81. லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு
# லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு
Conditioning, the culprit of the aimless life
டு ஏ நடிக்கெல்லாம் லட்சியுக்கைப் பற்றிய கெளிவு இல்லாமல் போனது 2
காரணம், கட்டுறு மனப்பாங்கு. அதாவது, Conditioning
இதுதான் உலகம்.
இதுதான் வாழ்க்கை.
இவ்வளவுதான் முடியும்.
எனக்கு இது பிடிக்கும்.
இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.
இவர் என் எதிரி.
இவர் என் ஆதரவாளர்.
எனக்கு இவ்வளவு தெரியும்.
இதெல்லாம் எனக்குத் தெரியாகு.
உங்களின் அப்பாவோ, அம்மாவோ உங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதில்லை.
என்று விதவிதமான முறையில் உங்களின் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டுப்படுத்தும் மனக்கருத்துகளை, கட்டுறு மனப்பாங்கு என்ற ஒரு வார்த்தையால் குறிப்பிடுகிறோம். இந்தக் கட்டுறு மனப்பாங்குதான் நம்முடைய லட்சியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் வாழ்வதற்கான காரணம்.
இந்தக் கட்டுறு மனப்பாங்கு என்ற வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
பிறக்கும்போது நீங்கள் தமிழரோ, தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடியரோ ஆங்கிலேயரோ அல்ல.. பிறக்கும்போது, இந்தப் பூவுலகிற்கு வந்த ஒரு புது விருந்தாளி நீங்கள்..
சொர்க்கமாக கடவுள் படைத்த பூமியில், இங்கு நம்பி பிறக்கும் ஜீவன்களை இப்போது இந்தக் காலத்தில் அசிங்கம் செய்கிற மாதிரி, அவமானம் செய்கிற மாதிரி, மற்றொரு உலகத்தை இந்த பிரபஞ்சத்தில் நான் பார்க்கவில்லை ...
தவறிப் போய் இந்த உலகிற்கு மனிதர்களாக வந்துவிட்டார்கள் என்பதற்காக, அந்தக் குழந்தைகளை என்ன பாடுபடுத்துகிறார்கள் ?
நீங்கள் பிறக்கும்போது ஒரு ஜீவன்.
ஆனந்தமான வாம்க்கையை வாழ்வதற்காக, துள்ளித் திரிவதற்காக, பறந்து ரசிப்பதற்காக,

பூமிக்கு வந்த ஒரு பரமஹம்ஸம் நீங்கள்.
ஏதோ ஒரு காரணத்தால், பூமியருகே வந்தது மட்டும் இல்லாமல், பூமிக்கும் வந்துவிட்டீர்கள்; பிறந்துவிட்டீர்கள். அங்குதான் பிரச்சினையே...
பிறந்தஉடன், பொறிவைத்துப்பிடிப்பதற்கு நிறையப் பேர்காத்துக்கொண்டிருக்கிறார்கள்...
பிறந்த உடனேயே,
முதலில் தேசத்தாலும்,
அப்புறம் மொழியாலும்,
அடுத்து இனத்தாலும்,
இதையெல்லாம் தாண்டி மதத்தாலும் உங்களின் பிஞ்சு மனத்தை அப்போதே தள்ளிவிட்டார்கள் கட்டுறுத்தும் மனப்பாங்குக்குள்ளே! சுமுதாயம் உங்களை அடைக்கிறது... சிறை வைக்கிறது.
கட்டுறு மனப்பாங்கு, கட்டுறு மன அமைப்பைத்தான் ஆங்கிலத்தில் Conditioning என்று சொல்கிறேன்.
மக்களை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் லட்சியத்தில் இருந்து அவர்களைக் கவிழ்த்தது எது? எது அவா்களை மாயைகளிலும், இயலாமைகளிலும் ஆழ்த்தியது? என்று ஆராய்ந்தால் அது கட்டுறு மனப்பாங்கு எனும் கள்ளன் என்ற பதில்தான்.
உண்மையின் ரகசியம்
உண்மை பற்றி .....
மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை பேச்சு பொய்யை விட மோசமானது அது அந்தி. இது பொய் பேச போடப்படும் தாபம் அல்ல. நீதிநெறிகளால் அடுத்தவர்களை நெறிக்ககூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.