205. எனக்கு நிகழ்ந்ததை உங்களுக்கும் நிகழ்த்துவதற்கு அவர் பொறுப்பு MakingThe experienceThat happened in me to happen in you is His responsibility!
Section 1
எனக்கு நிகழ்ந்ததை உங்களுக்கும் நிகழ்த்துவதற்கு அவர் பொறுப்பு MakingThe experienceThat happened in me to happen in you is His responsibility!
ரமண மஹரிஷி மிக அமகாகச் சொல்வார்...
அவர் சிவபெருமானை ஆசீர்வதிக்கிறார்.
''என்னைப் போன்ற மக்களைக் காப்பாற்றி என்றென்றும் வாழ்வீர்களாக என்று ஆசீர்வதிக்கிறேன்,'' என்று சொல்கிறார் ரமண மகரிஷி.
அதனால், ஈஸ்வரன் எனக்கு அருள் புரியும்போது, உங்களுக்கு ஏன் அருள்புரிய மாட்டார்? நிச்சயமாக அவர் செய்வார்.
அது நம்முடைய தகுதியை பார்த்து நடப்பதில்லை.
அவர் ஆசுதோஷா,
ஆசுதோஷா என்றால், எளிதில் சந்தோஷப்படுத்திவிடலாம் என்றாத்தம்.
அவரை சந்தோஷப்படுத்த அதிகமாக எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் ஜீவன் முக்தியை வாழ்ந்தால் போதும்.
ஆசுதோஷா என்றால், காரணமில்லாமல் ஆனந்தமடைபவர். அவா எதையும் பார்ப்பதில்லை. திறந்த மனப்பான்மையை தவிர, திறந்த மனப்பான்மை என்ற வார்த்தையைக்கூட உபயோகிக்க முடியாது.
திறந்த மனப்பான்மைக்கு உங்களுடைய சொந்த அர்த்தத்தை வைத்துக் கொள்வீர்கள். வெறுமனே, உள்வாங்கும் உணர்வோடு வாழ்வை அணுக அணுக அது நடக்க ஆரம்பிக்கிறது. அவர் ஆசீர்வதிக்கிறார்.
உங்கள் எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும், உணர்த்த வேண்டும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஏதோ ஒரு விதத்தில் உங்கள் வாழ்க்கையிலும்கூட அவர் விளையாட வேண்டும்.
காரணம், அவர் சொன்னது உண்மை என்று நிரூபிப்பதற்காக உங்கள் உணர்த்தாவிட்டால், பிறகு எப்படி என் வார்த்தைகளை அவர் நியாயப்படுத்துவார்.
இப்போது நான் உறுதிசெய்கிறேன். இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது என்பது உண்மையென்றால் உங்கள்
வாழ்க்கையிலும் அது நடப்பதற்கு அவரே பொறுப்பு.
இப்போது அத்தாட்சியைக் கேட்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.
வெறுமனே நீங்கள் இங்கு இருப்பதனால் இங்கே உட்கார்ந்து நான் சொல்வதைக் கேட்பீர்கள்.
ஆனால் உங்களுக்கு அத்தாட்சியைக் கேட்க உரிமை இருக்கிறது. இப்போது அதை நிரூபிப்பதற்கான பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அவர் நிரூபித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் உபயோகமற்றதாகி விடும், அடித்தளம் இல்லாமல் போய்விடும்.
நான் சொன்னது சத்தியம் என்றால், நான் சொன்னது உண்மையிலேயே நடந்திருந்தால், அவர் உங்களுக்கும் காண்பிக்க வேண்டும்.
ஏதோ ஒரு விதத்தில் அவர் அந்த அனுபவத்தை உங்கள் வாழ்வில் கொடுப்பதைப் பார்ப்பீர்கள். ஏதோ ஒருவிதத்தில் உங்கள் வாழ்க்கையிலும்கூட அவர் நிச்சயம் விளையாடுவார்.
நீங்கள் அதை என்னிடமே பகிர்ந்து கொள்வீர்கள்.
அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு இதற்காக இறங்கியே ஆகவேண்டும். வேறு எந்த ஒரு விஸ்வரூப தரிசனத்தின் மஹா அனுபவம் தரவில்லை என்றாலும் ஞானத்தின் ஒரு துளியாவது அல்லது தரிசனத்தின் ஒரு துளியையாவது, ஏதோ ஒரு விதத்தில் அவா் உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.
அவர் நிச்சயம் உங்களுக்குக் கொடுப்பார் என்று ஆசீர்வதிக்கிறோம். நான் சொன்னது ச த்தியம் என்றால், இந்த உடலுக்கு அது நடந்திருந்தால், சத்தியமாகச் சொல்கிறேன், அவா உங்கள் எல்லோருக்கும் கொடுப்பார். அவர் உங்கள் எல்லோருக்கும் கொடுத்தே ஆகவேண்டும்.
ஒரே ஒரு குளியாவது கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை நியாயப்படுத்தலாம். இப்போது இது அவருடைய பொறுப்பு.
பாருங்கள், அவருடைய சக்தியினால் இந்த அனுபவத்தை எனக்கு கொடுத்தார்.
அதை வெளிப்படுத்துவதற்கான உத்சாகத்தையும் அவரேதான் கொடுத்தார்.
முதலில் அவர் அந்த அனுபவத்தை இந்த உடம்பிற்கு கொடுத்தார். பிறகு அதை வெளிப்படுத்துவதற்கான உற்சாகத்தை அவரே கொடுத்திருக்கிறார்.
இப்போது அதை நிரூபிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. அதே அனுபவத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதை ஆழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு கேட்டுக் கொண்டிருப்பவருக்கும் எல்லாப் பக்திமிக்க மக்களுக்கும் அதை அவர் கொடுக்க வேண்டும்.
ரமண மகரிஷி சிவனிடம் அழகாகக் கேட்கிறார். "நான், ஆனந்தமாக இருக்கிறேன்

என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதே அனுபவத்தை மற்றவருக்கு து நீ காண்பிக்கா விட்டால், இந்த உலகம் உன்னைப் பழிக்காதா, எனக்கு இனிமையான உள்ளுலக அனுபவத்தைக் கொடுக்காய் அல்லவா. அதை எல்லோருக்கும் கொடு, '' என்கிறார்.
இறுதி சக்கியம் "நீங்கள் எல்லோரும் ஒரு துளியாவது இந்த அனுபவத்தை பெறுவீர்கள், '' என்று உறுதியளிக்கிறேன்.
''அதனால்தான் நானும் கேட்கப் போகிறேன். அதே அனுபவத்தை நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தரவேண்டும்.
எனக்கு நடந்ததையெல்லாம்; இப்போது சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் ஒருதுளியாவது இவர்களுக்குக் காண்பிக்காவிட்டால், அவா்களின் பழியைச் சுமக்க மாட்டீர்களா?''என்று நானும் கேட்கிறேன்.
எனக்கும் ஈசனைக் கேட்பதற்கான உரிமை இருக்கிறது. காரணம், அவா் என்னோடு ஏற்கெனவே கலந்துள்ளதால்தான்!
எனக்கு இப்போது உள்ளார்ந்த ரகசியம் தெரியும். பரிந்துகொள்ளுங்கள்.. நான் என்ன சொல்கிறேனோ அதற்கான வாழும் அத்தாட்சி நான்தான். இமயமலையில் வாழும் ஞானிகளின் பாரம்பரியத்தில் வந்தவன்.
அதனால், அந்த உரிமையின் அடிப்படையில் சொல்கிறேன். நான் சொல்வது எல்லாம் சத்தியம். இந்த உண்மையான அனுபவம் அவர்களால் கொடுக்கப்பட்டது.
இதெல்லாம் உண்மை என்றால் இது சத்தியமென்றால்... இதை முழுமையாக நடத்துவது அவர் பொறுப்பு.
உண்மையென்றால் இருக்கமுடியாது.
அவை எல்லாமே, அந்தச் சத்தியத்தின் இருப்பு நிலையிலிருந்து வெளிப்பட்டவை.
இறுதியாய்ச் சொல்ல விரும்பும் சத்தியம், ''நீங்கள் எல்லோரும் ஒரு துளியாவது இந்த அனுபவத்தைப் பெறுவீர்கள், '' என்று உறுதியளிக்கிறேன்.
ஜீவன் முக்தியை வாழ்ந்து ஜீவன் முக்தியைப் பரப்பி, ஜீவன் முக்தர்களை உருவாக்கி நித்யமும் ஆனந்தமாய் வாழ்ந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கிறோம்.


யானந்த தியானபீடம்

