Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

63. இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்தவேண்டும் ; புலன்களையல்ல

# இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்தவேண்டும் ; புலன்களையல்ல

It is the indrivas that need to be contrilled, not the senses

உகவத்தீதையில் கிருஷ்ணர் மிக அழகாக ஐம்புலன் இயக்கம் பற்றிச் சொல்கிறார். ரதத்தில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து குதிரைகளும், நம்முடைய ஐந்து புலன்களுக்குச் சமம். இந்த ஐந்து குதிரைகளும் தங்களுக்குப் பிடித்த திசையில் செல்ல விரும்பினால், தேர் எந்தத் திசையில் போகும் ? அந்தக் குதிரைகள் விரும்பும் திசைக்கு நம்மை இழுத்துச் செல்லும். நாம் விரும்பும் திசைக்கல்ல.

சக்தி சேமிப்பு யுக்தி-1

உடல் எனும் தேர், நாம் விரும்புவதுபோன்று இயக்கப்பட வேண்டுமானால், குதிரைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

எத்தனை குதிரைகள் இருந்தாலும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான எளிய முறைதான். கண்களுக்குக் கட்டிவிட்டு. அந்தக் கயிறை நம் கையில் வைத்துக் கொள்வது. குதிரையும் துன்புறாது. நாமும் துன்புறத் தேவையிராது.

கடிவாளம் குதிரையின் கண்களை பாதிக்காது. கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கப்பட வேண்டுமோ, அதற்கேற்றவாறு கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும். இங்கு கடிவாளத்தைப் போட்டிருப்பதனால், குதிரையின் கண்கள் நேரடியாக எந்தவிதப் பாதிப்பும் அடைவதில்லை.

கண்பார்வையைக் குறைக்காமல், கண்களால் பார்க்கப்படும் பாதையின் அளவைத்தான் குறைக்கிறோம்.

அதனால்தான் சொல்கிறோம். புலன்களை நாம் நேரடியாகக் கட்டுப்படுத்தவும் கூடாது. நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

புலன்கள் என்றால் குதிரை; இந்திரியங்கள் என்றால் லகான்கள், அதாவது கடிவாளம்.

இப்போது ஒரு குதிரை சண்டித்தனம் செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம்

அதை அப்படியே விட்டுவிட முடியாது. கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு கட்டுப்பாட்டுக்குள் என்பதற்காக, அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு அடக்குவதா? அல்லது அந்தக் குதிரையின் தலையின்மீது கல்லையே போட்டு அடக்குவதா ? அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு ஒழுங்காக்கினால், அதை மீண்டும் உபயோகப்படுத்த முடியும்.

கடிவாளம் குதிரையின் கண்களைப் பாதிக்காது. கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கப்பட வேண்டுமோ அதற்கேற்றவாறு கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும்

கல்லைப் போட்டு அடக்க நினைத்தால் அது செத்துத்தான் போகும்.

அது மாதிரித்தான் நம்முடைய ஐம்புலன்களிலும் இந்திரியங்கள் என்ற கடிவாளத்தைப் போட்டு நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்த வேண்டும். அதை விடுத்து ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் இறந்து போன நடைப்பிணங்கள் மாதிரியான வாழ்க்கையே வாழ்வோம் !!

இது ஆன்மீக வாழ்க்கை அல்ல ! தியான ஆராய்ச்சி

ஐம்புலன்களை

  1. அளவுக்கு அகிகமாகச் சாப்பிடத் தூண்டும், சுவை இந்திரியத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா ? இல்லை, நாவை அதாவது புலனை அடக்குகிறீர்களா ?

  2. சாப்பாட்டைத் தினம் குறைக்க முயற்சித்துத் தோற்றுப் போகிறீர்களா?

  3. இதேபோல் ஐம்புலன்கள் வழியாக நம்மை அலைக்கழிக்கும் இந்திரியங்களை, கட்டுபடுத்தி மனத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா ? இல்லை புலன்களோடு ஒவ்வொரு முறையும் சண்டையிடுகிறீர்களா? அல்லது அடக்க முயற்சித்துத் தோற்றுப் போகிறீர்களா? ஆராயுங்கள். வாழ்க்கையை ஆரோக்கியமாக்கலாம்.

  4. நீங்கள் இப்பொழுது எந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

தியான யுக்தி - 3

உங்களுக்கு ஐந்து அல்ல; ஐந்நூறு புலன்கள் இருக்கிறது You have not 5 but 500 senses

மனத்தைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்குள்ளே இருக்கிற மனத்தால், எல்லாப் புலன்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் இயங்க முடியாது.

ஒரு மனம் ஐந்து புலன்களுக்கும் ஏற்றவாறு ஆடியாக வேண்டும். கண் ஒரு பக்கம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு புலனுடைய தேவைக்கேற்றவாறு ஈடு கொடுத்தாக வேண்டிய நிலையில் மனம் இருக்கிறது.

உடனே, கண்ணோடு கொஞ்ச நேரம் ஆடியாக வேண்டும். இன்னொரு விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் ஆடியாக வேண்டும்.அதற்குப் பின் உடல் அழைக்கிறது.

உடனே என்ன செய்ய வேண்டியிருக்கிறது? நடனத்தை மாற்றி உடலோடு சென்று ஆடியாக வேண்டும்.

அடுத்துக் காது அழைக்கிறது. காதோடு போய் ஆடியாக வேண்டும்.

ஒவ்வொரு புலனுடைய தேவைக்கேற்றவாறு ஈடு கொடுத்தாக வேண்டிய நிலையில், மனம் இருக்கிறது. நம்முடைய புலன்களுடைய எண்ணிக்கை (Quantity) அதிகமாக, அதிகமாக அது அவற்றின் இயங்குகிற தன்மை (Quality) குறைந்து கொண்டே வரும். ஐம்புலன்களுக்கும் நடுவில் சுற்றிச் சுற்றி வந்து ஆடினால், மனம் எந்தப் புலன் வழியாகவும், முழுமையாக இருக்க முடியாமல் ஒரு மந்தத் தன்மைக்குள் ஆழ்ந்து விடுகிறது. மந்தத்தன்மைக்குக் காரணம் புலன்களின் ஆர்பரிப்பே.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தப் புலன் வழியாகவும் முழுமையாக இயங்க முடியவில்லை என்றால், எந்தச் சுகத்தையும் உங்களால் முழுமையாக அடைய முடியாது; அனுபவிக்க முடியாது.ஒவ்வொரு புலனையும் முழுமையாக இயக்கினால், உலகையே அனுபவிக்கலாம். எத்தனை புலன்கள் இருக்கிறது, எங்கு இருக்கிறது என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு புலனும் எவ்வாறு முழுமையாக இயக்கப்படுகிறது என்ற தெளிவு பிறந்து விட்டால்போதும், மந்தத்தன்மையிலிருந்து வெளி வந்து விடுவீர்கள். உலகை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

தியான யுக்தி - 4