Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

196. உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி

# உங்களைப் பிரபஞ்சத்தின் பாகமாக்கும் யுக்தி

(சேவை)

ஒரு ரகசியம்...

நீங்கள் எதை மீண்டும் மீண்டும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறீர்களோ அது மீண்டும், மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

நங்களும் அதை நோக்கியேதான் ஈர்க்கப்படுவீா்கள். என்னிடம் பேச ஆரம்பிப்பவர்களில் பலர், ''என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களே இருக்க முடியாது.'' என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் சிலர், ''எனக்கு நடந்த கொடுமை என் எதிரிக்குக்கூட நிகழக்கூடாது, '' என்று சொல்வார்கள்.

இன்னும் சிலா் அவா்களோடு எத்தனை மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தாலும், தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த எதாவது ஒரு துக்ககரமான விஷயத்தையே பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட அன்பர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் ஒரு சின்ன கதை ...

போரசிரியர் ஒருவர், ஜென் ஞானி ஒருவரிடம் இப்படிக் கேட்டாராம், ''பல மணி நேரங்கள் உங்களிடம் பேசிவிட்டுச் சென்றாலும், சில நிமிடங்களே உங்களோடு பேசி விட்டுச் சென்றாலும், என் மனம் மிகவும் அமைதியாகிவிடுகிறது.

ஆனால், வீட்டிற்குப் போனதுமே மீண்டும் பழையபடியே துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே, ஏன்? ஆனால், நீங்கள் மட்டும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே! எப்படி?''

அதற்குச் சிரித்தபடியே ஜென் ஞானி சொன்னாராம், ''நான் உங்களோடு என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் எப்போதும் என்னோடு உங்களின் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள். அதுதான் காரணம்."

அருமையான பழமொழி ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 'பெட்டிக்குள் பூட்டி வைத்த கட்டித்தங்கம்'. இப்படி வைத்திருப்பதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.

கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தம்மிடமிருக்கும் ஆனந்தத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாத ஒருவருக்கும், ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இருவரின் (முகமும் காரணம் துக்கமாகவேயிருக்கும். உணர்வும் கூத்துக்காகக் கும்மாளமடிப்பதைத் தாண்டி, நிஜமாகவே மற்றவர்களுடன் பகிர ஆரம்பிக்கும் பொழுது அவருக்குள்ளிருக்கும் ஆனந்தத்தின் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

கஞ்சனாய் இறப்பதும், பிச்சைக்காரனாய் இறப்பதும் ஒன்றே. தன்னிடமிருக்கும் ஆனந்தக்கை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாக ஒருவருக்கும் ஒரு மன நோயாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அப்படிப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் அவரின் உள்ளுணர்வானது துவண்டு போக

ஆரம்பிக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி மன நோயாக ஒரு நாள் அது வெளிப்படும்.

எல்லா மன நோயாளிகளும் ஆனந்த மயமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களே.

உலகத்தோடு ஆனந்தத்தைப் பகிர்வது நிறுத்தும் பொழுது, உலகத்தில் இருக்கும் துக்கம் உங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடும்.

ஆனந்தத்தைப் பகிர்வதே ஆன்மீக சேவை ! Sharing bliss is spiritual service!

டுருமுறை பேராசிரியர் ஒருவர், ''சேவை என்றால் என்ன?'' என்று கேட்டார். ''பகிர்கல்,'' என பதிலளித்தேன்.

''பகிர்தல் என்றால் ?''

ஆம் உங்களிடம் இருக்கும் ஆனந்தத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் அது ஆனந்த சேவை அதாவது ஆன்மீக சேவை (Spiritual Service)

உங்களிடம் இருக்கும் பெயர், பதவி, ஆள்பலம் போன்றவை மூலமாக உங்களால் என்னென்ன நல்ல காரியத்தைச் சமூதாயத்திற்கு செய்ய முடியுமோ, அதற்காக உங்களின் சமூக பலத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் சமூக சேவை (Social Service)

உங்களிடம் உள்ள பொருட்களையும், சொத்துகளையும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வகையில் பகிர்ந்து கொள்வதே செல்வச் சேவை (Economical Service).

உங்களுடைய அறிவாற்றலை சமூக எழுச்சிக்காகவும், விழிப்புணர்விற்காகவும் பாமரா்களிலிருந்து படித்தவர்கள்வரை பகிர்ந்து கொள்வதே அறிவு சேவை (Intellectual Service)

உங்களின் தனிமனித சக்தியை உலக அமைதிக்கு உதவும் வகையில், தனிநபர் தியானமாகவோ, கூட்டுத்தியானமாகவோ, உழவாரப்பணியாகவோ, சுப வேலைக்கு உதவும் கரங்களாகவோ பகிர்ந்து கொள்வதே தனிமனித சேவை (Individual Service)

எனச் சொல்லி முடித்தேன்.

உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த ஐந்து சேவைகளையும் செய்பவர்கள்

கட்டித்தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால், வேண்டுமானால் நீங்கள் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பணக்காரர்களாக வாழ முடியாது.

கட்டித் தங்கத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்தால் உங்களைப் பணக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் பணக்காரர்களாக வாழ முடியாது.

நிஜமாய் வாழ, வளமாய் வளர, முழுமையாய்ச் செழிக்க, உங்களிடம் இருப்பதையெல்லாம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆனந்தம் கொழிக்க ஆரம்பிக்கும் !

ஆரோக்கியம் தங்க ஆரம்பிக்கும் ! !

நிம்மதி முளைக்க ஆரம்பிக்கும்!!!

இப்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வெறும் வழிப்போக்கர் கூற்று அல்ல.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய அனுபவக்கீற்று.

பலர் கேட்பதுண்டு, ''12,000 தியான சிகிச்சையாளர்களை ஐந்தே வருடத்திற்குள் எப்படி உருவாக்கினீர்கள் ? ''

அப்போது நான் சொல்வதுண்டு, ''நான் உருவாக்கினேன்,'' என்று சொல்வதற்கு எனக்கு நேரடியாக எந்த உரிமையும் இல்லை.

இறைசக்தி எனக்குள் தந்த ஆனந்தத்தையும், ஆரோக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அன்றிலிருந்து வழ்றாத அமுத சுரபியாக என்னுள்ளிருந்து சக்தியானது பொங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சக்திதான் 12,000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியவா் இவர் எனும் தகுதியை எனக்குத் தந்திருக்கிறது. ''

நீங்களும் பகிர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.

நீங்களும் மகான் என்று போற்றப்படும் தகுதியைப் பெறுவீர்கள்.

பகிர ஆரம்பியுங்கள் !

தகுதியைப் பெறுவீர்கள் !!

பலன் எதிர்பாரா சேவை, உங்கள் ஆனந்த வாழ்விற்குத் தேவை !

Selfless service is what you need for a blissful life!

சீமுகத்தின் கட்டுப்பாடே உங்களை யோசிக்கவிடாது. (மனித வளர்ச்சியைக் குன்ற வைக்கக்கூடிய ஒன்றாகவே இன்றைய சமூக அமைப்பு இருக்கிறது) அதனால்தான் சொல்கிறோம். உங்கள் எல்லைகளை விரிக்குக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

இன்றைய நாடும், இந்த உலகமும் முன்னேற வேண்டுமானால் உங்கள் எல்லையை நீ ங்கள் விரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன விஷயம். உங்களால் ஐந்து மணி நேரம் வேலை செய்ய முடியுமென்று நீ ங்கள் நம்பினீர்கள் என்றால், அடுத்து ஒரு 10 நாட்களுக்கு மட்டும் ஒரு 6 மணி நேரம் வேலை செய்யுங்கள்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் என்ன செத்துப் போய் விடுவோமா? சாக மாட்டோம்.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் செத்துப்போய் விடுவோம் என்றால், அந்த உடம்பை வைத்துக்கொண்டு வாழ்கிறதைவிட சாகிறதே மேல். அந்த மாதிரியான ஒரு உடம்போடு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கட்டாயமாக ஒரு மணிநேரம் அதிகமாக சேவை செய்தால் ஒன்றும் செத்துப் போய் விடமாட்டோம். மெதுவாக, சேவையை வாழ்வில் அதிகமாக்குங்கள்.

அடுத்த ஒரு பத்து நாட்களுக்கு ஒரு உறுதியான முடிவு எடுங்கள். ''என்ன நடந்தாலும் இப்போது 5 மணி நேரம் வேலை செய்தால், இனி 6 மணி நேரமாவது வேலை செய்தே தீருவது,'' என்று முடிவு எடுங்கள்.

அதேபோல, இப்பொழுது உங்களுடைய உடலுழைப்பு 2 மணி நேரமென்றால், 3 மணி நேரமாவது உழைத்தே தீருவது என்று முடிவு எடுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்: லாபம் கராத, பணத்தைக் கொடுக்காத, புகமைக் கொடுக்காத ஏதாவது ஒரு சமூக சேவையில், ஒரு நாளைக்கு, ஒரு அரை மணி நேரமாவது செலவிடுங்கள்.

ஒரு தெருவைப் பெருக்குவது, ஒரு கோயிலைத் தூய்மை செய்வது, ஏதாவது ஒரு சமூக சேவை நிறுவனத்திற்கு ஒரு சிறுபணி செய்வது.

இப்படிப் பணத்தைத் தராத, புகழைத் தராத ஏதாவது, ஒரு சமூகப் பணியை நீ

ங்கள் ஒரு அரைமணி நேரம் செய்வீர்களானால், ஏதாவது ஒரு பணியை, முதல்முறையாகக் காரணமில்லாமல், வேலை அனுபவிப்பீர்கள்.

நமக்கெல்லாம் வேலை செய்வது என்றாலே, ஒரு வெறுப்பு வருவதற்குக் காரணம் என்னவென்றால், அந்த வேலை செய்யும் பொழுதே, இந்த லாபம் நமக்கு வரவேண்டும், இந்தப் பலன் நமக்கு வரவேண்டும் என்ற அழுத்தம் மனசு க்குள் வந்து விடுகிறது.

ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தால் செத்துப்போய் விடுவோம் என்றால் அந்த உடம்பை வைத்துக்கொண்டு வாழ்கிறதை விட சாகிறதே மேல்.

தெரிந்துகொள்ளுங்கள்! இந்த நற்பணி மன்றங்கள் என்ற பெரிய போர்டுகள் போட்டு, செய்வது எல்லாம் சேவை என்று நினைக்காதீர்கள். அதெ ல்லாம் பெயருக்காகச் செய்யப்படுபவை. பெயருக்காகச் செய்யப் படாமல், எந்த ஒரு தனிநபரின் உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்காகவே ஒரு நற்பணி மன்றம் இயங்கினால், அது தொடர்ந்து சேவைகளைச் செய்வதை மட்டுமே மையமாய் வைத்து இயங்கினால் அது நற்பணி மன்றம் அல்ல, கோயில். இப்படிப்பட்ட உண்மையான சேவை மன்றங்களைதான் வீரமிக்க இந்திய இளைஞர்களான நீங்கள் உருவாக்க வேண்டும்.

சேவை மன்றங்களை நாடு முழுவதும், கிராமங்கள் தோறும் எழுதப்புங்கள், இந்தியாவைக் காப்பாற்றி விடலாம். தேசபக்தி, கடவுள் பக்தி, நற்பணி என்பது இதுபோன்ற உணாவுப்பூர்வமான, மக்களுக்கு நேரடியாக உதவக்கூடிய சேவைகளில் இறங்குவதில்தான் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஒரு சின்ன கதை,

சாரணா் படை, பள்ளிகளில் இருப்பார்கள்! scouts என்று சொல்வார்கள். அந்த scout ஆசிரியர் ஒரு நாள், 'ஏதாவது ஒரு சின்ன சமூக சேவையாவது செய்து விட்டு வந்து நங்கள் எனக்குச் சொல்ல வேண்டும்,' என்று சொன்னார். மாணவர்கள் எல்லோரும் நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று தினந்தோறும் சொன்னார்கள்.

ஒரு நாள் மூன்று மாணவர்கள் எழுந்து, ''ஐயா! நாங்கள் மூன்று பேர் சேர்ந்து, ஒரு வயதான மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு உதவினோம், '' என்று சொன்னார்கள்.

ஆசிரியர் கேட்டார், ''அப்பா, ஒரு மூதாட்டி சாலையைக் கடப்பதற்கு ஒருவா் போதுமே, மூன்று போ அதற்கு தேவைப்படாதே," என்றார்.

Section 2

''இல்லை சார், நாங்கள் மூன்று போ தேவைப்பட்டோம். காரணம், அந்த மூதாட்டி சாலையைக் கடக்க விரும்பவில்லை, 'கடக்க மாட்டேன்' என்று அந்தப் பாட்டி சொன்னதினால், நாங்கள் மூன்று போ் சோ்ந்து தூக்கிச்சென்று சாலையைக் கடக்க வைக்க வேண்டியதாகப் போயிற்று, ''என்று சொன்னார்.

பேருக்காகவும், புகழுக்காகவும் செய்யப்படும் சேவைகளெல்லாம் திணிக்கப்படும் சேவைகள், தொந்தரவாக முடியும் சேவைகள்.

அவை, சேவையாக முடிகிற சேவைகள் அல்ல; வேகனையாக முடிகிற சேவைகள்.

அவர்கள் விரும்பி நாம் உதவி செய்தால், ஒருவர் போதும், விரூப்பம் இல்லாததினால் மூன்றுபேர் தேவைப்படுகிறது. அவரைச் சாலையைக் கடக்க வைப்பதற்கு !

மாகிரிதான் பெரும்பான்மையான இகே நேரத்தில், நாம் நம்முடைய வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறோம்.

பணத்தைக் கொடுக்காத புகழைக் கொடுக்காத ஏதாவது ஒரு சமூக சேவையில் ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது செலவிடுங்கள்.

பெயரையோ, புகழையோ தரக் கூடியதில்லாத ஏதாவது ஒரு சேவையை, எளிமையான சேவையை, ஒரு அரை மணி நேரம் செய்வது. ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக அந்த கோயிலைத் தூய்மை செய்வது. யாருக்காகவும் அல்ல ; உங்களுக்காக.

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், யாருக்காகவும் அல்ல; உங்களுக்காக செய்யுங்கள்.

நான் ஏன் இதை செய்யச் சொல்கிறேன் என்றால், ஒரு அரை மணி நேரம் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், இனிமையாக உங்கள் உடல் இயங்குமானால், பலனைப் பற்றியே யோசித்து. மனத்தை வருத்தாமல். உடலை இயக்குவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

இங்கு அரை மணி நேரம் என்று நான் குறிப்பிடுவது ஒரு உதாரணத்திற்குத்தான். இதை சாக்காக வைத்து வேறு அரை மணி நேரத்தை ஆனந்தத்தை நிறுத்த விடாதீா்கள். இது போன்ற சேவை நாட்டுக்குக் கேவை.

பலனை எதிர்பாராமல் சேவை செய்யும் இதயங்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகத்திற்கு பெரும் கேவைதான். பலன் எதிர்பாராமல் சேவை செய்வது ஆனந்தம், கியானம், தெய்வகுணம்.

வாழ்வின் சாரமே சேவை நேரம்

The essence of life isThe time spent in service

'கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன

கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

கா்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு உரிமை உண்டே தவிர, பலனை எதிர்பார்ப்பதற்கு இல்லை.

ஒரு அரை மணி நேரம் பலனைப் பற்றி சிந்திக்காமல் ரொம்ப தளாவாக (relaxed), ஏதாவது ஒரு சமூக சேவை செய்தீர்களானால், பலனை எதிர்பாராமல் வேலை செய்கிற அந்த அரை மணி நேரம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிலருக்கு வீண் போலத் தெரியலாம்.

ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அப்படிப்பட்டவருக்குக்கூட தெரியும், அந்த அரை மணி நேரம்தான் உங்களின் வாழ்க்கையிலேயே சாரம் மிகுந்த இனிமையான நேரம் என்று புரியும்.

அதன் பிறகுதான் தெரியும், அந்த அரை மணி நேரம் நீங்கள் எவவளவு தளர்வாக இருக்கிறீர்கள் என்று! அந்த அரை மணி நேரம் உங்களை எவ்வளவு நிம்மதியாக வைத்திருக்கிறது என்று.

இப்படி ஒன்றிரண்டு சின்னச்சின்ன சேவைகளைச் செய்யத் துவங்கினீர்களானால் உண்மையிலேயே உங்களுடைய சக்தி வெளிப்படும், சக்தி விரிவு நடக்கத் துவங்கி வி(டும்.

சேவை இல்லாத வாழ்க்கை தேவையில்லை. அப்படியே மீறி சேவையில்லாத வாழ்க்கையை வாழ்ந்தால் தேவையில்லாத பல துக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சாரம், சேவை நேரம்.

சேவையின் ாகசியம்

ீதானம், சேவை. என்ன வேறுபாடு?

தானம் ''நான் கொடுக்கிறேன்,'' என்ற மறைமுக கா்வத்தை அச்சாணியாய்க் கொண்டது.

சேவை, ''மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா,'' எனும் பண்பை அச்சாணியாகக்கொண்டு செயல்படுவது.

° சேவையின் மகத்துவம் ?

சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைபிடிக்க ஆரம்பிப்பீர்கள். இது அகங்காரத்தைக் கரைக்கும்.

• சேவையை யார் செய்யலாம்?

திமிர்பிடித்தவன்கூட பத்துப்பைசாவை பிச்சைகாரனுக்குத் தூக்கியெறிந்துவிட்டு... "நான் தானம் செய்தேன்," என காலர் தூக்கிவிட்டு பேசலாம்.

உண்மையான சேவை சேவகனால் மட்டுமே சாத்தியம். ஒரு

உயர்ந்த உணர்வு நிலையில், நன்றிப் பெருக்கால் பக்தன் கடவுளிடம், சீடன் குருவிடம், மனதளவில் கரமேந்தி, ''என்னுடைய சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?'' என கைக் கூப்பி நிற்பது சேவை. உண்மையான சேவை செய்பவரால் தன் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்கமுடியும். நிஜமான சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார். காரணம் அது, நம்மைத் தெய்வசக்தியின் பாகமாக்கும் யுக்தி.