48. ந்தப
# ந்தப
ஒருவர் கேட்டார், 'தியானத்தைப் பற்றி இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டீர்களே, பிறகு எதற்கு ஆனந்த ஸ்புரணா எனும் இரண்டு நாள் வகுப்பு ?'' என்று.
''உண்மையிலேயே உற்சாக சக்தியான ஆனந்தத்தை உங்களுக்குள் திறந்து வைக்கும் தியானம் பற்றிச் சொல்ல இரண்டு நிமிடங்கள் போதும். எது தியானம்? என்று சொல்வதற்கு இரண்டே நிமிடங்கள் மட்டும் போதுமானது.
ஆனால். எதெல்லாம் தியானமில்லை என்பதை உங்களுக்குச் சொல்லித் தெளிவுப்படுத்துவதற்குத்தான் இரண்டு நோள் வகுப்பு தேவை,'' என்று சொன்னோம்.
உண்மையில், ஆசை அச்சமில்லாமல், நமது மனத்திலும், உடலிலும் உற்சாக உணர்வை மலரச் செய்யும் செயலே தியானம்.
நித்யம் என்பது, கேட்கப்பட்ட ஞானக் கருத்துகளை, வாழ்க்கையில் தெளிவைத் தரும் தெளிந்த ஞானக் கருத்துகளாய்ச் சேர்த்து வைத்தல்... தியானம் என்பது, நித்யமான கருத்துகளை நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றும் நுட்பத்தை செய்வது, நம்முடைய உணர்வாகவும், அனுபவமாகவும் மாற்றக்கூடிய முறையைச் செய்வது.
ஆனந்தம் என்பது தெளிவைத் தந்த நித்யம் நம்முடைய உணர்வாகவும், அனுபவமாகவும் மாறும் அளவிற்கு அந்த உற்சாக சக்தி பொங்க வாழ்வது. ஆனந்தம் பற்றிய சில ஆழமான சத்தியங்களை ஆராய்ந்து பார்ப்போம் .
¥ ஆனந்தம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
நந்தா என்றால் குறைந்துவிடக் கூடியது ! ஆனந்தா என்றால் குறைவில்லாதது!
→ ஆனந்தத்தில் இருக்கும்போது என்ன நடைபெறுகிறது ?
உங்கள் உடலிலும் மனத்திலும் சக்தி ஓட்டம் தொடர்ந்து தடையில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது.
நம் எல்லோரிடமும் உயிரோட்டம் நடைபெறுவதுபோல், சக்தி ஓட்டம் என்ற ஒன்று நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அந்தச் சக்தி ஓட்டத்தின் திறன் அபரிமிதமானது. நாம், அந்தச் சக்தி ஓட்டத்தை நமக்குள் நிகழ அனுமதிக்கும்போது,
உடல் நந்தாமல் பொங்கி கொண்டு இருக்கும். காரணமில்லாத மங்களத்துவம் நம்முள்ளும் நிகழ ஆரம்பித்துவிடுகிறது.
* ஆனந்தத்தின் சக்தி என்ன ?
நமக்குள் தொடர்ந்து தடையில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் சக்தி ஒட்டம்தான் ஆனந்தம்.
காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் இந்தச் கக்தி ஒட்டம் நமக்குள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
நமது இருப்புத்தன்மையில் (Being) தடையில்லாத சக்தி ஓட்டத்தை, ஆனந்தத்தை உருவாக்குவது ஒரு சாதனை. அனுதினமும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி , ஆன்ம ரீதியாக ஆனந்தமயமான உணர்வுகளை உருவாக்குவது.
ஆன்மீகத்தில்,
'சத்' என்றால் உண்மை! சத்தியம்!
'சிக்' என்றால் பக்தி உணர்வுகளை உருவாக்குவது! விழிப்பணர்வை அதிகளிப்பது!
இரண்டையும் வாழ்வதற்கான பாதை ...அதுதான் ஆனந்தம்.
மூன்றாவதாகச் சொல்லப்படுவது ஆனந்தம். ஆனந்தம் என்றால் ஆனந்தமயமான உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குவது!
இவ்வாறு ஆனந்தமாக இருப்பது எல்லைகளை மறக்கச் செய்யும்! எல்லை களைக் கடந்து, உடலுக்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் மறையும் நேரம்தான், ஞானம் அடையும் நேரமாக மாறும்.
ஆனந்தமயமாக இருப்பது சாதனையின் உச்சிக்கே எடுத்துச் செல்லும்.
ஆன்ம ரீதியாக, ஆனந்தம் உங்களை ஞானப்பாதையில், ஜீவன் முக்த பாதையில் அழைத்துச் செல்கிறது!
ஆனந்த வாழ்வின் ஆதார சுருதிகள் என்னவென்றால், இந்த மூன்று நாண்கள்தான்.
லீவன் புக்க ….
நித்யும் -- ஞானக் கருத்துகளைக் கேட்டு உள் வாங்குதல்
தியானம் - உள்வாங்கிய கருத்துகளை ஜீரணித்தல்.
ஆனந்தம் - அவற்றை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்துதல்.
இந்த மூன்றும் நமது வாழ்வில் நிகழத் துவங்கினால், நம்முடைய ஆனந்த வாழ்விற்கான ஆதார சுருதிகள் மீட்டப்பட்டு விடும். அந்தச் சுருதிகள் தாமாகவே நமக்குள் எழுத் துவங்கும். வாழ்க்கை ஜீவன் முக்த மயமான, இனிமையான, இன்னிசையாக மாறிவிடும்.
