Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

82. தேவையில்லாத சீர்வரிசை - கட்டுறு மனப்பாங்கு

# தேவையில்லாத சீர்வரிசை - கட்டுறு மனப்பாங்கு

Conditioning, an Unnecessary Property

உறந்தவுடன் நீங்கள் பணக்காரனும் கிடையாது. ஏழையும் கிடையாது, படித்தவனும் கிடையாது, படிக்காதவனும் கிடையாது, புதிதாகப் பிறந்த ஒரு ஜீவன். அவ்வளவே!

ஆனால் சமுதாயம் என்ன செய்கிறது? உங்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது.

சமுதாயக்திற்கு கேவை என்ன? கிளார்க்குகளும், வேலையாட்களும்தான்.

அதற்காக, இப்போது அதைத் தயார் செய்கிற வேலையை, உங்களின் மேல் திணிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ... உங்களுடைய உணர்வைப் பற்றியோ, நீங்கள் அடையவேண்டிய உச்ச நிலையைப் பற்றியோ, சமுதாயத்திற்குக் கவலையே இல்லை. பாவம், அவர்களைக் குறைச் சொல்லிப் பயனில்லை. அவா்களுக்கும் அது தெரியாது.

உங்களின் அப்பாவோ, அம்மாவோ உங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள் பல கட்டுறு மனப்பாங்குகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடும் அவர்கள் செயல்படவில்லை.

பாவம், அவர்களுக்கும் அந்தப் புத்திசாலித்தனம் இல்லை.

அவர்களும் என்ன செய்வார்கள் ?

தங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ, அதைத்தான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், காலமாக, வழிவழியாக, அடுத்தடுத்த சந்ததிக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற, தேவையில்லாத ஒரு சீர்வரிசைதான் இந்தக் கட்டுறு மனப்பாங்கு.

''என்னுடைய அம்மா, எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தார்கள். எனக்கும் இதற்குமேல் வேறு ஒன்றும் தெரியாது. அதனால் அதையே என் குமந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்," என்று முடிவெடுப்பது. அவர்களை அறியாமலேயே அவர்கள் உங்களுக்குச் செய்துவிட்ட துரோகம் என்று இதைத்தான் சொல்கிறோம்.

உங்களுக்கு எந்தவித உபயோகத்தையும் தராமல் செய்யப்படுகிற ஒரே துரோகம்தான், கட்டுறு மனப்பாங்கு. சுழுதாயத்திடமிருந்து பரிசாகவும், ஒழுக்கமாகவும், நீ திநெறியாகவும் பல்வேறு நல்ல, நல்ல பெயர்களிலிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட கட்டுறுமனப்பாங்கு, எந்தவொரு வகையிலும் உங்களுக்கு தேவையில்லாத சீர்வரிசைதான்.