Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

200. வந்தது கடவுளே என்பதற்கான ஆதாரங்கள்!

# வந்தது கடவுளே என்பதற்கான ஆதாரங்கள்!

I Proofs to showThat God Himself came!

நின் சொல்வதெல்லாம் உண்மை. இது சத்தியம். நான் உண்மையைத்தான் சொல்கியே றன் என்பது சத்தியம். இதுதான் நடந்தது. இவ்வளவுதான் என்னால் முடியும்.

இதற்குமேல் சொல்ல எதுவுமில்லை.

என்னுடைய வாழ்க்கையில், நான் எதையெல்லாம் மதிக்கிறேன் என்று நினைக்கிறீர்களோ, அதன் மேல் சத்தியமாகச் சொல்கிறேன். எப்படி நடந்ததோ, அதை அப்படியே விளக்குகிறேன்.

பிறகு, அந்த சாதுவின் கால்களைத் தொட்டு வணங்கி கேட்டேன். "அந்தப்பேனா எங்கிருந்து வந்தது? யார் அதைக் கொடுத்தது என்று எனக்குள் ஒரு சந்தேகம்," யாராவது இரண்டு பேனாக்களைக் கொடுத்திருப்பார்களோ, இல்லை வேறு ஒரு சாது இதே போன்ற பேனாவை வைத்துக் கொண்டிருப்பாரோ ?' என்று அவரிடமே கேட்டேன்.

அவர் சொன்னார், 'இல்லை ஏதோ ஒரு பக்தா் இதைக் கொண்டுவந்து ஈஸ்வர விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தார்.

நான்தான் அதை சிவனுடைய விக்கிரகத்தின் மேலே வைத்தேன்.

ஏனென்றால், அதை எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. அந்தப் பேனா

அழகாக இருந்ததால் அதை சங்கா மகராஜ் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்,'' என்றார்.

பாருங்கள், பொருளானாலும் ஜொலிக்கிற கெய்வக்கை அலங்கரிக்கவே உபயோகிப்பார்கள்.

ஒரு வாரம் எனக்காக அவர் உணவில்லாமல் கஷ்டப்பட்டிருப்பார் என்று நன்றியுடன் நினைத்துப்பார்த்தேன்.

நான் அவரிடம் கேட்டேன், ''சிவனின் மேல் ஏன் பேனாவை வைத்தீர்கள் ?''

''அந்தக் வைரக்கல் ஜொலித்துக் கொண்டிருந்ததால், அந்தப் பேனா நன்றாக இருப்பதால், அதை சிவன் மேல் வைக்கேன்,'' என்றார்.

நான் அவரிடம்'யாராவது இரண்டு பேனாக்களைக் கொண்டுவந்தார்களா?' என்று கேட்டேன்.

இப்போது அவர் மிகவும் எரிச்சலடைந்து, ''இனிமேல் என்னைத் தொந்தரவு செய்யாதே. எனக்கு அதெல்லாம் தெரியாகு. உனக்கு எது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு போ. இங்கு உட்கார்ந்துகொண்டு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டார்.

அப்போதும் விடாமல், ''இதுபோல் இன்னொரு தட்டு உள்ளதா?' என்று கேட்டேன்.

''இல்லை, இது ஒரு சிறிய ஆசிரமம். ஒரு பெரிய ஆசிரமத்தின் பாகம் இது. அவர்கள் எங்களுக்கு ஒரே ஒரு தட்டைத்தான் கொடுத்து இருந்தார்கள். இந்த சின்ன ஆஸ்ரமத்திற்குப் பி ன் எவ்வளவு கொடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறாய் ?'' என்று கேட்டார்.

நீங்களே நம்பமாட்டீர்கள். எனக்கு உணவளிக்க பட்ட தட்டு ஒரு பழைய தட்டு. அந்தத் தட்டு நசுங்கிப் போய் இருந்தது. அந்த ஒடுங்கலும் கூட அப்படியே அந்தத் தட்டில் இருந்தது. அதே நசுங்கிய தட்டுதான்.

இதைக் கண்டுபிடித்தது ஆச்சரியத்தில் பிரமித்துப் போனேன். பிரமிப்போடு அவரிடம் கேட்டேன். ''யாராவது இங்கிருந்து இந்தத் தட்டை எடுத்தார்களா?' என்று நான் அவரிடம் கேட்டேன்.

உடனே அவர், ''நல்லா கேட்டபா. நான் விடுவேனா?! இந்தக் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு, இங்கு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன் இல்லையென்றால் இங்கேயே பாதுகாப்பிற்காகத் தூங்கிவிடுவேன், '' என்றார்.

பிறகு நான் அவரிடம் "உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? வேறு யாரும் இந்தத் தட்டையும் டம்ளரையும் எடுக்கவில்லையே ?'' என்றேன்.

"சங்கா் மகராஜைத் தவிர, வேறு யாரும் இந்தத் தட்டை தொடமாட்டார்கள். இது அவருக்கு மட்டும்தான்.

தினமும் காலையிலும், மாலையிலும் அவருக்கு தட்டில்தான் உணவு அளிப்போம். உணவை வைத்துவிட்டுக் கதவை சாத்திக்கொண்டு வந்துவிடுவோம்,'' என்றார்.

''இதைத்தான் நான் உறுதிப்படுத்த நினைக்கிறேன். நன்றி!'' என்று சொன்னேன்.

பிறகு மெதுவாக அவரிடம் கேட்டேன், ''இப்போதும் நீங்கள் உணவை அளித்தபின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்று விடுகிறீர்களா ?''

அவர், ''இல்லை, இந்த ஒரு வாரமாக எலிகள் வந்து உணவைச் சாப்பிட்டுவிட்டு போய்விடுகிறது. உணவு மாயமாக மமறைந்து விடுகிறது. அதனால்தான், இப்போதெல்லாம் கதவை அடைத்துவிட்டுப் போவதை நிறுத்திவிட்டேன். ரைவேக்யம் முடியும்வரை நான் இங்கேயே உட்கார்ந்து பிரார்க்கனை செய்வேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து, நைவேத்யம் முடிந்த பிறகு தட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன், '' என்றார் அவர்.

எனக்குத் தெரிந்துவிட்டது.

எந்த எலி வந்து

உணவை சாப்பிட்டது என்று !

அது அந்த வயதான சாதுக்கான உணவு.

பொதுவாக நைவேத்யம் செய்த பிறகு, பூஜாரியாய் இருப்பதால் அவர் அந்த உணவை சாப்பிடுவார்.

ஆனால், அந்த ஒரு வாரம் மட்டும் எனக்காக அவர் உணவில்லாமல் கஷ்டப்பட்டிருப்பார். எனக்கு உணவு கிடைத்தது இந்த பூஜாரியுடைய உணவா என்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கேன்.

அவர், ''வரவர இந்த எலிகளின் தொல்லை அதிகமாகிவிட்டது. எப்படி அந்த எலி வந்து இதைச் சாப்பிட்டது என்பதே எனக்குப் புரியவில்லை, '' என்றார்.

யார் ஒருவர் எனக்குள் வாழ்கிறாரோ அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நானே பொறுப்பு.

எந்த எலிக்கு இந்த உணவை எடுத்து வந்து தரப்பட்டது என்று எனக்கு புரிந்ததும் வயதான சந்நியாஸியைப் பார்த்துச் சிரிப்பும், சங்கா் மகராஜைப் பார்த்து அளவில்லா ஆனந்த கண்ணீரும் பெருக்கெடுத்தது.

வந்தது கடவுளே என்பதற்கான ஆதாரங்கள் என்னைக் கரைத்து நன்றியில் உருக வைத்தது.