75. மந்தத்தை எரிக்கும் எளிய வழி
# மந்தத்தை எரிக்கும் எளிய வழி
Simple technique to burn the dullness
நும்முடைய சுவாசத்தைப் பார்த்தீர்கள் என்றால்... மும்போக்காக இருக்கும். மேற்பரப்பில் இருக்கும். அதனால்தான், கொஞ்சம் பரபரப்பு வந்தவுடனே, சுவாசம் மாறிப் போகிறது.
எந்தச் சூழ்நிலையோடும் ஒத்துப்போய் ராஜசிக குணம் வெளிப்பட துவங்குகிறது. எப்போதும் சுவாசம் மாறாமல், ஆழமான சுவாசத்தோடு இருப்பவர்கள் ... சாந்தத்திலே, சக்வ குணக்கிலே வாம்பவர்கள்.
இருபத்து நான்கு மணி நேரமும் ஆழமாக, பொறுமையாய் சுவாசியுங்கள். உங்களுடைய மனம், உடல் அனைத்துமே ஒரு பூர்ணத்தன்மைக்கு, உச்சத்தன்மைக்கு வந்துவிடும். பௌத்த மதத்தில் விபாசனா என்கிற தியானம் இருக்கிறது.
அந்தத் தியானத்தின் மொத்த சாரம் என்னவெனில், உங்களுடைய சுவாசத்தைக் கவனித்துக் கொண்டே இருப்பது. அவ்வளவுகான். கவனிக்க அது ஆமாக மாறிவிடும். என்ன செய்தாலும், உண்டாலும், உயிர்த்தாலும் என்ன செய்தாலும், இந்தச் சுவாச ஒட்டத்தில் விழிப்புணர்வை மட்டும் மிக ஆழமாக வைத்தீர்களானால், உங்களுக்குள் எப்போதும் சாந்தத்தன்மை இருக்கும்.
இந்த சின்ன நுட்பத்தைச் செய்து பாருங்கள். ஞாபகம் வரும் போதெல்லாம் நான்கு முறை ஆழமாகச் சுவாசத்தை உள்ளிமுத்து வெளியேற்றுங்கள்.
முழுமையான சுவாசம், மந்த சம்ஸ்காரத்தின் மந்த சக்தியை எரிக்கும் சக்தி பெற்றது.
நுரையீரல், முழுமையாக விரிந்து சுருங்கினாலே மந்தத்தன்மை எரிந்து போகும். தொடர்ந்து செய்யுங்கள். மந்தம் மறையும்.

207

பது உடலுக்குதான், வேதனை என்பது மனத்துக்குதான். ்களின் ஜீவன் இது இரண்டாலும் பாதிக்கப்படாதது.
இலியைக் உணர்வோடுப் பார்ப்பதும், வலி உடலுக்குத்தான் என்று உணர்ந்து வாழ்வதும், ஜீவன் முக்த வாழ்வாகும். உடலினுடைய எந்தெந்த பாகத்திற்குக் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, உணர்வைச் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, அந்தந்தப் பாகத்தின் கவன ஈர்ப்புத் தீர்மானம்தான் வலி.
வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் உடலினுடைய சில பாகங்களுக்குக் கவனம் செவுத்தாமல் விட்டுவிடுகிறோம். சிலருக்கு உடலினுடைய சில இயக்கங்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பகுதியையே வெறுக்கிறார்கள்.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு ஒரு இடத்திற்குப் போகச் சொல்லி யாராவது கட்டாயப்படுத்தினால் என்ன ஆகிறது ?
தலை வலிக்கிற மாதிரி இருக்கும், வயிற்று வலி வரும், ஜுரம் வருகிற மாதிரி இருக்கும். இல்லையா ?
ஒரு செயலை எதிர்க்கும் பொழுது எப்படி எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதோ, அதுபோல் உடலின் பாகத்தை மதிக்காதப் பொழுதும் வெறுக்கும் பொழுதும் எதிர்மறைச் சக்தி எழுகிறது.
உங்களுக்குள் ஒடுகிற எண்ண ஒட்டங்களுடைய எதிர்ப்புகள்தான் வலியாக மாறும்.
வலியும் பரவசமாகும் - விழிப்புணர்வால் Awarness makes pain into bliss
அன்று பெங்களூரில் தியான சத்சங்கம். நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டதால், ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வர, பக்தா ஒருவர் தன்னுடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.
எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி அங்கேயிருந்த பக்தர் களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இருந்தோம். காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள் காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல் 'சதக்' என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது. வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. வலி ஏற்பட்ட இடத்தில் விழிப்புணர்வைக் குவித்ததால் கொஞ்ச நேரத்திலேயே அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது! அடுத்தடுத்த
ஜீவன் முக்த வாழ்வு
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம், ' என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம். வலியைக் கூட பரவசமாக்கும் சக்தி விழிப்புணர்விற்கு உண்டு.

வலி தூண்டும் யுக்தி - 1
சக்தி பாய, வலி குறையும்
Energy Flow - reduces pain & illness
ட்ரம்மச்சாரி ஒருவர் இப்படிக் கேட்டார், ''உங்களால் மட்டும் வலியின்போது விழிப்புணர்வைக் கொண்டு வர முடிகிறதே! அதன் ரகசியம் என்ன? சொல்லுங்கள்.''
அப்போது அவருக்குப் பதிலளித்தோம், 'ரகசியமெல்லாம் எதுவுமில்லை அப்பா... யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். "
''அவ்வளவு எளிய டெக்னிக்கா அது ?''
நானும் வலியை விட்டுவிட்டேன் வலியும் என்னை விட்டுவிட்டது.
''வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம். வலியைக் குறைப்பதற்கு விழிப்புணர்வே சிறந்த மருந்தாகும்.
கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம் ! உடலின் மொத்தச் ச க்தியும் வலி பொங்கும் இடம் நோக்கி திரண்டோடியது.
கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும் வலி குறைய
ஆரம்பித்தது. சக்தி பாயப் பாய வலி குறைந்தது. மீண்டும் வலி அதிகரித்தது. உடனே மீண்டும் சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.
இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தது. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.
நானும் வலியை விட்டுவிட்டேன்.
வலியும் என்னை விட்டுவிட்டது, '' என்று சொல்லி முடித்தோம்.

விழிப்புணர்வே குணமளிக்கும் சக்தி
Awarness itself is a Healing Energy
''எங்களின் உடலில் வலி அடி ஏற்படும்போது, அப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்குச் சக்தி பாய்வதில்லை. ஏன் ?''
''வலி இருக்கும் இடத்திற்குச் சக்தி பாயும் என்பது இயற்கை. ஆனால், தவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போது, உங்களின் விழிப்புணர்வ விமிக்குக்
கொள்கிறது. இந்த விமிப்பு உணர்வகான். மொத்தச் சக்கியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடக்கைக் குணப்படுத்துகிறது.வலி வேதனையாக மாறும் நிகழ்வையே, இந்தக் குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணா்வை மாபெரும் குணமளிக்கும் சக்தி என்றழைக்கிடே றாம்,'' எனச் சொல்லி முடித்தோம். இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.
உடல் வலிக்கு மருந்து - சக்தி மன வலிக்கு மருந்து - புக்கி.
ஒருவேளை விழிப்புணர்வு நடக்காவிட்டால்... ?
ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான ச க்தியையும், மனத்தைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்கள்.
ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். அத்தோடு நில்லாமல், தாம் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்கள்.
சாலை என்றால், மேடு பள்ளங்கள் இருப்பது சகஜம்.
வாழ்க்கை என்றால், சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால் அவற்றை தாண்டிவிட முடியும்.
அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அமுத்தங்களைச் சரி செய்துவிட முடியும்.
விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே 'கவனித்தல்' எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும். நீங்களும் முயன்று பாருங்கள். சாத்தியமே.
மனவலிக்கு மருந்து – புத்தி
Intelligence is a Medicine for Psychological Pains
■۩۞ந்தாகும் மந்திரம் எனும் தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது, பக்தர் ஒருவர், ''எல்லாவற்றிற்கும் உங்களுக்கு உள்ளேயே மருந்து இருக்கிறது எனச் சொன்னீர்களே, அது எது ?''
''உடல் வலிக்கு மருந்து - சக்கி :
மன வலிக்கு மருந்து - புத்தி, ''எனச் சொன்னோம்.
"கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு,"
என நம் முன்னோர்கள் சொன்னதின் ரகசியம் இப்போது பரிகிறதா!
'வல்லவுக்குப் பல்லும் ஆயுதம்,' என முன்னோர்கள் சொன்னது, சக்தியின் மகிமையை விளக்கும் பழமொழி.
மருந்தை உள்ளுக்குள்ளேயே வைக்குக்கொண்டு. கொத்துக்கொத்தாய் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், எல்லா உடல், மனவலிகளையும் சரிசெய்துவிட முடியாது. வெளியிலிருந்து உள்ளே செல்லும் மருந்துகளின் முக்கியத்துவத்தைவிட, அதிகமான முக்கியத்துவத்தை உள்ளே இருக்கும் மருந்துக்குத் தர ஆரம்பித்தால், எல்லா வலிகளும் பறந்தோடிவிடும்.
வலியின் ரகசியம்
ீஉடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?
உடல்வலி என்பது, உடலின் அந்தப்பகுதி குணமடைந்து கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே மனத்தால் வலி என்று அறியப்படுகிறது. தியானம் செய்தால் உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும். தியான சக்தி உடலெங்கும் பரவும். நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.

வலி நிவாரணி – தியானம்
Pain Relief Meditation
வெலிகூட பரவசமாகும் விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால் ... பரவசம்கூட வலியாய்த் தெரியும் விழிப்பணர்வைச் சேர்க்காவிட்டால் ... - ஜென் தத்துவம்
இந்தத் தியானம் மிக அருமையான தியானம். இந்தத் தியானம் ஒரு வலி நிவாரணி. நேராய் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.
கண்களை மூடி, உடலின் எந்தப் பகுதியில் வலி இருக்கிறது என கண்டுபிடியுங்கள்.
அந்தப் பகுதியில் உங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்துங்கள். கவனத்தைச் செலுத்த, செலுத்த அந்த வலி அதிகரிப்பதையும், ஆழமாவதையும் உணர்வீர்கள். பயப்பட வேண்டாம்.
தொடர்ந்து செய்யுங்கள்.
வலியின் பரப்பளவு குறைந்து ஒருபுள்ளியாகச் சுருங்க ஆரம்பிக்கும்.
கவனித்தலை நிறுத்தாமல், தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் வலி மறைந்து பளிச்சென உடல் முழுவதும் பரவச உணர்வு பரவக் காண்பீர்கள்.
இந்தத் தியானத்தை வலிக்கு மட்டும் செய்யாமல், இன்னும் பல தருணங்களில் செய்யலாம்.
கவனத்தைச் செலுத்த செலுத்த அந்த வலி அதிகரிப்பதையும் ஆழமாவதையும் உணர்வீர்கள்
முகத்தில் 'ஈ' உட்காரும்போது ஏற்படும் குறுகுறுப்பைத் தியான காலமாக மாற்றலாம். குறுகுறுப்பை முழுமையாய் அனுமதித்துக்
கவனியுங்கள். உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, அந்தக் குறுகுறுப்பு ஏற்படும் புள்ளியிலிருந்துகூட பரவசம் பரவக் காண்பீர்கள்.
தோலில் ஏற்படும் சிறு அரிப்பிற்குக்கூட, இதே தியானத்தைச் செய்துபாருங்கள். அரிப்பு மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்தத் தோல் பிரச்சினையே சரியாகிவிடும். இந்தத் தியானம் வலிநிவாரணி மட்டுமல்லாமல், பரவச தாரணி தியானமும்கூட. மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.

டங்களின் ஆசைகளை அறிவது, மற்ற ஆசைகளைக் களைவது ஆசைகளைப் பூர்த்திசெய்தாவது கடந்துவிடுவது ஜீவன் முக்த வாழ்வு.
அசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை
No chance to live without desires
வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது.
உயிர் போன்றது.
ஆசைகளே இல்லாதவர்கள் எருமைமாடு போல இருக்கலாம். எருமை மாட்டுக்குதான் ஆசைகள் கிடையாது. காலையில் எழுந்த உடன், சாப்பிட்டுப் போய் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.
மாலையானவுடன் மெதுவாக அங்கிருந்து எழுந்து, அதாவது குறைந்த பட்சம் உடலை அசைத்து வாழ்வது எப்படி என்று எருமை மாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஆசைகள் இருக்கவேண்டும் என்பதற்காக, ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.
ஆசைகள் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.
ஏனெனில், நாம் பணத்தை மட்டும் கடன் வாங்குவது
இல்லை. அதனோடு பிறர் ஆசைகளையும், வாழ்க்கையை வாழும் முறையையுமகூட, அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்குகிறோம். ஆசைகளைக் கடன் வாங்குவது ஆபத்தில் முடியும்.
பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டிற்குக் குளிர்சாதன வசதி செய்திருக்கிறார் என்றால், உடனடியாக நம் வீட்டில் அதேபோன்று குளிர்சாதன வசதி இல்லாமல் இருக்க முடியாது. இல்லையென்றால், நம் வீட்டு வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடும்.
அட! அவரெல்லாம் போட்டுவிட்டாரே என்று நமக்குக் குளிரால் அலர்ஜியாக இருந்தால்கூட, மனைவி "அதற்கென்ன? நம் வீட்டில் வாங்கி, உபயோகிக்காமல் வைத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கென்று கண்டிப்பாக ஒரு ஏசி இருக்கட்டும். வாங்கிக்கொண்டு வாருங்கள். நாமும் பத்து இடத்திற்குப் போய் வருகிறோம். மற்றவர்கள் முன் கவுரவமாக இருக்க வேண்டுமல்லவா? அதற்காக நீங்கள் நமக்கென்று வாங்கிக்கொண்டு வாருங்கள், ''என்று சொல்வார். பக்கத்து வீட்டில் அவா் வாங்கினார் என்பதற்காக, அது நமக்கு அலர்ஜியாக இருந்தாலும், அதை தேவையேயின்றி வாங்கி வந்து மாட்டி வைத்துக்கொள்கிறோம். பின் 'வாங்கி விட்டோமே' என்பதற்காக, இரண்டுநாள் உபயோகப்படுத்தி, உபயோகப்படுத்தியதால் வரும் அலர்ஜிக்குக் கடன் வாங்கி, மருத்துவரிடம் வைத்தியம் பார்த்து என இதுபோன்ற எத்துணை நடந்தாலும்,

அடுத்தவரிடம் இருந்து அந்த ஆசைகளை வாங்குதல் என்கிற குணத்தை நாம் விடுவது இல்லை.''
பணக்கடனை விட மோசமானது ஆசைக்கடன்
கடன் இருந்தபோது, என்னிடம் ஒருவர், ''5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கினால்தான் நாம் கஷ்டப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும். 50 லட்சம், 1 கோடி கடன் வாங்கினால், கடன் கொடுத்தவர்தான் கஷ்டப்படுவார். நமக்குக் கவலை இல்லை!
உண்மையான ஆன்மீக வாழ்க்கை உண்மையான ஆனந்த வாழ்க்கை. உங்களின் ஆசைகளைப் புரிந்துகொள்வதனால்தான் ஏற்படும்.
ஐந்து லட்சம், 10 லட்சம்வரை வாங்கினால் திருப்பி கொடுத்த வேண்டுமே என்கிற பயம் நமக்கு இருக்கும். கஷ்டம் இருக்கும்.
ஒரு அளவுவிற்கு மீறி கடன் வாங்கி விட்டபின், அந்தக் கடனை நாம் திரும்ப செலுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
நமக்கு உடம்பு நன்றாக இருக்க வேண்டும், நம் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று, நம்மைவிட அவர்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்டு இருப்பார்கள்.
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கோயில் கோயிலாகப் போய், பூஜை செய்துகொண்டு இருப்பார்கள், '' என்று சொன்னார்.
அதற்காகக் கடன் வாங்குவது நல்லதென்று சொல்ல வரவில்லை. அசைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கினால், பதிலுக்கு நீங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையா ? ஆசையா ? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆசைகளை ஆழ்ந்து பாருங்கள்
Look deep into desires
நூம் வெறுமனே பணத்தை மட்டும் கடன் வாங்காமல், ஆசைப்படும் மனத்தையும் கடன் வாங்கக் துவங்கிவிடுகிறோம்.
ஆழ்ந்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இந்த அடிப்படையான உண்மை புரியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ... ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ ஆன்மீகத்தின் லட்சியம் அல்ல.
உண்மையான ஆன்மீக வாழ்க்கை, உண்மையான ஆனந்த வாழ்க்கை, உங்களின்
ஜீவன் முக்த வாழ்வு
ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ அன்மீகத்தின் லட்சியம் அல்ல.
ஆசைகளைப் ஏற்படும். அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்த விதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள். அடக்குகிற பொங்க ஆரம்பித்து விடும். வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டுவிடும்.
ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள். மூன்றாவது நாள் கனவில் பெரிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்களே பார்க்கலாம், அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தும், யோசிக்காமல் அராய்ந்து பார்க்காமல். அதை அடக்குகிறோமோ, அந்த ஆசைகள் வேறு ஏதாவது ரூபத்திலே வந்து, நம்முடைய உடம்பினையும், மனத்தினையும் தாக்கும். அதனால் உண்மையான ஆன்மீகம் என்பது, ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல; ஆசைகளை ஆராய்வது.
அடக்குவதனாலோ லோ அல்லது நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்தவிதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள்.
அடக்குகிற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால், ஆராய்வதானலேயே, தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்த்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.
சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்களுக்குள் ஆசைகளை
ஆராய்கல் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களானால், உங்களின் புறவுலக வாழ்க்கை இனிமையாக அமையும்.
அகவுலக வாழ்க்கையும் ஆனந்தமாக அமையும். புறவுலக வாழ்க்கையை இனினிமையாக்கவும், அகவுலக வாழ்க்கையை ஆனந்தமாக்கவும் உங்கள் ஆசைகளை ஆராய்ந்து பாருங்கள். சொந்த ஆசைகளைப் பூர்க்கி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்கள் சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.
உண்மையிலேயே மனத்தெளிவோடு நீங்கள் உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால் ஆராய்ச்சியினாலேயே ஆராய்வதானலேயே தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்ந்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.
ച്ചു /மக்கி
உங்கள் ஆசைகளை மட்டும் அடையும் வழி
The way to achieve your own desires only
டுரு மரத்தை உலுக்கும்பொழுது, மரத்திலே காய்ந்து போய் ஓட்டிக்கொண்டு இருக்கிற இலைகள் தானாகவே விழுந்துவிடும். அந்த மரத்தின் பாகமாக இருக்கும், மரத்தின் சாரமாக இல்லாத, பழுத்த இலைகள் தானாகவே உதிர்ந்து கீழே விழும்.
அதேபோல் நம்முடைய மனத்திலும், இந்த ஆசைகளை ஆராய்ச்சி செய்தல் என்ற தியானத்தின் மூலமாக உலக்கும் பொமுது, மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசைகள்
தியானம் செய்தால் சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.
உதிர்ந்துவிடும். சமுதாயத்தின் மூலமாக நம்மீது திணிக்கப்பட்ட ஆசைகள் நாம் மற்றவரிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்ட ஆசைகள் என்ற இந்தக் காய்ந்த சருகுகளான அசைகள் அனைத்தும் தானாகவே உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. தானாகவே அவை கரையில் விமுந்து விடுகின்றன. அப்படி இல்லாத நம்முடைய சொந்த ஆசைகளாக இருப்பவை மட்டும் விழாமல், உதிராமல் நமக்குள்ளேயே ஸ்திரமாக இருக்கிறது.
இன்னொரு விஷயம், இந்தக் காய்ந்த சருகுகள் கீழே விமும்போது, எப்படி அவை மரத்திற்கே உரமாக மாறுகிறதோ, அதேபோல உங்கள் மீது திணிக்கப்பட்ட, அந்த அளவுக்குமீறிய ஆசைகள் உதிர்ந்து கீழே விமும்போது, அதில் விரயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாகிவிடும், உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடும். கடன் வாங்கிய ஆசைகளை உதிர்த்தாலே, நிஜமான ஆசைகளையும் பூர்த்தி செய்ய சக்தி வந்துவிடும். இப்போது உங்களுக்கு நூறு அசைகள் இருக்கிறது எனில், அதில் உபயோகம் செய்வதற்காக 100 சதவிகிதம் சக்தி வைத்திருக்கிறீர்கள்.
இந்த ஆசைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்பொழுது, 80 சதவிகிதம் ஆசைகள்
அழிந்துவிடுகிறது. கீழே விமுந்துவிடுகிறது. அப்போது 100 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி சக்தியுமே இந்த 20 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி செய்ய உபயோகம் ஆகும். அதாவது 20 சதவீகித ஆசைகளும் உடனடியாகப் பூர்த்தி இருபது சதவிகித ஆசைகளை நிறைவேற்றிவிடுவீர்கள். அடைந்துவிடுவீர்கள்.
ஆசைகள் உதிர்ந்து கீழே விழும்போது அகில் விரமயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாக மாறி உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடுகிறது.
ஆசை ஆராய்ச்சி
Research Desire
''இதற்காகவா இப்படி ஓடினோம்? இதற்காகவா நான் இத்தனைப் பாடு பட்டேன்?'' என்று எண்ணியதுண்டா ?
வாழ்க்கையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்களுக்குப் பிரச்சினை என்பதே இருக்காது.
ஒடுவதற்கு மூன்பு ஒரு தந்து, ஓடி முடிந்த பிறகும் வெறுமையையும், துக்கத்தையும் தருவதுதான், சமூகத்தினால் உங்கள்மீது திணிக்கப்பட்ட ஆசைகளின் பண்பு.
ஓடி முடித்த பிறகும் துக்கத்தை அளிக்கும்; அதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள்.
Section 3
ஆனால், ஒடுவதற்கு முன்பும் உந்து சக்தியாக இருந்து, ஒடி முடித்தபின்பும், அனுபவித்தோம் என்கிற ஆனந்தத்தையும், சந்தோஷத்தையும் தருவது உங்கள் சொந்த ஆசைகள். அடையும் முன் துக்கத்தையும், அடைந்ததும் எரிச்சலையும் தருவதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள். உங்களுடைய ஆசைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது, உங்களுக்கு உங்கள் ஆசைகளைப் பற்றி உங்கள் மனமே புரிய வைத்துவிடும். எந்த ஆசைகள் மீது மீண்டும் மனம் ஒடுகிறதோ, அந்த ஆசைகளுக்குதான் சொந்த ஆசைகள் என்று பெயர். எதன் மீது, மீண்டும் மீண்டும் மனம் வந்து ஒட்டாமல், ஏதோ ஒரு வெறுமையான போக்கினைத் தருகிறதோ, அந்த ஆசைகள் சமகத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்டவை.
இந்த இரண்டு, மூன்று விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவா்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது.
ஆரை யுக்தி - 3
ஆசைகளைத் தெளிவாக்கும் தியானம்
A meditation that clarifies your desires
ுடின்று நிலைகளிலே ஆசைகளைப் பற்றி விளக்கினோம். இப்பொழுது ஆராய்ச்சி க்குள் இறங்குவோம்.
கிணிக்கப்பட்ட ஆசைகள் Inserted Desire
முதல் நிலை ஆராய்ச்சி: எது உங்களுடைய சுயமான இச்சைகள் மற்றும் சமுதாயத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்ட இச்சைகள் என்ற இந்தத் தெளிவு உங்களுக்கு வந்தாலே,

உங்களுக்குள் இருந்துகொண்டே, உங்களின் 80% சக்தியை உறிஞ்சுகிற அனாவசியமான ஆசைகள் விழுந்து விடும்.
முரண்பட்ட ஆசைகள்
Contradictory Desires
இரண்டாம் நிலை ஆராய்ச்சி:எது உங்களுடைய ஆசைகளிலேயே, தன்னைத்தானே எதிர்த்துக்கொள்கிறது என்பதை ஆராயுங்கள். இந்த இரண்டு முரண்பட்ட ஆசைகளைத் தேடிப் பொறுக்குங்கள். எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். மற்றொன்று தானாகவே அழிந்து விடும். இதைச் செய்தீர்களானால், மீதமுள்ள 20% - 15% ஆழிந்து வி(டும்.
உங்களுடைய ஆசைகள்
Your Desires
தன்னைத்தானே எதிர்த்துக்கொள்ளும் எண்ண ஒட்டங்களை சரியாக்குங்கள்
மூன்றாம் நிலை அராய்ச்சி: உங்களுடைய ஆசைகள் என்று தேர்ந்தெடுத்தவற்றிலேயே நீங்கள் பாகத்தைக் கண்டுபிடியுங்கள்.
உங்களுடையது என்று நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாகத்தில், தன்னைத் தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஒட்டங்களை, வார்த்தை ஓட்டங்களைச் சரி செய்யுங்கள்.
தன்னைத்தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஓட்டங்களைச் சரியாக்குங்கள்.எந்தெந்த இடத்திலெல்லாம் இது போன்ற தீய மனப்பதிவுகள், எதிர்மறையான எண்ணப்பதிவுகள் உங்களுக்குள் உருவாகின்றன, உங்களுக்குள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து, அவற்றையும் தெளிவாக்குங்கள். இந்த மூன்றையும் செய்தாலே, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கும் ஆசைகள் முழுமுமையாக அற்று விடும்.
உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மட்டும் இனிமையாகவும், ஆனந்தமாகவும் உங்களுக்குள் மலரத் துவங்கும்.
ஆசையின் ரகசியம் ஆசை ? ஒசையில்லாமல் வாழும் ஒரு உயிர் என்ன அது ஒரு உயிரா? ஆம்! மனிதன் செத்தப் பின்னும் வாழ்வது ஆசை! • செத்த பின்... என்றால் ? ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில் ... ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்.
மற்றவர்களுக்குள்ளும் உருவாக்காமல் வாழ்பவர் ஜீவன் முத்தர்
குற்ற உணர்ச்சியை விட்டாலே குதூகலமாவீர்கள் Drop the Guilt, Joy will Overflow
சில மாதங்களுக்கு முன்பு 14 வயது பையனை ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர் நடுத்தர வயது பெண்.
அந்தம்மா சொன்னார்கள், ''இந்தப் பையன் நான் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் தயவு செய்து அறிவுரை செய்து, நான் சொல்வதைக் கேட்கச் சொல்லுங்கள், '' என்றார்.
நான் உடனே சொன்னேன், ''நானே, எங்கம்மா சொன்னதைக் கேட்கவில்லை. நான் எப்படிம்மா சொல்வது ?'' என்று கேட்டேன். அந்தம்மா விடவில்லை, "இல்லை, நீ ங்கள் சொல்லுங்கள்,'' என்று பிடிவாதமாகச் சொன்னார். அப்போது அந்தப் பையனை அழைத்து, ''பாரப்பா, உங்கள் அம்மா சொல்லுவதைக் கேட்கக் கூடாதா? நானே கேட்கிறேன் பார். அவா்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நானே கேட்கிறேன். நீ கேட்கக் கூடாதா? அவா்கள் சொல்வதைப்போல் இருக்கக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன் ரொம்ப வேகமாகச் சொன்னான், "அவர்களே ஆனந்தமாக இல்லை, அவா்கள் சொல்வதைக் கேட்டால், நானும் அப்படித்தான் உருப்படாமல் போய் விடுவேன்," என்றான்.
எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பையனுடைய புத்திசாலித்தனத்தைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய தலைமுறை நாம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. செய்வதைச் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.
சமுதாயத்தில் ஒழுக்கமான வாழ்க்கை (Moral Standard) என்பது என்னவாகிவிட்டது ? நன்னெறியோடு இருப்பது என்பது, தாம் செய்ய முடியாததை மற்றவர்கள் மேல் 'திணித்தல்' என்று புகுத்தும் முறையாகிவிட்டது. குற்ற உணர்ச்சியின் மூலமாக வாழ்க்கையின் தரத்தை உயர்த்திட முடியும் என்று சமுதாயம் வைத்திருக்கிற தவறான நம்பிக்கைதான் மொத்த வாழ்க்கையினுடைய துக்கத்திற்கான காரணம். தலைமுறை இடைவெளி (Generation Gap), குடும்பத்தில் வருகிற பிரச்சினை இவை அனைத்திற்குமே இதுதான்காரணம் .

குற்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்றால், எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல் செய்துவிட்டு, செய்த பின்பு யோசித்து துக்கமடைவதால் வருகிறது. இறந்துபோன உடலைப் பிரேதப் பரிசோதனை (Post mortum) செய்வது போன்று குற்ற உணர்ச்சி என்பது நடந்து முடிந்த செயலைப் பற்றி அளிக்கப்படும் விளக்கமான அறிக்கை (Post mortum report).
இன்றைய தலைமுறை நாம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. செய்வதைச் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.
இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் ? அதிக பட்சம் பார்த்துப் பார்த்துத் துக்கப்பட முடியும். இப்படி ஆகிவிட்டதே என்று கதறி அழ முடியும்.
இதனால் தீர்வு கிடைக்கப் போகிறதா ?
இல்லை மீட்டெடுக்கத்தான் முடியுமா ?
அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்துக் கெண்டு என்ன செய்ய முடியும் ? எப்படி இறந்தார் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
குற்ற உணர்ச்சியும் அது போன்றதே!
குற்ற உணர்ச்சி என்பது Updated Intelligence-ஐ வைத்து, கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கும் செயல். அப்போது நமக்குள் ஏற்படுகிற விஷயம்தான் குற்ற உணர்ச்சி.
ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ...
சின்ன வயதில் குழந்தைகள் விளையாடும்போது, தங்களுக்கு மிகவும் பிடித்த பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அம்மா குழந்தையிடம் வந்து, அப்பா! சாப்பிட வாப்பா என்று அழைத்தார்கள் என்றால், வேண்டாம் என்று சொல்லும்.
ஆனால், அதையும் மீறி குழந்தையைக் கட்டாயப்படுத்தி, கையிலிருக்கும் பொம்மையை இழுத்தால் போதும், எனக்குப் பொம்மைதான் வேண்டும். நீ செத்து ஒழி என்று உதைக்கக்கூட தயங்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு, அம்மாவைவிட பொம்மைதான் முக்கியமாகத் தெரிந்தது. ஆனால், வளர்ந்த பிறகு யாரும் அம்மாவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவனுக்கே புரியும், பொம்மையை விட, அம்மா நிறைய விதத்தில் உதவி செய்வார்கள் என்று.
அந்தக் குழந்தை சிறிது விபரம் தெரிந்த பிறகு, ''ஐயோ, எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மோசமானவன், பெற்ற தாயைப் பார்த்து இப்படிப் பேசினேனா!'' என்று வருந்தத் துவங்கினால் என்ன ஆகும் ?
குற்ற உணர்ச்சியில் விழும். ஆனால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதனால் பிரயோஜனமில்லை என்பதை புரிந்துகொள்ள
வேண்டும். அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே என்று ஆனந்தப்பட வேண்டுமே தவிர, அப்போது செய்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் கேவை இல்லை.
உண்மையில், குற்ற உணர்ச்சி இல்லாத உள்ளமே தங்கும் கோயில்.
குற்ற உணர்ச்சி என்பது வளர்ந்து விட்ட புத்திசாலித்தனத்தை வைத்து, கடந்துபோன வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டு இருப்பது.
ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு சத்தியம், குற்ற உணர்ச்சியினால் மட்டும் நல்லவனாக மாறிவிடலாம் என்று தயவு செய்து நினைக்கவே நினைக்காகிர்கள். ஒருவர் என்னிடம் வந்தார். "நான் சிகரெட் பிடிக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் ஆழமாக இருக்கிறது. ஆனாலும், சிகரெட் பிடிப்பதை நிறுத்தவே முடியவில்லை." என்று சொன்னார்.
நன்றாகக் கெரிந்து கொள்ளுங்கள் ...
குற்ற உணர்ச்சி ஆழமாக, ஆழமாக ... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே முடியாது. அந்தச் செயலுக்கு அடிமையாவீர்கள்.
காரணம் என்னவென்றால், அந்தக் குற்ற உணர்ச்சியே அந்தச் செயலை மீண்டும்
பாவத்தின் ரகசியம்
ீ எது பாவம் ?
இச்சொல்லைப் பிரயோகிப்பது.
• ஏன் ?
பாவம் என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது மனத்துக்குள் பெரிய காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி மனித வளர்ச்சிக்கு எதிரானது.
யார் பாவி ?
அடுத்தவரை பாவிகள் என சொல்பவர்களே பாவிகள் என ஜென் தத்துவம் சொல்கிறது.
· பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்?
மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார் ? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா ? இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால் ... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா, இல்லையா எனப் புரிந்துவிடும்.
யார் முதலில் திருந்த வேண்டும்?
திருத்த நினைப்பவர்கள்.

மீண்டும் ஞாபகப்படுத்தும். சிகரெட் பிடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியே, அந்தக் குற்ற உணர்ச்சி மேல் வரும்போதெல்லாம் சிகரெட் பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுத்தி விடும்.
Section 4
குற்ற உணர்ச்சி உங்களைப் பிடிப்பதில்லை. நாம்கான் குற்ற உணர்ச்சிடிச்உருவாக்குகி றாம். குற்ற உணர்ச்சி உங்கள் புத்திசாலிதனத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும்; தீர்வையும் அளிக்காது. பந்தத்தில் ஆழ்த்தும். நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள் விழாமல் இருந்தால்தான், மற்றவர்களை நிம்மதியாக வைத்திருக்கவே முடியும். உங்களையும், மற்றவர்களையும் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தும் செயலை விட்டுவிட்டீர்களென்றால், குதூகலமாவீர்கள்.
வாழ்வின் தரத்தை உயர்த்த ...
To increase the standard of Life ...
இழுக்கம் அனுபவங்களை தெளிவாக நடத்துவது. அதைத்தான் நீதி நெறி என்று சொல்கிலே றாம்.
நீதிநெறிகள் மற்றவருக்கல்ல. நம்மைத் திருத்துவதற்கு! தனக்கு ஆனந்தம் தருவதும், தருவதும், உசுற்றி உள்ளவர்களுக்கு ஆனந்தம் தருவதும் எதுவோ, அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை வாழ்வதுதான் நீதிநெறியோடு வாழ்வது..
உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொடுப்பவர்கள் மட்டும்கான் அவர்கள் வாழ்க்கையிலும் கெளிவை வைத்திருப்பார்கள்.
இல்லையென்றால், பலநேரத்தில் பார்த்தீா்கள் என்றால், நீதிநெறி என்ற பெயரில் நம் வாழ்க்கையையே துக்கத்திற்குள் ஆளாக்கிக் கொள்கிறோம். பெரும்பாலான நேரங்களில், உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைத் திணிப்பவா்களைப் பார்த்தீர்களென்றால், முதலில் அவர்கள் வாழ்க்கைதான் இரட்டைத்தனமாக இருக்கும்; அவர்கள் வாழ்க்கைதான் தெளிவற்றதாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள்.
விவேகானந்தா், ''மனித மனத்தை ஆழ்ந்த கருணையோடு அணுக வேண்டும்,'' என்று மிக அழகாகச் சொல்கிறார். ''சரியாக இரு, நன்றாக இரு, ஒழுங்காக இரு,'' என்று சொல்வது ரொம்ப எளிது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சொல்பவர்களெல்லாம் அதைச் செய்கிறார்களா என்று பார்த்தால், மிகப் பெரிய கேள்விக் குறியில்தான் முடிகிறது. உண்மையில்தான் சொல்வதைச் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் மற்றவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களால்தான் தம்மைப் போன்று மற்றவரையும் கருணையோடு அணுக முடியும். கட்டளையிட்டால் கண்ணீர் வரும் : கற்றுக் கொடுத்தால் களிப்பு மிகும்.
'எப்படி இருப்பது' என்று கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும்தான், தியான ஆச்சாரியார்கள்.
கட்டளையிட்டால் கண்ணீர் வரும். கற்றுக் கொடுத்தால் களிப்பு மிகும்.
வெறுமனே ஆச்சாரியார்கள் கிடையாது. அந்த ஒழுக்க நிலையை அடைவது எப்படி என்கிற நுட்பத்தை, தியான நுட்பத்தை அளிப்பவர்கள்தான் ஆச்சாரியார்கள்.
மூளை யார் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். உணர்வு ரீதியான அனுபவத்தைத் தருவது ஒரு ஞானியினுடைய வேலை.
சத்தியங்கள் உணா்வுப்பூர்வமான அனுபவமாக மாறினால் மட்டும்தான் உங்களுக்குள் நிலைபெறும். இல்லையென்றால், இது நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, மற்றவர்கள் மேல் திணிக்கிற நீதிநெறி முறையாக ஆகிவிடும். எப்போது வாழ்க்கையைத் திணிக்கத் துவங்கினோமோ அப்போதே இடைவெளி உருவாகி விட்டது.
அதனால்தான் இந்தத் தலைமுறை இடைவெளி (Generation Gap) உருவாகிறது. உண்மையில் தலைமுறை இடைவெளி என்பது பெரிய பிரச்சினையே கிடையாது.
தன்னைவிட இவர் வயதில் சிறியவர் என்றால் போதும். பெரியவர்கள் அவர்கள் வாழ்க்கை மீதே முழு உரிமை பெற்றவர்கள் போன்று நடந்து கொள்ளத் துவங்குகிறார்கள். உண்மையில் இதுதான் இடைவெளி உருவாகத் துவங்கும் இடம்.
இன்னொரு விஷயத்தை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் காலத்து இளைஞர்கள், இந்தக் காலத்து மாணவர்கள், இந்தக் காலத்துக் குழந்தைகள் எல்லாம் ரொம்ப புத்திசாலிகள். நீங்கள் என்னதான் சொன்னாலும், நீங்கள் சொல்வதை அவா்கள் செய்யவே மாட்டார்கள். நீங்கள் செய்வதைத்தான் செய்வார்கள். (Verbal language-ஆல்) நீங்கள் வாய் மொழியால், வார்த்தைகளால் கற்றுத்தருவதை, அவர்கள் செய்வதே இல்லை. உடல் மொழியால் செயல் ரீதியாகக் (Body language) கற்றுக் கொடுப்பதைத்தான் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்; நம்புகிறார்கள்.
வாழ்க்கையில் நன்னெறியை எடுத்து வருவதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் என்ன
செய்கிறீர்கள் ? உங்களுடைய மகனோ, மகளோ அல்லது உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களோ தவறு செய்தால், அவர்களுக்குள்ளே குற்ற உணர்ச்சி யை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.
குற்ற உணர்ச்சியை உள்ளே திணிக்க முழுயற்சி செய்கிறீர்கள். உணர்ச்சியை
சத்தியங்கள் உணர்வுப்பூர்வமான அனுபவமாக மாறினால் மட்டும்தான் உங்களுக்குள் நிலைபெறும்.

ஏற்படுத்துவதனால், எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்க முடியாது.
தெளிவைக் கொடுத்தால் மட்டும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முடியுமே தவிர, குற்ற உணர்ச்சியைக் கொடுப்பதினால் எதையுமே செய்ய முடியாது.
இன்று நன்னெறி. ஒழுக்கம் என்பது... யார் தன்னுடைய வாம்க்கையைக் தற்காத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தங்கள் தனிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது திணிக்கிற ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதனால் ஏற்படுகிற உணர்ச்சிதான் குற்ற உணர்ச்சி, எரிச்சல், தலைமுறை இடைவெளி எல்லாம்.
உண்மையான வழக்கம், உண்மையான காமம் எப்போது வரும் என்றால், தெளிவு பிறந்தால்கான் வரும்.
குற்ற உணர்ச்சியினால் நிச்சயம் ஒழுக்கம் வரவே முடியாது. தெளிவு நிகழ்வது மூலமாக நம்முடைய வாழ்க்கையின் தத்துவங்கள் நமக்குப் புரிந்தால் மட்டும்தான், புரிய வைக்கப்பட்டால் மட்டும்தான் முடியும். அப்போதுதான் வாழ்க்கையின் தாக்கை உயர்த்த முடியும். ஒழுக்கம் வர முடியும்.
குற்றம் கரைக்கும் யுக்தி-1
நோயையே உருவாக்கும் குற்றஉணர்ச்சியை எரித்துவிடுங்கள்
Burn the Guilt which can create diseases
வெறுமனே சட்ட திட்டங்களினாலோ, அடக்குமுறையினாலோ அல்லது ஆணவத்தினாலோ, வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவே முடியாது. இவற்றால் நிச்சயமாகக் குற்ற உணர்ச்சியை வேண்டுமானால் அதிகம் ஆக்கலாம்.
நீங்கள் இதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தங்களுக்குள் இனிமையான நண்பர்களாக இருக்கிற தாய், தந்தையா்கள் குழந்தைகளை இனிமையாக வளா்ப்பார்கள். நண்பர்களாக இருக்கிற பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.
ஆனால், ஒருவரை மற்றவர் அடக்கி வாழ்ந்துகொண்டிருக்கிற பெற்றோர்களின் குழந்தைகளைப் பார்த்தீர்கள் என்றால், முமேம்போக்கான பொலியான விரு மனிதர்களாகத்தான் உருவாகிறார்கள். ஸ்திரத் தன்மையை உடைய ஒரு Intense-ஆன நபராக உருவாகுவதே இல்லை.
குற்ற உணர்ச்சி என்பது, போலித்தனமான மனிதர்களைத்தான் உருவாக்கும். உடம்பில் சீழ்பிடித்த கட்டி, புற்றுநோய். உணர்வில் சீழ்பிடித்த கட்டி, குற்ற உணர்ச்சி. உடலில் இருக்கும் சீழ்பிடித்த புற்றுநோய் போன்று, உணர்வில் சீழ்பிடித்த கட்டியாக இருக்கும் புற்றுநோய், குற்ற உணர்ச்சி.
குற்ற உணர்ச்சி, உள்ளுக்குள்ளே சத்தியத்தை உணர விடாது. நிச்சயமாக அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று. குற்ற உணர்ச்சி நிழல் போன்றது. உங்களுக்குள் தெளிவு எனும் ஒளி பிறந்துவிட்டால், குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருக்க முடியாது.
குற்ற உணர்ச்சியைப் புற்றிப் பரிந்து கொண்டாட்டக்கிற்குள் கொள்ளுங்கள். புகுவீர்கள்.
தங்களுக்குள் இணிமையான நண்பர்களாக இருக்கிற தாய், தந்தையர்கள் குழந்தைகளை இனிமையாக வளர்ப்பார்கள். நண்பர்களாக இருக்கிற பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.
குற்றம் கரைக்கும் யுக்தி-2
ரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்
Don''t repeat the same mistake
குற்ற உணர்ச்சி இருந்தால், எந்த ஒரு மனிதனாலும் வாழ்வின் தரத்தை (Moral Standard) உயர்த்தவே முடியாது. உங்களுடைய வாழ்வின் தரத்தைக் குற்ற உணர்ச்சி உயர்த்தும் என்ற எண்ணம் இருந்தது என்றால், தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.
குற்ற உணர்ச்சி என்பது ஒரு ஆழமான சம்ஸ்காரம். நமக்குள்ளே பதிந்துபோய் இருக்கிற ஆழமான சம்ஸ்காரம். சின்ன வயதில் இருந்து, அறிந்தோ அறியாமலோ, செய்த நிகழ்வுகளை, தவறுகளைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதேபோல் தனது வாழ்க்கையை, மீண்டும் மீண்டும் அமைத்துக்கொள்ளுதல் எனும் மனப்பழக்கம்தான் குற்ற உணர்ச்சி.
கடந்த காலம், இப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பது குற்ற உணர்ச்சி.
குற்ற உணர்ச்சியை உடைத்து வெளியில் வர முடியாமல் இருப்பதும், எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆசை.
உங்கள் சக்தி எதிர்காலத்தை நோக்கி ஒடி, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றிருந்தால், அது ஆசை. கடந்த காலத்தை நோக்கி ஓடி, கடந்த காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அது குற்ற உணர்ச்சி. தவறே செய்யாமல் இருக்கமுடியாது. ''செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்,'' என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு. ''புதிதுப் புதிதாய் தவறு செய்யுங்கள். தவறே செய்யாமல் எப்படி இருப்பது, என்பதை ஒருநாள் கண்டுகொள்வீர்கள். இதைப் புரிந்துகொண்டுவிட்டால், பூத்துவிடுவீர்கள். ''
