62. புலன்களில்
# புலன்களில்
டுரோக்கிய சேமிப்ப
கண்கள், "வேண்டாம்," என்று சொக்கச் சொக்க இரவு நெடுநேரம் வரை டி.வி பார்ப்பவர்களுக்கும்,
நாவு, "வேண்டாம்," என்று எரிச்சலில் துடிக்க, காரத்தையும், உரப்பையும் உடலுக்கு அளிப்பவர்களுக்கும்,
உடல், ''வேண்டாம் போதும்,'' என்பதைப் பலமுறை பலவாறு சொன்னாலும், அதை மீறி அதைச் சுகத்திற்காக அழிப்பவர்களுக்கும் சொல்ல விரும்புவது ....
உடல் உன்னகமானது; புலன்கள் புனிதமானவை.
பலர் இப்படி எல்லாம் சொல்வதுண்டு.... ''இந்த உடல் நான் சொன்ன பேச்சைக் கேட்பதேயில்லை: இந்த உடல் என்னைப் படாத பாடுபடுத்துகிறது: நான் நினைக்கிற வேகத்துக்கு மட்டும் இந்த உடம்பு ஓடினால் நிறைய சாதித்துவிடலாம்; நான் எவ்வளவுதான் நன்றாகயிருக்க முயற்சி செய்தாலும், உடம்பு ஏதாவது ஒரு ஆசையைத் தூண்டி விட்டுவிடுகிறதே! ஐம்புலன்களும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறதே!' என்று புலம்புவார்கள்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், உடல் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகச் சுடா்.
இவையெல்லாமே உடல் எனும் உயா்ந்த வின் மீது, அகங்காரம் எனும் தாழ்ந்த வல்து கட்டிவிடும் உடல் கட்டுக்கதைகள்தான். இவையெல்லாமே அகங்காரம் எனும் உன்னகமானது தாழ்ந்த வஸ்து உடலுக்கு இழைக்கும் துரோகங்களே. உடல் பலன்கள் புனிதமானவை உங்களுக்குத் தரும் தொந்தரவுகள் அல்ல.
உடல் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை எனச் சொல்வது முழுப்பொய். இழுத்த
இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல்.'
ஏற்கெனவே நீங்கள் நினைக்கிற வேகத்துக்கும், ஆசைப்படும் அளவுக்குத் தன்னைத் தாரை வார்த்து, உங்களின் திருப்திக்காகவே உடலானது ஒத்துழைத்தாலும், அதன் மீதே மீண்டும், மீண்டும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சிக்காரன்தான் உங்களின் அகங்காரம்.

'தூண்டிவிடுவது அகங்காரம்
அதற்கு இரையாவது உடல்'.
இன்றைய மனிதர்கள் உடலைத் தாங்கள் என்று நம்பினால் கூட பரவாயில்லை; நல்லதுதான். தூண்டுதல்கள், உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணங்களைத்தான் தாங்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கே உடலை அமிக்கிறார்கள்.
கலியுகத்தில் மனிதர்கள் வாழ்வதில்லை;
அகங்காரங்கள்தான் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.''
"நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும்கூட மனிதன், தன் அகங்காரத்திற்குச் செய்யும் சேவைகள்தான். மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. இந்த விளையாட்டைப் புரிந்துகொண்டால்தான் இதிலிருந்து விடுபடவே முடியும்.அகங்காரத்திற்குச் சேவை செய்வதை நிறுத்துங்கள். உங்களின் இனிமையை நீங்களே உணர்வீர்கள்.
மொத்தக் கட்டுரையையும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ... நீங்கள் வாழ, உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அகங்காரத்தின் சுகத்திற்காக உடலைக் கட்டுக்குள் கொண்டு வராதீர்கள்.
ஐம்புலன்களும், உடலும் உங்களை அலைக்கழிப்பதாகச் சொல்லும் மனத்திலிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களின் உடலும், புலன்களும் புனிதமானவை. அவற்றை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள்.
இதைத் தொடர்ந்து செய்தீர்களானால், கோடிஸ்வர நிலையையும் தாண்டிய ஈஸ்வர நிலையை, ஜீவன் முக்தி நிலையை எளிதில் அடைவீர்கள். உடலை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபட்டுக் கொண்டு வாழ ஜீவன் முக்தி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
சக்தி சேமிப்பு யுக்தி-1
ஜம்புலன் அடக்கம் ஆபத்தில் முழுயும்
Suppression of the five senses will result in danger
பூலோகத்தில் கொடுமை என்னவென்றால், புலன்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது, அடக்க ஆரம்பித்ததுதான்.
இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதா, புலன்களைக் கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தாலேயே பல தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் மனிதர்கள்.
| புலன்களை | இந்திரியங்கள் என்பது ஒரு சக்தி. | |||
|---|---|---|---|---|
| அடக்கினாலோ அல்லது | புலன்களை இயக்குகிற சக்தி, இந்திரியங்கள். | |||
| வெறுத்தாலோ | இந்திரியங்கள் என்பது வேறு ; புலன்கள் என்பது வேறு. | |||
| ஆபத்தில்தான் முடியும். | நாம் கட்டுப்படுத்த வேண்டியது, ஒழுங்குபடுத்த வேண்டியது. | |||
| இந்திரியங்களைத் தானே தவிர புலன்களை அல்ல. |
புலன்களை ஆபத்தில்தான் முடியும். அது ஆரோக்கியமிகு ஆன்மீகத்தில் போய் முடியாது. நல்லதில் போய் முடியாது.
புலன்கள் என்பவை ஒரு கருவியே.
உதாரணத்திற்கு, ஒரு கத்தியை வைத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சையும் செய்யலாம் : கொலையும் செய்யலாம் : விபத்தாகவும் மாற்றலாம் !
அது, அந்தக் கத்தியை யார் வைத்திருக்கிறார்களோ, அவா்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது. விபத்தைத் தடுக்கக் கத்தியை ஒழித்து விட்டு, இல்லாமல் செய்து விடலாம். தவறில்லை. ஆனால், கக்தியே இல்லாமல் செய்துவிடுவதால், கொலை செய்யாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், குணமளிக்கும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியாதே! பிரச்சினைக்கு ஒரு தீர்வு பிறக்காதே!
அதுபோன்றுதான், நாம் நம் புலன்களை அழிப்பதும், அழிக்க நினைப்பதும், கத்தியையே அழிப்பதற்குச் சமமாகும். கத்தியை அழிக்கக் கூடாது. கத்தியைத் தவறான வழியில் உபயோகிப்பவர்களைத்தான் நாம் கட்டுப்படுத்த வேண்டும். எப்படி முறையாக உபயோகிக்க வேண்டும் என்ற புரிந்துகொள்ளுதலை அவா்களுக்குத் தரவேண்டும். கத்தியைக் கட்டுப்பாட்டோடு உபயோகிப்பது போன்றுதான் இந்திரியங்களையும், நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்; புலன்களை அல்ல.