Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

25. நிஜமான அற்புதம் Real Miracle

# நிஜமான அற்புதம் Real Miracle

ட்குரு பக்தா் என்னிடம், ''எப்படியாவது எனக்கு ஒரு ஆசீர்வாதம் செய்து, என்னுடைய முற்பிறவியில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் என் ஞாபகத்திற்கு வருமாதிரி ஆசீர்வாதம் செய்யுங்கள், '' என்று கேட்டார்.

அவரிடம், ''அப்பா, உனக்கு வயது என்ன?'' என்று கேட்டதற்கு, அவர் சொன்னார், ''முப்பத்தெட்டு.''

வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தேவையற்ற விஷயங்களை மனப்பிடிகளிலிருந்து விடுவிப்பதே உண்மையான அற்புதம்.

"அப்படியென்றால், இந்த முப்பத்தி எட்டு வருடத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும், உங்கள் மனத்திற்குள்ளே ஒரேயடியாக இப்பொழுதே ஞாபகத்திற்கு வந்தால், என்ன ஆவீர்கள்?'' என்று கேட்டபோது ...

''பைத்தியம் பிடித்துவிடும்,'' என்றார்.

''இந்த முப்பத்தியெட்டு வருட நினைவுகளே இவ்வளவு துக்கங்களைக் கொடுக்கிறது. அதை மறப்பதற்குத்தான் தியானம்

செய்வதற்காக இங்கு வந்துள்ளீர்கள். மற்றொரு அறுபது, எழுபது வருடம் உங்களின் பூர்வ ஜென்ம ஞாபகம் இப்போதே வந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள்?''என்று திரும்பக் கேட்டோம். அவரிடம் பதிலே இல்லை.

'38 வயதுவரை நடந்த வாழ்விலிருந்து ஒரு சில கடந்த கால நினைவுகள் மட்டும்தான் உங்களின் மனத்திற்குள், அவ்வப்போது எழுகிறது. அந்த 30 வருட மனநிம்மதியின்மையால்தான் தியானம் செய்யவே வந்திருக்கிறீர்கள். இன்னும் ஒரு பூர்வ ஜென்மம், அதோடு சுமார் ஒரு 70 வருட நினைவுகளையும் சேர்த்தால் 108 வருட நினைவுகள் வரும். அத்துணையும் உங்களின் மனத்திற்குள் ஒரே நேரத்தில் ஓட ஆரம்பித்ததென்றால், என்ன ஆவீர்கள் ?"

அவர் சொன்னார், 'பைத்தியமல்ல; பேயே என்னைப் பிடித்துவிடும்,' என்றார். 'கவலைப்படாதீா்கள். இரண்டாவது முறை பிடிக்காது,''என்றதும், அவர் நிம்மதியாய் வாய்விட்டுச் சிரித்தார்.

நம்மிடமிருக்கும் ஒவ்வொன்றும், இறைவன் நமக்களித்த அற்புதங்கள் என்பதை அவா புரிந்து கொண்டார்.

பூர்வ ஜென்மத்தை அறிய வேண்டும், அட்டமா சித்திகளை அடைய வேண்டும், ஆவிகளோடு பேச வேண்டும் என்பன போன்று, வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் நேரடியாகத் தேவையற்றவை மனிதரைப் பிடித்துக் கொண்டால், அந்தப் பேயே அவரைப் பிடித்ததற்குச் சமம். பேயையாவது ஒட்டி விடலாம். இது போன்ற தேவையற்ற விஷயங்களை மனத்திலிருந்து ஓட்டுவதோ, அவரை அதிலிருந்து

காப்பாற்றுவதோ இலேசுப்பட்ட காரியமல்ல. மறக்கடிப்பதும், மனப்பிடிகளிலிருந்து விடுவிப்பதும்கான் அற்பதங்கள்.

இறந்த ஆவிகளோடு ஒருவரைப் பேச வைப்பது அற்புதமல்ல ; இறந்தவரைப் பற்றிய நினைவிலேயே பித்துப் பிடிக்கவரை அற்புதம். குணப்படுத்துவதுதான் அற்புதம். மனிதருக்குள் இருக்கும் வைப்பதுதான் அற்புதம்.

Making water as wine is not a miracle. Making man as divine isThe miracle.

மறதிகூட இறைவன் தந்த வரம். மகானாகும் முன் அதிக துக்கத்திலிருந்தும், பித்துப்பிடிக்கும் பல சூழல்களிலிருந்தும் மனிதனைக் காப்பற்றுவதற்காக இரைவன் கந்த வாம்கான் மற்கி.

தண்ணீரை ரசமாக்குவதல்ல, மகானாக்குவதே மாபெரும் அற்புதம்; எல்லோராலும் செய்துவிட முடியாத அற்புதம் இதுதான்.

மறதிகூட இறைவன் தந்த வரம். மகானாகும் முன் அதிக துக்கத்திலிருந்தும், பித்துப்பிடிக்கும் பல சூழல்களிலிருந்தும் மனிதனைக் காப்பற்றுவதற்காக இறைவன் தந்த வரம்தான் மறதி.

யோசித்துப்பாருங்கள்... சிறு வயதிலிருந்து நீங்கள் செய்த எல்லாத் தவறுகளும் இப்போது உங்களின் நினைவில் அப்படியே, அதே உணர்ச்சி

நீங்கள் யோசிக்கும் முன்பே, இறைவன் நமக்காகச் சிந்தித்து எல்லாவற்றையும் செய்து வைத்திருக்கிறார்.

க் கொந்தளிப்புகளோடு, அதே காயக்கோடு இருந்தால் என்ன ஆகும் ? கலையே வெடிக்கு விடுமல்லவா!

அதனால்கான் நாம் யோசிக்கும் முன்பே, இரைவன் நமக்காகச் சிந்தித்து எல்லாவற்றையும் செய்து வைத்து இருக்கிறார்.

நம்முடைய வேலைகள் ஐந்தென்று சொல்வார்கள்.

உருவாக்குதல் - சிருஷ்டி ; காப்பாற்றுதல் - ஸ்திதி ; அழித்தல் - சம்ஹாரம் : மறைத்தல் - திரோதானம் ; அருளல் - அனுக்கிரஹம் - என்ற ஐந்து வேலைகள் உண்டு.

அதாவது உருவாக்குதல், காப்பாற்றுதல், அழித்தல், மறைத்தல், அருளல்.

உருவாக்குவது கடவுள் வேலை; காப்பாற்றுவதும் அவர் வேலை; அழிப்பதும் அவா வேலை ... அழிப்பதென்றால், நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உயிர்ப்பிக்கச் செய்வது. (Rejuvenation)

ஒரு அணுவை அழித்தால்தான், அதனால் மற்றொரு விஷயமாக மாறமுடியும். அந்தச் சக்தி மாற்றம், உருமாற்றம்தான் அழித்தல். அதைத்தான் அழித்தல் என்று வேதாந்தம்

சொல்கிறது. அழித்தலும் அவர்தான் செய்தாக வேண்டும். அதுதான் உண்மை.

ஐந்தாவது வேலையான அருளலையும், அதுவும் அவர்தான் செய்தாக வேண்டும். இப்படி, எல்லாவற்றையும் செய்வகே அவர்கான்.

மனிகனை மாயையில் சிக்க வைப்பது என்பது, நீங்கள் மகானாக முடிவெடுக்காத போது இறைவன் செய்யும் லீலை.

'ஆனால், இந்த நான்காம் வேலையான மறைத்தலை, அதாவது மாயையில் மனிதர்களைப் போடுவதை, ஏன் காரணம் இல்லாமல் செய்கிறார்?' என்று நினைக்கலாம்.

இந்தக் கருத்துகளை ஆழ்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். நமக்குத் தெரியும், மறைத்தல் என்ற மறதிகூட காரணத்தோடு நம்மீது செய்யப்படுகிற அருள் மழைதான். ஏனென்றால், எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தோம் என்றால், நிம்மதியாக வாழ முடியாது.

இந்தக் கருத்துகளையெல்லாம் சொன்ன பிறகு அவரிடம், ''உங்களுக்குப் பூர்வ ஜென்ம நினைவு இப்பொழுது வர வேண்டுமா?' என்று கேட்டேன்.

''இல்லையில்லை, இந்த ஜென்ம நினைவெல்லாம்கூட அழிப்பதற்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள், '' என்றார் வேகமாக.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தினசரி வாழ்க்கையிலே இதற்குமேல் உங்கள் மனத்தை உபயோகம் செய்ய முடியாக அளவிற்கு மனம் சோர்வாகும்பொமுது, நீங்கள் எடுத்துக் கொள்கிற ஒய்வுதான் காக்கம்.

அதேபோல் உங்கள் வாழ்க்கையில் இதற்கு மேல் உங்கள் உடலை உபயோகம் செய்து கொள்ள முடியாதென்று நினைக்கும்பொழுது, நீங்கள் எடுத்துக் கொள்கிற நிரந்தர ஒய்வுதான் மரணம். மரணம் உடலுக்கு மட்டுமல்ல, அந்த உடலோடு சேர்ந்த பூர்வ ஜென்மஞாபகத்திலிருந்தும் உங்களுக்கு விடுதலையைத் தரும்.

மனிதனை மாயையில் சிக்க வைப்பது என்பது, நீங்கள் மகானாக முடிவெடுக்காத போது இறைவன் செய்யும் அற்புதம். மாயையில் சிக்கியவரை மகானாக்குவது, நீங்கள் மகானாக முடிவெடுக்கும் போது. இரைவன் செய்யும் அற்புதம்.

உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும், உங்களை மகானாக்கும் ஜீவன் முக்தராக்கும்.

ஜீவன் முக்தராக உங்களை மலர்த்துவதே நிஜமான அற்புதம்.

மரணம் உடலுக்கு மட்டுமல்ல. அந்த உடலோடு சேர்ந்த பூர்வ ஜென்ம ஞாபகத்திலிருந்தும் உங்களுக்கு விடுதலையைத் தரும்.