47. பானம்
# பானம்
ரும் வாழ்க்கையில் சேர்த்து வைத்த அனைத்து குானக் கருத்துகளையும் அனுபவமாக மாற்றுதலே தியானம். பொதுவாக இந்த ஞானக்களுத்துகளைச் சேர்க்கும்போது அறிவுப்பூர்வமாக நமக்கு இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விடுவோம். ஆனால், உணர்வுப்பூர்வமாக இருக்கிற பிரச்சினைகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது. அதை அனுபவமாக மாற்ற வேண்டும்.
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளுக்கான தீர்வு
The solution for consciousness related problems
சிலபேர். ''சிகரெட் பிடிப்பது தவறு என்று தெரிகிறது. ஆனால், அதைப் பிடிக்காமல் இருக்க முடியவில்லையே'' என்று சொல்வார்கள்.
சிகரெட் பிடிப்பது தவறு என்று தெரிவது அறிவுபூர்வமான தெளிவு. அதைவிட முடியவில்லை என்பது, உணர்வுப்பூர்வமாக ஏற்படுகிற ஒத்திசைவு.
உணர்வு ரீதியாகவும் அதை விட்டுவிடக் கூடிய சக்கியை, ஸ்கிரத் தன்மையை கொண்டு வருவதுதான் தியானம். அறிவுப்பூர்வமான தெளிவிற்கு வந்து விடுவது நித்யம்.
நித்யம் எது ? அநித்யம் எது ? என்ற விவேகத்தை ஏற்படுத்திக் கொள்வது நித்யும். அதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கும், ஆழ்ந்த அனுபவமாக மாற்றுவதற்கும் ச க்தியை எடுத்து வரும் வழி தியானம்.
உத்வேக சக்தியைத் திறக்கும் வழி, தியானம்
Meditation is the key to open the inspirational energy of intensity
கியானம் என்றால் என்ன?
இதற்கான அருமையான விளக்கம் இது.
தியானம் என்பது, நமக்குள் என்றும் குறையாத உத்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கக் கூடிய வழிகாட்டி.
நம் வாழ்க்கையில் உத்சாகமும், உத்வேகமும் எப்பொழுது வருகிறதென்று பாருங்கள். எதனால் வருகிறதென்று பாருங்கள். ஒன்று, ஆசையினால் வரும் அல்லது அச்சத்தினால் வரும். ஆசையினாலும், அச்சத்தினாலும் மட்டும்தான் அந்த உத்சாகமே வரும். இல்லை

என்றால் வராது.
உங்களுடைய வாழ்க்கையை எப்படி அனுகுகிறீர்கள் என்பதைச் சற்று பொறுமையோடு பார்த்தீர்கள் என்றால் புரியும்.
காலையில் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் தருணத்தைச் சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள்.
கனவில் இருந்து வெளியில் வந்து கண்விழித்துப் பார்த்த பின்னும் படுத்த நிலையிலேயே இருப்போம். மந்தமாகப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருப்போம். ஏதாவது உறுதியான ஆசை வந்த பிறகுதான், படுக்கையில் இருந்தே எழுந்து கொள்வோம்.
உதாரணத்திற்கு, யாரேயேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ, வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற அச்சமோ உச்சத்திற்கு வந்தால்தான் படுக்கையிலிருந்து எழுவோம். உண்மையில் இந்த மன அமைப்பால் நம்முடைய வாழ்க்கை முறையே மாறிவிட்டது.
உற்சாகச் சக்தியை நமக்குள்ளே திறந்து வைப்பதுதான் தியானம்.
காலையில் கண்விழிக்கும்போது உற்சாகத்தோடு எழுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ஆனால், யாரையோ பார்க்க வேண்டுமென்றோ, எதையோ செய்ய வேண்டும் என் றா, இல்லை இந்த வேலையைச் செய்யவில்லை என்றால், நம் வேலையேபோய் விடும் என்றோ, நாம் எதையோ இழந்து விடுவோம் என்ற ஏதாவது ஒரு அச்சம் வந்தால் மட்டும்தான் படுக்கையை விட்டே எழுகிறோம்.
ஆசையோ, அச்சமோதான் நமக்கு உத்வேகத்தையே அளிக்கிறது. இது இரண்டும் இல்லை என்றால், படுக்கையிலேயே புரண்டு குப்போம். கண் விழித்தபிறகும் படுக்கையில் புரள்கிற ஒரே மிருகம் மனிதன்தான்.
மாடாக இருந்தால், காலையில் அது செய்கிற முதல் வேலை, கட்டி வைத்திருந்தால் கூட கட்டி வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கோலை ஒரு முறையாவது சுற்றிச் வரும்.
பூனையாக இருந்தால், தன் உடலையே முறுக்கிக் கொண்டு, தனக்குதானே சுறுசுறுப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
ஒரு நாயாக இருந்தால், காலையில் எழுந்தவுடன், தனது எல்லையை ஒரு முறை சுற்றி பார்த்து வரும்.
எந்த ஒரு மிருகமுமே எழுந்தவுடனேயே, உற்சாகத்தோடு உடலை இயக்கும். ஆனால், தூக்கம் கலைந்த பின்னும் மந்தமாகப் புரண்டு குக்கும் ஒரே மிருகம் மனிதன்தான்.
இயற்கைக்கும், நமக்கும் அதிகமான இடைவெளி வந்து விட்டது. நமது வாழ்க்கையில் எந்த ஆசையும், அச்சுமும் இல்லாதிருந்தால், எந்த உத்வேக சக்தியும் நம்முள் எழுவதே இல்லை. ஆசையோ அச்சமோ இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை இயங்கும் நிலை இன்று இருக்கிறது.
எப்படி வண்டிக்கு எரிபொருள் தேவையோ, அதுபோல் ஆசையும், அச்சுமும்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
ஆசை, அச்சம் என்கிற இந்த இரண்டு சக்தி மட்டும் நம்மை இயக்காமல், மூன்றாவது ச க்தியான உத்சாகச் சக்தியை நமக்குள்ளே திறந்து வைப்பதுதான் தியானம்.
இப்பொழுது, இந்த நிமிடம் நமது உடல் இயங்க வேண்டுமென்றால் கூட அதற்கு ஒரே வழி, நமக்கு ஆசை வர வேண்டும். இல்லை என்றால், அச்சம் வர வேண்டும். இல்லையென்றால், உடல் இயங்காது.
எந்தச் செயல், ஆசை அச்சமில்லாமல் நமக்குள்ளேயே இயங்குகிற உத்சாகத்தை, உத்வேகத்தைத் தருகிறதோ, அதுவே தியானம். தியானத்தின் விளக்கம் இதுதான். அசை அச்சத்தை உருவாக்காமல், உற்சாகத்தைத் தரக்கூடிய எல்லாச் செயல்களுமே தியானம்தான்.
தியானமார்க்க ரகசியம்
- எனக்குத் தியானமார்க்கம் எந்த வகையில் உதவும் ?
- நீங்கள் யார்?
- ஏன் நாம் நிணைத்தபடி வாழ்வும், உறவுகளும் அமையவில்லை ?
- நினைப்பதை நிஜமாக்குவது எப்படி ?
- உள்ளுக்குள்ளிருக்கும் அதிசயங்கள் எவ்வளவு ?
- ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் அடைவது எப்படி ?
எனும் வகைவகையான கேள்விகளுக்குப் பதிலும், வழியும், தீர்வும் ஒன்றாய்த் தந்திடும் ஒரே மார்க்கம் தியானமார்க்கம்.
