Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

201. இன்னும் பூமி கிரகத்தில் அவர் நடந்துகொண்டுதான் இருக்கிறார் !

# இன்னும் பூமி கிரகத்தில் அவர் நடந்துகொண்டுதான் இருக்கிறார் !

He is still walking on planet earth... Casually!

(TTனக்குத் தெரியும்! சாதாரண மக்களுக்கு இதை நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும் !

என்னை நீங்கள் ஏதோ சற்றுப் புரிந்து கொண்டிருப்பதால், நான் பொய் சொல்ல மாட்டேன் என்று நம்புவீர்கள்.

எனக்கு இதைச் சொல்லி விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த ஒரு காரணமும் இல்லை. சங்கர் மகராஜை பற்றிச் சொல்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை நான் விளக்கிய கோயில் நம்முடைய கோயில்கூட இல்லை.

வேறு ஏதோ ஒரு ஆசிரமத்தின் கோயில் அது.

எனக்கு சங்கா் மகராஜை பிரபலப்படுத்துவதில் எந்தத் தனிப்பட்ட லாபமும் இல்லை.

ஈசன் இன்னும் இந்தப் பூமிப் பந்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறார். ஏதோ ஒரு பக்தர் நோய்வாய்ப்பட்டால் அங்குப் போய் அவருக்கு உதவுகிறார்.

எனக்குத் உண்மை, அவ்வளவுதான்.

"யார் ஒருவர் எனக்குள்

வாழ்கிறாரோ

என்னை நினைக்கிறாரோ

என்னைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லையோ

அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நானே பொறுப்பு," என்கிறார் கிருஷ்ணர்.

இன்றும் கிருஷ்ணர் அவாளித்த சத்தியத்தை நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறார்.

இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சில நாடுகளில் பலவிதமான ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறார்கள்.

ஆனால், மூன்று வருடத்திற்குப் பிறகு புதுப்பித்துக் கொள்வார்கள். சில நாடுகளில் பத்து வருடத்திற்குப் பி றகு புதுப்பித்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த ஒப்பந்தம் எப்போதும் இருக்கிற நிலையான சத்தியம்.

சென்ற வருடம்தான் அந்தக் கோயிலைக் கண்டுபிடித்தோம்.

நித்யானந்தம் பாகம் 1 என்ற புத்தகத்தில் அந்தக் கோவிலின் படத்தைப் பார்க்கலாம்.

அதில் சங்கர் மகாராஜின் மூர்த்தியும் இருக்கும். அப்படி என்றால், ஈஸ்வரனும் இருக்கிறார்.

அதே போன்ற ஒரு விக்கிரகத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரமத்திற்காகப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம்.

பக்தா் ஒருவர் என்னிடம் கேட்டார் ''இன்னும் அந்தப் பேனா இருக்கிறதா?''என்று

"இல்லை, இப்பொழுது அந்தப் பேனா அங்கில்லை. சென்ற வருடம் சென்றபோது அந்தப் பேனா அங்கில்லை

(பொதுவாக அவர்கள்) பேனாவையும், மற்றவர்கள் படைத்த எல்லாப் பொருட்களையும், சில நாட்களுக்குப் பிறகு தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.

ஆனால், எனக்கு அதெல்லாம் மிகப் பெரிய பொக்கிஷம்.

என் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் பெரிது.

அந்த வயதான சாதுவிற்கோ, அது பெரிதில்லை. நான் அவரிடம் இந்தச் சம்பவத்தைப்பற்றி அதன்பிறகு சொல்ல வும் இல்லை. அவா் ஈஸ்வரனுக்களித்த உணவை எலிதான் சாப்பிட்டு விட்டது என்று நம்பிக் கொண்டிருந்தார்.

அவருடைய உணவைச் சாப்பிட்ட அந்த எலி நான்தான் என்று தெரிந்தால், அவர் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் அவரிடம் அப்போது அதை நான் வாய்திறந்து சொல்லவில்லை.

ஈசன் இன்னும் இந்தப் பூமிப் பந்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறார். அவர் இன்னும் சாலையில், காலணி இல்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறார்.

ஏதோ ஒரு பக்தர் நோய்வாய்ப்பட்டால் அங்குப் போய் அவருக்கு உதவுகிறார்.

அப்போதும் அவர் காலணிகூட போட்டுக் கொள்வதில்லை.

அதே பேனாவை நான் பார்த்தபோது, பெரும் அதிர்ச்சியடைந்தேன். கண்களில் தாரை தாரையாக நீர் வடிந்தது.

அவா என் முன்னே அப்படியே எளிமையாகச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ''என்னைப் புரிந்து கொண்டாயா? இப்பொழுது தெரிகிறதா?. யார் உனக்கு உணவு கொடுத்தது என்று புரிகிறதா?'' என்று கேட்பது போன்று இருந்தது!