199. எனக்குக் கிடைத்தால் ... உங்களுக்கும் கிடைக்கும்
# எனக்குக் கிடைத்தால் ... உங்களுக்கும் கிடைக்கும்
இமாலய பாதயாத்திரையில் கலந்துகொண்டு ஆன்மீக சாதகர்களுக்குப் பரமஹம்ஸர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நம்பிக்கையூட்டும் வரலாற்றுப்பகுதியை இங்குப் பிரசு ரம் செய்வதில் மிகுந்த ஆனந்தமடைகிறோம்.
-நித்யானந்த தியானபீடம்
உடலே வீழ்ந்தாலும் வீழாத மனம்
The mind will not fall even if The body falls
இமயமலையில் நடந்த ஒரு இனிமையான சம்பவம் இது! என்னுடைய பரிவிராஜக நாட்களில் நடந்த மிக அருமையான சம்பவம்.
ஒருமுறை உடல்நலம் சிியில்லாமல், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன்.

சாதாரண காய்ச்சலோ, இருமலோ இல்லை, ரத்த சீத பேதி, வாந்தி, ஜீரம் என்று ஒரே சமயத்தில் எல்லாமே என் உடலில் ஆட்கொண்டு அது மிகவும் கடுமையானதாக இருந்தது.
ஒரே சமயத்தில் உடலில் எல்லாக் கதவுகளும் திறந்து கொண்டது.
தனியாளாய் இருந்தேன்.
ஆனால், என் உடலில் நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நான் தெளிவாக முடிவு செய்திருந்தேன் நான் இறந்துவிடப் போகி றன் என்று. ஆனால் எனக்கு எந்த விதமான பயமோ, அல்லது நான் செத்துவிடுவேன் என்ற பீதியோ இல்லை, எந்த எண்ணமும், எந்த உணர்வும்கூட அப்போது பெரிதாக என்னிடம் இல்லை. அந்த நேரத்தில்கூட நான் இறந்து

போகப் போவதைப் பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை.
வாம் வேண்டும் என்ற ஆசையே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். வாழவேண்டும் என்ற ஆசை போய் விட்டது என்றால் அது, வாழ்க்கையின் மீதான வெறுப்பினாலோ பயக்கினாலோ அல்ல. காரணம் உடல் அந்த உடலை அசைக்கக்கூட முடியாத அளவிற்கு முற்றிலுமாக வலுவிழர்து போய்விட்டது.
அளவிற்கு, அப்போது தன் சக்தியை இழந்துவிட்டு இருந்தது. ஒரே நேரத்தில் வாந்தி, சீத பேதி என்று எல்லாமே நிற்காமல் நடந்தால் உடல் என்னதான் ஆகும்.
உடலை அசைக்கக்கூட முடியாத அளவிற்கு முற்றிலுமாக வலுவிழந்து போய் விட்டது.
நான் சாகத்தான் போகிறேன் என்று முடிவே செய்து விட்டேன்.
என்னைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது வாழ வேண்டும் என் றா எனக்கிருந்த எண்ணம் உட்பட எல்லாவிதமான ஆசைகளையும் இழந்து விட்டேன்.
அப்போது, கிருஷ்ணர் 'கீதையில்' சொன்னது நினைவுக்கு வந்தது.
அனன்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பா்யுபாஸ்தே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக கூஷமம் வஹாம்யஹம்
'யாரெல்லாம் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, யாரெல்லாம் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, உங்களின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பேற்பேன்.
கிருஷ்ணர் கீதையில் இவ்வாறு உறுதியளிக்கிறார்.
அதன்பிறகு நான் நினைத்துக் கொண்டேன், கிருஷ்ணரின் உறகிமொழியைச் சரிபார்த்துக் கொள்ள, இது தருணமில்லை. ஆனால், நான் உண்மையில் அவருள்தான் வாழ்கிறேனா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
பாருங்கள், அப்போதுகூட அந்த இக்கட்டான சமயத்தில்கூட, நான் கிருஷ்ணர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க நினைக்கவில்லை. அவர் என்னைத் தேடி வந்து என்னைப் பாதுகாத்து உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றுவாரா என்று நினைக்கவில்லை.
அகற்குப் பதிலாக, அவர் கீதையில் சொன்னதைப் போல் உண்மையில் நான் அவருள் வாழ்ந்தால், நான் அவரோடு ஒன்றாக இணைந்து இருந்து, அவரையே நினைத்துக் கொண்டிருந்தால், அவரைத் தவிர எனக்குள் வேறு எந்த நினைவும் எனக்குள் இல்லாமல் இருந்திருந்ததால், அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே எல்லாம் நடக்கட்டும். அவர் அதை நிச்சயமாகச் செய்வார் என்ற ஆத்மார்த்தமான உணர்வு (feeling connectedness) எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
''ஒரு வேளை இந்த உணர்வு என்னிடம் ஆழமாக இல்லையென்றால், எனக்குள்தான், ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
எதற்காக இந்த உடலைப் பேணிக்காக்கவேண்டும் ? அப்படி இறந்தால் பிறகு இறந்துபோகட்டுமே ?
இறந்தால் இன்னொரு உடலையும் மனத்தையும் எடுக்கலாம், குறைந்தபட்சம் அடுத்த பிறவியிலாவது கிருஷ்ணர் சொன்னதை நான் செய்ய முயற்சிக்கலாம் அல்லவா?
அதனால், என்னுடைய உடலை அசைக்கக்கூட போவதில்லை அது மட்டும் அல்லாமல், யாரிடமும் எந்தவித உதவியையும் கேட்கப் போவதில்லை என்ற உறுதியாக முடிவு எடுக்கேன்.
கங்கை நதிக்கரையின் பாலத்தின் அடியில், ஒரு பக்கத்தில் தன்னந்தனியாகப் படுத்து இருந்தேன். நான் அங்குப் படுத்திருப்பது யாருக்குமே தெரியாது .
உடலே வீழ்ந்தாலும், வீழாத மனம் அப்போது என்வசம் இல்லை.
உடலே வீழ்ந்த பிறகுகூட, வீழாமல் இயங்கும் மனித மனம் அப்போது என்னுள் ஆதிக்கம் செலுத்தாமல் ஓய்வாக இருந்தது. கிருஷ்ணரின் மீது பொங்கி வழிந்த ஆத்மார்த்தமான பக்தி உணர்வால், மனம் இருக்கும் இடம் தெரியாமல் ஓய்ந்திருந்தது. ''அவர் எப்படி நினைக்கிறாரோ அப்படியே நடக்கட்டும்,' என்ற ஆத்மார்த்தமான உணர்வில் எல்லாம் கரைந்தது.

பொது மக்களுக்காகப் பரமஹம்சரே நேரடியாக உலகம் முழுவதும் நடத்தும் தியான சத்சங்களின் ஒரு பகுதி ...

உடலே வீழ்ந்த பிறகுகூட வீழாமல் இயங்கும் அகங்காரம் இல்லாததால் அப்படியே கங்கை கரையிலேயே அவரின் அவரின் வியே நிம்மதியாய் ஆனந்தமயமாய் படுத்துவிட்டேன்.
நீங்கள் கேட்கலாம், 'இந்த நிலையில்கூட ஒருவரால் ஆனந்தமாய் இருக்க முடியுமா." பதில், "ஆம்,".முடியும் என்பதே!
என் பக்தி, என்னுள் பொங்கி என் உணர்வை நனைக்குக் கொண்டிருந்த
அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே எல்லாம் நடக்கும் அவர் அதை நிச்சயமாகச் செய்வார் என்று ஆத்மார்த்தமான உணர்வு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
தாண்டிய ரசம் என்னை அந்த நிமிடத்திலும் ஆனந்தத்திலேயே இருக்க வைத்தது.
என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன், என்னைக் கவனிக்க கடவுளே வந்தார்.
I stopped taking care of myself. God himself came to take care of me.
இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தன.
இரண்டாவது நாள் மதியம், திடீரென்று ஒரு இளம் சாது என்னைத் தேடி வந்தார். அது அமைதியான, ஒதுக்குப்புறமான இடம்.
ஆனால் இப்போதுதான் அது நகரத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது.
அக்காலத்தில், அதாவது பத்து வருடத்திற்கு முன்னால் மக்கள் வாழும் இடத்திலிருந்து வெகு தொலைவில் அது இருந்தது.
அந்த இடத்திற்கு தவறிப்போய்க்கூட யாரும் வருவதற்கான வாய்ப்பேயில்லை.
ஆனால் அப்படி ஒரு அமைதியான, ஆள் ஆரவாரமே இல்லாத இடத்தில் அந்த இளம் துறவி திடீரென்று தோன்றினார்,
ஒவ்வொரு நாளும் இரண்டு வேளையும் உணவும் மருந்து மாத்திரைகளும் கொண்டு வந்தார்.
நித்யானந்தம்
அவர் ஒரு தட்டில் கொஞ்சம் உணவும், டம்ளரில் தண்ணீரும் எடுத்து வந்திருந்தார்.
மருந்துகளும்கூட அவர் சில எடுத்து வந்திருந்தார்.
எனக்கு அதையெல்லாவற்றையும் தந்தார். நான் அதைச் சாப்பிட்டேன். என்னை மிகுந்த கரிசனக்கோடும் கவனித்துக் அன்போடும், கொண்டார்.
ஒவ்வொரு நாளும் உடல் குணமடையும் வரையில் தவறாமல் தினமும் காலையிலலும் மாலையிலும் மருந்தையும் உணவையும் கொண்டு வந்தார்.
மீண்டும் அன்று மாலையும் வந்தார்.
அதன் பிறகு சில நாட்கள், அவர் ஒவ்வொரு நாளும், இரண்டு வேளையும், மருந்து மாத்திரைகளையும் எனக்காகக் கொண்டு வந்தார்.
எனக்கு அந்த மருந்தின் பெயர்கூட இப்போது நினைவில் இல்லை.
அவர் என்னிடம், "ஏய்! இந்த உணவைச் சாப்பிடு, மருந்தை எடுத்துக் கொள்," என்பார்.
நானும் அவா் என்னென்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்தேன். அவ்வளவுதான்.
அந்த மருந்து, ஒரு மாத்திரை போன்றுதான் இருந்தது, அது அலோபதியா ஆயுர்வேதமா என்றுகூடத் தெரியவில்லை.
எப்படியோ, அவர் உணவையும் மருந்தையும்கொண்டு வந்தார்.
இரண்டாவது நாளே எனக்குக் கொஞ்சம் ஆவலாக இருந்தது, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று.
ஆனால் எனக்கோ அவ்வளவாக விந்தி தெரியாகு.
அவர் ஆங்கிலத்தில் பேசினார்.
எந்தக் காரணமும் இல்லாமல் என்மேல் அன்போடும், கருணையோடும் என்னைக் கவனித்துக்கொண்டார். உணவையும், மாமருந்தையும் தவறாமல்கொண்டு வர்து கொடுத்தார்.
ஆனால் அவரைப்பற்றிய ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது .
அவரிடம் ஒரு பேனா இருந்தது. அதில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பதிந்திருந்தன.
பளிச்சென்று தெரியுமாறு அந்தப் பேனா அவருடைய சட்டைப் பையில் இருந்தது.
எனக்கோ மிகவும் சந்தேகமாகவே இருந்தது. சாதாரணமாக சாதுக்கள் பேனா வைத்துக் கொள்வதில்லை.
காரணம், அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

அப்படியே அவர்கள் வைத்திருந்தாலும் அவ்வளவு விலை உயர்ந்த பேனா வைத்திருக்க மாட்டார்கள். சாதாரண ஒரு பேனாவிற்காக அவ்வளவு பணத்தை செலவழிக்க மாட்டார்கள், சந்நியாசிகள்.
என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன்.
நான் அந்தப் பேனாவைப் பார்த்து சற்று ஆச்சரியமடைந்தாலும், பேனாவைப் பற்றி அவரிடம் எதையுமே கேட்கவில்லை.
ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் உடல் குணமடையும் வரையிலும், தவறாமல், தினமும் காலையிலும், மாலையிலும் மருந்தையும், உணவையும் அவர்கொண்டு வந்தார்.
அவர் சில மணிநோம் என்னோடு செலவிடுவார். கைரியுமாக எப்போதும் வாமவேண்டும் என்றும், வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எப்போதும் எதிர் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்.
எப்படி, (உங்களுக்குப் பிடித்த) ஒரு உறவினர் உங்களோடு பேசுவாரோ, அது போலவே அவ்வளவு இனிமையாக என்னோடுப் பேசிக்கொண்டிருப்பார். அது ஒரு மிக இனிமையான உறவு முறையாக, ஒரு நல்ல உணர்வாக இருந்தது.
'உண்மையிலுமே வாழ்கிறேனோ!' கவனிக்கப்படுகிறேனா ?
திடீரென எங்கிருந்தோ, உணவும் மருந்து மாத்திரைகளும் வருகிறது என்றால் ... நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன் என்றால்... என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்!
Section 2
அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது (திடீரென்று ஒரு தெளிவு பிறந்தது) ''என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன். கவனிக்க கவனிக்க க கடவுளே அனுப்பிவைத்த சாதுதான் இவரோ,' என்று! ஆனால், சில சில நாட்களிலேயே நடந்தது அதுவல்ல. வந்தது ஒரு சாதாரண சாதுவல்ல... என்று புரிந்துகொண்டபோது பிரம்மித்துப் போனேன்.
சாதுவைப் பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ, அது அப்படியே முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.
மனிதனைத் தேழனேன்! கடவுளைக் கண்டேன்!
I searched for man. I found God!
ஒழிரு சில நாட்களுக்குப் பிறகு நான் குணமடைந்து விட்டேன். அதன்பிறகு சாதுவும் வருவதை நிறுத்திக் கொண்டார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கம் போல் நடப்பதற்குக் கொஞ்சம் சக்தி வந்தது. பொதுவாக நான் ஒரே இடத்தில் உட்காரும் சுபாவம் கொண்டவன் அல்ல.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல்' என்று.
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டால் ஒரே இடத்தில் காலை வைத்துக்கொண்டு உட்கார முடியாது. அது போல நான் எப்போதும் சதா ஒடிக்கொண்டே இருக்கும் ரகம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நான் பரபரப்பாகிவிட்டேன்.
பிறகு மெது மெதுவாக நடக்கவும் துவங்கிவிட்டேன்.
எனக்கு உடல் முடியாதபோது ஒவ்வொரு நாளும் உணவை அளித்த, அந்த இளம் சாதுவைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.
அவர் உணவுகொண்டு வந்தபொழுது, அவர் எங்கிருந்து வருகிறார், அவர் யார், பெயர் என்ன, விலாசம் என்ன என்று எல்லா விவரத்தையும் கேட்டு வைக் திருந்தேன்.
அவர் அருகிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி அங்கு வாழ்வதாகச் சொன்னார்.
அவரின் பெயரை பொறுத்தவரை, அவரை எல்லோரும் 'சங்கா் மகராஜ்' என்று அமைப்பதாகச் சொன்னார்.
அவர் எனக்கு எந்தத் தட்டில் உணவைக்கொண்டு வந்தாரோ, அதில் அவருடைய ஆசி ரமத்தின் பெயரும் பதிந்திருந்தது.
இந்தியாவில் இது ஒரு பழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லா ஆசிரமங்களிலும் அங்கு இருக்கும் தட்டிலும் டம்ளரிலும், அந்தந்த ஆசிரமத்தின் பெயரைப் பதித்து விடுவார்கள்.
நம் பிடதி ஆசிரமத்தில்கூட பார்த்தீர்களானால், எல்லாப் பாத்திரங்களிலும் தியான பீடத்தின் பெயர் பதிக்கப்பட்டிருக்கும்.
காரணம், ஒன்றும் அல்ல. மக்கள் அதைக் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒரு பாதுகாப்பிற்காகத்தான் பதிக்கப்பட்டிருக்கிறது.
குணமடைந்த பிறகு ''சரி அவரைப்பார்த்து நன்றி சொல்லலாம், '' என்று நிணைத்தேன் அதனால் மெதுவாக அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.

அதனால், அந்தத் தட்டிலும் பெயர் பதித்திருந்திருந்தார்கள்.
குணமடைந்த பிறகு, 'சரி, அவரைப் பார்த்து நன்றி சொல்லலாம்' என்று நினைத்தேன். அதனால் மெதுவாக, அவரைத் தேடி அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சென்ற பொழுது அங்கு ஒரு வயதான சாது மட்டுமே உட்கார்ந்திருந்தார். அங்கு அந்த முதியவர் ருத்ராட்சத்தை உருட்டியபடியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
அது கங்கைக் கரையில் உள்ள ஒரு சிறுகோயில். அங்கே, இந்த வயதான சாதுமட்டுமே இருந்தார். நான் அவரிடம் சென்று, ''சங்கா மகராஜைப் பார்க்க முடியுமா?''என்று கேட்டேன்.
அவர் என்னைப் பார்த்து, 'சங்கா் மகராஜ் என்ற பெயரில் இங்கு யாரும் இல்லையே,'' என்றார்.
நான் சொன்னேன், ''இல்லை, இல்லை. சில நாட்களுக்கு முன், ஒரு இளம் சாது இந்த ஆசிரமத்திலிருந்துான் வந்திருந்தார். அவர் எனக்கு உணவளித்தார். அந்தச் சாமியை நான் இப்பொழுது பார்க்க வேண்டும் என்றேன். ''
என்னுடைய வாழ்க்கையில் நான் எதையெல்லாம் மதிக்கிரேன் என்று நினைக்கிறீர்களோ அதன்மேல் சத்தியமாகச் சொல்லுகிறேன்.
''இல்லை இங்கு அதுபோல் யாரும் இல்லை. வேறு ஏதாவது ஆசிரமமாக இருக்கும், சென்று பாருங்கள், ' என்றார்.
நான் அவரை வற்புறுத்தினேன். ''இல்லை, இல்லை. அவா இந்த ஆசிரமத்தின் விலாச த்தைதான் எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு உணவுகூட அளித்தார். அந்தத் தட்டிலும் இந்த ஆசிரமத்தின் பெயர்தான் பதிந்திருந்தது, ''என்றேன்.
பிறகு அந்த வயதான சாது, மெதுவாகத் தலையை உயா்த்தி, "உங்களைப் பார்க்க வந்தவருக்கு என்ன வயதிருக்கும்?'' என்று கேட்டார். அவருடைய பிரார்த் தனையைக் கலைத்ததன் காரணத்தால் மிகவும் எரிச்சலோடு வேறு இருந்தார்.
அவர் தன் பிரார்த்தனையைக் கண்களை மூடிக்கூட செய்யவில்லை.
அவர் அப்படியே இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் அவருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. இது இன்னொரு பிரச்சினை.
நான் அவரிடம், ஒரு முப்பது அல்லது முப்பத்து ஐந்து வயதுடையவராக இருக்கலாம் என்றேன்.
அவர் இதைக் கேட்டதும், மேலும் எரிச்சலடைந்தார். ''இந்த மொத்த ஆசிரமத்தில் நான்தான் ஒரே சாது, என் வயதைப் பார்த்தால் தெரியவில்லையா,'' என்று சப்தமிட்டார்.
இருந்தாலும் நான் விடவில்லை, ''இல்லை, அவா் தன் பெயரை சங்கா மகராஜ் என்று சொன்னார். அவர் இங்கிருந்துதான் வந்தாா,'' என்றேன்.
"எங்களிடம் ஒரே ஒரு ஒரு சங்கர் மகராஜ்தான் இருக்கிறார். அவர் இங்குதான் உள்ளார்.
அங்கு இருப்பவர்தான் அவர்,'' என்று கையை நீட்டி ஆட்டிக் காண்பித்து கோபத்தில் ச த்தமிட்டார்.
''நீ அவரைப் பார்க்க வேண்டுமென்றால் பார்த்துவிட்டுப் போ! என்னை விட்டுவிடு!'' என்றார்.
அவர் எதைக் குறிப்பிட்டுக் காண்பித்தாரோ, அதை நோக்கி திரும்பிப் பார்த்தேன். அது ஒரு சிறிய கோவிலாக இருந்தது. உள்ளே ஒரு வெள்ளைப் பளிங்குக் கல்லிலான ஈஸ்வரனுடைய மூர்த்தி இருந்தது. அந்த மூர்த்திக்குப் பக்கத்தில் சென்றேன்.
அந்த விக்கிரகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்தில், சங்கர் மஹராஜ் அணிந்திருந்த அதே பேனாவைப் பார்த்தேன்!
அந்த விக்கிரகத்தைச் சுற்றி ஒரு சால்வை இருந்தது. அதில் அந்த வைரப் பேனா சொருகப்பட்டிருந்தது.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது !.
மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்திலும் அதே பேனா இருக்கிறது, அதுவும் வைரப்பேனா! நான் பார்த்த அதே பேனா, அதிர்ச்சியாகவும்,

தனிமனித அமைதி மூலமாக உலக அமைதி படைப்போம் என்று சொல்வதோடு நில்லாமல் உலகம் முழுவதும் 12 லட்சம் போ் நித்ய தியானத்தை தீகைஷ்யாகப் பெற்று உலக அமைதிக்காகத் தினந்தோறும் தியானம் செய்துவருகிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் நாம் வாழுமிடத்தை சக்தியூட்டக்கூடிய கூட்டுத் தியானத்தை தியானபீட பக்தர்கள் உலக நன்மைக்காக உலக அமைதிக்காகச் சேவையாகச் செய்து வருகிறார்கள.

ஆச்சரியமாகவும் இருந்தது.
ஆச்சாயம் மீளாமல் விக்கிரகத்தின் பக்கத்திலே சென்றேன். எந்தத் தட்டில் எனக்கு அவர் உணவு கொடுத்தாரோ அதே தட்டும் அங்கே இருப்பதைப் பார்த்தேன். இன்னும் ஆச்சரியமடைந்தேன்.
அந்தத் தட்டுதான் என்று நான் சரியாகப் பாார்த்து ஊர்ஜிதபடுத்திக் கொண்டேன். நிச்சயம் அதே பேனாதான். அதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
சங்கா மகாராஜ் வைத்துக் கொண்டிருந்த அதே தட்டு, அதே பேனாதான் அது.
அவர் எனக்காக எடுத்துக்கொண்டு வந்த அதே உணவு, அதே பிரசாதம், அதே நைவேத்தியம் அந்தத் தட்டிலிருந்தது. அந்த ஆஸ்ரமத்தின் பெயரும் அதிலிருந்தது.
நீங்கள் இதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ! அது பற்றி எனக்குத் தெரியாது. அது உங்களைப் பொறுத்தது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அது அதே தட்டுதான்! அதே பாத்திரங்கள்தான்! அதே பேனாதான்!