28. நீங்கள் பிரபஞ்சத்தின் குழந்தைகள்
# நீங்கள் பிரபஞ்சத்தின் குழந்தைகள்
You are children ofThe Cosmic Intelligence
இறைசக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை.
நம் மூலமாக இறைசக்தி வாழுகிறது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகிறது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சிலநேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலா் தாங்கள் அடைய நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்ய விரும்புவார்கள். சில குமந்தைகளும் அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள்.
நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு.
அதிலிருந்து தோன்றிய எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்.
நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை வெளிப்படுத்திட வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் பாகமாக மாறுகிறோம். அதன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறோம்.
நம்முடைய குடும்பங்களில் பார்த்தோமென்றால். அப்பா சொத்து சேர்த்து வைத்திருப்பார். அந்தச் சொத்தை அனுபவிக்க தடைசெய்ய மாட்டார் ஆனால், பொறுப்புடன் செலவழிக்க ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். ''இந்தச் சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், அதை அனுபவிக்க, வருடத்தில் ஒரே ஒருமுறை தவறாமல் அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்த வேண்டும்,'' என்று எழுதியிருப்பார்.
அந்தக் கடமையைச் செய்தோமானால், சொத்தை அனுபவிப்பதற்கான முழுத்தகுதி இருக்கும். ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான ககுதி நமக்குக் இருக்காது.
இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கிற கட்டளை, ''ஆனந்தமாக வாழுங்கள்.''
''ஆனந்தமாக வாழுங்கள்,' என்ற அவருடைய விருப்பத்தை, ''ஜீவன் முக்தர்களாக வாமுங்கள்,'' வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு.
ஆனால், அவர் சொன்னது போன்று 'ஜீவன்முக்தர்களாக' வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்தச் சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு
இரைசக்கி நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகிறது.
ஜீவன் முக்தி
இல்லை. உலகைக் கொண்டாடதாா்மீக உரிமை ஜீவன் முக்தியை வெளிப்படுத்துவதுதான்.
ஆழ்ந்து இந்தச் சத்தியங்களைப் பார்த்தீர்கள் என்றால், அடிப்படையாகச் சில விஷயங்கள் புரியும். வாழ்க்கை 'ஜீவன் முக்தராக' வாழ்வதற்கு அளிக்கப்பட்டது. ஜீவன்முக்தராக வாம்வது நம் தார்மீக பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்றவர்களால்கான் உலகைக் கொண்டாட முடியும்.
அவ்வாறு ஜீவன் முக்தராக வாழ முடியாமல் இருப்பதற்கான காரணம் வெளியில்
இல்லை. நம்முடைய அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இருக்கிற இடைவெளியால் நடக்கும் பிரச்சனைதான் காரணம். இந்த அகங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் அதாவது வெளியில் நாம் மற்றவர்களுக்கு காண்பிக்கிற பர்சனாலிட்டிக்கும் நமக்குள் நாம் வாழும் பர்சனாலிட்டிக்கும் இருக்கும் வேறுபாடுதான் காரணம்.
பிரபஞ்சம் ஒவ்வொரு நிமிடமும் மங்களத்தன்மையை ஊட்டிக் கொண்டேருக்கிறது.
எந்தச் சண்டைக்கும் காரணம், எதை எடுத்தாலும் விமர்சித்துக் கொண்டே இருக்கிற மன அமைப்புதான்.
இந்த மன அமைப்பு மாற வேண்டுமானால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு விஷயத்தின் மூலமாகவும், நமக்குள்ளே சேர்க்கப்படும் சாரத்தைக் கண்டு ரசிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொன்றின் சாரம் சேர்த்துக்கொண்டே இருக்கிறது.
ஏதோ ஒரு ரசத்தை அளித்துக் கொண்டே இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு படியுமே நாம் அடுத்த நிலைக்கு செல்லத் தேவையான ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது.
ஏதோ ஒரு விஷயத்தை, நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கிறது.
ஏதோ ஒரு பரிந்து கொள்ளுகலை, நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றிவிட்டுச் செல்கிறது.
துண்பத்தின் ரகசியம்
்துண்பங்கள் என்பவை ?
பயிற்சிக் களங்கள்,
• பயிற்சிக் களங்கள் என்றால் ?
புத்திசாலித்தனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச் செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.
71

இதை நாம் புரிந்துகொண்டு, வரவேற்கும் குணத்தோடு கெரிந்து கொண்டோமானால், வாழ்க்கையே மங்களம்.
நிமிடமும் ஒவ்வொரு பிரபஞ்சம் மங்களக்கன்மையை உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஊட்டிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது மங்களத்தில் இருந்து பொங்கி, மங்களத்தன்மையாக வெளிப்படுகிற சத்தியம் என்பது புரியும். '
நம்முடைய வாழ்க்கையில் வருகிற வைவொரு படியுமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது. ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கிறது.