Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

100. அனுபவித்திராத அனுபவம்

# அனுபவித்திராத அனுபவம்

An Experience which I have never experienced

சின்னப் பறவைக்கும், பெரிய பறவைக்கும் உள்ள ஈர்ப்பைப் போல எனக்கும், அருணகிரியோகீஸ்வரருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அது ஆழமான ஈர்ப்பு.

அதாவது வீட்டில் என்ன செய்தாலும் அதைக் கட்டிக்கொண்டு வந்து அவருக்குக் கொடுப்பேன்.

வீட்டில் எது இருந்தாலும் சாமியார்களுக்கு போய்விடும்.

அந்தச் சன்யாசிக்குக் கொடுப்பதற்காக! வீட்டில் எனக்குப் பெரிய பட்டமே உண்டு. வீட்டில் என்ன இருந்தாலும் சாமியார்களுக்குப் போய்வி(டும்.

என் கையில் எதுவுமிருக்காது. வீட்டிலும் எது இருந்தாலும் சரி, அது பணமாக இருந்தாலும் சரி, துணியாக இருந்தாலும் சரி, வீட்டுச் சாமான்கள் எதுவாக இருந்தாலும் சரி, அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்ச் சாமியார்களிடம் கொண்டு கொடுத்துவிடுவேன்.

அதிலும் இவர் என் உயிருக்கே நெருக்கமானவர். அதனால் வீட்டில் என்ன இருந்தாலும், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். அவர் மிக அன்போடு நடந்து கொள்வார். என்ன சொல்வது? 'மகான்' என்ற வார்த்தையெல்லாம் அப்பொழுது எனக்குத் தெரியாது.

'அவர் ஒரு சன்யாசி',

'ஒரு ஞானி'

அவ்வளவுதான். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படியே ஒரு ஆறு மாதம் பழகிக்கொண்டு இருந்தோம். இந்த உறவு வலுப்பட, வலுப்பட அவர் பல்வேறு விதமான விஷயங்களைச் சொல்வார்.

வாழ்க்கையைப்பற்றி, இதைப்பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும் சொல்வார். அதை ஆழ்ந்து குட்டுக் கொண்டிருப்பேன்.

ஒரு நாள் அவர், ''நான் இருக்கின்ற இடத்திற்கு வருகிறாயா ?' என்று அழைத்தார்.

அருணகிரியோகீஸ்வரா பாமஹம்ஸ்ரை சென்ற குகையின் நுழைவாயில் ...

நான் அவரிடம். அவரிடம். குகைக்குள்ளேதானே!'' என்று கேட்டேன். ''இந்தக் குகை தானே சாமி ? வருகிறேனே. சொன்னேன்.

அன்றைக்கு ஜனவரி 1 ம் தேதி. எப்படி எனக்குத் தேதி ருரபகம் இருக்கிறதென்றால், கோயிலைக் என்றால், தேங்கி இருக்கும்.

அன்று இரவெல்லாம்

கழுவிவிட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் கோவில் காவல்காரருடன் நானும் சேர்ந்து கழுவி விட்டிருந்ததினாலே, இரவெல்லாம் ரொம்ப அலுப்பாக இருந்தது. அதனால் சன்யாசியின் இல்லத்திற்குள் சென்று கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவா என்னை அந்தக் குகைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.

அந்தக் குகையினுள் நுழைந்த உடனேயே, உடலினுள் ஏதோ ஒருவித மாற்றம் தோன்றிய மாதிரி இருந்தது.

அதன் பிறகு திடீரென்று ஒரு கதவு திறந்தது. திறந்தால் அதற்குள் ஒரு மலைமாதிரி தெரிந்தது !

அதில் தடதடவென நடந்து மலைக்குள்ளேயே போய்விடலாம் என்பது மாதிரி இருந்தது.

நான் ரொம்ப சின்ன பையன். இந்தக் குகைக்குள்ளே மலைக்குப் போகிற வழி இருக்குமோ! என்று நினைத்தேன். ஏனென்றால், கோவிலுக்குள்ளே மலைக்குப் போகும் வழிகளும் நிறைய உண்டு.

என்னை அழைத்துக் கொண்டு குகைக்குள்ளே போனார். அங்கே போனால், பெரிய மலை இருந்தது. மலைக்கு மேலே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.

ஆலமாத்திற்குக் கீழே சன்யாசிகள் கூட்டமாக அமாந்திருந்தார்கள். இவர் நேரே சென்று அவருடைய இடத்தில் உட்கார்ந்தார். அவர்கள் மத்தியில் உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது, 'அவர்தான் குரு' என்று.

அவர் சென்று உட்கார்ந்த தோரணையிலேயே எனக்கு, 'அவர்தான் குரு' என்பது தெளிவாகத் தெரிந்தது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதே போன்ற அனுபவத்தை இரமண மகரிஷியும் சொல்கிறார்.

அவரும் இந்த ஆலமரத்தையும், அந்தக் குருவையும் பார்த்திருக்கிறார்.

அவர்தான் தெரி ந் த வு ட யேன யே அவருடைய விழுந்து அந்த ஆலமரத்தின் அமர்ந்திருப் பவர்களை ப் அங்கு பார்க்கால் எல்லோருமே காவி போட்டு இருந்தார்கள்.

அதில் நான் மட்டும்தான் காவியில்லாமல் ஆடையில் இருந்தேன்.

அப்போகெல்லாம் சிறுவர்கள் எல்லோரும்

யிடதியில் இருக்கும் பழமையான குணமளிக்கும் ஆலமரம்.

போகாவிட்டாலும், பெரும்பாலான நேரம் பள்ளிச்சீருடைதான் போட்டிருப்போம்.

பள்ளிக்குப் போகாத நாளில் கூட அதே உடைதான் அணிந்திருப்போம். வண்ணவண்ண நிறங்களில் எல்லாம் போடுவது கிடையாது.

அந்த சூழ்நிலையிலே நான் மட்டும்தான் காவி உடை போடாமல் பளிச்சென்று வெள்ளைச் சீருடையிலேயே நின்றிருந்தேன். எனக்கு எப்போதும், 'நான் ஒரு சன்யாசி' என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். காரணம் தெரியாது.

அருணகிரியோகீஸ்வரர் என்னை அழைத்துச் சென்றிருந்தபோது நான் சாதாரண உடையிலிருந்தேன். என்னைத் தவிர அங்கிருந்தவர்கள் எல்லாருமே காவியில் இருந்தார்கள்.

உயர்ந்த தியான உணர்வில் குருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே 'இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல' என்பது, சந்தேகம் இல்லாமல் தெளிவாகப் புரிந்தது. அங்கிருந்த சூழலும், குழ்நிலையும் நான் அதுவரை பார்த்திராதது. அனுபவித்திராதது.

அப்போது அவர்கள் தங்களுக்குள், ''சன்யாசியல்லாத இந்தச் சின்ன பையன் யார்?'' என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டதும் சன்யாசிக்குக் குறைவாக அவா்கள் என்னை மதிப்பிடுவதாக எண்ணினேன்.

சிறுவயதினருக்கே உரிய சீற்றத்தோடு, ''ம்ஹும்… நான் சன்யாசிதான், எனக்கு நீங்களே சன்யாசம் கொடுங்கள்,'' என்று அருணகிரியோகீஸ்வரிடம் கேட்டேன்.

அருணகிரியோகீஸ்வரர், ''அப்பா! நீ சன்யாசி இல்லை என்று அவா்கள் சொல்லவில்லை. உனக்குக் காவி இல்லையா என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்," என்று சொன்னார்.

சொல்லிவிட்டு அந்தச் சன்யாசி களைப் பார்க்கார்.

என்னை அருகில் அழுத்தார். அருகில் சென்றேன். அங்குப் பதிய காவி இல்லை. உடனே தன் கோளில் போட்டிருந்த காவியை அப்படியே எடுத்து எனக்குப் போர்த்திவிட்டார்.

அப்போது என்ன நிகழந்ததோ அதை அப்படியே சொல்கிறேன்.

சிறுவயது பிள்ளைக்கு மற்றவர்களுக்கு முன்னால் ஆடையில்லாமல் இருக்கவே முடியாது.

ஆனால், அருணகிரியோகீஸ்வரா எனக்குக் காவியளித்தபோது அந்தக் காவியை அவர்கள் முன்னிலையிலேயே மாற்றிக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது நமது பாரம்பரியத்தில் பூர்ண சன்யாஸ் தீகைஷ் இவ்வாறுதான் நடக்கும் என்று.

நானும் பழைய துணியைக் கழற்றிவிட்டு, காவியை ஆனந்தமாய் அணிந்து கொண்டேன். ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மீண்டும் அழைத்துக் கொண்டு குகைக்கு வெளியே வந்து விட்டுவிட்டார்.