அருணகிரியோகீஸ்வரர் பரமஹம்ஸருடன் அமர்ந்து பேசிய இடம்.
ஏனென்றால் திருவண்ணாமலையில் எங்குப் பார்த்தாலும் நிறைய குகைகள் இருக்கும். அந்த மாதிரி, இங்கும் இருக்கும்போலிருக்கிறது.
அதுபோல் ஒரு ஒரு குகையில்தான் இவரும் இருக்கிறார் இருக்கிறார் என்று நினைத்தேன்.
என்னருகில் வந்து உட்கார்ந்தார்.
வெகு நாட்கள் பழகிய மிக நெருங்கிய உறவினர் போன்ற நெருக்கத்தை உணர்ந்தேன்.
ரொம்ப நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம். அதன் பிறகு குகைக்குள் போய்விட்டார்.
"நான் அருணகிரியோகீஸ்வார். நான் இங்கேதான் இருக்கிறேன்."
அதன் பிறகு நான் எப்போது அந்தப் பக்கமாக வந்து, ''சாமி, சாமி,'' என்று கூப்பிட்டாலும், உடனே வெளியில் வந்துவிடுவார்.
உட்கார்ந்து என்னோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பார். நிறைய ருத்ராக்ஷம் கொடுப்பார்.
சில நேரத்தில் சாப்பாடும் கொடுப்பார்.
சில நேரத்தில் நான் சாப்பாடு எடுத்து வந்து அவருக்குக் கொடுப்பேன். கூப்பிட்ட உடன் வருவார்; சாப்பிடுவார்; பேசுவார்; போய்விடுவார். இது மாதிரி ஒரு ஆறுமாத காலம் சென்றிருக்கும். இந்தப் பழக்கம் இப்படியே சென்று கொண்டிருந்தது.
பள்ளி விடுமுறை, மே மாதத்தில் வரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். விடுமுறை தினத்தில் காலையில் எழுந்த உடனேயே அங்குச் சென்று விடுவேன்.
அவர்பாட்டுக்கு என்னோடு வந்து உட்கார்ந்திருப்பார், பேசிக்கொண்டிருப்பார். நெருங்கிய தோழர்கள் மாதிரி ஆகிவிட்டோம். இந்த ஈாப்பு ரொம்ப ஆமமான ஈர்ப்பாகிவிட்டது.
இந்தக் கதையை ஆழமாகப் பரிந்து கொள்ளுங்கள்.
உபநிடதத்தில் ஒரு அருமையான கதை இருக்கிறது.
ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் இருந்ததாம். அதில் ஒரு கிளி மேல்கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்ததாம். கீழ்கிளையில் உள்ள சிறிய கிளி, கீழே உள்ள கிளைகளில் உள்ள பழங்களைக் கொறித்துச் சாப்பிடுமாம்.
திடீரென்று பழங்களில் ஒன்று கசப்பாக இருந்துவிட்டால், உடனே அந்தக் கிளி நினைக்குமாம், 'அய்யய்யோ!, இந்த மாதிரி இனிப்பு, கசப்பு என்று பழங்களை சாப்பிட்டுக் கஷ்டப்படுவதைக் காட்டிலும் அந்த மேல் கிளையில் சாந்தமாக அமாந்திருக்கும் அந்தக் கிளியைப் போன்றே அமர்ந்திருக்கலாம்' என்று நினைக்குமாம்.
அந்தச் சாந்தமாக, ஆனந்தமயமாக, ஒளிமயமாக இருக்கின்ற அந்தப் பறவையைப் பார்த்து, அதை நோக்கிச் செல்ல ஆரம்பிக்குமாம்.

அந்தச் சமயத்தில் மீண்டும் ஒரு பழத்தைச் சாப்பிட ஆரம்பிக்குமாம். இனிப்பான பழங்களைச் சாப்பிடுகின்றவரைதான் அது ஜாலியாக, சந்தோஷமாக இருக்குமாம். அது மேலே இருக்கிற பறவையைப் பற்றி நினைக்கவே நினைக்காதாம்.
கசப்பான பழக்கைச் சாப்பிட்டவடன், 'அய்யய்யோ! வாம்க்கையே இப்படித்தான்' என்று நினைக்குமாம்.
கசப்பான பழக்கைச் சாப்பிட்ட உடனேயே மேலே உள்ள பறவையைப் பற்றி நினைக்குமாம். இல்லையென்றால் மேலே இருக்கின்ற பறவையைப் பற்றி நினைக்காது.
நாம்கூட நம் வீட்டில் கஷ்டம் வந்தால்தான் கடவுளை நினைக்கிறோம். வீட்டில் கஷ்டம் வந்தால், உடனே, 'சாமி மாதிரியே ஆயிடலாம்பா' என்ற நினைக்க வேண்டியது. வீட்டிலே சந்தோஷமாக இருந்தால் நினைத்துப் பார்ப்பதுகூட கிடையாது. அதுதான் மனம்.
அது மாதிரியே, அந்தக் கசப்புப் பழத்தைச் சாப்பிட்ட உடனேயே மேலே போகலாம் என்று நினைக்கும். இது மாதிரி அந்தச் சின்ன பறவை விளையாடி இறுதியில் ஒரு நாள் பொறுமையாக மேலிருக்கும் பெரிய பறவையிடம் வந்தடைந்து விட்டதாம்.
அந்தப் பெரிய பறவைக்கு அருகே வர வர, மிக அருகில் வந்த பிறகுதான்
அந்தச் சின்ன பறவைக்குத் தெரிந்ததாம்.... ''தான் அந்தப் பெரிய பறவையினுடைய ஒளியிலே கரைந்து கொண்டு இருக்கிறோம்'' என்று! அருகில் வந்த உடனே, திடீரென்று அந்தப் சின்னப் பறவை இதை புரிந்துகொண்டதாம்.
'நாம் தனியான ஒரு சின்னப் பறவையே கிடையாது. அந்தப் பெரிய பறவையினுடைய நிழல்தான் தன்னை தனி ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறது' என்று சிறிய பறவைக்குப் புரிந்ததாம்.
நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்களும் உலகத்திலே பல்வேறு கஷ்டங்களுடனும் கசப்பைச் பறவையைப் தாவி மேல் வரும்பொழுதுதான் புரியும், 'நீ ங்கள் ஞானியினுடைய பிரதிபலிப்புதான் நீங்கள்' என்பது புரியும்.
