Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

88. என்னுடைய பீஷ்மரை வென்ற சுவையான சம்பவம் ...

# என்னுடைய பீஷ்மரை வென்ற சுவையான சம்பவம்

The sweet incident that destroyed my Bheesma

னன்னுடைய 14வது வயதில்தான் சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரோடு சண்டை செய்கேன். அதாவது, வீட்டை விட்டு வெளியே செல்வதென்று முடிவு செய்தபோது, அப்போதுகான் இந்த பீஷ்ம பிகாமகர், எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் மொத்தமாக வந்து நின்றது.

கட்டுறு மனப்பாங்கு என்றால் என்ன ?

சுமகம் நம்மேல் வைத்திருக்கிற கட்டுறுத்தும் மனப்பாங்கு.

நல்ல வேளையாக, ஏற்கனவே எப்படியோ அர்ஜுனனுக்கு, பீஷ்மர் மேல் வைத்திருந்த மரியாகை போய்விட்டது. திரௌபதியைத் துச்சாதனன் வஸ்திராபாணம் செய்தபோது, பீஷ்மர் சும்மா இருந்ததனால், அப்போதே அந்த மரியாதை போய்விட்டது.

உங்களுக்கும், உங்களுடைய வளாப்பு கட்டுறு மனப்பாங்கின் மீதான மரியாதை போயிருந்தால்தான், பீஷ்மரைச் சாகடிக்க முடியும். பீஷ்மரைக் கீழே தள்ள முடியும்.

எனக்கும் சின்ன வயதிலேயே என் பீஷ்மர் மேல் இருந்த மரியாதை போய்விட்டது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மீது, சமூக அமைப்பு மீது இருந்த மரியாதை போய்விட்டது.

எப்படியென்றால், பத்து அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும்போது, வயதான பாட்டி ஒருவர் இறந்து விட்டார்.

103 வயது வரை வாழ்ந்தவர்.

பல சத்யங்களைப் புரியவைக்கும் சம்பவம் இது. அந்தம்மா பெரிய சொத்தோடு வாழ்ந்த பெண்மணி. துரதிர்ஷ்டவசமாக, வாரிசு இல்லாத சொத்து.

உங்களுக்குத்தான் வாரிசு இல்லாத சொத்து என்றால் தெரியுமே! எத்தனை போர் அதற்காக அடித்துக் கொள்வார்கள் என்று!

103 வயது வரை அந்தம்மா வாழ்ந்தபோது, யாருமே அந்தம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவர் இறந்த போது நடந்த கூத்தைப் பார்த்திருக்க வேண்டுமே.

நான், நேராகப் பார்த்தேன். அதனால்தான் சொல்கிறேன். இது ஒரு அருமையான நிகழ்ச்சி. என்னுடைய வாழ்வில் என்னுடைய பீஷ்மரின் மேல் இருந்த மரியாதையைப் போக்க வைத்த நிகழ்ச்சி.

அதாவது துகிலுரியும்போது, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தா்மத்தை விட்டுச் சும்மா இருந்தார் பீஷ்மர்.

இந்தப் பாட்டி இறந்தபோது நடத்த நிகழ்ச்சியைப் பார்த்த உடனேயே, பல தாத்தாக்கள் சொல்லிக் கொடுத்த தர்மம், தா்மத்தின்படிதான் வாழ வேண்டும் என்ற எல்லாக் கருத்துகளின் மேல் இருந்த மரியாதையும் போய்விட்டது.

அதாவது, தாமம் என்று அவா்கள் எதைப் போதித்தார்களோ. அதன் மீதிருந்த மரியாதைதான் போய்விட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அதற்கப்புறம்தான் நிஜ தர்மமே எனக்குப் புலப்பட ஆரம்பித்தது.

ஏனென்றால், தம்முடைய உயிருக்காகத் தா்மத்தையே அடகு வைக்கத் துணிந்தவர்கள் இவர்கள் என்பது அப்போது எனக்குப் புரிந்தது. இவர்கள் சொல்லிக் கொடுத்த தா்மத்தின் மேல், அதன்பின் எப்படி மரியாதை இருக்கும் ?

வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் இருக்கும் மரியாதை... எப்போது அவர்களே அவர்கள் சொல்லிக் கொடுத்த வாழ்வை கடைப்பிடிக்கவில்லையென்று தெரிகிறதோ, அப்போதே அது அழிந்துவிடும். தானாகவே சாய்ந்துவிடும்.

அவர்களே அதைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிந்த உடனே என்ன ஆகும் ? அதன்மீதுள்ள மரியாதை போய்விடும். அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த வயதான பாட்டி இறந்து போய்விட்டார்கள்.

அந்தம்மா ஒரு பெரிய கஞ்சம்.

நான் என் கண் முன்னாலேயே பார்த்தேன் ... 103 வயதான அந்தம்மா இறந்த பிறகு. பிணத்தை எடுத்துவிட்டு, அவர் பக்கத்திலேயே வைத்திருந்த பெட்டியை வெளியே எடுத்தார்கள். நம்பவே மாட்டீர்கள்! பெட்டி நிறைய வெள்ளிக் காசுகளும், நகைகளும் சேர்த்து வைத்திருந்தார்கள். எல்லாம் அந்தக் காலத்து வெள்ளிக் காசுகளும், சொக்கத் கங்கமும் .

அவர் உயிரோடிருக்கும்போது புகையிலை வேண்டுமென்றால், என்னைக் கூப்பிட்டு , ''போய், மூலக்கடையில் புகையிலை வாங்கிக் கொண்டு வா,'' என்று சொல்வார்.

எல்லாத் தெரு முனையிலேயும் ஒரு செட்டியார் கடை வைத்திருப்பார் இல்லையா?

அதுபோல் அங்கிருந்த மூலக்கடையில் ''புகையிலை வாங்கிக் கொண்டு வா,'' என்று என்னை அனுப்பி வைப்பார்.

நீங்கள் அமெரிக்காவில் எங்குப் போனீர்கள் என்றாலும், ஒரு மெக்டோனால்ட் இருக்கும். நம் நாட்டில் எந்தக் கிராமத்திற்குப் போனீர்கள் என்றாலும், ஒரு செட்டியார் கடை இருக்கும். அப்போதே இதற்கென்று ஒரு சமூகம். இதற்கென்று ஒரு வேலை. இதற்கென்று ஒரு தொழில் என்று முடிவு செய்து விட்டார்கள் பாருங்கள்.

அப்போதே முடிவு செய்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நிர்ணயம் செய்து விட்டார்கள். சில ஆட்களுக்கு இது புரியாமல் ஐரதி. வெறி, அப்படியென்ற சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதி, என்பது வெறியாக மாறக்கூடாதே தவிர அந்தச் சமூக அமைப்பைப் பார்த்தீர்கள் என்றால், எல்லாம் ஆழ்ந்த காரண காரியத்தோடுதான் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமான, கட்டுறு மனப்பாங்கை மாற்றுவதற்குப் பதிலாக, சமூக நலத்துக்காக முன்னோர்கள் ஆராய்ந்து உருவாக்கிய சமூக அமைப்பையே உடைத்துத் தூக்கிப் போடுவதுதான் பெரிய பிரச்சனை.

எது எப்படியிருந்தாலும், எல்லாச் செட்டியார் மூலக்கடையிலும் புகையிலை வைத்திருப்பார்கள்.

பாட்டி கேட்கும் புகையிலையை வாங்குவதற்காக நான் பாட்டியிடம், "காசு கொடும்மா," என்ற கேட்பேன். அகற்கு, ''உங்க அப்பாவிடம் வாங்கிக் கொண்டு போ,'' என்று சொல்வார்.

சரியென்று அப்பாவிடம் காசு வாங்கி, புகையிலை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள காசுக்கு ஏதாவது மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன். அவ்வளவுதான். போய் வாங்கி வந்து தருவதற்குக் கூலி.

இந்தப் பாட்டிக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இவ்வளவுதான் என்றாலும், அவரின் மரணத்தை மற்றவர்கள் அணுகியதை பார்த்ததினாலேயே, என்னுடைய பீஷ்மரை வெல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நீங்கள் எப்படிப்பட்ட வாழ்வை இன்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுடைய

பீஷ்மரை வெல்லாதவரை, நம்மைச் சுற்றி விடுதலை இருந்தால்கூட, அதை அனுபவிக்க முடியாகு. பிஷ்மரை தேடுதல் அடிப்படையானது. பீஷ்மரை வென்ற சுவையான அனுபவத்தைத் கொடாலாம் ...

பீஷ்மரை வெல்லாதவரை, நம்மைச் சுற்றி விடுதலை இருந்தால்கூட, அதை அனுபவிக்க முடியாது. பீஷ்மரை வெல்வதென்பது, தேடுதல் உடைய ஒவ்வொருவருக்கும் அடப்படையானது.

மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம்

Behind the screen of Death, another drama

அந்தப் பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு, இறுதிச் சடங்குக்காக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

அந்தப் பாட்டி செக்துப் போய்விட்டார் என்று தெரிந்தபோது யாருமே சத்தம் போட்டு அழவில்லை. அங்குச் சுற்றி இருந்த உறவினா்களில் ஒருவருமே குய்யோ... முய்யோ ... என்று ஒப்பாரி வைத்து அழவில்லை! ஏன் அவர்கள் அழவில்லை? என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்.

அப்போது மகலில் இவர்கள் செய்க வேலை என்னவென்றல் ... அவர்கள் வரும்போது அணிந்திருந்த நகைகளையும், விலையுயா்ந்த புடவைகளையும் மாற்றுவதற்காகச் சென்று விட்டார்கள். கூட்டுக்குடும்பம் என்பதாலே, ஆளுக்கு ஒவ்வொரு அறை இருக்கும். எல்லோரும் அவரவா அறைக்குச் சென்று, நகைகள், புடவைகள் எல்லாம் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.

என்ன செய்கிறார்கள் இவர்கள் என்று பார்த்து கொண்டே இருந்தேன். விலை அதிகமான நகைகளை எல்லாம் மாற்றிவிட்டு, விலை அதிகமாக இருக்கிற புடவைக்குப் பதிலாக, சாதாரண மலிவு விலை புடவையைக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.வந்ததும் ஓ ... வென்று அழ ஆரம்பித்தார்கள்.

எனக்கு ஆச்சாயம் தாளவில்லை.

எனக்கோ, 'என்னடா இது, அழுகையென்றால் அந்தத் துக்கச் செய்தியைக் கேட்ட உடனேதானே வர வேண்டும்! போய் துணி மாற்றிவிட்டு வருகிற அரைமணி நேரம் அழுகை வராமல் இருக்க முடியுமா?' என்று யோசனை வந்தது. அவா்கள் ஏன் இப்படிப் செய்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை.

உட்கார்ந்து கொண்டு, ''ஓ... பாட்டி விட்டுட்டுப் போயிட்டியே,'' என்று அழுதார்கள்.

ஒரு இரண்டு நிமிடம் கழித்து மூக்கைத் துடைத்துக் கொண்டு, அவா்களுக்குள் ''மாமியார் நல்லா இருக்காளா ?

என்னைக்கு வந்தாய் ?

சரியாகப் போய் விட்டதா ?

ஏய்! போய் காபி காடுத்துக்கொண்டு வரச் சொல்லுடா," என்று இப்படிச் சகஜமாகப் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள்.

எனக்கு மேலும் குழப்பம் ... முன்பு அழவில்லை. அப்புறம் திடீரென அழுதார்கள். இப்போது சாதாரணமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களே! எனக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்த விஷயம் இதுதான் ...

சும்மாவேதான் உட்கார்ந்திருப்பார்கள். திடீரென்று யாராவது ஒரு சொந்தக்காரர் வெளியூரிலிருந்து வந்தார் என்றால், உடனே, ''மாமா!! இப்படி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்களே,' என்று அழுகையைப் புது உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆழமான துக்கம் இருந்தால் தொடர்ந்து அழ வேண்டும். இல்லையென்றால், அழாமல் சும்மா இருக்க வேண்டும்.

யாராவது ஒருவர் வந்தார்கள் என்றால் அவர்கள் வந்த உடனே ஒ...வென்று ஆரம்பிப்பது ... இந்தச் செயல் எனக்கு முற்றிலும் குழப்பமாயிருந்தது. அழுகிறவர்கள், என்ன செய்வார்கள்? அருகேயிருக்கும் அந்தத் துண்டை எடுத்து முகத்தை மூடி முடி அழுவார்கள்.

அப்போது நிஜமாகவே இப்படித்தான் எனக்குத் தோன்றியது 'உண்மையிலேயே பொங்கும் சிரிப்பைத்தான் இப்படி மூடிக் கொள்கிறார்களோ! அவர்கள் சிரித்து, யாராவது அதைப் பார்த்து, அங்கு அசிங்கமாகி விடக் கூடாதே என்பதற்காகத்தான் துண்டை வைத்து மூடிக்கொள்கிறார்களோ' என்றுதான் தோன்றியது.

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள், எத்தனை இடத்தில், சாவு வீட்டுக்குப் போன உடனே, ஒன்று உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும் அல்லது அழுகையே வந்திருக்காது. முகத்தை அழுவதுபோல வைத்துக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைத்துக கொள்வார்களோ என்று முகத்தைத் துக்கமாக வைத்துக் கொள்ள முயற்சித்திருப்பீர்கள். ஒன்று சிரிப்பை அடக்குவதற்கோ இல்லை துக்கமாக நடிப்பதற்கோ முகத்தைத் துணியால் மூடியிருப்பீர்கள்.

உண்மைதானே! நன்றாக யோசித்துப் பாருங்கள்.

நானே பார்த்தேன்., ஓ! இதனால்தான் துண்டை வைத்து மூடிக் கொள்கிறார்களா?' என்றுயோசித்தேன்

பிறகு, அடுத்து நடந்த ஒவ்வொரு கூத்தும், எனக்கு ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. ஒவ்வொரு கூத்தையும் தொடர்ந்து பார்த்தால் ... மரணம் எனும் மேடைக்குப் பின்னால் நடக்கும் இன்னொரு பெரிய நாடகம் எனக்கு நன்றாய்த் தெரிந்தது.

முதல் ரவுண்ட் அழுது முடித்துவிட்டு, பக்கத்தில் இருப்பவா்களிடம் சகஜமாக, ''இது என்ன ஆயிற்று ? அது என்ன ஆயிற்று? குழந்தை நன்றாக இருக்கிறதா? பேத்தி நன்றாக இருக்கிறதா?'' என்று விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில், இரண்டு நிமிடத்தில் என்ன செய்வார்கள்? புழக்கடை பக்கம் சென்று காபி, டிபன் எல்லாம் சாப்பிட்டு விட்டு வர்து விடுவார்கள்.

அங்கே எல்லாம் தயாராக இருக்கும் !

பின்னால் சென்று என்ன செய்கிறார்கள்? நன்றாக சாப்பிட்டு விட்டு வந்து, வாயைத் துடைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள், அடுத்த ரவுண்டு ஒப்பாரிக்கு ரெடியாகி விடுகிறார்கள்.

நிஜமாகவே உருகி அழும் ஓரிருவரை தவிர்த்து, மற்ற எல்லாருமே இந்த வேலையைக் கமுக்கமாய்ச் செய்துவிட்டு வருவதைப் பார்த்தேன்.

"பாட்டி! இப்படி விட்டு விட்டுப் போய் விட்டாயே," என்று அடுத்த ரவுண்டு வந்து அழுபவர்களிடம் இப்படி கேட்டால் என்ன என்றுகூட தோன்றியது ...

''அப்படியே கூப்பிட்டிருந்தால்... கூடவே போய் இருந்திருப்பீர்களா? என்ன!''

தமிழில் ஒரு அழகான கதை உண்டு.

இப்படித்தான் தம் கணவர் இறந்துவிட்டதால் அந்தப் பிணத்தை நடுவில் போட்டுவிட்டு அந்த வீட்டுக்காரம்மா, ''அக்கா போயிட்டாரே... அக்கா போயிட்டாரே,'' என்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருந்தார்களாம்.

அப்போது எதிர் வீட்டுக்காரப் பெண்கள் இரண்டு மோ் உள்ளே வந்தார்களாம்.

அவர்கள் அழுது கொண்டிருக்கும் பொழுதே, ஒரு பெண்ணின் கண்ணுக்கு தோட்டத்து ஒரமாக, தோட்டத்துப் பின் பக்கமாக இருந்த பாகற்காய் தெரிந்ததாம். அதனால் அந்தப் பெண்மணி, ''பந்தலிலே பாவக்காய்... பந்தலிலே பாவக்காய்…,' என்று ராகத்தோடு சொல்லி அழுதாளாம்.

பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்மணி, ''போகையிலே பார்த்துக்கலாம், போகையிலே பார்த்துக்கலாம் ... , '' என்று அதே ஒப்பாரி ராகத்தில் அழுதாளாம்.

அந்த வீட்டுக்காரம்மா அதாவது, யாருடைய கணவன் இறந்து போனானோ, அந்த வீட்டுக்காரம்மாவும் அதே ராகத்தில், ''விதைக்கு நான் வைச்சிருக்கேன், விதைக்கு நான் வைச்சிருக்கேன் ..., ' என்று ஒப்பாரி வைத்தாளாம்.

நாம் அழுவது எல்லாமே பார்த்தீர்கள் என்றால், இப்படித்தான்.

ஏதோ நம்முடைய பழைய துக்கங்களை நினைத்து, வேறு வழியில்லாமல் அழும் அழுகைகளதான்.

பொதுவாக ஜனங்களுக்கு அழுவதற்கு என்று தனிஇடம் கிடையாது.

வேறு என்ன செய்வது ?

அதனால்தான், பார்த்தீர்கள் என்றால், வேறு எந்த நிகழ்ச்சியை விடவும் சாவுக்கு மட்டும் கும்பல் தாங்காது.

''அட! போய் ஒரு அரைமணி நேரம் அழுதுவிட்டு வரலாமப்பா!' என்று, அழுது அழுது துக்கத்திலிருந்து ஒரு தெளிவிற்கு வருகிறார்கள்! அதற்காகத்தான் சாவுக்கு

வாழ்க்கையின் லட்சியம்

மட்டும் எங்கிருந்தாலும் கும்பல் கும்பலாய்ச் சேர்ந்து விடுவார்கள்.

எங்கிருந்துதான் அந்தக் கும்பல் வருமென்றே தெரியாது. கொஞ்ச நேரம் போய் அமுதுவிட்டு வருவதற்காகவே சேர்ந்து விடுவது.

நாம் "பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்

நாம் அழுவது எல்லாமே பார்க்கீர்கள் என்றால் இப்படித்தான். ஏதோ நம்முடைய பமைய துக்கங்களை நிணைத்து. வேறு வழியில்லாமல் அழும் அழுகைகள்தான்

போகையில் போகையில பார்த்துக்கலாம்' என்பதின் வெவ்வேறு தரங்களே! வெவ்வேறு ராகங்களே!