Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

85. வாழ்க்கை எனும் போர்க்களமே நீங்கள் ஞானமடைவதற்குத்தான்

# வாழ்க்கை எனும் போர்க்களமே நீங்கள் ஞானமடைவதற்குத்தான்

Life is a battle field for enlightenment

(6) நானத்தை நம் முன்னோர்கள் மிக அழகாக மகாபாரதக் கதையாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அது அருமையான ஒரு சத்தியம்.

இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு (parental conditions) எப்பட நம்மைத் துக்கத்திற்குள்ளாக்குகிறது ? அதைத் தாண்டி, எப்படிப் போய் நாம் ஞானத்திற்குள்ளே மலர்வது ? அதைத்தான் லக்ஷ்யே லக்ஷ்யமுத்தமம் என்று சொல்வோம்.

'நான்'என்று நீங்கள் இருக்கிற இருப்பு உணர்வுதான் அர்ஜுனன்

லட்சியத்தின் உன்னதமான, அடையப்பட வேண்டிய இலக்கை எப்படி அடைவது என்கிற சத்தியத்தை, மிக அழகாக மஹாபாரதத்திலே, மஹாபாரதப் போராக நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கிறார்கள். அதனுடைய சத்தியம் புரிந்தால்தான், மஹா பாரதப் போருடைய தாத்பரியம் புரியும்.

அர்ஜுனன்தான் ஜீவன்.

ஜீவன் என்றால், உங்களின் தனி இருப்பு உணர்வு. நான் என்று உங்களில் நீங்கள் இருக்கிற இருப்பு உணர்வுதான் அர்ஜுனன்.

கிருஷ்ணன்தான் ஞான சத்குரு.

கிருஷ்ணன்தான் ஆத்மா.

அவர்கள் இருவரும், ஜீவனும் ஆத்மாவும் ஏறி அமாந்திருக்கிற தேர்தான், இந்த உடல்.

இதற்கு உள்ளே ஜீவாத்மா மட்டுமல்ல, பரமாத்மாவும் உட்கார்ந்திருக்கிறார்.

ஜீவாத்மா அனாகதத்திலேயும், பரமாத்மா ஆனந்த கந்தத்திலேயும் உட்கார்ந்து இருக்கின்றன.

ஐந்து குதிரைகள்தான் உங்களுடைய ஐம்புலன்கள்.

இரண்டு சக்கரம்தான் சித்தமும், புத்தியும்.

மேலே இருக்கிற அந்த அனுமன் கொடிதான் அலைந்து கொண்டே இருக்கிற மனமாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கடிவாளம்தான் எண்ணம்.

ஐந்து இந்திரியங்கள் குதிரைகள்.

தேரிலே அமர்ந்திருக்கிற பரமாத்மா சத்குருநாதன் ஞான சத்குருநாதன்.

வாழ்க்கை என்கிற போர்க்களத்தில், ஞானமடைதல் என்கிற குறிக்கோளை நோக்கி போர் துவங்குகிறது.

போர் தார்மீகமாக இறைவனாலேயே இந்தப் போர். நீங்கள், அதாவது அர்ஜுனன் ஞானமடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உருவாக்கப்பட்ட மஹாபாரத போர்க்களம்தான் உங்களின் வாழ்க்கை.