61. உடலும், வாழ்வும் ஆரோக்யமாக ...
# உடலும், வாழ்வும் ஆரோக்யமாக
For body and mind to become healthy ...
ட்டுடதி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பக்தரொருவா், மிகவும் பணிவாய் என்னிடம் கேட்டுக்கொண்டார், 'நான் மிகவும் மோழ்ந்தவன். நானெல்லாம் இந்தப் புனிதமான தியான மண்டபத்திற்குள் வரலாமா, தியானம் செய்யலாமா?''
அவர் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர். தம்மைத் திருத்திக்

Heal your life first. Only next is the Body! கொள்ளும் நாக்கோடு தியானமுகாமிற்கு வந்திருந்தார். காயங்களைப் போக்குவதுதான் ஆன்மீகம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.
அவரிடம், ''நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாமா ?' என அவரையே திருப்பிக் கேட்டோம்.
''அவர்களுக்காகத்தானே, மருத்துவமனையே இருக்கிறது, '' என பதிலளித்தார். ''உங்களிடம் ஒருவர். 'நான் மிகவும் மோசமான உடலை வைத்திருப்பவன்.
நானெல்லாம் இவ்வளவு மருத்துவமனைக்குள் கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் ?'' என்று கேட்டோம்.
"சிரிப்பேன்," என்றார். நானும் அவரைப்
பார்த்துச் சிரிக்க ... அவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் என்ன மனபாரத்தோடு அங்கு வந்திருந்தாரோ, அது மொத்தமும் அந்த வினாடியில், அவரை விட்டுக் கரைந்தது என்றார்.

அவர் கேட்டார், ''அப்படி நீங்கள் என்ன செய்தீர்கள் ? எவ்வளவோ மாநந்து சாப்பிட்டும் என்னால் வெளிவர முடியாத மனஉளைச்சலில் இருந்து நொடியில் வந்துவிட்டேன்.
எப்படி இது சாக்தியம் ? என்னாலேயே இதை நம்ப முடியவில்லையே.''
சொன்னோம், அப்போது ''இரண்டு விஷயங்கள் நடநடந்தது. ஒன்று ... உங்களின் மனக்காயம் குணப்படுத்தப்பட்டது. இரண்டாவது ... உங்களுக்குள் இருந்த ஆனந்த உணர்வை அந்த நிமிடம் பொங்க வைத்தது.
கிருஷ்ணர் மிக அமகாகச் சொல்கிறார். ''ஸ்ம்பவாமி யகே! யகே!'' எப்போதெல்லாம் அதா்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களை ஜீவன் முக்கர்களாக்க நான் வந்து கொண்டே இருப்பேன். மணித குலத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருப்பேன்.
ஒரு ஞான சத்குருவால், ஒருவருக்குள் பலநாட்களாக அடைபட்டு இருக்கும் ஆனந்த ச க்தியைப் பொங்க வைக்க முடியும். ஒரு சிறுகதை மூலமாக, ஒரு சத்தியத்தின் மூலமாக, தீகைஷ் மூலமாக, ஒரு தியானத்தின் மூலமாக இதை குருசக்தியால் செய்துவிட முடியும்.
இப்போது உங்களுக்குள் நிகழ்ந்தது அதுதான். ''
உண்மையாகவே, மொத்தப் பிணியிலிருந்தும் நம்மை விடுவிக்க ஒரு ஞானியால்தான் முடியும்.
அடைபட்டிருந்த ஆனந்தசக்தி பொங்கத் துவங்கினாலே, மன உளைச்சல் மட்டுமல்ல, மூட்டுக் குடைச்சலிலிருந்து. கேன்சர் வரை சரி செய்துகொள்ள முடியும். எங்கும் தங்கு தடை இல்லாமல் இந்த ஆனந்த சக்தி பாய்ந்தோடினால், அவா ஜீவன் முக்தி நிலையில் வாழ்வதோடல்லாமல், மற்றவர்களுக்குள்ளும் ஜீவன் முக்தி மலர உதவ முடியும்,'' எனச் சொன்னோம்.
மேலும், அவரிடம் இந்த அருமையான கதையைச் சொன்னோம்.
ஒரு சின்ன கதை .....
வழிப்போக்கர்: "இன்மை எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள் ?''
ஜென்ஞானி: ''எழுபது வருடங்கள்.''
வழிப்போக்கா்: '' அப்படியானால் எழுபது வருடங்களுக்குப் பிறகு எங்கே செல்வீர்கள் ? என்ன செய்வீர்கள் ?''
ஜென்ஞானி: ''ஒரு குதிரையாகவோ, மயிலாகவோ பிறப்பேன்.''
வழிப்போக்கா்: ''அதற்குப்பிறகு? எங்கே செல்வீர்கள் ?''
ஜென்ஞானி : "அதற்குப் பிறகா? அநேகமாக பூமிக்கு வராமலே, நரகத்திற்கு சென்று விடுவேன் என நினைக்கிறேன். ''
வழிப்போக்கா்: "நரகத்திற்கா! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு நல்லவர்!
நீங்களெல்லாம் போய் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்! ? ! '
ஜென்ஞானி: ''நரகத்திலிருப்பவர்களுக்கு, தியானம் போகிக்க நான் முன்வரவில்லையென்றால், வேறுயார் முன்வருவார்களாம். ? அவர்களை யார் காப்பாற்றுவதாம்..? சொல்லுங்கள்...,' என்று ஜென்ஞானி பேசி முடிக்கவேயில்லை, வழிப்போக்கா் உருகிப்போய்விட்டார். அவரின் உள்ளம் அப்படியே கரைந்து விட்டது. உண்மையில், நம்மைக் காப்பாற்ற, ஒரு ஞானியை விட்டால் வேறுயாரால் முடியும் ?
'மற்றவர்களுக்காகவே வாழும் ஞானிகள், இந்த உலக வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்ததோடல்லாமல், மறுஉலக வாழ்க்கையையும்கூட தியாகம் செய்கிறார்களே! இப்படி யோசிக்கவே என்ன கருணை பொங்க வேண்டும்! என்ன தாயுள்ளம் வேண்டும்!' என்று உணர்வு பொங்க யோசித்த வழிப்போக்கா், நன்றி பொங்கும் கண்ணீர்ப் பெருக்கோடு
ஞானியை வணங்கினார். வெளியே 'மழை' கொட்டத் துவங்கியது! என அந்தக் கதை முடிவடைகிறது. ஒரு ஞானியின் கருணையும், தியாகமும் கல்லையே கரைத்துவிடும். அவரால் நம் துக்கத்தைக் கரைக்க முடியாதா ?
கதையைக் (இந்த ஜென் முடித்தபோது, கேட்டு அந்த வழிப்போக்களுக்குள் மாற்றம் நடந்தது, தியான அரங்கத்திற்குள் வரும்போது இருந்த தாழ்வு உணர்ச்சியில்

இருந்து விடுபட்டு, கைகளைக் கூப்பி வணங்கியபடியே உரிமையோடு நம்முடைய தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். அப்போது அவரின் உடலுக்கு மட்டும் புதுத்தெம்பு பாய்ந்திருக்கவில்லை. வாழ்வே புதுத் தெம்பு பெற்றிருந்தது! இவுருக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரு எதிர்பாராத ஞானத்திருப்பம் செய்துவிட்டது.
அதேபோல், இந்தப் புத்தகத்தில் எந்த வரியின் முடிவிலும் அந்த ஞானத்திருப்பம், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஞானத் திருப்பங்கள் ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே, உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் பொங்க வைக்கும். எனவேதான் சொல்வதுண்டு,
| ''மருந்து முதலில் | நோயாளிக்குத்தான். தியானம் முதலில் மனக்குறைபாடுகள் | |||||
|---|---|---|---|---|---|---|
| ஞானத்திருப்பங்கள் | உடையவர்களுக்குத்தான். ' இன்னும் | ஆழ்ந்து வரலாற்றை | ||||
| ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே | ஆராய்ந்து பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பல தியானங்களைப் பயன்படுத்தப்போகும் | |||||
| உங்களுக்குள் ஆரோக்கித்தையும் | மனிதர்கள், தெரியவருகிறது. | இன்னும் | உருவாகவேயில்லை | எனத் | ||
| பொங்க வைக்கும் | அதேபோல் | இன்றைய | கால | கட்டத்தில்,இருக்கும் |

133
மனிதா்களுக்குத் தேவையான தியானங்கள் பலவற்றையும் அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தத் தியானங்களைத்தான் இன்றைய மக்களுக்குப் பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.
அப்படியென்றால், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்.
உங்களுக்காக உதவ ஒரு கூட்டமே எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சினைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வுகளைத் தந்துகொண்டேயிருக்கிறது என்பது நன்றாகப் புரியவரும்.
நல்லவேளை! இந்தப் பிரபஞ்சம் மனிதகுல வாழ்வை, மனிதா்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டைனோசா்கள், என்றோ இந்த பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ, அதேபோல் மனித குலமும் மறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.
மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான், ஜீவன் முக்தா்கள் மீண்டும், மீண்டும் பூமியில் பூக்கிறார்கள். இதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், "ஸம்பவாமி யுகே! யுகே!' எப்போதெல்லாம் அதாமம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களை ஜீவன் முக்தா்களாக்க நான் வந்து கொண்டே இருப்பேன். மனித குலத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பதுதான் இதன் சாரம். துன்பங்ளைத் தீர்க்க அவரிருக்க கவலையேன் ?
ஜீவன் முக்தர்கள் பூமியில் பூப்பது உங்களின் குணப்படுத்துவதற்கும், நீ ங்கள் கேட்கும் வரங்களைத் தருவதற்கும், குழந்தை பாக்யம் பெற ஆசீர்வதிப்பதற்கும், திருமணத் தடைகளை நீக்குவதற்கும் அல்ல.
உங்களை ஜீவன் முக்தர்களாகப் பூக்க வைப்பதற்கே.
மேற்சொன்னதையெல்லாம் செய்வதற்கு ஜீவன் முக்தா்கள் தேவையில்லை. அவர்களின் சீடர்கள் போதும். இவையெல்லாம் சின்ன சக்தி விளையாட்டுகள். ஆனால், ஜீவன் முக்தியளிப்பது உங்களின் ஜீவிதத்தையே மாற்றுவது.
உங்களையல்ல, வாழ்க்கையையே ஆரோக்யமாக்குவது.
பூமியின் மீது ஓடியாடும் மனிதவாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக் கொண்டுதான் மனிதர்கள், கரடி பொம்மையோடு விளையாடுவது போல, வாழ்க்கையோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய வேடிக்கைத்தான் இது !
அழகான சொற்றொடர் ஒன்று ... "நல்லவேளை, உங்களது வேலைகளைக் முக்கியமான ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம்... போன்ற வேலைகளை அவர் எடுத்துக்கொண்டு, யோசிப்பதை மட்டும் உங்களிடம் விட்டு விட்டார்.''
வாதம் பித்தம் சுபம் சமநிலை இல்லாமல் போனால் உடலும் சமநிலையில் இருக்காது. மனதும் சமநிலையில்லாது இருக்காது
ஜீவன் முக்த வாழ்வு
அதனால்தான் அவருக்குத்தான் அதிகப்பொறுப்பு. நீங்கள் அதைத் தடுக்காமல் இருந்தால்போதும்.
Section 2
''ஒருவேளை எல்லா வேலைகளையும் உங்களிடமே கடவுள் கொடுத்திருந்தால்… ?'' என்ன நடந்திருக்கும். அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக்கதவைத் கட்டியிருப்பீர்கள்.
''என்னப்பா? ஏன் திரும்ப வந்தாய்?'' என அவர் கேட்டால், ''கடவுளே! மன்னியுங்கள்...... நேற்று ரொம்ப பிஸியா இருந்ததில் இதயத்தைத் தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது,''என்பீர்கள்.
இல்லாவிட்டால், மறந்துவிட்டேன்,'' என்பீர்கள்.
நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாமே இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.
பல பிறவிகளில் ஹீவன் முக்தியின் வாசலைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் நீங்கள்.
இது புரியாதவர்களுக்குத்தான் ...
'வாழ்க்கை ஒரு பெரிய சாகசம்.
உடல் ஒரு பெரிய சுமை' என்பது போலத் தெரியும். அவர் கொடுப்பதையெல்லாம் கொடுத்துவிட்டார். ஆனந்தக் கூத்தாடுவதை விட வேறு என்ன வேலை!
உங்கள் வாழ்வின் பல பகுதிகளை, இயற்கையே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவுதான் கெடுத்தாலும், முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருமுறை, ''பிரபஞ்சம் எங்கே இருக்கிறது?' என ஒருவா், ஆனந்த ஸ்புரண தியானமுகாமில் கேட்டார்.
அப்போது "நீங்கள் இயங்கும்போது பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீ ங்கள் இயங்காதபோது அது இல்லை. அவ்வளவுதான், நிம்மதியாயிருங்கள்,' எனச் சொன்னோம். நிஜம்தான்! நீங்கள் தூங்கும்போது உலகமே இயங்கினால்கூட, அது உங்களுக்கு அந்த நிமிடம் நிஜமில்லை. நீங்கள் இயங்காதபோது, வேறு எது இயங்கினாலும், அது உங்களைப் பொறுத்தளவிற்கு, அது நிஜமற்ற ஒன்று.
பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மையம், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
அது இயங்காததால்தான், உங்களின் வாழ்க்கையையே, தான் இயக்குவதாய் மனம் காட்டிக்கொண்டிருக்கிறது. நிஜத்தில் மனக்கண் மூடியிருப்பதால்தான், பிரபஞ்சத்தையே இயக்கும் உங்களின் மையம், உங்களுக்குள்ளிருப்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கிறது. அதனால்தான் குரனிகள் இப்படிச் சொல்வதுண்டு... புமனக்கண் திறக்கும்போது பெரிய அதிசயம் நிகழும். ''

கண்களை மூடிய பூனை, கண்ணைத் திறந்ததும் முதலில் ஆச்சரியமாய்ப் பார்க்கும். தன்னைச் சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிறகுதான் அதற்குத் தெரியவரும்..
அதேபோல் மனக்கண் திறந்ததும், பிரபஞ்சமே உங்களை மையுமாய் வைக்கு இயங்குவதைக் காண்பீர்கள். இப்போது எதையெதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள், நோய்கள் எனக் குறிப்பிடுகிறீர்களோ... அவையெல்லாம் அப்போது இருக்காது.
வாழ்வு தித்திக்க ஆரம்பிக்கும். இதையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக்கும் வாழ்வியல் கலையைத்தான் தியானம், யோகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கி றாம். நிஜத்தில் உங்களுடைய உடல் மட்டும் நோயுற்றிருக்கவில்லை; உங்களின் வாழ்வும் நோயுற்றிருக்கிறது.
You have a diseased body" is an old story. You have a diseased Life. That has to be cured first.
வாழ்க்கை, இறை சக்தியால் பொங்கும் கங்கை போன்றது என்றாலும்; அதற்கு ஒரு குறையும் வராது என்றாலும்; நம் கையில் சிக்கிய வாழ்வு நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை நாம்தான் சரி செய்ய வேண்டும்.
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான வாழ்வும் அவ்வளவு முக்கியம். பார்க்கமுடியாத மனம், எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்தான், வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.
மனம், ஒரு பொருள். வாழ்வும் ஒரு பொருள். இரண்டும் இன்று உங்களின் அப்பாவி உடலை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கின்றன. உடலும் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. எனவே, குணப்படுத்தப்படவேண்டியது உடல் அல்ல, வாழ்வுதான்.
தற்போது தன்னால் முடிந்த அளவிற்கு இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாக ஆரோக்யமடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
இன்று உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், சுதந்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனத்தை மட்டும் சரியாய் கையாளுங்கள். அதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள். உடலும் வாழ்வும் தித்திக்க ஆரம்பித்துவிடும்... ஆரோக்கியம் அடைய ஆரம்பித்துவிடும். உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல; பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.