Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

39. நீங்களும் பரமஹம்ஸமாகிவிடலாம்

# நீங்களும் பரமஹம்ஸமாகிவிடலாம்

You can also become a Paramahamsa

உசாரம்பரியமாக, காலங்காலமாய் வரும் சம்பிரதாயத்தில் இந்தக் கதை பேசப்பட்டு வருகிறது.

அதாவது பரமஹம்ஸம் என்று ஒரு பறவை இருக்கிறது. அது ஆகாயத்தில் மிகவும் உயரக்கில் பறக்கும். அது அவ்வாறு பறந்து கொண்டிருக்கும்போதே முட்டையிடுமாம். அந்த மட்டை வேகவேகமாக தீமே வாவா, பாதியிலேயே அந்த முட்டை குஞ்சு பொறித்து விடுமாம்.

அந்தப் பாதி தூரத்திலிருந்து கீழே வரவா, முக்கால் தூரத்திலேயே, அந்தக் குஞ்சுக்கு இறக்கை முளைத்திடுமாம். பின் அந்தப் பறவை கடைசிவரை தரையில் படாமலேயே அப்படியே மேல்நோக்கிப் பறந்துவிடுமாம். இதைத்தான் பரமஹம்ஸம் என்பார்கள். அதாவது, கடைசி வரையிலும் தரையில் படாமலேயே மேலே பறக்கும் பறவை இந்தப் பரமஹம்ஸம்! இதை பாரம்பரியமாக நம்புகின்றனர்.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்தப் பரமஹம்ஸ பறவை பற்றிய கதையை மனிதர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு பார்த்து வரும்பொழுது, நம்மை பற்றியும், நம் நிலையைப் பற்றியும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மனிதன்- மனிதரைக்குரிய பிரச்சனைகளாகக் கருதப்படும் காமம், குரோதத்தில் விழாமல், அதாவது மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூரகத்தின் பிரச்சனைகளில் சிக்கி, எதிர்மறை உணர்வுகளால் பாதிப்படையாமல், அப்படியே பறந்து போகிறவர்களெல்லாம் பரமஹம்ஸ பறவையே !

ஒரு குழந்தை வளர வளர, குண்டலினி சக்தி சஹஸ்ராரத்திலிருந்து இறங்கி வரும். பின் ஆக்ஞாவிற்கு வந்து. அங்கிருந்து விசுத்தி, விசுத்தியிலிருந்து அனாவரதத்திற்கு வரும். முதல், உடல் மலர்ச்சி நடந்த பின் மீண்டும் அங்கிருந்து மணிபூரகத்திற்குச் செல்லும்.

ஆனால், நிகழ்வது இல்லை. உடல் மலர்ச்சி பெறும் முன்பே, அங்கிருந்து அப்படியே மேல்நோக்கி குண்டலினி சக்தி மீண்டும் உயர்ந்து விடுகிறது. எப்போதும் குண்டலினி சக்கி சஹஸ்ராரத்தில் இருப்பவர்களைத்தான் நிலைகொண்டு 'பரமஹம்ஸம்' என்று சொல்கிறோம்.

இன்னும் இந்தக் கதையை ஆழமாகக் கேளுங்கள்.

இந்தப் பரமஹம்ஸ பறவை மேலே பறந்து

மணிதனுக்குறிய பிரச்சனைகளாகக் கருதப்படும் காமம், குரோதத்தில் விழாமல், அதாவது மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூரகத்தின் பிரச்சனைகளில் சிக்கி, எதிர்மறை உணர்வுகளால் பாதிப்படையாமல், அப்படியே பறந்து போகிறவர்களெல்லாம் பரமஹம்ஸ பறவையே!

ஜீவன் முக்தி

கொண்டிருக்கும்போது, எப்பொழுதாவது அதன் பிரதிபலிப்பு (Reflection) குளத்தில் படும், அப்பொழுது அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் எல்லாம், ''ஆஹா!, ஏதோ ஓர் புது மீன் வந்து இருக்கிறது. இது என்ன? பெரிதாக வேறு ஏதோ ஒரு நிறத்தில் இருக்கிறதே!'' என்று பார்க்கும். பிறகு அந்த மீன்கள் எல்லாம் அந்தக் குளத்திலே கெரியம் பாமலம்ஸக்கின் பிம்பக்கைச் சுற்றிச் சுற்றி வேகவேகமாகக் குதிக்க ஆரம்பித்துவிடும். புகிதாய் ஒரு மீன் வந்திருக்கிறது என்று மற்ற மீன்கள் எல்லாம் ஆனந்தப்படும். இப்படி கன்னுடைய பிம்பத்தால் மற்றவர்களுக்குள்ளிருக்கும் ஆனந்தத்தை விழிப்பில் வைப்பகே பரமஹம்ஸத்தின் இயல்பு.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பரமஹம்ஸம் அப்படியே வானத்திலேயே

பறந்துகொண்டே இருக்கிறது. அதனுடைய நிழல்தான் குளத்தில் விழுந்து பிரதிபலிக்கிறது. அந்தப் பிம்பத்தைத்தான் மற்ற மீன்கள் பார்க்கிறது. அந்தப் பிம்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, கொண்டாட ஆரம்பிக்கிறது.

'பரமஹம்ஸம்' அப்படியே வானத்திலேயேதான் பறந்து கொண்டிருக்கிறது.

பரமஹம்ஸம் குளத்தின் மீது பறக்கும்போது, குளத்தில் தெரியும் பிரதிபலிப்புத்தான் மனித உடலில் பரமஹம்ஸம் பூமியில் வாழும் நேரம்.

அப்போது பரமஹம்ஸத்தைச் சுற்றி வாழும் இந்த மீன்கள் எல்லாம் தங்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும். சில மீன்கள் பரமஹம்ஸத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும்.

சில மீன்கள் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும். சில மீன்கள் கோவில் கட்டிக் 'பரமஹம்ஸம்' குளத்திற்குமேல் பறக்கும் காட்சி. கடைசிவரை தரைக்கு வராமல் மேலலேயே பறந்துகொண்டிருக்கும்.

கொண்டிருக்கும். சில மீன்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கும்.

சில மீன்கள், ''ஏய்! நாங்கதான் இந்த மீனை அனுபவிப்போம். நீயெல்லாம் அப்படிப்போ, " என்று சொல்லும், ''நாங்க மட்டும்தான் பக்கத்தில் நிற்போம். நீங்களெல்லாம் ஒதுங்கிவிடுங்கள், " என்று மற்ற மீன்களையெல்லாம் துரத்தி விடும். நன்கு பரமஹம்ஸத்தின் பிரதிபலிப்பைச் இவ்வளவு கூத்துகள் நடந்தாலும், இதில் எதிலுமே பரமஹம்ஸம் கலந்து கொள்வதே இல்லை.

உண்மையிலேயே அந்தப் பரமஹம்ஸத்திற்கு தம்மைச் சுற்றி என்னென்ன மீன்கள் வருகிறது, போகிறது என்றுகூடத் தெரியாது.

ஒரு சில மீன்கள் புத்திசாலிகள். இந்தப் பிரதிபலிப்பு ஏன் இங்கு விழுகிறது ? என்று யோசிக்கும். இன்னும் சில மீன்கள் எல்லாம் என்ன செய்யும் என்றால், 'ச்சே! இது மீன் மாதிரி தெரியவில்லையே. இது மனிதனாக இருக்கவும் வாய்ப்பில்லையே. வேறு என்னவாக இருக்கும் ?" என்று யோசிக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு யோசிக்கிற மீன்களிலும் சில மீன்கள், அதாவது நூறு மீன்கள், இதுப்போன்று யோசி த்தால், அந்த நூறில் இரண்டு மீன்கள் மட்டும் இன்னும் ஆழமாக யோசித்து என்ன செய்யும் என்றால், 'இல்லை, இது என்னவோ சாதரண பிரதிபலிப்பு மாதிரி கெரியவில்லை" என்று பிரதிபலிப்பு வரும் திசை நோக்கி நிமிர்ந்து பார்க்கும்.

அப்படி நிமிர்ந்து பார்த்தால், உண்மையான பரமஹம்ஸத்தைப் பார்க்கும். அந்த நிஜமான பரமஹம்ஸத்தைப் பார்த்த உடனேயே, தாமும் அந்தப் பரமஹம்ஸத்துடன் சென்று சேர்வதற்கான வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பரமஹம்ஸத்தை நிமிர்ந்து பார்க்கிற இந்த மீன்கள்தான் புத்திசாலி மீன்கள். இன்னொரு முக்கியமான விஷயம். பரமஹம்ஸம் பறக்கும்போது அதன் பிரதிபலிப்பு பூமி மேலை படுகிறது. குறிப்பாக அந்த நீர்மேலே படுகிறது.

அந்த நீரில் இருக்கும் சில மீன்கள் பிம்பத்துடன் விளையாடிக்கொண்டே இருந்து

ஜீவன் முக்தி

பாமஹம்ஸ்த்தை நிமிர்ந்து பார்க்கவே மறந்து விடுகிறது.

அப்பொழுது திடீரென்று ஒருநாள் காலை என்ன ஆகும்? பரமஹம்ஸம் குளத்தின் பரப்பைவிட்டு வேறொரு நிலப்பரப்பின் மீது பறக்கத் துவங்கினால் என்ன ஆகும் ?

அந்தப் பிரதிபலிப்பு நிலத்தின் மீது விழும். பிரதிபலிப்பு குளத்தின் மீது விழாது. அதன்பிறகு, பரமஹம்ஸத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டு இருக்கிற மீன்கள், ஒன்றையொன்று அடித்துக்கொள்ளத் துவங்கும்.

அதனால், குளத்தில் பிரதிபலிப்பு இருக்கிற போதே ஞானி உடலில் இருக்கும்பொழுதே பரமஹம்ஸத்தை மேலே நிமிர்ந்து பார்த்துவிடுங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம் ? .

ஞானி உடலில் இருக்கும் போதே, நீங்கள் ஞானமடைந்து விடுங்கள். குளத்தில் பிரதிபலிப்பு இல்லையென்றால், மீன்களால் பரமஹம்ஸத்தைப் பார்க்க முடியாது. பிரதிபலிப்பே இல்லாமல் போய்விட்டால் எப்படி நிமிர்ந்து பார்ப்பீா்கள் ? பிரதிபலிப்பை வைத்துதான் நிஜமான பரமஹம்ஸத்தைப் பார்க்கிறீர்கள்.

நங்களும் பரம்ஹம்ஸம் என்பதைக் காட்டுவதற்குத்தான், பிரதிபலிப்பு இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பிரதிபலிப்பு எதற்காக என்பதை யோசித்துப் பாருங்கள். வாதிருக்கிற பரமஹம்ஸம் பிரதிபலிப்பாக உடலில் இருக்கும்பொழுதே, உங்களுடைய நிஜமான பரமஹம்ஸத்தைப் பார்த்து விடுங்கள்.

பிரதிபலிப்பு இருக்கும் போதே உங்களை அந்தக் குளத்திற்கு அனுப்பி வைத்ததே அந்தப் பரமஹம்ஸ சக்தி, பராசக்திதான்... பரமஹம்ஸத்தைப் பார்த்துவிடுங்கள்.

நீங்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, உங்கள் தாயின் மார்பில் உங்களுக்காகப் பாலைச்

சுரக்கச் செய்கிற சக்தி பரமஹம்ஸ சக்தி, பராசக்தி.

உங்களைப் பூமிக்கு அந்தச் சக்தி அனுப்பும்பொழுதே, உங்களைக் கருவில் தாங்கும் காப்பத்தை மட்டும் உருவாக்கியதோடு தன் வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.

அது உங்களின் உணர்வையே தம்முடைய ஞான கா்ப்பத்தில் தாங்கி, உங்களை ஜீவன் முக்தர்களாக பொறிக்கும் குருவாக, நீங்கள் பிரசவமாகும் அதே காலத்திலேயே, தம்மையும் பிரசவித்துக் கொள்கிறது. அதனால்தான் நீங்கள் ஒரு பரமஹம்ஸத்தையே பார்க்கிறீர்கள்.

உங்களைப்பிரசவிக்கும் அதேசக்தி உங்களுக்காகவே தம்மையும் பிரசவித்துக்கொள்கிறது. நீங்கள் தேட ஆரம்பித்தால் போதும், பரமஹம்ஸம் கண்களுக்குத் தெரியும்.

தேடுதல் ஆரம்பிக்காவிட்டால், பரமஹம்ஸரையே நேரில் பார்த்தால்கூட, நழுவவிட வாய்ப்பிருக்கிறது.

கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள். உடல் ரீதியான காப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, வளர்த்து, மனிதனாக்கிய அதே பராசக்தி, அதே பரமஹம்ஸம், உங்களைத் தன் ஞான கா்ப்பத்தினாலேயே ஜீவன் முக்தர்களாக்குவதற்காக மீண்டும் மீண்டும் அவதரிக்கிறது. பரமஹம்ஸத்தை நிமிர்ந்து பார்த்தால் நீங்களும் பரமஹம்ஸம் ஆகிவிடுவீர்கள்.

எதிரியின் ரகசியம்

● எதிரிகள் ?

நண்பர்களை விட நிறைய நல்லது செய்பவர்கள். உங்களின் குருமார்கள்.

ீ என்னது! எதிரி குருவா?

'குரு" என்றால் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில் !

்குரு என்பவர் பெரிய பெரிய உண்மைகளைச் சொல்பவர். மனிதனுக்கு வாழக்கைப் பாடம் கற்றுத் தருபவர் சரிதானா?

சரியே! உலகம் இவ்வளவுதான் மனிதர்கள் இவ்வளவுதான்.

யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படியும் மாறலாம் எனும் வாழ்க்கைப் புதிர்களை அனுபவ பாடங்களாக உங்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் எதிரிகள் தானே!

தனியாய் ஞானமடைய வேண்டியதில்லை. வாழ ஆரம்பித்தாலே போதும், ஜீவன் முக்த வாழ்வு ஆரம்பமாகிறது.