Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

22. கடவுள் தண்டிப்பாரா ? ? ? Will god punish???

# கடவுள் தண்டிப்பாரா ? ? ? Will god punish???

இமயமலைக்கு ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா! ?" என்று.

''தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது,'' எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார். "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?''

அவருக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சொன்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடுவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரமித்தான்! கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா," என்றான்.

முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

56

வாழ்வை வரவேற்றால், உங்களை வாழ்வும் வரவேற்கும்.

ரீ என்ன செய்கிறாயோ, அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,' என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைக்கார்.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, ''நீங்க யாரு?'' என்றான். உடனே மலையும் அதே கேள்வியைத்

உடனே, மலையிலிருந்து ''வாடா,'' என்ற குரல் எதிரொலித்தது.

தன்னை, ''யார் வாடா!" என்று கூப்பிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, ''யாரது ?''

என்றான்.

''யாரது?'' என்று மலையும் திரும்பக் கேட்டது.

திரும்பக் கேட்க, பயந்து, ஒடிப்போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான். குரு சிரித்தபடியே சொன்னார் ...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ வாழ்வை நேசித்தால், வாழ்வும் உன்னை நேசிக்கும்.

அதேபோலத்தான், கெடுதல்கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,

வாழ்வு அவரை எதிர்க்கும்.

வாம்வை வரவேற்றால்,

அவரை..... வாழ்வும் வரவேற்கும்.

எனவே, இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள். வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும்.

வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பது இல்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக் கிறீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பது இல்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத்தான், வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.

இனிமையாய் எல்லாம் அமையும்.

இது வாக்கல்ல ;

என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.