Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

83. உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு

# உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு

Ema's death rope is your conditioning

கட்டுறுத்தப்படும் மனப்பாங்குதான் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் மிகப்பபெரிய துரோகம். இது உங்களின் ஜீவனையே ஒடுக்கிவிடும்.

பெற்றோரால் உருவாக்கப்படும் Parental Conditioningதான் முதலில் ஒருவரைப் பாதிக்கும் ஆழமான கட்டுறு மனப்பாங்கு. இதைத்தான் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்று அழைக்கிறோம்.

அதன்பிறகு வருவது, சமுதாயத்தால் வரும் Social Conditioning. இதைத்தான் சமூக கட்டுறு மனப்பாங்கு என்றழைக்கிறோம்.

இப்படி ஒன்றன் மீது ஒன்றாக, அடுக்கடுக்காகப் பல்வேறுவிதமான கட்டுறு மனப்பான்மைகளை உருவாக்கிக் கொள்வதினால்தான் சத்தியத்தை, உள்ளதை உள்ளவாறு மனிதர்களால் நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.

லட்சியத்தை நம்மால் வாழ முடியாமல் போனதற்கும், அதை உணர முடியாமல் போனதற்கும் மூலகாரணம் இதுதான்.

இந்தக் கட்டுறு மனப்பான்மையில் மாட்டிக்கொண்டு நாம் என்கிற தெளிவே இல்லாமல் பொய்விட்டதால்கான், இலட்சியத்தை பற்றிய தெளிவு ஒருவருக்குள் மலாவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

கட்டுறுத்தப்படும் மனப்பாங்குதான் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய துரோகம்.

நம்மீது போடப்பட்டுள்ள கட்டுக்களையே கட்டுறு மனப்பாங்கையே நாம் என்று நினைத்துக்கொண்டு வாழும் அவலம் உருவாகிவிட்டதால்தான், எங்கு, எப்படி நமக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

போட்டுக் கொள்கிற உ உடையையேயே, ஒருவா் தாம் என்று உடலின்மேல் நினைத்துக்கொண்டால் அது எவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம், அவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம். நாம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் நம் கட்டுறு மனப்பாங்கு.

கொடுமையான ஒரு பழமொழி, ஆள்பாதி; ஆடை பாதி என்று. ஆடை எப்படிப் பாதியாக முடியும் ?

கழற்றிப் போடுகிற ஆடையைப் பாதி என்று ஒருவா நினைத்தார் என்றால், அவா் மீதி ஆள்கூட கிடையாது. மொத்தமுமே பாதிதான்.

ஆள்பாதி; ஆடை பாதி கிடையாது. இருப்பது மொத்தமும் ஒன்றுதான். அது ஆள் மட்டும்தான்.

ஆள் வேறு; ஆடை வேறு. ஆள்தான் நிஜம். ஆஸ்தான உணர்வுதான் சாஸ்வதம். ஆடைபோல இருக்கும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கு சாஸ்வதம் அல்ல.

ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு விதத்திலும், நரகத்திற்கு நீங்கள் ஆளாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமே, உங்களின் கட்டுறு மன அமைப்புதான்.

ஆரம்பத்தில், சில கட்டுறு மன அமைப்புகளை, சமூகத்தில் வாழ்வதற்காக, உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தர ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு தமிழர், ஆங்கிலேயர், கன்னடியா என்று உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், வாழத் தேவையான அந்த மொழியைக் கற்றுக் கொண்டால் சமூகத்தில் வாழ முடியும். அந்தச் சமூகத்தில் எல்லாரோடும் சேர்ந்து எளிமையோடு வாழ முடியும்.

அதற்காக மொழி, மதம், நீதி, நெறி என்று கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாளடைவில் அத்த அடிப்படை தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட கற்றுக் கொள்ளுதல்கள்தான், நம் ஜீவனை துக்கத்திற்குள் ஆழ்த்தும் கட்டுறு மனப்பாங்காக உருவெடுத்து விடுகிறது.

ஒருவரோடு தொடர்பு கொள்வதற்காக, ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், அந்த மொழியோடு ஏற்படுகிற பற்று, கட்டுறு மனப்பான்மையினால், தம்முடைய வாழ்க்கையே அதுதான் என்று நினைத்துக் கொண்டு, அதற்காக வாழ்க்கையையே துக்கமாக்கிக் கொள்கிறார்கள் அந்த மனநிலைதான் கொடுமையான துக்கம்.

நம்மைக் கட்டுப்படுத்தக் கூடிய தேவையற்ற கருத்துகளைக் கற்றுக் கொள்ளும்போது ஏற்படும் இதுபோன்ற கட்டுறு மனப்பாங்குகளைத்தான் ஒருவர் கண்டுபிடித்து, கண்டுபிடித்து உடைத்து எறிய வேண்டும்.

ஒரு மொழிக்காக இறந்தோர் மட்டும் லட்சக்கணக்கானோர். ஒரு மதத்திற்காக இறந்தோர் எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை. அந்தக் கணக்கைச் சொல்லவே முடியாது. ஒரு தேசத்திற்காக இறந்தோர் கோடிக்கணக்கானவர்; அந்தக் கணக்கைக் கணக்கிடவே முடியாது.

கட்டுறு மனப்பாங்கு முட்டும் மெனித குலத்தில் இல்லாமல் இருந்தால், மனித குலத்தின் வாழ்க்கை வரலாறே வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். இத்தனை

மனித குலத்தில் தீவிரவாகம் என்று ஆரம்பிப்பதே கட்டுறு அமைப்பால்தான். அதில் தான் தீவிரவாகமே ஆரம்பிக்கிறது. என் இனம். என்மதம். என் ஜாதி என் மொழி என்பதையெல்லாம் தாண்டி. என் கட்சி என்று படிப்படியாகக் கட்டுறு அமைப்பு கொடுமையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

கோடி மரணங்கள் நிகழ்ந்திருக்காது.

மனித குலத்தில் தீவிரவாதம் என்று ஒன்று ஆரம்பிப்பதே, கட்டுறு மன அமைப்பால்தான். தீவிரவாதமே அதில்தான் ஆரம்பிக்கிறது.

என் இனம், என் மகம், என் ஜாதி, என் மொழி என்பதையெல்லாம் தான் கட்சி என்று படிப்படியாகக் கட்டுறு அமைப்பு கொடுமையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தக் கட்டுறு மனப்பான்மையினால்தான், வித்த வாழ்க்கையில் இருக்கிற அத்தனைவிதமான கட்டுக்களும், துக்கமும் வந்து வாய்க்கிறது.

எமனுடைய பாசக்கயிறு கடைசி நேரத்தில்தான் உங்கள் மேல் வீசப்படுகிறது என்று நினைக்காதீர்கள்.

எப்போது கட்டுறு மனப்பாங்கு உங்களுக்குள் நடக்கத் துவங்கி விட்டதோ, கட்டுறு மனப்பாங்கு எப்போது ஆரம்பிக்கிறதோ, அப்போதே எமனுடைய பாசக் கயிறு உங்களைச் சுற்ற ஆரம்பித்து விட்டது.

காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முழயாது

Even Lord of death cannot control you

இராமகிருஷ்ணர் மிக அழகாக ஒரு கதையைச் சொல்வார். ஒரு குளத்தங்கரையில் ஒரு பிரம்ம ராக்ஷஸன் உட்கார்ந்து இருந்ததாம். அதற்கு நீளமான ஒரு முடி இருக்குமாம்.

அது என்ன செய்யுமாம் யார் அங்குக் குளிக்க வந்தாலும், அந்த முடியின் ஒரு முனையை எடுத்து, குளிக்கிறவர்கள் காலில் அவா்களுக்கே தெரியாமல் சுற்றி விட்டு விடுமாம். அவா்கள் குளித்து முடித்துவிட்டு எங்கே போனாலும், வீட்டிற்கே போனாலும், அந்த முடியும் அதற்கேற்றாற்போல் நீளமாகிக் கொண்டே போகுமாம்.

இந்தப் பிரம்ம ராக்ஷனுக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது என்ன செய்யுமாம் ? இந்த முடியைப் பிடித்து அப்படியே இழுக்க ஆரம்பிக்குமாம்.

இழுத்த உடனே, மனிதர்கள் என்ன ஆவார்கள்? இழுத்த இழுப்பிற்கு அந்த மனிதர் வருவார். அப்போது அந்த மனிதனை அது சாப்பிட்டுவிடுமாம்.

இராமகிருஷ்ணர் இந்த உதாரணத்தை எதற்குச் சொல்கிறாரென்றால், ஒரேயொரு முறை நீங்கள் சென்று, ஒரு ஞான சத்குருவைப் பார்த்து விட்டீர்கள் என்றாலே, அவருடைய ஒரு முடியைக் காலில் கட்டிவிட்டு விடுவாராம்.

கட்டிவிட்டால், சத்குருநாதனிடமிருந்து தீகைஷ் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதோ, அப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அது உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிடுமாம். அது வயிற்றுவலியா, வாய் வலியா, தலை வலியா, என்ன வலியோ? காரணம் தெரியாது.

ஏதோ ஒரு காரணத்திற்கு என்ன செய்யும் ? திரும்ப சத்குருநாதனை நோக்கி அது இழுத்து வந்துவிடும்.

அதுதான் அந்த முடியினுடைய சக்தி. அதைத்தான் குரு கடாக்ஷம் என்பார்கள். இந்தக் கதையை இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்.

காலனும் என்ன செய்கிறான், இந்தக் கட்டுறு மனப்பாங்கு எப்போது நம்முள் உருவாகிறதோ, அப்போதே, அந்த வினாடியே அவனுடைய முடியை உங்களின் கழுத்தில் கட்டி விட்டுவிடுகிறான். உங்களின் உடலில் கட்டி விடுகிறான். இந்தப் பாசக் கயிறுகான் கட்டுடு மனப்பாங்கு.

காலன் வருகிற அந்த எருமை மாடுதான் மெதுவாக உருவாகிற கட்டுறு மனப்பாங்கு,

கட்டுறு மனப்பாங்கை ஒருவர் ஆரம்பித்த அன்றைக்கே, அவரின் மரணம் ஆரம்பித்துவிட்டது.

குழந்தை பிறந்த உடனேயே, "அம்மா சொல்லு, அப்பா சொல்லு," என்று சொன்ன உடனேயே, என்ன ஆகிறது? பாசக்கயிறு கட்ட ஆரம்பித்தாகி விட்டது. கட்டுறு மனப்பாங்கு ஆரம்பித்து விட்டது.

அப்படியென்றால், அன்றைக்கே எமன் என்ன செய்கிறார்? நம்மை தூக்கிக் கொண்டு செல்வதற்கு. அவருடைய இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார், எமன் நடந்து வருவதற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு ஆகிற காலம்தான், நாம் வாழும் அந்த எழுபது வருடம்.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடையும்போது அது மரணமாகிறது.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடைவதுதான் மரணம் என்ற நிகழ்வாகிறது.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், மெதுமெதுவாக, மெதுமெதுவாக எமனுடைய கயிறு, உங்கள் உடலில் சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், சில ஜீவன்கள் மட்டும் மிக அழகாக கட்டுறு மன அமைப்பிலிருந்து விடுதலையாகிச் செல்கிறார்கள்.

அவர்கள் யார் ?

கட்டுறு மனப்பாங்கின் போக்கைப் பற்றித் தெரிந்து கொண்டதினாலேயே, தங்களை அகிலிருந்து விடுபடுத்திக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள்.

குருவின் முடியால் குரு கடாக்ஷத்தால் சுற்றப்பட்டவர்கள் அவர்கள். அவா்கள்தான் சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். அதனால், அவா்களின் வாழ்வும், சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது. மற்றொரு குழு எமனை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது.

எமனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

சிவனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

அவ்வளவுதான்.

இந்த இரண்டுதான். வேறு கிடையாது.

கட்டுறு மனப்பாங்கு எப்போது உருவாகிறதோ, அப்போதே அந்த வினாடியே காலன் அவரைடைய முடியை உங்களின் கழுத்தில் கட்டி விட்டு விடுகிறான். இந்த 'பாசக் கயிறுதான்' கட்டுறு மனப்பாங்கு.

அந்தக் சுற்றிக்கொண்டே இருந்ததென்றால், எமனுடைய பாசக்கயிறு சுற்றிக் கொண்டே இருக்கும்.

கட்டுறு மனப்பாங்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தனெறால், பாச க்கயிறு உங்களின் வாழ்வைச் சுருக்கி கொண்டேயிருக்கும். கட்டுறு மனப்பாங்கில் இருந்து வெளியில் வரும்போது, ஒவ்வொரு நாளுமே, ஏதோ ஒருவித கட்டுறு மனப்பாங்கு உங்களை விட்டு அகலும். கட்டுறு மனப்பான்மையானது தொடர்ந்து அழியும். அப்படி நீங்கள் வாழ, வாழ சிவனை நோக்கிப் பிரயாணம் செய்கிறீர்கள்.

சிவனை நோக்கியா ?

எமனை நோக்கியா ?

என்று நீங்கள்தான் முடிவு செய்தாக வேண்டும்.

Section 2

எமன், சிவன் இரண்டு போர்த்தீர்கள் என்றால், மாட்டின் மேல்தான் வருவார்கள். இரண்டு வாகனமுமே மெதுவாகத்தான் போகும்.

ஈஸ்வரனும் என்ன செய்கிறார்? நந்தி மேல்தான் வருகிறார்.

எமனும் என்ன செய்கிறார் ? எருமை மாட்டின் மேல்தான் வருகிறார்.

உங்களின் உடலைப் பாசக்கயிறு சுற்றிக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு நாளும் எமனை நோக்கிப் போக வேண்டும்.

சிவனுடைய ஞானச்சடை சுற்றியிருந்தால் ஒவ்வொரு நாளும் சுதந்திரம் பெற்றுக் கொண்டே போவீர்கள். கட்டுறு மனப்பாங்கிலிருந்து வெளியில் போய்க் கொண்டே இருப்பீர்கள்.

அதற்கப்புறம், காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.