101. கடவுளோடு விளையாட முழயும்
# கடவுளோடு விளையாட முழயும்
You can play with God
ந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள மாதாஜி விபுதானந்த தேவியை பார்க்கக் கிளம்பினேன். அவரை மாதாஜி குப்பம்மாள் என்றும் சிலா் சொல்வார்கள்.
மாதாஜி குப்பம்மாள் எனக்கு அப்போது குரு போன்று இருந்தார்கள். அவா்களிடம்தான் எல்லா விஷயங்களையும் போய்ப் பகிர்ந்து கொள்வேன்.
இது மாதிரி எந்த ஆன்மீக அனுபவம் நடந்தாலும், வாழ்க்கையில் எது நடந்தாலும் அவரிடம்தான் சொல்வேன்.
அவரை மாதாஜி விபுதானந்த தேவி என்றுதான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய சன்யாஸ தீக்ஷா நாமம் அதுதான்.
இந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்காக மாதாஜியை நேராகச் சென்று பார்க்கப் போனேன். விபுதானந்த தேவியை நேரில் பார்த்கேன்.
மாதாஜி என்னைப் பார்த்ததும், ''இது என்ன காவி உடை?'' என்றார்.
உடனே நான், ''அம்மா, ஒரு சன்யாசி எனக்கு இதைக் கொடுத்தார்,'' என்றேன்.
மாகாஜி, ''எந்த சன்யாசி உனக்குத் தாவி கொடுத்தார். சன்யாசி உனக்குக் காவி கொடுத்தார் என்றால், நீ அவருடைய சிஷ்யனாகி விட்டதாய் அர்த்தமாகிவிடுமே! நீ அவருடைய சீடனாகி விட்டாயே.நீ எப்படிச் சன்யாசம் வாங்கலாம் ?''என்று அந்த மாதாஜி 'ஒ'வென்று சத்தம் போட்டார்கள்!
எனக்கு அப்பொழுதுதான் 'ஷாக்' அடித்த மாதிரி இருந்தது.
ஒன்றுமே புரியவில்லை. "என்னடா இது? சன்யாசம் கொடுத்ததாக சொல்றாங்க. இந்த அம்மாவிடம் ஏன்தான் வந்து சொன்னோமோ?'' என்று நினைத்தேன்.
ஏனென்றால் இந்த மாதாஜி என்னைப் பாராட்டுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஏன் இப்படி இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
உடனே அந்த மாதாஜி, ''எந்த சன்யாசி என்று சொல்லு, எனக்கு அவரைக் காட்டு,'' என்றார்.
நான், "அதற்கென்ன, வாங்க காட்டுகிறேன்," என்று சொல்லி நேரே அந்தக் குகைக்கு அருகில் அமைத்துச் சென்றேன்.
மாதாஜியை அழைத்து வந்து, எந்த குகைக்குள்ளிருந்து அவா தினமும் வந்து போவாரோ, அதே குகைக்கு முன்னே எப்போதும் கூப்பிடுவதுபோல், ''சாமி, சாமி,'' என்று கூப்பிட்டேன். வழக்கமாக அங்கு நின்று அவரைக் கூப்பிட்டாலே வெளியே வந்து விடுவார்.
தேவி பார்க்கணும்னு சொல்றாங்க, '' என்று கூப்பிட்டேன்.
ஒரு தரம் கூப்பிட்டேன் வரவில்லை. இரண்டாவது தரம் தரம் கூப்பிட்டேன் அப்போதும் வாவில்லை.
விபுதானந்த தேவி மாதாஜிக்கு ''நான் எங்கிருந்தோ காவித் துணியை திருடிக் கொண்டு வந்துவிட்டேன், ' என்று பயம்.
விபுதானந்த தேவி வந்த உடனேயே, "சாமி, வெளியில் வாங்க. விபதானந்த


அந்த அம்மா என் பாட்டியின் உறவினா், அதிலும் பாட்டியினுடைய தோழி.
மாகாஜி உடனே, ''டேய் எந்த சன்யாசி உனக்குக் காவி கொடுத்தாரா அல்லது எங்கேயாவது திருடிட்டு வந்து பொய் சொல்றியா?'' என்று சொல்லி என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
நான் சொன்னேன், ''இல்லை இங்குதான் அந்தச் சன்யாசி இருந்தார். அவர்தான் வந்து கொடுத்தார்," என்று சொன்னேன்.
உடனே மாதாஜி, ''எங்கிருந்து வந்தாங்க ?'' என்று கேட்டார்.
நான் அந்தக் குகையைக் காண்பித்து, ''இங்கே இருந்துதான் வந்தாங்க,'' என்று சொன்னேன்.
உடனே மாதாஜி, ''ஓ! இந்தக் குகையா? வா,'' என்று குகையில் கை வைத்துத் தள்ளினார். அப்பொழுதுதான் தெரிந்தது, அது குகையே கிடையாது! அது ஒரு சமாதி என்று.
எனக்கு ஷாக் ஆகிவிட்டது!
ஏனென்றால் அதுவரை நான் சொன்னதெல்லாம் பொய் சொன்ன மாதிரி ஆகிவிட்டது அல்லவா !
குகையே இல்லை என்கின்றபோது அந்தக் குகையிலிருந்து எப்படிச் சன்யாசி வெளியே வரமுடியும் ? எப்படிக் காவி கொடுக்கமுடியும் ? ஆனால், இது அத்தனையும் நடந்திருக்கிறது.
மாதாஜிக்கும் பயங்கர ஷாக் ! எனக்கும் ஷாக் !
நான் எங்கிருந்தோ காவியைத் திருடிக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அந்த மாதாஜி தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள். அதை மறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி 'ச ன்யாசி வந்தார், கொடுத்தார்,'' என்று பொய் சொல்வதாகவே விபுதானந்த தேவி முடிவு செய்துவிட்டார்கள்.
'திருடிவிட்டு அதை மறைப்பதற்குப் பொய்யும் சொல்கிறான்' என்று நினைத்து, கோபத்தில் மாதாஜி அங்கேயே 'பளிச், பளிச்' என்று நான்கு அறை கொடுத்தார்கள்.
நான் என்ன சொன்னாலும் அதை விபுதானந்த தேவி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
"நீ எங்கிருந்தோ திருடியிருக்கிறாய். எங்கிருந்து எடுத்தாய்?" என்று ரொம்பக் கடுமையாக கேட்டார். ஒருவருக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை.
என்ன சொன்னாலும் அவா்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதபோது நாம் என்ன சொன்னாலும் அது மேலும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சீடர்களின் சந்தேகங்களுக்கு எப்போதும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டே வருவார்.
சீடா்களின் சந்தேகங்களும் மறைந்து கொண்டே வரும். ஆனால், அந்தப் பதிலைப் பொருட்படுத்தாத சிலா் விதண்டாவாதமாகக் கேட்கும் கேள்விகளுக்கு என்ன செய்வாராம், ஒன்றும் பேசாமல் சாந்தமாக அவா்களுடைய கையை பிடித்துக் கொள்வாராம்.
அதுவரை பேசிக் கொண்டே இருந்தவர்கள், அமைதியாவது மட்டுமல்லாமல் அவர்களுள் அந்தக் கேள்வி மீண்டும் எழுவே எமாது. சக்கி பாய்ந்ததும், கேள்விகள் கரைந்து விட்டிருக்கும். விபுதானந்த தேவியின் சந்தேகம் அதிகமாகிக் கொண்டே வர்கது. 'பளீ'ரென்று அடிக்க பிறகு மேலும் விளக்கம் அளிப்பதை நிறுத்தினேன்.
அப்போது அவரிடம் சொன்னேன்
''பாட்டி... உன் மேல் சத்தியம் !
என் மேல் சத்தியம் !
நம்மை ஆளும் இந்த அண்ணாமலையார் மீது சத்தியம் !
அவர்தான் வந்தார்.
அவர்கான் இந்தக் காவியை போர்த்திவிட்டார், '' என்று விபுதானந்த தேவியின் தலை மீது, என் கையால் அடித்துச் சத்தியம் செய்தேன்.
பின் அவரது கையிலும் சத்தியம் செய்தேன்.
சத்தியத்தைச் செய்து விட்டு விபுதானந்த தேவியின் கண்களைப் பார்த்தேன். கரகர வென்று கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
அருணகிரியோகீஸ்வரர் சன்யாசம் அளித்த பிறகு எனக்குள் என்ன அபைவம் பொங்கிக் கொண்டிருந்ததோ, அதே அனுபவம் அவருக்குள்ளும் நிகழ்ந்தது. சக்தி பாய்ந்ததும் அவருக்குள் இருந்த சந்தேகம் கரைந்து விட்டது.
உடனே மாதாஜி கேட்டார்கள், ''டேய், உண்மையாகவா சொல்ற ? அவா எப்படிடா இருந்தார்?'' என்று கேட்டார்.
நான் சொன்னேன், '30, 35 வயது இருக்கலாம். நீளமான முடி இருந்தது, விபூதி வைத்திருந்தார். குங்குமம் வைத்திருந்தார். கண்கள் பளபளவென மிளிர்ந்தன. உடம்பில் ருத்ராக்ஷம் போட்டிருந்தார்,'' என்று அவரைப் பற்றி விளக்கினேன்.
உடனே மாதாஜி, "பேர் ஏதாவது சொன்னாராடா ? எத்தனை நாட்களாக அவரை பார்க்கிறாய் ?' என்று கேட்டார்கள்.
'ஒரு ஏழெட்டு மாதமாக கூட இருக்கலாம். நான்
''அருணகிரியோகீஸ்வரரே உணக்குச் சன்யாசம் கொடுத்திருக்கிறார். '' என்று பூரித்துப் போனார்.

வந்து கூப்பிடும் போதெல்லாம் வெளியே வருவார். இரண்டு பேரும் உட்கார்ந்து பேசுவோம், '' என்றேன்.
''சரி, பெயர் ஏதாவது சொன்னாராடா?'' என்று கேட்டார்.
நான் சொன்னேன், ''ஆமாம் பெயர் சொன்னார்.''
''என்ன பெயர் சொன்னார் ?''என்றார்.
உடனே நான், ''அருணகிரியோகீஸ்வரா,'' என்றேன்.
நான் பெயரைச் சொன்ன உடனேயே, அந்தம்மா பளிச்சென்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.... நன்றியுணர்வோடு என் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.
''அருணகிரியோகீஸ்வரரே உனக்குச் சன்யாசம் கொடுத்திருக்கிறார்,' என்று பூரித்துப் போனார். அதிலிருந்து அவர் என்னைச் சிறுவனாகப் பார்க்கும் பார்வை மாறியது.
நன்கு புரிந்து கொள்ளுங்கள். அப்போது அந்த அம்மாவை பொறுத்தளவிற்கு, அவர் எனது குரு. அவர் என் காலிலே விமுந்து கும்பிட்டார் களென்றால்... அவர்கள் கையை பிடித்ததும் அவாகளுக்குள்ளும் அந்த ஆழ்ந்த அனுபவம் அந்த வினாடி நிகழ்ந்ததால்தான் !
விபுதானந்த தேவி தாரை, தாரையாகக் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். அதுவரைக்கும் நான்தான் அழுது கொண்டு இருந்தேன்.
இப்போது குழ்நிலை மாறி, மாதாஜி அழ ஆரம்பித்து விட்டார்கள்.
நான் புரியாமல் கேட்டேன், "ஏன்? ஏன்? ஏன் நீங்க அழறீங்க?''
மாதாஜி, ''உனக்குத் தெரியாகடா, நாங்கள் யாரைப் பார்ப்பதற்காக, யுக யுகமாகத் தவமிருக்கிறோமோ, காலங்காலமாகத் தவம் செய்கிறோமோ,
அவருடைய சமாதிக்குள்ளிருந்து அவரே வந்து உனக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்தது மட்டுமில்லாமல், அவரோடு விளையாடியும் இருக்கிறாய். அவரோடு பேசியிருக்கிறாய், பழகியிருக்கிறாய்,'' என்று சொன்னார்.
அவர் சொன்னபிறகுதான் எனக்குத் தெரிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சமாதி அடைந்த அருணகிரியோகீஸ்வரர் என்பவர் ஈஸ்வரருடைய அவதாரமாவார் என்று.
அருணகிரியோகீஸ்வரர் சமாதியடைந்து, 2000 வருடங்களுக்குமேல் ஆகி விட்டது அருணகிரி யோகேஸ்வரர் சமாதியின் மேல்தான் திருவண்ணாமலையில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று அப்போதுகான் தெரிந்துகொண்டேன்.