102. வார்த்தைகளால் விவரிக்க முழயாத பேரனுபவம்
# வார்த்தைகளால் விவரிக்க முழயாத பேரனுபவம்
An Experience which cannot be explained with words
தரிசனம் கொடுத்தது அருணகிரியோகீஸ்வரர்தான் என்பதை அப்போதுகான் கெரிந்து கொண்டேன். இதோடு கதை முடியவில்லை, இப்போதுதான் கதையே ஆரம்பிக்கப் போகிறது.
மாதாஜி விபுதானந்த திரு தேவிக்குத் தாங்காத வியப்பு! ஆச்சரியம்! ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், என்னால் ஒரளவிற்குத்தான் பொய்சொல்லமுடியும் என்று! அதற்கு அடையாளமாய் ஒரு துணிவேறு சாட்சியாக இருக்கிறது.
என்னைப் பொறுத்த மட்டில், அருணதிரியோகீஸ்வார் ஒரு சன்யாசி. தினந்தோறும் நான் பார்த்துக் பழகிக் கொண்டு இருந்த ஒருவர்.
அதற்குப்பிறகு விபுதானந்த மாதாஜி உடனே போய்விட்டார்கள்.
ஆனால், எனக்கு என்ன கவலையென்றால், நான் இத்தனை நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்த நபர் அன்று வராமல் போய்விட்டாரே என்று.
இவ்வளவு நாளாக, கூப்பிட்ட உடனேயே வருவார். இந்த மாதாஜி வந்ததினால்தான் வரவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, நாம் இந்த இரகசியத்தை வெளியே சொல்லியிருக்கக் கூடாதோ? விபுதானந்த தேவியிடம் நான் சொன்னதினால்தான் கோபித்துக் கொண்டு வெளியே வராமல் இருக்கிறாரோ ? !
ஏனென்றால் என்னைப் பொறுத்தமட்டில், அருணகிரி யோகிஸ்வரர் ஒரு சன்யாசி. தினந்தோறும் நான் பார்த்துக் பழகிக் கொண்டு இருந்த ஒருவர்! விபுதானந்த தேவியைப் பொறுத்த மட்டில் அவர் எப்போதோ இறந்து போனவர்! இப்போது வந்து தரிசனம் கொடுத்து இருக்கிறார். ஒரு ஜீவசமாதி அடைந்த ஞானி வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்.
ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் அவா வராமல் இருப்பது மிகப் பெரிய இழப்பு. அதுவும் ரொம்ப நாளாகப் பழகிய ஒரு ஆழ்ந்த ஈர்ப்புடைய தோழரை, ஒரு நண்பரை இழந்தால் எப்படி இருக்கும் ? அதை விட ஆழமான இழப்பாக எனக்கு இருந்தது.
பக்தி ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தீர்களென்றால், அதில் மஹாபாவத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். அதாவது ஐந்து பாவங்களையும் தாண்டி, தாமே அதுவாக உணர்வது மஹாபாவம்.
அந்த மகாபாவத் தொடர்பு அவருக்கும், எனக்கும் இருந்தது. ரொம்ப ஆழமான தொடர்பு. ஒரு ஏழெட்டு மாதத்திற்குள் ரொம்ப ஆழமாக உருவாகிவிட்டது.
அதாவது பள்ளி விடுமுறை விட்ட மே மாதத்திலிருந்து, ஜனவரி மாதம் வரை.

அப்படியென்றால் எட்டு மாதத்தில் அந்த ஆழமான தொடர்பு மலர்ந்திருந்தது.
''சாமி, சாமி,''என்று அழுதாலும், சக்தமிட்டாலும் வரமாட்டேன் என்கிறார். இதுநாள்வரைக்கும் கூப்பிட்டால் உடனே வருவார். இப்போது குப்பம்மாவை அழைத்துவந்து இல்லை. அதனால் அந்த அம்மா வீட்டிற்குத் திரும்பியவுடன் துக்கம் தாளாமல் நான் 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டேன். எதையோ இழந்த ஒரு துக்கம் என்னை வாட்டியது.
பக்கி ஸ்பாண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தீர்களென்றால், அதில் மஹாபாவத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். அதாவது ஐந்து பாவங்களையும் தாண்டி. தாமே அதுவாக உணர்வது மஹாபாவம்.
நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், துக்கம் என்றால் சாதாரண துக்கம் இல்லை.
பாகவதத்தில் ஒரு கதை வருகிறது.
ஒரு கோபிகைக்குக் கிருஷ்ணருடைய பல்லாங்குமல் கீதம் வனத்திலிருந்து கேட்கிறது. கேட்டவுடனேயே வீட்டிலிருந்து கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக ஓடுகிறார். வீட்டின் நுழைவாயிலில் மாமியாரும் நாத்தனாரும் உட்கார்ந்திருக்கின்றனர்.
அவர்கள் இருவரும், ''எங்கே போகிறாய் ?'' என்று கேட்கின்றனர்.
இவளால் இவர்களை மீறி ஒடவும் முடியவில்லை. ஆனால் அவா்கள் தடுப்பதினால் போகாமலும் இருக்க முடியவில்லை. வீட்டின் நுழைவாசலை விட்டம் என்பார்கள்.
அந்த நிலைப்படியை பிடித்துக்கொண்டு அப்படியே நிற்கிறாள்.
இந்தக் கதை ரொம்ப அழகான கதை... நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கிறாள்.
கிருஷ்ணருடைய கானத்தைக் கேட்பதனால், அந்த இனிமையான புல்லாங் குழலோசையைக் கேட்டவுடனேயே உடலில் ஏற்படுகின்ற ஆனந்தம், கிருஷ்ணனுடன் வாழ்ந்த அந்த நினைவுகள் மேலெழுந்து அதில் ஏற்படுகின்ற ஆனந்தத்திலே அவள் சொர்க்கத்தின் உச்சியைச் சில வினாடிகளில் தொட்டு விடுகிறாள். அவளுடைய நல்ல
கருமங்கள் எல்லாம் அந்தச் சொர்க்க அனுபவத்தில் எரிந்து போய்விட்டதாம்.
அன்பு அதிகமானாலே அவருடைய அன்பை இழந்திடுவோமோ என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும்.
போகவிடாமல் மாமியாரும், நாத்தனாரும் தடுப்பதினால், போக முடியவில்லை என்ற மாளாத துக்கத்தினால், நரகத்தின் உச்சியை சில வினாடிகளில் பார்த்துவிடுகிறாள். அவளின் எல்லாவித கெட்ட கருமங்களும் இந்த நரக வேதனையில் எரிந்து போய்விட்டதாம்.
சுகப்பிரம்மம் மிக அழகாக இதைச் சொல்கிறார், "இது மாதிரி நல்ல கருமமும், கெட்ட கருமமும் சேர்ந்து எரிந்து போனதினால், அந்த இடத்திலேயே அவள் ஞானமடைந்து கீழே விழுந்தாள். ''
நானும் அதே சூழ்நிலையில்கான் அன்று இருந்தேன்.
அதே மனநிலையில்தான் உருகித் துடித்துக்கொண்டு இருந்தேன். அங்கே அந்த அருணகிரியோகீஸ்வரரைப் பார்த்து, அந்த யோகியோடு ஒன்பது மாதம், அந்த ஏழெட்டு மாதங்கள் வாழ்ந்த அந்த நினைவு அலைகள் பொங்குவதினால் ஏற்படுகிற ஆனந்தம் ஒருபக்கம்.
அதாவது, உங்கள் உயிருக்கே ஒருவன் தோழனாகக் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இருந்தது.
உயிருக்கே ஒரு நண்பன் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த ஆனந்தம், அவரை நினைப்பதினாலே பொங்குகின்ற ஆனந்தம் ஒரு பக்கம்!
'அவருக்குத் துரோகம் செய்து விட்டோமோ, நினைக்கதற்கு எதிராக நடந்துவிட்டோமோ ? அதனால்தான் எவ்வளவு கூப்பிட்டாலும் அதன் பிறகு வரவே மாட்டேன்கிறாரோ?' என்கிற துக்கம் மறு பக்கம்.
அன்பு அதிகமானாலே அவருடைய அன்பை இழந்திடுவோமோ என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். இந்தப் பயம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம்.
அதனாலேயே என் நல்ல கருமங்கள் எல்லாம் எரிந்து போய்விட்டது.
அவரோடு அந்த ஒன்பது மாதம் வாழ்ந்தது, அந்த நினைவெல்லாம் நினைத்து நினைத்துப் பொங்குவதினாலே ஏற்பட்ட அந்த ஆனந்தத்தில் என்னிடமிருந்த நல்ல கருமங்களெல்லாம் எரிந்துவிட்டன.
இன்னொரு பக்கம் 'அவர் வராமலேயே போய்விடுவாரோ' என்ற துக்கத்தில் உடலைச் சமைப்பதற்காக எடுத்துவந்த கெட்ட கருமங்கள் எல்லாம் எரிந்து விட்டன.
எப்படி அந்தக் கோபிகை இரண்டிற்குமிடையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாளோ, அது போன்றே நானும் இரண்டிற்குமிடையில் உழன்று கொண்டு இருந்தேன்.
இந்த இரண்டிற்கும் இடையில் அலையாடிக் கொண்டிருந்தேன்.
இறுதியில் இரவு 10 மணி இருக்கும்.
மணி பத்தாகிவிட்டது. பத்தாகிவிட்டால் கோவில் நடை பிரகாரத்தை சுத்தம் செய்வார்கள்.
அந்தக் கொவில் பாதுகாவலர்கள், பக்கர்கள் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு சுத்தம்
'அவர் வராமலேயே போய்விடுவாரோ, என்ற துக்கத்தில் உடலைச் சமைப்பதற்காக எடுத்துவந்த கெட்ட கருமங்கள் எல்லாம் எரிந்து விட்டன.

செய்து காவல்காரர் நண்பர். என்னை அனுப்பவில்லை.
ஏனென்றால், அவர்களுக்குச் த்தம் வேண்டும், அதனால் நான் மட்டும் அங்கு கொஞ்ச உட்கார்ந்திருந்தேன். கழித்து கோவில் நடை சாத்துகின்ற நேரம் வந்தது. இறுதியில் பள்ளியறை வைத்து
அன்றிலிருந்து நான் வேறு; அவர் வேறு என்ற பேதம் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருக்கின்ற அந்த அனுபவம் இன்றுவரை உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.
நடை சாத்துகின்ற நேரம் வந்ததும் அங்கிருந்த காவல்காரர் சொன்னார், "ஏம்பா! நடைசாத்துறாங்க. பள்ளியறை எல்லாம் வைச்சுட்டாங்க. கோவிலுக்குள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திடேன்.''
நானோ இங்கு அழுது கொண்டு இருக்கிறேன். அதுவும் துக்கம் தாளாமல் அழுது கொண்டே இருக்கிறேன்.
"உள்ளே சென்று கோவில் மூடப்போறாங்க,'' என்று சொன்ன உடனே எழுந்து வேகவேகமாக ஓடினேன்.
இந்த சாமி இவ்வளவு கூப்பிட்டும் வரவில்லையே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும், உணர்வில்லாமல் ஓடினேன். என் கண்களில் தாரை தாரையாக, தன்னால் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அப்போது எழவில்லை.
கனமான இதயத்தோடு இதை விட ஹரு பெரிய துக்கம் இருக்காது என்ற நிலையில் உடல் தன்னால் கோயிலுக்குள் நுழைந்தது.
பள்ளியறை பூஜை நேரமாதலால் பூசாரிகள் எல்லோரும் வெளியே சென்று இருந்தார்கள். அப்போதெல்லாம் 24 மணி நேரமும் அங்கேயே இருக்க மாட்டார்கள். மேலும், நான் அங்குதான் பெரும்பாலும் இருப்பேன் என்பதால் அங்கிருந்தவா்களும் என்னைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
நேராக உள்பிரகாரத்திற்குச் சென்றேன். என் உள்ளமெல்லாம், 'சாமி! சாமி!'' என்றே துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வேறு யாருமே இல்லை. நேராகக் கா்ப்ப கிரகத்திற்குள்ளும் ஒடினேன்.
எப்பவும் கும்பிடுவது போல, கைகளைக் கூப்பி சாமியைக் கும்பிடுவதற்குக் கண்களை மூடும் தறுவாயில்தான் சட்டென்று உரைத்தது. இங்கு ஏற்கெனவே யாரோ இருக்கிறார்கள் !
யாராக இருக்கும் ? என்று பார்ப்பதற்குக் கண்களைத் திறந்து பார்த்தேன். திகைத்து நின்லே றன். புல்லரித்துப் போனேன். நரம்பெல்லாம் உருகிப் போனது ... அங்கு லிங்கத்தின் மீது அமர்ந்து என்னைப் பார்த்து அருணகிரியோகீஸ்வரா சிரித்துக் கொண்டிருந்தார்.!
அவரைப் பார்த்ததும் இழந்ததைப் பெற்ற ஆனந்தம் பொங்கியது.
''சாமீ... இங்கயா இருக்கிறீங்க! நான் உங்களை எங்கெங்கெல்லாம் தேடிக்கொண்டிருக்கி றன்.'' என்று சப்தமாகச் சொல்லிக் கொண்டே … ''சாமீ.'' என்று பெருங்கால் எடுத்துக் கதறியபடியே உள்ளே ஒடினேன். உயிருக்கும் உயிரான உயிரைப் பிரிந்த சோகம் போக்க கைகளை நீட்டி அவரைத் தொட்டேன்.
அதற்குள் அவரும் தன் கைகளை என் மீது வைத்தார்.
என் கைகளும் அவருடைய கைகளும் இருவரின் உடலையும் ஒரே நேரத்தில் தொட்டுக் கொண்டன. அந்த வினாடியில்தான் unclutching எனும் மஹா பேரனுபவம் என்னுள் நிகழ்ந்தது.
அதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நான் அவருக்குள் நான் இருப்பதையும்; அவா் எனக்குள் இருப்பதையும் அபைவமாக உணர்ந்தேன்.
Section 2
அன்றிலிருந்து நான் வேறு; அவர் வேறு என்ற பேகம் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருக்கின்ற அந்த அனுபவம்தான் இன்றுவரை உடலை இயக்கிக் கொண்டு இருக்கிறது.
அந்தச் சக்திதான் இந்த எல்லா வேலைகளையும், எல்லா அற்புதங்களையும், எல்லாச் சாகனைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
எப்படி அந்தச் சிறிய பாபறவு, பெரிய பறவையோடு ஒன்றி மலர்ந்ததோ ...
எப்படி நல்ல கருமமும், கெட்ட கருமமுழம் தீர்ந்ததினால் அந்தக் கோபிகை, ஞானம் அடைந்தாளோ, அதே மாதிரி, அந்த வினாடி, 'அவர் வேறல்ல. நான் வேறல்ல' என்று மிகத்தெளிவான அனுபவம் மலர்ந்தது.
