Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

46. நித்யம்

# நித்யம்

மனம் என்பது முன்பதிவு செய்யப்பட்ட கேசட் Mind is a recorded cassettee

மனிதனுக்குள் இருக்கிற ஸாஃப்ட்வோ் (மென்பொருள்) முழுவதும் 'வைரஸாக் இருக்கிறது. வைரஸ் இருக்கும் வரை, கணினியில் எந்த வேலையும் செய்யுமுடியாது. அப்படியே செய்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சினை வரும். நம்முடைய ஸாஃப்ட்வேரை சரி செய்தால் மட்டும்தான், நமது வாழ்க்கையில் நிரந்தரமான முன்னேற்றத்திற்கான முதல் அடியையே வைக்க முடியும்.

'அதென்ன நமக்குள்ளே ஸாப்ட்வேர்?' (Software) என்று ஆச்சரியமாக நீங்கள் கேட்கலாம்.

ஸாஃப்ட்வேர் (Software) என்றால் வேறொன்றுமில்லை, அது நமது மனம்தான். நாம் நினைப்பதுபோல் நம் மனம், ஒரு சுதந்திரமான விஷயம் கிடையாது. நம்முடைய மனமும் ஸாஃப்ட்வேர் மாதிரியே ப்ரோகிராம் (Programme) செய்யப்பட்ட ஒரு மென்பொருள் போன்றதுதான்.

உண்மையில் மனிதனின் இயற்கையான, இயல்பான சுபாவம் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தைத்தான் நாம் இழந்து விட்டோம். கணினி, வைரசால் பாதிக்கப்பட்டால் செயல் இழந்துவிடுவதுபோல், மனம் எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம்;

சுருதி சரியாக ஏற்றப்பட்டிருந்தால், அதிலிருந்து 'ஆனந்தம் எனும் கீதம்' வந்து கொண்டே இருக்கும்

காலையில் ஏழு மணிக்குக் காபி குடிக்கிற பழக்கமோ, சிகரெட் பிடிக்கிற பழக்கமோ இருந்தால், காலையில் கடிகாரமே பார்க்க வேண்டாம். நமக்குள்ளே இருந்தே சரியாக 'காபி' என்று மணி அடிக்கும்.

உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும்தான். நாம் இந்தத் தன்னிச்சையான செயலை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோம் என்றால் மனத்தின் செயல்பாடு புரியும்.

காலையில் எழுந்த உடனே வீட்டைப்பற்றிக் கவலைப்படுவது, ஒன்பது மணியானால் ஆபீஸைப் பற்றிக் கவலைப் படுவது, மாலை நான்கு மணியானால் பிள்ளைகளுடைய படிப்பைப் பற்றிக் கவலைப் படுவது, எட்டு மணிக்குத் திரும்பவும் வீட்டைப் பற்றிக் கவலைப்படுவது, இப்படி நமக்குள் வழக்கமாக ஒரு பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தால்கூட, காலைப் பத்துமணி ஆனவுடனேயே, ஆபீஸ் கவலைகள் எல்லாம் மனத்திற்குள் வரத் துவங்கிவிடும். கொஞ்சம் உங்களையே கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இதை உணர்வீர்கள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

கூட, இப்படியேதான் ஒரு பழக்கத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இன்மை சற்று ஆமாகப் பார்த்தீர்கள் என்றால், காலையில் பல் துலக்கும் பொழுதே உங்கள் மனத்திற்குள் ஒரே விதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இது பழகிப்போன பின்பு, தினந்தோறும் அதே நேரத்தில், அதே எண்ணம் தோன்றும்.

ஆனர்க வாழ்வின் ஆதார சுருதிகளை உள்வாங்குவகே. ஆனந்த வாழ்வை அனுபவமாக்கும்.

குறிப்பிட்ட சம்பவம், குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட இடம் என்று ஒரே விதமாகக் கோன்றம். காலை நேரத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போகே, மேற்கண்ட எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வரத் துவங்கும்.

இதுபோன்று ஒரே நோக்கில். ஒரே மாதிரியான எண்ணங்கள், மனத்திற்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருக்கும். சூழ்நிலை மாறினாலும், வெளியுலகம் மாறினாலும் கூட, உள்ளுலகத்தில் உங்களை அறியாமல் ஒரே மாதிரியான

எண்ணங்கள் ஒடிக் கொண்டே இருக்கும். அதனால்தான் சொல்கிறோம், மனம் ஒரு சு தந்திரமான வஸ்து கிடையாது. அது முன்பதிவு செய்யப்பட்ட கேஸட். அவ்வளவுதான்.

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதை அழித்துப் புதிதாக வேறு பதிவு செய்யும் வரை, ஒரே விதமாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கும். இதில் உங்களுக்கு ஒரே ஒரு சுதந்திரம்தான் இருக்கிறது. முன்பே பதிவு செய்துள்ள விஷயங்களை அழித்து, வேறு ஒரு புதிய விஷயத்தைப் பதிவு செய்து கொள்ள முடியும். புதியதோ, பழையதோ மனம் என்றால் அதில் ஏதேனும் சில எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதில் பழைய பதிவுகளை அழிக்கும் வரை, அதே பழைய எண்ணங்களே ஓடிக் கொண்டிருக்கும். அதனால்தான் பதிவு செய்யப்பட்ட மனத்தைத் தாண்டிய நிலையில் நம்மால் இயங்க முடிவதில்லை. உடலையும், மனத்தையும் தாண்டி இயங்க முடிவதில்லை.

பதிவு எண்ணங்களை அழிக்கும் உயர்ந்த புது எண்ணங்களைப் பதிவு செய்வதே அதற்குத் கீர்வு கரும்.

தெளிந்த வாழ்க்கைக்குத் தேவையான மன அமைப்பு The mental setup for a life of clarity

நித்யம் என்றால் என்ன ... ? எது சத்தியம் ? எது சத்தியமில்லை ?

எது உண்மை ?

எது உண்மையில்லை ?

இவற்றைப் பற்றி, உங்கள் மனத்திற்குள்ளே நீங்களே ஏற்படுத்திக் கொள்கிற தெளிவுதான் நிக்யம்.

உங்கள் மனத்தை, நீங்கள் ப்ரோகிராம் செய்து கொள்கிற சுதந்திரம்தான் நித்யம். இருக்கும் மன அமைப்பை மாற்றி, புதிய மன அமைப்பை உருவாக்கும் முன் எது நித்யம், எது நித்யமில்லை என்பதை, உங்களுக்கு நீங்களே எடுத்துச் சொல்லிக்கொள்ளக்கூடிய தெளிவு முதலில் வர வேண்டும்.

முடிவெடுக்கும் முன்பு தெளிவு பிறக்க வேண்டும். வேண்டு மென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் ? மீண்டும் நம்முடைய மனத்தைத் தூக்கி நிறுத்திக் கொள்ளக்கூடிய கருத்துகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தேவைக்கு மட்டும் நாம் பணம் சோப்பதில்லை; பணம் சாம்பாதிப்பதில்லை. அடிப்படை பணம் ச்ற்று யோசனை செய்து பாருங்கள்.

தலைமுறை தலைமுறைக்கும் வறுமை வரக்கூடாது என்றே யோசிக்கிறோம்; அவா்களின் வறுமை காலத்திற்கும் உதவட்டும் என்று சேர்த்து வைக்கிறோம்.

மனம் ஒரு சுதந்திரமான வஸ்து கிடையாது. அது முன்பதிவு செய்யப்பட்ட கேஸட்

வறுமை காலத்திற்கான பணத்தைச் சேர்த்து வைப்பதுபோல், மனத்தின் வறுமை காலத்திற்கென ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைக்க வேண்டும். மன அழுத்தமும், மன உளைச்சலும் வருகிற காலத்திலே நம்மை நாமே எழுப்பி நிறுத்திக் கொள்வதற்கான ஞானக் கருத்துகளைச் சேர்த்து வைத்தலைத்தான் நித்யம் என்ற வார்த்தையால் சொல்கிறோம்.

நித்யம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான உதாரணம், இது. நீங்கள் ரொம்பவும் நொந்து போய், துக்கமயமாக, மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கும்போது, யாராவது ஒரு நம்பிக்கைக்குரிய அன்பர், உங்களுக்குச் சரியான தெளிவைக் கொடுத்து, கருத்துகளைக் கொடுத்து, உங்களை அந்தத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்து வந்தார் என்றால், அது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும் !

யோசித்துப் பாருங்கள்.. அப்போது நாம் சொல்வோம்..., "கடவுளே நேரில் வந்து சொன்னதுபோல இருந்ததப்பா...,' உண்மையிலேயே அந்த நேரத்தில் அந்த நபர் மூலம் கடவுள்தான் வந்து உதவி செய்கிறார்.

சரியான நேரத்தில் நமக்கு அளிக்கப்படும் ஞானக் கருத்துகள், தெளிந்த கருத்துகள் நம்மை துக்கத்திலிருந்து ஒரு வினாடியாவது நம்மை மேலே எடுத்து விடும். மனத்தின் காயத்திற்கு ஒரே மருந்து ஞான கருத்துகளே.