24. மரணமும் மங்களத்துவமே ...
# மரணமும் மங்களத்துவமே
Even Death is auspiciousness ...
டரதிது புதிதாக, இந்த உலகத்தில் வெவ்வேறு விஷயங்களை உருவாக்கு வதற்கான இடத்தைத் தயார் செய்து கொண்டே இருக்கிற செயலுக்குத்தான் அழித்தல் என்று நாம் பெயர் சூட்டியிருக்கிறோம். புதுப்பித்தலே அழித்தலின் மறுபெயர். அதனால், எந்தவொரு பொருளின் அழிவுமே, புதுமையான பொருள் வருவதற்கு அறிகுறி.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
ஹீவன் முக்தி
வழுவன கால வகையினாலே' என்று சொல்லக்கூடிய ஆழமான கருத்தின் தத்துவம் சிவம்.
ஆழமான ஞான வெளிப்பாடு இது.
காரணமில்லாத மங்களத்துவம் ... இதை இன்னும் ஆழமாக நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்!
Creating space for new happenings is what is Shivam,The causeless auspiciousness!
மங்களத்துவம் என்ன செய்யுமென்றால் ... புதிது
புதிதாக, இந்தப் பூலோகத்தில் பல படைத்தல் நடப்பதற்கும், பல காத்தல் நடப்பதற்கும், பல புதுச் செயல்கள் நடப்பதற்குமான 'ஆதார'மாக இருக்கும்.
பிறத்தலும் காத்தலும் நடைபெறுவதற்கான கா்ப்பம் 'சிவம்'.
இந்த உலகத்தில் புதுப்புது விஷயங்கள் அழித்தல் என்று சொல்லப்படுவது, நடப்பதற்காக, பிரபஞ்சம் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஒரு சுப நிகழ்வுதான்.
ஆமமாகப் பார்க்கோம் என்றால் ... உலகத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் இந்த மங்களத்தன்மை மட்டும்தான் நடக்கிறது.
ஆனால், அந்த அழித்தல் என்கிற செயல் நாம் புரிந்துகொள்கிற விதத்தில் நிகழ்வது இல்லை அவ்வளவுதான்.
புதுமைக்கான காப்பத்தை உருவாக்கும் செயலைத்தான் அழித்தல் என்கிறோம்.
மங்களத்துவத்தைத் தவிர்த்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தவிர்த்து, இந்தப் பிரபஞ்ச த்தில் வேறு எதுவுமே நடப்பது இல்லை.
அனைத்தும் மங்களத்துவம்தான்.
''என்ன நடந்தாலும் மங்களத் தன்மைதான் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் ?
வியாகியை மங்களம் என்று சொல்லமுடியுமா?
இல்லை, மரணத்தைத்தான் மங்களம் என்று சொல்லமுடியுமா? என்ன நீங்கள்... எல்லாம் மங்களம் என்கிறீர்களே ?
எல்லாமே மங்களம், மங்களம் என்று மங்களம் பாடுகிறீர்களே, ' என்று யோசிக்காதீா்கள்.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், நமக்கு மிக ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகின்றன. இதன் மூலமாக, நமக்கு ஏதோ ஒரு சாரத்தை நிச்சயம் சேர்க்கிறது.
அதன் சாரத்தைச் சேர்க்துவிட்டுக்கான் செல்கிறது.
ஒரு உதாரணத்திற்கு .... பணக்காரராக இருந்து, ஏதோ ஒரு வியாபாரத்தின் மூலமாக

மங்களத்துவத்தைக் குவிர்த்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தவிர்த்து , இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே நடப்பது இல்லை. அனைத்தும் மங்களத்துவம்தான்.
பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால்கூட, அந்த வியாபாரத்தில் நடந்த அனுபவம் என்கிற சாரம், உங்கள் பர்சனாலிட்டியோடு சேர்ந்து விடுகிறது.
அப்போது இயற்கையாக, இதற்குப் பிறகு எப்படி அந்தப் பிழைகளை மீண்டும் செய்யாமல் வாழ்வது என்கிற அறிவு உங்களுடைய பாகமாக மாறிவிடுகிறது.
எவ்வளவு தேடினாலும் கிடைக்காத மிகப் பெரிய மன மாற்றத்தை நமக்கு வியாதிகள் தேடி வந்து தந்துவிட்டுச் சென்றுவிடும்.
உங்களுடைய பாகமாகவே மாறிய, இந்த அறிவுக்கான விலைதான் நஷ்டம், இழப்பு.
Even loss is gain fromThe view of reality.
ஆழமாகப் படியுங்கள். இந்தப் புரிந்துகொள்ளுளுதலோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பாருங்கள். உங்களுக்கு வருகிற வியாதிகள்கூட, பலநேரத்தில் உங்களுக்கு மிகவும் தேவையான மனத்தெளிவையும் அமைதியையும் தந்துவிட்டுச் சென்றுவிடும்.
நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு தேடினாலும் கிடைக்காத மிகப்பெரிய புரிந்து கொள்ளுதலை, மிகப்பெரிய உணர்வு மாற்றத்தை, மிகப்பெரிய மனமாற்றத்தை, மிகப்பெரிய தெளிவை, நமக்கு வியாதிகள் தேடி வந்து தந்துவிட்டுச் சென்றுவிடும்.
இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஆழமான தெளிவைத் தரவல்ல ஒன்றுதான் மரணம். அதனால்தான் சொல்கிறோம், துக்கங்கள், அது தெய்வநிலைக்கு நம்மை உயர்த்த வந்திருக்கும் உளிகள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மரணம் என்பது என்னவென்றால், உங்களால் சரி செய்ய முடியாத துக்கங்களை மனத்திலும், வியாதிகளை உடலிலும் சுமக்கத் துவங்கும்பொழுது, ''இது போதும்! வேறு ஒரு உடலையும், மனத்தையும் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம்," என்று சொல்லிவிட்டுச் செல்வது. பழையதை விட்டுவிட்டுப் புது உடலையும் மனத்தையும் பெறப் போவதைத்தான் உடல்சார்ந்த மாணம் என்று சொல்கிறோம்.
உங்களுடைய எல்லாத் துக்கத்திற்கும் எது காரணமாகிறது ?
ஒருவிதத்தில் பார்த்தீர்கள் என்றால்... உடலும், உடல்சார்ந்த பொறுப்புகளும்தான் காரணமாகிறது.
உடல், உடல் சார்ந்த பொறுப்புகள் என்பது ...
உடலால் வருகிற உறவுகளும், அவர்களுக்காக எடுத்துக்கொண்ட பொறுப்புகளும்... இவைதான் நம்முடைய எல்லா உடல் சார்ந்த துக்கங்களுக்கும் காரணம்.
இதனாலேயே நம்முடைய மனத்திற்குள்ளேயும் காயங்களை ஏகப்பட்ட உருவாக்கி
அருமையான ஜென் வாக்கியம் ...
Even sickness is a blessing
அதாவது நோய்கூட ஒரு வரமே!
வைத்திருப்போம். பல மாற்றமுடியாத, ஆற்றிக் கொள்ள முடியாத காயங்களை உருவாக்கி வைத்திருப்போம்.
இருக்கிற உடலைத் தூக்கி போட்டுவிட்டு இன்னொரு உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே மரணம்.
மாற்றமுடியாத, அற்றிக் கொள்ள முடியாத காயங்களை உடலிலும், மனத்திலும் உருவாக்கிவிட்டோம் என்றால், சரி, இதற்குமேல் ஏற்படுகிற இந்தப் பந்தங்கள், துக்கங்கள் போதும். இனி இதைத் தாண்டிச் செல்லலாம், '' என்று சொல்லி, நீங்களே உங்களை மாற்றிக் கொள்வதைத்தான், இழப்பு, வாழ்வுசார்ந்த மரணம் என்று சொல்கிறோம்.
எதையும் தாங்கும் மனப் பக்குவத்தை அளிக்க வல்லது, இழப்பு.
ஊருக்குள் நம்முடைய பெயர் மதிப்பிழந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இதற்குமேல் அதைச் சரியே செய்ய முடியாதென்றால் என்ன செய்வோம் ?
நமக்குப் பிடித்த வேறு ஒரு ஊருக்கு சென்று விடுவோம் இல்லையா ?
நமக்குப் பிடித்த வேறு ஒரு ஊருக்குச் செல்வதற்கு முன், இருக்கும் ஊரிலேயே தொடர்ந்து இன்னும் கொஞ்சநாள் இருக்க வேண்டி வருகிறது. அப்போது என்ன செய்வோம் ? அதே மதிப்பிழந்த பெயரோடும், துக்கத்தோடும் இருப்போம். அதேபோல் இந்த உடலையும், மனத்தையும் இனி இதற்குமேல் சிி செய்யவே முடியாது என்ற நிலை வரும்வரை அப்படியே இருப்போம்.
இருக்கிற உடலைத் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொரு உடலைக் கோர்ந்தெடுத்துக் கொள்வோம்.
தேவைப்படும்போது, நாம் வேறு ஊருக்கு மாறுகிறோம் இல்லையா? அதுபோல் வேறொரு உடலை மாற்றுவதைத்தான் மரணம் என்று சொல்கிறோம். மீண்டும் சரி செய்யவே முடியாத அளவிற்கு, நம்முடைய உடலும் மனமும் சோர்வாகி விடும்பொழுது, அதை விட்டுவிட்டு நாம் இன்னொன்றை மாற்றிக் கொள்வதுதான் மரணம் என்று சொல்கிறோம்.
மனச்சோர்விலிருந்து, மரணம்வரை எல்லாம் மங்களமே!
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள் ...
மரணம்கூட நமக்கு மிகப்பெரிய சுதந்திரமே!
மரணம்கூட மங்களத்துவமே!
