198. ஜீவன் முக்தர்
# ஜீவன் முக்தர்
இதைத் தைரியமாய்ச் சொல்லுங்கள், வாழுங்கள்
போனதால், சிங்கக்குட்டி கிரணாமல் ஆட்டுக்குட்டியாகிவிடுமா?! அது அப்படி நம்பினால்தான்... அது தகுமா?
தான் ஒரு ஆட்டுக்குட்டிதான் என நம்பிக்கொண்டு இருக்கும் சிங்கக்குட்டி என்றாவது ஒரு நாள் நிச்சயம் நீர் நிலையை நெருங்க நேரிடும்.
நீர் நிலையில் தன் முகத்தைப் பார்க்கும்போது, அந்த நன்னாளில் அது, தான் சிங்கம் என உணர்ந்து கொள்ளும் நாளும் வரும். பின் அது சிங்கமாகவே வாழத் துவங்கிவிடும்.
நங்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே, உங்களின் சுபாவத்தினாலேயே ஜீவன் முக்கர்கான் !
நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது சத்தியமே.
உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள், நான் சராசரி மனிதன் என நம்பினால் அது நிஜமாகி விடுமா ? ...
தியானத்தில் என்றாவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை பிரதிப்பலிக்கப் படும். நங்கள் ஒரு ஜீவன் முக்கர் என்று நன்றாக உணர்ந்து கொள்வீர்கள் . இது நீண்டகாலம் எடுத்துக் கொள்ளும்.
உடனடியாய் உண்மையை உணர்ந்திட உடனடியாக ஜீவன் முக்தி அனுபவமாகிட எளிய வழி .... ஜீவன் முக்தி என்ற நிலையை அடையும்வரை காத்திருக்காதீர்கள். எப்போதோ அடைவோம் என்று சொல்லிக் காத்திருக்காதீர்கள்.
இன்றே குரனத்தையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து, ஜீவன் முக்தா்களாக வாழ ஆரம்பியுங்கள். அப்போது இதுவரை கேட்டதெல்லாம் உண்மையே என்பது புரிய வரும். இது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல.
சும்மா
கன்னத்தில் தட்டிச்
சொல்லுங்கள் ...
''இன்றிலிருந்து நான் ஜீவன் முக்தர்,''
இன்றே ஞானத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து ஜீவன் முக்தர்களாக வாழ ஆரம்பியுங்கள்.
''இதை நான் கொண்டாடப் போகிறேன்.' இதை மட்டும் செய்யுங்கள். ஜீவன் முக்தர்களாய் வாழ்வீர்கள்
இதுவரை படித்தது புதிராய்த் தெரிந்தால், இன்னும் நீங்கள் ஆட்டுக்குட்டியாகவே நீ ங்கள் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளுள்கள்.
இருந்தாலும், நீங்கள் சிங்கக் குட்டிதான் என்பது மாற்ற முடியாத உண்மையே. இந்தப் புரட்சிக் கருத்துகள் உங்களையே புரட்டிப் போடும் அளவிற்கு உள்வாங்குங்கள். வாழுங்கள். நீங்கள் ஜீவன் முக்தர்தான்.
கடவுளோர் பேசலாம்
You can talk to God
ன ன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு இனிமையான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை ஆழமாய்த் தொட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று.
தமிழ்நாட்டிலுள்ள அச்சரப்பாக்கம் காட்டுப் பகுதியில் பூத்துக்குலுங்கும் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, அந்த ரம்யமான சூழலில் எனக்குள் ஒரு சிந்தனை உதித்தது.
அது மகா ஞானி புத்தரைப் பற்றியது ....
இதே போன்று பூத்துக்குலுங்கிய ஒரு மரத்தடியில் புத்தா் அமாந்திருந்தபோது, அவரின் ஞான சக்தியின் சாந்நித்யத்தால் அங்கிருந்த மரம்கூட நெகிழ்ந்தது.
மகிழ்ந்த மரம் குலுங்கியது. மரத்திலிருந்த பூக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில், மரத்திலிருந்து உதிர்ந்து, புத்தரின் மேல் பூச்சொரிந்தன!
புத்தரின் ஞானத்தை ஜீவன் முக்தியை அந்த மரம்கூட கொண்டாடியது.
இது புக்கரின் வரலாற்றில் அவரின் ஞான சக்தியை வெளிப்படையாகப் பரியவைக்கச் சொல்லப்பட்ட அருமையான சம்பவம் என்று சொல்வார்கள்.
உங்களுக்கு இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்குமோ என்றுகூட யோசி க்கத் தோன்றும்.
நான் அப்போதுகூட ஒருமுறை உங்களைப் போலவே யோசித்துப்பார்த்தேன்.
பிறகு மிகத் தெளிவாய் இப்படி உணர்ந்தேன்... ''எது எப்படியோ! என்னுள் இருந்த ஜீவன் பூத்து, என் ஜீவன் முக்தியை, இப்போது, இந்த வினாடி நான் கொண்டாடிக் கொண்டிருப்பது உண்மை !
இந்த மரம் பூவைக் கொட்டினாலும், கொட்டாவிட்டாலும் அதைப்பற்றி மேற்கொண்டு யோசிப்பதற்கு எதுவுமில்லை. நான் ஜீவன் முக்தன்,'' என்று உணர்ந்தேன்…


அந்த வினாடியில்
திடீரென்று எனக்கு அருந்த அந்த மரம் வித்தியாசமாகக் குலுங்கியது. மரத்திலிருந்த அத்தனைப் பூக்களும் என் மேல் உதிர்ந்து விழுந்தன.
இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள், ஒரு மரம்கூட கொண்டாடும்,உணரும் என்பது மிகைப்படுத்தப்பட்டது அல்ல.
இது சத்தியம் என்பதை இந்த இனிமையான அனுபவம் எனக்கு உணர்த்தியது.
இச்சம்பவத்தைப்பற்றிச் சொல்லும்போது ஒன்றை இங்கு ஆழமாக வலியுறுத்த விரும்புகிறேன்.
பிரபஞ்சமானது விழிப்புணர்வு எனும் வலையால் பின்னப்பட்டிருக்கும் மாபெரும் ஞானத்தொடர்பு இயக்கம்.
Existence is an intelligent energy network.
அது உங்களின் உணர்வுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறது. உங்களின் உணர்வு மொழி மூலமாகப் பிரபஞ்சத்தோடு நேரடியாக நீங்கள் பேசலாம்.
பிரபஞ்ச சக்தியோடு, கடவுள் சக்தியோடு நீங்கள் பேசலாம்.
கடவுளோடு பேசுவதென்பது ஏதோ மாயாஜால மூளையால்தான் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று என்று எண்ணி விட்டுவிட வேண்டாம்.

உங்களின் நெருங்கிய உறவோடு பேசுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபம் கடவுளோடு பேசுவது, கடவுளோடு வாழ்வது.
நீங்கள் யாரென்று உங்களை நம்புகிறீர்களோ, அதுவாகவே இருக்கும்படி உங்களை அந்தக் கடவுள் சக்தி ஆசீர்வதிக்கிறது.
நீங்கள் உங்களை வெறும் மனிதனாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருந்தால், பிரபஞ்சமும் உங்களை மனிதனாகவே இருக்கும்படி ஆசீர்வதிக்கும்.
நங்கள் உங்களை ஜீவன் முக்தர்களாக உணர்ந்து வாழ ஆரம்பித்து விட்டீர்கள் என்றால், பிரபஞ்சமும் உங்களை ஜீவன் முக்தர்களாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும்!
''நான் ஒரு ஜீவன் முக்தர்,'' என்று ஆழமாய் உணருங்கள். வெளிப்படுத்துங்கள். ஜீவன் முக்தர்களாகவே வாழ்வீர்கள்.
கடைசியாய் ஒரு வார்த்தை ...
அடுத்த ஒரு வருடத்தை முழு மூச்சோடு ஜீவன் முக்தியை வாழ்வது என்ற ஒரே ஒரு குறிக்கோளை வைத்துச் செயல்படுங்கள்.
பிரபஞ்சமே உங்களைக் கொண்டாடும்.
நீங்கள் கால் வைப்பதனாலேயே பூமித் தாய் குளிர்ச்சியடைவாள்.
ஒரு ஜீவன் முக்தரின் பாதம், பூமியைத் தொடும் ஒவ்வொரு நிமிடமும் பூமி ஆனந்தப்படுகிறது.

ஜீவன் முக்தர்களாய் வாழ்வது என்ற ஒரு இலட்சியத்தைச் சுற்றி உங்களின் மொத்த வாழ்க்கையையும் திருத்தி அமையுங்கள். அதைச் செயல்படுத்துங்கள்
இந்த ஒரு இலட்சியம், இலட்சங்கள், கோட்டினாலும் கிட்டாத, எட்டாத உன்னத நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
பிரபஞ்சம் உங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
ஜீவன் முக்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருங்கள். ஜீவன் முக்தர்களாகவே வாழ்ந்து கொண்டேயேயிருப்பீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும்
ஜீவன் முக்த அனுபவத்தைப் பரவச் செய்து,
சக்ய யுகம் இங்கேயே, இப்பொழுதே
உங்களைச் சுற்றி
நிகழ, ஆரம்பிக்க
ஆசீர்வதிக்கிறோம்.
ஆனந்தமாக இருங்கள்.
ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்.