27. தியான ஆராய்ச்சி
# தியான ஆராய்ச்சி
சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.
-
ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகர்கிறது ? வெறுமைத் தன்மையோடு,வெளியே சிரித்தும், உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகர்கிறதா?
-
அடிக்கடி ச்சே ! சை ! என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்துவெடிக்கிறதா ?
-
டி . வி. பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசிச் சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகிறதா ?
-
அருமையாய்ச் சிரிக்கு, இனிமையாய் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகிறதா ?
-
அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளம்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?
| கேள்விகள் | வாழ்வின் கஷ்ட அளவி(டு | ||
|---|---|---|---|
| மகிப்பெண் |
இந்த ஐந்து கேள்விகளுக்கும், எந்தெந்த கேள்விகளுக்கு பதில், "ஆம்!" என்று சொல்கிறீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள்வரை அதிகபட்சமாகக் காலாம்.
"ஆம்! அப்படித்தான் இருக்கிறது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை,' என்று எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள்வரை அளிக்கலாம். பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான், நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகிறீர்கள் என்பதின் அளவீடு.
எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கிறதோ, அவ்வளவு பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறிர்கள் என்ற அர்த்தம். அப்படியென்றால், உங்களுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், நீங்கள் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவீர்கள்.
உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்துபாருங்கள், சாபங்கள் குறையும்; வரங்கள் அதிகரிக்கும்.
