Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

29. ஒரு முழுவோடுதான் இந்தப்புத்தகத்தை எழுதுகிறோம்...

# ஒரு முழுவோடுதான் இந்தப்புத்தகத்தை எழுதுகிறோம்

I writeThis book with a definite aim

பெராதுவாக கேள்விகளுக்கு இருக்கிற சீடர்களுக்குக் குழப்பமாக இருக்கும்.ஒரே கேள்விக்கான விடையை, இரண்டு வேறுவிதமான நபர்கள் கேட்கும்பொழுது, இரண்டு வேறுவிதமான சொல்லிவிடுவேன். ஒரு பகிலைச் செயலும் ஒவ்வொரு சொல்லும் மனித நிலைமையிலிருந்து மகான்நிலைக்கு உயர்த்தும்.

இதைப் புரிந்து கொள்ளாத சீடர்கள், ''இப்போது தானே ஒருவர் வந்து, 'கல்யாணம் செய்து கொள்ளவா? வேண்டாமா?' என்று கேட்டார். நீங்கள் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னீர்கள்.

இன்னொருவா வந்து, 'கல்யாணம் செய்து கொள்ளவா, வேண்டாமா?' என்று கேட்டார்.

'வேண்டாம். நீ சன்யாசியாக இரு!' என்று சொல்கிறீர்கள். ஒரே கேள்விக்கு இரண்டு பதிலா, எனக்குக் குழப்பமாக இருக்கிறது! ?'' என்று கேட்பார்கள்.

அப்போது அவர்களிடம் சொல்வோம், "இது கேள்விக்குப் பதில் அல்ல. கேட்பவருக்குப் பதில். ''

அதனால் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்லுகிற ஒவ்வொரு சத்தியமும் உங்களுக்காக, அதாவது, சிரத்தையோடு படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய உத்வேகத்திற்காக, வெளிப்படுத்துகிற சத்தியங்கள்தான்.

ஜீவன் முக்தி

உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிற சத்தியம் ...

மனித வாழ்க்கையின் அடிப்படை லட்சியம் ஜீவன் முக்தி. வாம்க்கையை எப்படி வேண்டுமானாலும், வேறு எந்த வழியில் வேண்டுமானாலும் ஆனந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

மனிக வாழ்க்யைின் அடிப்படை லட்சியம் ஹீவன் முக்கி.

நாம் எல்லோருமே , 'என் வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்களில்தான் கொஞ்சம் பிரச்சினை

இருக்கிறது. அதை எல்லாம் சரி செய்து வைத்துவிட்டால் போதும்' என்று நினைக்கி றாம். 'என்னுடைய மனம் நன்றாகத்தான் இருக்கிறது. எப்போதாவது மட்டும் கொஞ்சம் துக்கம் வருகிறது. அதை சரி செய்து வைத்துவிட்டால் போதும்,'' என்று நினைக்கிறீாகள்.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய மனத்தை நாம் சரி செய்ய முயற்சி செய்வது என்பது கோழி குப்பையைக் கிளறுகிற செயல். '

துக்கத்தைக் கிளறினால் பிரச்சினை தீருமா ?

தீராது, என்றுமே தீராது.

தீர்வு இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பிறக்காது. என்றுமே நடக்க முடியாதது.

உண்மையிலேயே, சில சத்தியங்களை, ஆழமாக, ஆணித்தரமாக, எதற்கும் தயங்காமல் சொல்வது என்ற முடிவோடுதான் இந்தப் புத்தகத்தை எழுதுகிறோம்.

Socially polite என்ற ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது. சமூக ரீதியாக, அடக்கமாக, அமைதியாக இருத்தல். பல நேரங்களில் சமூக ரீதியாக, அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சத்தியத்தை உள்ளது உள்ளபடியே சொல்லமுடியாமல் மென்று விழுங்கியிருக்கிறோம்.

இன்று, சமூக ரீதியாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ, வேறு எந்தக் காரணங்களுக்காகவோ, சத்தியத்தை நான் ஜீரணிக்கப் போவதில்லை. மென்று விழுங்கப்போவதில்லை. எத்தனை நாள்தான் இறைசக்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பீர்கள் ?

அதனால்தான் உள்ளதை உள்ளபடியே சொல்லப் போகிறோம். உள்ளதை உள்ளபடியே உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறோம். பல ஆயிரக்கணக்கான மக்களைத் தியான முகாம்களிலும், நேரிலும், தனிப்பட்டப் பிரச்சனைகளுக்கும் மற்றும் ஆலோச னைக்காகத் தனியாகவும் பார்த்து இருக்கிறோம். அவா்களுடைய வாழ்க்கையின் லாப - நஷ்டங்களில் பங்கெடுத்து இருக்கிறோம். அவா்களுடைய வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் ஈடுபட்டு இருக்கிறோம்.

இவை அத்தனையினுடைய சாரத்தையும், இவை அத்தனையினுடைய அறிவையும், உங்களோடு இந்தப் புத்தகத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்வது என்ற முடிவோடுதான் எழுதுகிறோம்.

のある 一

8

விட்டுவில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூடப் போதும்... அது நிரந்தரமாகியிருக்கும். ஏனென்றால், அது நிரந்தரமானது.

அதையடுத்து நிரந்தரமான நிரந்தரமின்மை என்றும் உலக இயல்பை மீறி, பிரபஞ்ச இயல்புக்குள் குதித்திருப்பீர்கள். ஆனந்தத்தை அனுபவித்திராதபொழுது பாசக்கடல் தாண்டப்பட்டிருக்கும்.

பாசக்கடலுக்குள் இருந்தவாறே நீங்கள் எவ்வளவு சந்தோஷங்களை வாழ்வில் சந்தித்தவராக இருந்தாலும் நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும்... தெரிந்துகொள்ளுங்கள் அது சந்தோஷம் அல்ல, தோஷம். துன்பத்தின் இன்னொரு உரு!

இந்த உண்மை ஆழமாய் உங்களுக்குள் இறங்கட்டும்.

Divert your whole being towards one goal, Jeevan mukthi.

சந்தோஷம் தாண்டி... உங்களின் மனம், உடல், உயிர் ஆன்மா எல்லாம் ஜீவன் முக்தி நோக்கி ஏவப்படடட்டும்.

ஜீவன் முக்தியை அடைந்தாக வேண்டும், அதுவே இலக்கு என்பது ஐஸ்கட்டியாய் மனத்திற்குள் இளகட்டும்.

வாழும் காலங்களே ஆனந்தமிகு தியானங்களாக மாறும்.

பழுத்தக் கட்டியின் தோல், உடலின் மற்ற தோலை விடப் பளபளப்பாக இருக்கும்... மிடைமிதைக்கும் !

மருத்துவரின் ஒரு சிறு கத்தி தரும் அதிர்ச்சியில் அந்தக் கட்டியே உடைந்து போகும். சீம் இறங்கி விடும், சுகம் பிறக்கும். அதேபோல்கான், மனத்தில் பல கட்டிகள் இருக்கின்றன. அவைதான் மனிதனை வாந்தத்திற்குள் ஆழ்த்துகின்றன.

முக்தி யுக்திகள், மருத்துவரின் கத்திபோல் மனக்கட்டிகளை உடைத்தெறியும்.

மனக்கட்டிகள் உடைய மனச்சீழான துக்கம், சோர்வு, கவலை, எரிச்சல்கள் இறக்கும். ஜீவன் முக்தி பூக்கும்.

முக்தி யுக்திகளை ஆழ்ந்து தியானியுங்கள். ஆனந்த வாழ்வு சொந்தமாகும். ஜீவன் முக்த வாழ்வு அனுபவமாகும்.