Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

31. தனித்துவம் மலர்த்தும் நுட்பம்

# தனித்துவம் மலர்த்தும் நுட்பம்

Technique for flowering of Individuality

(சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உடனுக்குடன் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளுமளவிற்கு வாழ்வு வாழ்பவா்களுக்குத்தான் ஜீவன் முக்த வாழ்வுகூட நடிப்பாய்த் தெரியும்.

வாழ்வோடு நடனமாடத் தெரியாதவருக்குத்தான், வாழ்வில் பலரும் நடித்துக் கொண்டேயிருப்பதாகவும், உலகமே ஒரு ஏமாற்றுக்கார மேடையாகவும் தெரியும்.

நிஜத்தில் அவருடைய இறுக்கம்தான் அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

Inability to play with different masks is ego.

சூழ்நிலைக்கேற்றவாறு, பல்வேறு முகங்களோடு சகஜமாய் விளையாட இயலாத இயலாமைதான் அகங்காரம். கணத்திற்கு கணம் மாறும் வாழ்விற்கு இசைந்து, அதனோடு பல்வேறு முகங்களோடு விளையாடுவதற்குத் முகங்களை எந்தத் தடையும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல், வெளிப்படுத்தும், அகங்காரமற்ற நிலையைத் தொடவேண்டும். அகங்காரத்தால் பிடிக்கப்பட்டவாதான் வாழ்வின் தாளத்திற்கு ஏற்றாற்போல ஆட முடியாமல் தடுமாறுவா. அவா்களால் முடியாததால் சகஜமாக, எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நடிக்கிறார்கள் என்று மதிப்பிடுவார்கள்.

வாழ்க்கையை எளிமையாய் அணுகத் தெரிந்தவரே வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவர். அவர்களிடம் தனித்துவம் கொட்டிக்கிடக்கும்.

தனித்துவம் என்பது ஒரு டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, கலைஞனாகவோ மட்டும் வாழ்வது அல்ல. சிரிப்பு, அதிர்ச்சி, சலிப்பு, ஏமாற்றம், விபத்து, அதிசயம் என்ற எல்லா வாழ்வியல் சூழல்களோடும் தங்களை உடனுக்குடன் இணைத்துக் கொள்வதே தனித்துவம்.

இந்த உண்மையை உணர்ந்து இனிவரும் ஒவ்வொரு சூழலிலும் முழுமையாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அந்தந்த சூழலோடு முழுமையாக ஒன்றிவிடும் கதாபாத்திரமாகி விடுங்கள். ''ஐயோ இப்படியெல்லாம் செய்தால் நான் என்னை இழந்துவிடுவேனோ? என்னுடைய தனித்துவம் போய்விடுமோ ?' என்று மனம் அச்சு றுத்தினால், அதனிடம் தைரியமாய் இதைச் சொல்லுங்கள் ... ''வாழ்வோடு நடனமாடத் தெரிந்துகொண்டபின்தான் உன்னுடைய தனித்துவமே மலரும். ''

அதற்குப் பிறகுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் இழந்த பல பகுதிகள் மீண்டும் உயிர் பெறும். அது மட்டும் அல்லாமல் உங்களுக்குள் இருக்கும் உங்களுக்கே தெரியாத பல பரிமாணங்கள் தெரிய வரும்.

வாழ்வோடு நடனமாட ஆரம்பியுங்கள். உலகமே ஒரு கொண்டாட்ட மேடை என்பது அனுபவமாகும்.