38. விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்வதே ஜீவன் முக்தி Accepting without criticism is Jeevan mukti
# விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்வதே ஜீவன் முக்தி Accepting without criticism is Jeevan mukti
டு ன்ன நடந்தாலும் விமர்சிப்பது என்பது இரண்டு வகையில் நிகழும். சிலநேரங்களில் வாயைத் திறந்து விமர்சிப்பது, சில நேரங்களில் மனத்திற்குள்ளேயே, தம்மைத் தாமே விமர்சித்துக் கொள்வது.
ஒன்று உங்களைப் பற்றியது. நீங்களே, உங்களைப் பற்றித் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிற விமர்சனம்தான் உங்கள் மனம். மற்றொன்று, வெளியிலிருக்கும் நபர்களை விமா்சிப்பது.
வேறு ஒன்றும் வேண்டாம். இந்த விநாடி, உங்களுடைய வெளியுலக வாழ்க்கையையும், உள்ளுலக வாழ்க்கையையும், அமைதியோடுவிமர்சிக்காமல் ஏற்றுக் கொண்டீர்களானால், இந்த விநாடி மனம் கடந்த நிலைக்குப் போய்விடுவீர்கள்.
மனம் கடந்து போவதற்கு வேறு ஒன்றுமே பெரியதாகத் தேவையில்லை.
உங்கள் வெளியுலக சூழலையும், உள்ளுலக குழலையும், இந்த விநாடி ஆழ்ந்து இனிமையாக, அன்போடு, அமைதியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது என்ன ஆகும் ?
அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் நடுவிலே நடக்கிற சண்டைக்கு வேலை இருக்காது.
விமர்க்காமல் ஏற்றக் கொண்டீர்களானால் இந்த வினாடி மனம் கடந்த நிலைக்குப் போய்வி(டுவீர்கள்.
ஆசையாலும், அச்சத்தாலும் உங்களைத் தலைவராக முக்கியஸ்தராகக் காட்டும் நிலை வரவே வரவே வராது.
அந்தஸ்திற்காக ஒடும் அவலம் நிகழவே நிகழாது. உண்மையில், உங்களுக்காக, உங்களால் வாழ்வின் மீது ஆர்வம் காட்டுவதே புக்கிசாலித்தனம். புக்கிசாலித்தனம் எதையும் விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ளும் தன்மையே, மனம் கடந்த நிலையில் ஜீவன்முக்தர்களாக வாழ வைக்கும்.
அப்படியில்லாமல், எப்போது வெளியுலகத்தையும், உள்ளுலகத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறீர்களோ, அப்போதே மனம் இயங்கத் துவங்குகிறது.
மனம் இயங்கும்பொழுது, பந்தனாக, அடிமைத்தனமுடைய மனிதா்களாகத்தான் இருந்துகொண்டு இருப்போம். இது ஒரு ஆழமான உண்மை. எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எந்தத் தன்மையில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அவர்கள் இருக்கும் இடம் தேடி மரியாதைவரும். மரியாதையைத் தேடிச் செல்லும் தேவையே ஏற்படாது.
''ஜடத்தாலே, உயிருக்கு மரியாதையா அல்லது உயிராலே ஜடத்திற்கு மரியாதையா ?'' என்று சிலா் கேட்பதுண்டு. '
ஜீவன்முக்தர்களாக வாழ்ந்தீர்களானால், நீங்கள் தொட்ட பொருளெல்லாம் உங்களாலே பெருமை பெறும்.
தன்மையோடு பந்தத் பொருள்களாலே உஉங்களுக்குப் பெருமை வரும்! இதனால் உங்களுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே. அடிமைத்தனம் என்கிற நரகத்தை, எந்தப் புத்திசாலியும் தம் வாழ்க்கையை அடகுவைத்து வாங்க மாட்டார். ஜடப்பொருட்களாலே ஜீவனுக்கு மரியாதை தேடினால், இதுதான் நடக்கும்.
நடந்தாலும் இனிமையாக ஏற்றுக்கொண்டு, ஆனந்தப்பட்டு வாழ்கிற என்ன மனிதரைத்தான், ஜீவன்முக்தராய் வாழ்பவர் என்று சொல்கிறோம்.
