96. ஞான தீகைஷ
# ஞான தீகைஷ
அது முதன்முறையாக எனக்குள் நடந்த அனுபவம்.
என்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆழமான அனுபவம் என்றால், இதுதான்.
ஒரு பத்து வயது இருக்கும். அப்போது நடந்த ஆன்ம ரீதியான அனுபவத்தை சாதாரணமாக, தர்க்கரீதியான விளக்கம் அளிக்க முடியாது. ரொம்ப ஆழமான அனுபவம் என்பதினாலே, இந்தக் கதையை முதலில் புரிந்து கொண்டீர்கள் ஆனால், அதன் பிறகு நாம் தொடர்ந்து உள்ளே போகலாம்.
ஆமமான சத்தியங்களை ஆழ்ந்து உள்வாங்குவதே பல வழிகளில் உணர்வுக் கதவுகளை திறக்கும்.
ஒரு சின்ன கதை
ஒரு இளவரசன் ஊதாரித்தனமாக இருந்ததினாலே, அரசா அவரை நாடு கடத்தி விடுகிறார். இளவரசன் வேறு நாட்டிற்குச் சென்று வீதிவீதியாக அலைந்து பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறார். 'தான் ஒரு காலத்தில் இளவரசனாக வாழ்ந்தவன்' என்ற ஒரு நினைப்பையே விட்டுவிட்டு, அதை முற்றிலும் மறந்து பிட்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த அரச்ருக்கு வயதாகி விட்டது. அடுத்து சாக வேண்டிய நேரமும் எட்டிக்கொண்டிருந்தது. அப்போது அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து, ''அரசே உங்களுக்கோ வயதாகிவிட்டது. சாக வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த நாட்டை அடுத்து ஆட்சி செய்ய, இன்னொரு அரசன் வர வேண்டும். நங்கள் இருக்கும் போதே இளவரசனுக்குப் பட்டம் கட்டியாக வேண்டும்," என்றார்கள்.
அதற்கு அந்த அரசர் ''இல்லையில்லை. அவனைக் கூப்பிடக் கூடாது. அவன் போனவன் போனவன்தான்,'' என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.
"இல்லை, வேறு வழியே இல்லை. அரசே! எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும். அதனால் இளவரசனை அழைத்துக்கொண்டு வந்தே ஆகவேண்டும்," என்று அடம் பிடிக்கிறார்கள்.
இறுதியில் அரசரும் ஒப்புக்கொள்கிறார். அமைச்சர்கள் தேர், யானை என்று படைகளைத் திரட்டிக் கொண்டு ஊராகச் சென்று தேடுகிறார்கள். பக்கத்து நாட்டிற்குச் சென்று தேடுகிறார்கள். காட்டிற்குள் தேடுகிறார்கள். இளவரசன் எங்கு இருக்கிறார் என்று விடாமல் தேடுகிறார்கள். அப்போது ஓர் இடத்தில், ஒரு கடைக்கு எதிரில் ஒரு பிச்சைக்காரர்
ஞானத்தை வாழ்தல்
நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த உடனேயே, அவர் நம் இளவரசர்கான்' என்று மந்திரி கண்டுபிடித்துவிட்டார்.
அவரிடம் சென்று, ''இளவரசே! என்னைத் தெரிகிறதா ? உங்களை அரசர் மீண்டும் அமைத்து வந்து அரசராக்கச் சொன்னார்." என்று சொல்லி காலில் விமுந்தார்.
பயிற்சி கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.
அந்த மந்திரி, பிச்சைக்காரரின் காலில் விமுந்து காலைக் தொட்டதுதான் தாமதம், ''அய்யா! தருமம் செய்யுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டிருந்த பிச்சைக்காரன், ''எங்கே என் ரதம் வந்துவிட்டதா?'' என்று கேட்டார்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வினாடிவரை பிச்சைக்காரனாக இருந்தவன். உடனே அரசாரக மாறிவிட்டார். கம்மடைய சுயநிலையைக் திரும்பப் பெற்றவிட்டார்.
அந்த வினாடியே, அவருடைய உடல்மொழி (body language) முற்றிலும் மாறிவிட்டது. அதன்பிறகு அவரை அரசராக மாற்றுவதற்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டுமா என்ன ?
அதுபோல் என்னுடைய வாழ்க்கையில், ஒரு வினாடி பொழுதில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்தேன்.
அதை அன்று அந்த அவதார புருஷர் நிகழ்த்திவிட்ட கணங்களை நினைத்தால், இப்போதுகூட என் உடலே இனிக்கிறது! முதலில் 'அவதாரம்' என்பதை நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அதாவது, மற்றவா்களை விட வித்தியாசமானவன் என்பதை உணர்ந்தேன்.
ஒரு வினாடிப் பொழுதிலேயே அதை உணர்ந்தேன். இனி சொல்லப் போகும் ஆழமான சத்யங்களை ஆழ்ந்து உள்வாங்குவதே பல வழிகளில் உங்களுடைய உணர்வுக் கதவுகளைத் திறக்கும்.
முதல் விஷயம் ... பயிற்சிக் கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.
நீங்கள் நினைக்கலாம், ''இவருக்கு முதலில் பேச்சுத்திறமை வந்திருக்கும். அதன்பிறகு எழுதுகின்ற திறமை வந்திருக்கும். அதன் பிறகு நிறைய திறமை தெரிய வந்திருக்கும். இப்படி படிப்படியாக வளர்ந்திருப்பார்' என்று.
அவதார புருஷராவதற்குப் பயிற்சி கிடையாது.
அந்தப் பிச்சைக்காரனுக்கு இளவரவசராக ஆவதற்கு யாரும் பயிற்சியளிக்கவில்லை. தாம் ஒரு இளவரசன் என்பதை உணர்ந்த உடனேயே, அந்தப் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது.
இந்தக் கதை ரொம்ப அழகான கதை. அணிந்திருப்பது பிச்சைக்கார உடையாக இருந்தாலும், ''எங்கே என் தேர்? தேர் தயாராக உள்ளதா?''அவர் கேட்ட விதத்தில் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது.

423
அதுபோல் இன்னும் ஆழமான பரிமாணத்தில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்த உடனேயே, 'நான் ஒரு மனிதன்' என்ற எண்ணம் அழிந்து விட்டது.
இந்தக் கதையை நன்கு ஆழமாகக் கேளுங்கள். Unclutching நிகழ்ந்த பொழுதில்தான், ''நான் ஒரு அவதாரம், அதாவது வேறு ஒரு காரணத்திற்காக மனித உடல் எடுத்திருக்கின்ற ஒரு ச க்தி," என்பதை உணர்ந்தேன்.
பயிற்சி கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க (மடியாது
அதற்காக நீங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள் என்று சொல்லவில்லை.
நங்கள் எல்லோரும் 'கடவுள் சக்தி'தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எந்த வினாடி பொழுதில் நீங்களொரு அவதாரம் என்று உணர்கிறீர்களோ…, அதைத்தான், 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம். அதைத்தான் முழுமை அடைதல் என்று சொல்கி றாம்.