74. சோம்பல்தனம், மந்தத்தன்
# சோம்பல்தனம், மந்தத்தன்
– மந்தத்தன்மை எப்படி வந்தாலும் அதை எட்டி உதைப்பதே ஜீவன்முக்தி வாழ்வு
ரும் எல்லோருக்கும் மந்தத்தன்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ''எப்போது கையை நீட்டலாம், எப்போது காலை நீட்டலாம்,' என்ற பார்த்துக் கொண்டிருந்தாலே தெரிந்து கொள்ளுங்கள், மந்தத்தன்மையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
''கையை நீட்ட முடிந்தவுடனே நீட்டி விடுவது, காலை நீட்ட முடிந்தவுடனே நீ ட்டிவிடுவது - முடியவில்லை என்றால், எப்போது நீட்டலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பது.' அதுவும் மந்தத்தன்மைதான், தமோகுணத்திலேயே வாழ்வது. உங்களுக்கே நீங்கள் செய்யும் துரோகம்தான் மந்த குணத்தை வளர்த்தல்.
ஒரு அன்பர் சத்சங்கத்திலே, ''மறு பிறவியை நாம் எப்படி முடிவு செய்கிறோம்?'' என்று கேட்டார். ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். எந்தக் குணத்தை மையமாக வைத்து உங்களுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி நேரத்தை நீங்கள் செலவிடுகிறீர்களோ, அந்தக் குணத்தை மையமாகக் கொண்ட சரீரங்களைத்தான் அடுத்த பிறவிக்கு உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
உதாரணமாக ...
ஒரு மனிதர் தம் வாழ்வு முழுவதும், வெறுமனே சாப்பிடுவதிலேயே கழித்து இருந்தார் எனில், அவா் இயற்கையாகவே என்ன நினைப்பார்? அடுத்த ஜென்மம் எடுக்கும்போது, எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பதற்காக, எல்லா வாய்ப்புகளும் அவர் மன்ப நிற்கும். அவருடைய மேஜை மீது எல்லா வாய்ப்புகளும் வைக்கப்படும்.
அவர் என்ன நினைப்பார்? ''நாம் உடல் எடுத்தால் சாப்பிடுவதை மட்டும்தான் செய்கிலே றாம். இதற்குப்போய் எதற்காகக் கல்லூரிக்குச் சென்று கஷ்டப்படவேண்டும் ?
ஏன் கல்லூரிக்குச் செல்லவேண்டும் ?
பின் திருமணம் செய்துவிடுவார்கள், குடும்பத்தை நடத்தியாக வேண்டும், ஏகப்பட்ட பொறுப்புகள் எடுக்க வேண்டும். அதைவிட ஒரு ஆடு சரீரத்திலோ, பன்றி சரீரத்திலோ பிறந்தோம் என்றால், சாப்பிட்டே காலம் தள்ளலாம்; வேறு எந்தப் பொறுப்பும் எடுக்க வேண்டியதில்லை என்று யோசிக்கும். இப்படித்தான் நம்முடைய பகுத்தறிவு வேலை செய்யும்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். இது விளையாட்டு அல்ல. உண்மையிலேயே நம்முடைய பகுத்தறிவு எப்படி வேலைச் செய்கிறதோ, அப்படியேதான் மறுபிறவியை எடுக்கிறது என்கிற சத்தியத்தை, உங்களுக்குச் சொல்கிறேன். அப்போது நம்முடைய பகுத்தறிவு இப்படித்தான் வேலை செய்கிறது. எல்லாவற்றையும்விட சாப்பிடுவது

மட்டும்தான் நாம் அனுபவிக்கும் ஒரே விஷயம்.
அகற்குப் போய் அனாவசியமாகக் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திற்குச் சென்று உட்கார்ந்திருப்பானேன்? மேலதிகாரிகளுக்குப் பதில் சொல்வானேன்? பொறுப்பெடுப்பானேன்? வேறு என்ன செய்யப் போகிறோம்? சாப்பிடுவது மட்டும்கானே செய்கிரோம்.
ஆடாகவோ, மாடாகவோ பிறந்தோம் என்றால், நீளமான வாய் இருக்கும். சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும். அதற்குத் தேவையான உடல் அமைப்பு என்று முடிவெடுக்க தேவையான எல்லா லாஜிக்கும் முன்னால் வரும். எந்தச் சுகத்தை நீங்கள் ஆழ்ந்து அனுபவிக்கிறீர்களோ, எந்தச் சுகம் உங்களுடைய வாழ்க்கையின் சாரமாகப் புரிபடுகிறதோ, எந்தச் சுகத்தை வாழ்கையின் சாரம் என்று, நீங்கள் மீண்டும் மீண்டும் கருதுகிறீர்களோ, அந்தச் சுகத்தை அந்தப் பலனை, அந்த இந்திரியத்தை மையமாக வைத்துதான், உங்கள் உடலை உருவாக்குகிறீர்கள். உங்களின் வாழ்க்கையையே, மன அமைப்புதான் வடிவமைக்கிறகு.
மந்த குணம் மறையும் யுக்தி-2
மனித உடலின் மகத்துவம்
The speciality of the human body
் மீட்கக் தன்மையிலேயே வாழ்ந்தோமானால், இயற்கையிலேயே நாம் உடலெடுத்து என்ன செய்யப் போகிறோம் ?'' என்று பக்தர் ஒருவர் கேட்டார்.
தூங்கிக் கொண்டே இருக்கப் போகிறோம்.
பிறகு, அனாவசியமாக மனித உடல் எடுப்பது ஏன்? மனித உடல் எடுத்தால் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு அளவிற்கு மேல் தூங்கமுடியாது. வாழ்க்கை யில் 30 ச தவீதம்தான் தூங்கவிடுவார்கள். அதற்கு மேல் சமுதாயம் விடாது.
ஆனால், எருமை மாடு சரீரமாகயிருந்தால்....கேட்க ஆளில்லை, தொந்திரவு இல்லை, பொறுப்பு இல்லை, அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை, பள்ளிக்குச் செல்ல வேண்டியது இல்லை, கல்லூரிக்குச் செல்லவேண்டியது இல்லை.
இருக்கிற வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதைப் படிக்கத் தேவையில்லை. பகுத்தறிவு எப்படி வேலை செய்கிறது என்று கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
பொறுப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த வழியைதான், நாம் உடனே தேர்ந்தெடுக்கிறோம். மந்தத் தன்மையையே தேர்ந்தெடுக்கிறோம்.
எந்த ''கத்தை நீங்கள் ஆழ்ந்து அனுபவிக்கிறீர்களோ அந்த இந்திரியத்தை மையமாக வைத்துதான் உங்கள் ஒடலை உருவாக்குகிறீர்கள்.
ஜீவன் முக்த வாழ்வு
மந்தத் தன்மை என்கிற சம்ஸ்காரத்தில்தான் மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். எதையும் நம்புவதில்லை. எதையும் செய்வதில்லை, எதற்குள்ளேயும் போவதில்லை, எதிலும் ஈடுபடுவதில்லை. மந்தத் தன்மையில் இருப்பதால் மொத்த வாழ்க்கையும் வீணடிக்கப்படுகிறது.
மனித உடலில் மட்டும்தான் பிரபஞ்ச உணர்வு (cosmic universness) பிரதிபலிக்கப்படுகிறது. எத்துணை ஜென்மங்கள் வேறு உடல் எடுத்தாலும், ஒரு நாள் மனித உடல் எடுத்துதான் ஆக வேண்டும். மனித உடலில் மட்டும்தான் ஞானமடைவது சாத்தியம். மந்தத்தன்மையால் இன்று தள்ளிப் போட்டாலும், நீங்கள் என்றாவது ஒருநாள் அடைந்தே தீர வேண்டிய இலக்கு அது. விழிப்புணர்வால் நிறையும்போது மந்தத்தன்மையில் இருந்து அமைதியான, ஆனந்தமான ஸத்வ குணத்தில் மலர்வீர்கள்.