Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

190. ஞானத்தையும் தாண்டிய நிலை – ஞான குருவோடு வாழ்தலே !

# ஞானத்தையும் தாண்டிய நிலை – ஞான குருவோடு வாழ்தலே !

The state beyond enlightenment is living with an Enlightened Master

(ருடனத்தைத் தாண்டிய ரசம். இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதனாலேயே, உங்களின் மன அமைப்பு, புதிய மன அமைப்பாக மாற ஆரம்பிக்கும்.

ஞானத்தையும் புரிந்துகொள்ள, அவருடைய மன அமைப்பை, அவருடைய நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிருஷ்ணரை உதாரணமாகச் சொல்லலாம். கிருஷ்ணரால் அமைதியாக அமாந்து தியானம் செய்யவும் முடியும். புத்தரைப்போல அமர்ந்து மௌன நிலையிலே, தவநிலையிலே உபதேசம் செய்யவும் முடியும்.

இறங்கி கோபியர்களோடு ராசலீலை செய்யவும் முடியும். புத்தராக குரானத்திலே உட்காரவும் முடியும்.

கிருஷ்ணரால் எல்லாப் பரிமாணத்திலும் நுழைய முடியும்.

புத்தர் நடனம் ஆடுவது போன்று கற்பனை செய்து பாருங்கள்! முடியாது. ஆனால், கிருஷ்ணரால் நடனமாடிடவும் முடியும் !

ஞானத்தைத் தாண்டிய இந்த ரசத்தை, தம் வாழ்க்கையின் ரசமாக மாற்றியவர், ஸ்ரீ கிருஷ்ணர்.

ஈஸ்வரனாலும் இந்த இரண்டையும் செய்ய முடியும். தட்சிணாமாக்கியாக ஆலமாத்தின் அடியில் அமர்ந்திருப்பவுரும் அதே ஈஸ்வரன்தான். ஆனந்த நடராஜராக ஆனந்தச பையிலே காண்டவமாடுவதும் அதே ஈஸ்வரன்தான்.

அவரால் இரண்டும் செய்ய முடியும். ஞானத்தைத் தாண்டிய ரசத்திற்குள் நுழைய முடிந்தவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர்கள்தான், ஈஸ்வரன்கள்தான்.

அருமையான பாகவகக் கதை :

கிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள், கிருஷ்ணரின் பக்கைகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் சிசுபாலனைச் சுற்றி பல ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிசுபாலன்தான், வில்லன். கிருஷ்ணனை தன் எதிரியாகக் கருதி,

ஞானத்தைத் தாண்டிய ரசம். இந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதனாலேயே உங்களின் மன அமைப்பு புகிய அமைப்பாக மாற ஆரம்பிக்கும்.

எதற்கெடுத்தாலும் கிருஷ்ணனை எதிர்த்து, அவரைப் போலவே வாழ முயற்சி செய்வான்.

கிருஷ்ணரையே நினைத்து பக்தியில் உருகிய பல ஆயிரம் கோபிகைகள், கிருஷ்ணரோடு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அதே போல சிசுபாலனும், பல இளம் பெண்களைத் தம்முடைய அரண்மனையிலே தாசிகளாக வைத்திருந்தான்.

மிக அழகாக ஒரு ரிஷி கேட்டார், கிருஷ்ணனைச் சுற்றி இருக்கிற இளம் பெண்களை மட்டும் கோபிகைகள் என்றும், பக்தைகள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால், சிசுபாலனை சுற்றி இருக்கிற இளம் பெண்களை ஏன் தாசிகள் என்று சொல்கிறீர்கள்?'' என்று.

அதற்கு பாகவதத்திடைய உரையாளர், பாகவதத்தை சொல்லிய சுகப்பிரம்மா மிக அமகாக விளக்கம் கொடுத்தார்.

அது விளக்கம் மட்டும் அல்ல, சத்தியம்.

கோபிகைகளும், கிருஷ்ணனும் இருவருமே ஞானத்தின் உச்சியை அடைந்து இருந்தார்கள். அவர்கள் செய்தது 'ஞானத்தைத் தாண்டிய ரசம்.' கோபிகைகள், கிருஷ்ணர் இரண்டு பேருமே ஆசை, அச்சம் கடந்த உணா்வை ஒரு முறையாவது அனுபவித்து விட்டவர்கள். ஞானத்தை அடைந்து விட்டவர்கள். அவா்கள் இரண்டு பேருக்குமே, அவர்கள் இரண்டு பேரும் வேறு இல்லை என்பது தெரியும். கோபிகைகளுக்குத் தெரியும், அவர்களேதான் கிருஷ்ணனாகவும் இருக்கிறார்கள் என்று.

கிருஷ்ணனுக்குத் தெரியும் 'தாங்கள் கிருஷ்ணனே' என்ற உணா்வாகத்தான் கோபியர்கள் இருக்கிறார்கள் என்பது.

அவர்கள் இரண்டு பேருமே, உணர்வு நிலையில் அபேதங்களை அடைந்து விட்டார்கள். ஞானத்தை அடைந்து, அதைத் தாண்டிய எளிமையான விளையாட்டிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.'' என்று சத்தியத்தை எளிமையாக விளக்கினார்.

உதாரணத்திற்கு .... நீங்கள் உங்கள் குழந்தைக்காக ஒரு பிஸ்கட்பாக்கெட் வாங்கிக்கொண்டு வர்கு கொடுக்கிறீர்கள். உங்களுக்கும் தெரியும், அது உங்கள் பணம்தான் என்று. உங்கள் குழந்தைக்கும் தெரியும் அது நீங்கள் சம்பாதித்தப் பணம்தான் என்று. ஆனால், அந்தக் குழந்தை, அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து, உங்கள் வாயில் வைத்தால் எப்படி இருக்கும் ?

உணர்வால் மகிழ்ந்து, உங்கள் குழந்தை புரியும் செயலை ரசித்து மகிழ்வீர்கள்தானே?

குழந்தை கொடுக்கவில்லையென்றால், நீங்கள் சாப்பிடாமல் இருக்கப்போகிறீர்களா ? எதையும் இழக்கப்போவதில்லை.

பேருக்குமே தெரிந்த ஒரு விஷயம், ''அது இரண்டு உங்களுடையதுதான்,' என்பது. ஆனால், அதையே குழந்தை கொடுக்கும்பொழுது, அதுதான் 'இனிமையான கிருப்பிக்

கோபிகைகளும், கிருஷ்ணனும் இருவருமே ஞானத்தின் உச்சியை அடைந்து இருந்தார்கள்.

லீலை. '

அதேபோன்று. கிருஷ்ணணும் சரி. கோபியர்களும் சரி. இரண்டு பேருக்குமே. தெரியும், இருவருக்குள்ளும் பூரணமான ஞானம் மலர்ந்து விட்டது என்று, உடலாலே அடைகிற சுகம் ஒன்றும் இல்லை. இரண்டு பேருமே உணர்வினாலே உத்தம நிலையை அடைந்தவர்கள்.

கோபியர்களுக்கு கிருஷ்ணன் ஒரு ஆண் என்ற உணர்வு வேறுபாடுகூட எழுவில்லை. கோபியர்களுக்குத் தெரியும், கங்களைப் படைத்த பரம்பொருளான பிரபஞ்ச சக்தியே கிருஷ்ணன் என்ற வடிவத்திலே விளையாடிக்கொண்டு இருக்கிறது என்று.

கோபியர்களுக்கும், கிருஷ்ணனைத் தொடுவதாலே ஒரு சுகரமும் தேவையில்லை, கிருஷ்ணனுக்கும் ஸ்தூல சரீரத்தால் எந்தவிதமான உறவு சுகரமும் தேவையில்லை. இரண்டு பேருமே, இதைத்தாண்டிச் சென்றவர்கள். மிக எளிமையான, ஆழ்ந்த, இனிமையான அன்புத் தன்மையினாலே நடக்கிற லீலை அது !

கோபியர்களுக்குத் தெரியும், கிருஷ்ணன் எந்த இடத்தில் வேண்டினாலும், அவனால் தோன்றி தரிசனம் கொடுக்க முடியும் என்று.

ஆனாலும், எளிமையான பொறாமை. ''இல்லை, இல்லை அந்த கோபியருடனே வெகு நேரமாக ஆடிக்கொண்டு இருக்கிறார். நம்மைத் திரும்பியே பார்க்கவில்லை,'' என்று.

சாதாரண பொறாமையாக இருந்தால், அவர்களைப் பக்தைகள், கோபிகைகள் என்று நாம் மதிக்க மாட்டோம். வணங்க மாட்டோம். இது எளிமையான பொறாமை, விளையாட்டுத்தனம். அதையும் செய்து பார்த்தல். அதையும் வாழ்ந்து பார்த்தல்! அதை வார்க்கைகளால் விளக்க முடியாது.

அந்த உணர்வை உங்களுக்குள் வாழ்ந்தால் மட்டுமே, உங்களுக்குப் புரியுமே தவிர், வார்த்தைகளால் புரிய வைக்கவே முடியாது.

இராமகிருஷ்ணரிடம் ஒரு சிஷ்யைக் கேட்கிறார். "பகவானே! வாம்க்கையிலேயே, மிக உயர்ந்த நிலை ஞானம் தானே," என்று.

அவர் ''இல்லை,'' என்று சொல்லி விடுகிறார். அப்போது அந்தப் பக்தை கேட்டார், ''எது உயர்ந்த நிலை ?'' என்று.

அவருக்கு மிக ஆச்சரியமாகப் போய் விடுகிறது, ஞானத்தை உயர்ந்த நிலை இல்லை என்று சொல்லிவிட்டாரே என்று.

இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார். ''ஞானத்தை விடவும் மிக உயர்ந்த நிலை, ஒரு ஞானியோடு லீலை செய்து விளையாடி வாழ்வது,'' என்று.

ஞானத்தில்கூட அத்வைத சுகத்தில் நின்று விடுகிறீர்கள். அத்வைத போகத்திலே லயித்து நின்று விடுகிறீர்கள். ஆனால், ஞானத்தைத் தாண்டி, ஒரு ஞானியோடு விளையாடுகிறு, அந்த ஆனந்தம் இருக்கிறது பாருங்கள், அதுதான் வாழுகிற ஆனந்தம். அதுதான்

ஞானத்தைத் தாண்டிய ரசம்.

ஞானத்தைத் தாண்டிய ரசத்தை குருவோடு அனுபவித்தவர்கள், குரு உடலை விட்ட பிறகு அதைவிட முடியாமல் உருவாக்கிய பரம்பரைதான் 'த்வைத பரம்பரை' காரணம், குருவோடு அந்த லீலையைப் பார்த்தவர்கள், ''ஈசனோடு ஒன்றி இருத்தல் உயர்ந்த நிலை அல்ல. தனித்து இருந்து, அந்த லீலையிலே லயித்து இருப்பதுதான் உயர்ந்த நிலை," என்று சொல்கிறார்கள்.

அவதாரப் புருஷா்களைச் சுற்றி, எப்போதுமே 'த்வைதம்' மட்டுமேதான் உருவாகும். அவர்கள் மீண்டும், மீண்டும் அத்வைதத்தை போதித்தாலும் அவர்களைச் சுற்றி வாழ்பவர்கள் 'த்வைதிகளாகவே' இருப்பார்கள்.

காரணம், அவர்கள் வெளிப்படுத்துகிற அந்த ஞானம், ஞானத்தைத் தாண்டிய ரசம், அங்கே சுற்றியிருக்கிற அத்தனை பேரையும் சொக்க வைத்து விடுகிறது.

தம்மை மறந்து, தம்மைச் சுற்றி இருக்கும் உலகை மறந்து உணர்வில் வாழ்கிறார்கள். மிக அழகாகத் திருநாவுக்கரசு பெருமான் சொல்கிறார். ''முன்னை அவன் நாமம் கேட்டனள், மூர்த்தி இருக்கும் வண்ணம் கேட்டனள், பின்னை அவன் பேர், ஊர் கேட்டனள்,'' என்று. இது மிக அருமையான தேவாரப் பாடல்.

''முதலில் அவருடைய பெயரைக் கேட்டாராம், அதன்பிறகு வடிவத்தை கேட்டாராம், அதன் பிறகு எங்கு இருக்கிறார் என்று கேட்டாராம், அவரைப் பற்றிச் செய்திகளை, விவரங்களை தெரிந்து கொண்டபின் அவரைப் பார்த்தாராம், பார்த்த பிறகு, அவரே அவருக்கே பேச்சியானாராம்! அவுருக்கே ஆட்பட்டார்,'' என்று அழகாகச் சொல்வார்.

இதை மற்றவருக்குள் நடத்த முடியாது. நாமே அதை நடக்க அனுமதிக்க வேண்டும். 'நான்' என்று நம்மைப்பற்றி நினைத்து வைத்திருப்பதை இடிப்பதற்கு துணிந்தால்தான் இந்த ஞானத்தைத் தாண்டிய ரசத்தில் வாழ முடியும்.

சதாசிவ பிரம்மேந்திரா் மிகப்பெரிய ஞானி.

அவருடைய பர்சனாலிட்டி, அந்த உணர்வினுடைய ஆழம், அவர் சாலையில் நடந்து போனார் என்றால், யார் அவரைப் பார்த்தாலும் சரி, அவரோடு நாட்கள் சுற்றி இருந்தாலும் சரி, தம்மை அறியாமலேயே, வாழ்க்கையைத் துறந்து அவா் பின்னாலேயே போய் விடுவார்களாம்.

''வாழ்க்கையில் இதைத்தவிர வேறு என்ன வேண்டும்?' என்று உருகும் அளவிற்கு உணர்வில் முதிர்ந்து இருப்பார்கள்.

அவருடைய தரிசனமே, அவா்களுக்கு பூரணத்துவத்தை அளித்தது. அவருடைய ரூபமே அவர்களுக்குள் ஜீவன் முக்தியை பூக்க வைத்தது.

ஒரு அவதார புருஷரைப் பார்த்த மாத்திரத்திலேயே பூர்ணத்துவத்தை அடையுமளவிற்கு ஜீவன் பூத்து வாழ்பவரைத்தான், ஜீவன் முக்த ஜீவன்கள் என்கிறோம்.

ஒரு அவதார புருஷரையே நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பின்புகூட, ''இவர் யார்?

ஞானத்தைத் தாண்டிய ரசம்

இவர் ஏன் இந்த உடையில் இருக்கிறார். எதற்காக இதைச் செய்கிறார்?'' என்று விமா்ச னம் செய்யும் எண்ணப் போக்கையும், பிளவுபட்ட பகுத்தறிவையும் பெற்றவரைத்தான் பட்டறிவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்கிறோம்.

தர்க்க மனத்தால் கங்களை மந்தப்படுத்தியவர்கள் என்கிறோம். உயர்ந்த உணர்வுக்குள் கரையாதவரை, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, அவர் எதை இழக்கிறார் என்பதை அவருக்குப் பரிய வைக்கவே முடியாது.

முக்தி, பக்திக்கு அழப்படை! Mukthi is basic eligibility for bakthi

சாக்கரை, தேனில் கரைவது பக்கி. தேனில் கரைந்ததினாலேயே, அந்த சர்க்கரை கேனாகிவிடுவது முக்கி

சாக்கரை தானாக பல்வேறு இரசாயன மாற்றங்களைச் செய்து. தன்னையே அது உருக்கி, உருமாற்றி தேனாக மாறுவது யோகம். ஞானம் நீண்ட பிரயாணம்.

தனித்தனியாக இருக்கும் யோகம், பிராணாயாமம், தவம் என்ற பல வழிகளின் மூலமாக வெகு பிரயக்கனப்பட்டு பல சாதனைகளைப் படைக்கலாம்.

ஞானத்தினால் புத்தராகலாம். ஆனால், கிருஷ்ணராக முடியாது. மஹாவீரர் ஆகலாம். ஆனால், ராமகிருஷ்ணராக முடியாது.

யோகம், தவம் மூலமாக ஏழு சக்கரங்களைக் கடந்து, ஏழு சரீரங்களைக் கடந்த முக்தியை அடையலாம். இது புத்தனின் பாதை.

பக்தி என்ற ஒன்று உயூப்பதினாலேயே ஏழு சரீரங்களைக் கடந்த நிர்வாண சரீரத்தில், நிர்விகல்ப நிலையை அனுபவிக்க முடியும். "Zero TPS"-யையும் ஏழு சக்கரங்களைக் கடந்த நிலையையும் நன்றாய்ப் பிழிந்த சாரத்தையும் அனுபவிக்க முடியும். இது கிருஷ்ணனின் பாதை.

எல்லாவற்றையும் கடந்து முக்தியடைய முடியும். இது ஞானம்!

நேரடியாக முக்தியில் கரைய முடியும். இது பக்தி!

ஜீவன் முக்தியைப் பக்தா்களுக்கு எளிதில் அனுபவமாக்க வெவ்வேறு அவதார புருஷர்கள், வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

இதில், கிருஷ்ணனின், ஞானத்தைத் தாண்டிய ரசவாதத்தை உங்களுக்குள் நிகழ நீ

ஏழு உடல்கள், ஏழு சக்கரங்கள், காலச்சக்கரம், ஐந்து கோஷங்கள் எல்லாம் ஒண்றாய்ச் சந்திக்கும் (டிக்தி நிலை.

ங்கள் அனுமதித்தால், எல்லாவற்றையும் கடந்து ஒன்றாய்ச் சங்கமிக்கும் நிலையை நேரடியாகத் தொடுவீர்கள்.

தனியாய்ப் போராடி வெல்வது சாத்தியம் என்பது உங்களின் நம்பிக்கை என்றால், புத்தனின் பாதையைத் தேர்வு செய்யலாம். தனியாய்ப் போராடுவதற்குப் போடும் முயற்சியை, முக்தியில் கரைவதற்கும், உருகுவதற்கும் போட்டால் உங்களுக்கான இனிய பாதை, கிருஷ்ணரின் பாதை!

தயவுசெய்து பெருமைக்காகச் சொல்ல முயற்சிக்கிறோம் எண்று எண்ணிவிட வேண்டாம். புத்தனின் பாதை, கிருஷ்ணனின் பாதை இதைத் தாண்டிய பாதைகளையும் பார்த்திருக்கிறோம். இருப்பதிலேயே எளிய பாதை கிருஷ்ணனின் பாதைதான்.

ஞானத்தைத் தாண்டிய ரசத்தை ஒரு முறை அனுபவித்தால், கடவுளையே உங்க(ளுக்குள் எளிதில் கண்டுகொள்வீர்கள்.

இது ஒருவரின் வாழ்வில் எப்போதாவதுதான் நிகழும். காரணம், ஒருவரின் வாழ்வில், ஒரு அவதார புருஷா் பூப்பது என்பது, பல நூறு பிறவிகளில் ஒருமுறைதான் நடக்கும். கிருஷ்ணர் எப்போதாவதுதான் அவதரிப்பார். அப்படி அவர் அவதரிக்கும் பல

பக்தியில் கரைந்ததனாலேயே (மக்தியிலும் கரைந்திருக்கும் கொண்டாட்டம் மிகுந்த முக்தியை காண்டிய பக்கி நிலை.

கொண்டாட்டம் மிக்க, பரவசம் மிக்க பக்தி அனுபவம். ராசலீலை

நேரங்களில், அவர் இருக்கும் இடத்தில் பிறப்பதற்கே வாய்ப்பு கிடைக்காது.

அப்படியே அவா் பிறந்த காலத்திலேயே பிறந்திருந்தால்கூட, அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதையெல்லாம் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட அவரைப் பற்றிச் சிந்திக்கும் அகங்காரமற்ற புத்திசாலித்தனம் வேண்டுமே !

இதெல்லாம் கிடைத்தால்கூட ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அனுபவிக்கும் அளவிற்கு, அவர் நமக்கு உதவுவதற்கு, நாம் அனுமதிக்குமளவுக்கு, வாழ்க்கை அமைய வேண்டுமே !

ஒருவருக்குள் பக்தி மட்டும் பூத்துவிட்டால் போதும், அவர் இருக்கும் இடத்திலேயே ராசலீலை அடைவார். அவர் இருக்கும் இடத்தைத் தேடி, கடவுளே ஓடி வருவார். காரணம், ஒரு இலட்சம் ஞானிகள் கிடைப்பார்கள், இது எளிது. ஆனால் ஒரு ராதை, ஒரு ராமகிருஷ்ணர், ஒரு மீரா, ஒரு ரமணர் கிடைப்பது அரிது.

இந்த அரிய நிலையை, பக்தியை உங்களுக்குள் பூக்க வைப்பதின் மூலமாக ராசல்லை அனுபவத்தை உங்களாலும் அடைய முடியும் என்பதே நான் பகிர விரும்பும் செய்தி.

உங்கள் வாழ்க்கையே கிருஷ்ணன், நீங்கள் கோபிகை

Your life is Krishna, you areThe Gopika

குதியியர்களுக்கும், கிருஷ்ணருக்கும் நடுவிலே இருக்கும் உறவு, நிறைவால் மலர்ந்தது. கிருஷ்ணருக்கு, கோபியர்களிடமிருந்து உடல் சுகம் கேவையில்லை.

கோபியர்களுக்கும், கிருஷ்ணரிடமிருந்து பாதுகாப்போ, பணமோ தேவையில்லை. கோபிகைகளுக்கு ஞானமே தேவையாக இருந்தது. அந்த தேவையை, ஏற்கெனவே கிருஷ்ணன் கொடுத்துவிட்டான். அங்கு அதை மீறிய தேவை என்ற ஒன்றே இல்லை.

அங்குப் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை. தேவை ஒன்றும் இல்லாததினால், எதுவும் கைட்கப்படாததனால், வாழ்க்கை நிறைவால் பொங்கி வழிந்தது, பூரணத்துவத்தால் பொங்கி வழிவதாக இருந்தது.

அதைத்தான் ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.

உயர்ந்த உணர்வுக்குள் கரைந்ததனால் நிகழும் ஞானத்தைத் தாண்டிய ராச லீலையில்தான் இது நடக்கும்.

கிருஷ்ணனுக்கும், கோபிகைகளுக்கும் அந்த ஞானம் இருந்தது. அந்த உணர்வு அனுபவம் இருந்தது. அவர்கள் ஞானத்தை அடைந்து, அதைத் தாண்டிய லீலை செய்து கொண்டிருந்தார்கள்.

கிருஷ்ணன் எதைச் செய்கிறானோ, அதையே தானும் செய்து கொண்டிருந்த சிசுபாலனுக்கோ, இதில் எதுவும் இல்லை. அவனுடைய நிலை ஞானத்தைத் தாண்டிய நிலை கிடையாது.

சிசுபாலனுக்கு, அந்தத் தாசிகளிடமிருந்து உடல் சுகம் தேவைப்பட்டது. அந்தத் தாசி களுக்கும் சிசுபாலனிடமிருந்து பணமும் பாதுகாப்பும் தேவைப்பட்டது.அவனுடைய தேவை வேறாக இருந்ததனால்தான், அவனுடைய செயலை பக்தி என்றும், ஞானம் என்றும் சொல்ல முடியாது.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணன் என்ற தனிநபர் மட்டும் கிருஷ்ணன் அல்ல, இந்த வாழ்க்கையே கிருஷ்ணன்தான், நீங்கள் எல்லோரும் கிருஷ்ணனை சுற்றி வாழ்ந்தவர்கள் மட்டும் அல்ல. கோபியா்கள் அல்ல கோபிகைகள்.

எப்போதெல்லாம் இந்த வாழ்க்கையோடு நீங்களும் பொங்கி வழிகிறீர்களோ, அப்போது ஞானத்தைத் தாண்டிய ரசம் மலர்ந்து விடும். உங்களுக்குள்ளும் ராச லீலை நடக்கும்.

இல்லையென்றால், நீங்கள் வாழ்க்கையோடு, சிசுபாலனின் தரமில்லாத ஒழுக்கங் கெட்ட பெண்களைப் போலத்தான், தரங்கெட்ட வாழ்வு தரத்தைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையோடு நீங்கள் சிசு பாலனின் கீழ்தர உறவுவைத்து வாழ

ஞானத்தைத் தாண்டிய ரசம்

வேண்டுமா இல்லையென்றால், கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இருந்த உன்னத உறவை வைத்து வாழ வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

வாழ்க்கையே கிருஷ்ணன். நீங்களே கோபிகை. அதனோடு ஒன்றி வாழ்ந்தால் நீங்கள் கோபிகைகள். இல்லையென்றால், சிசுபாலனோடு வாழ்ந்த வாழ்வைத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நிகழ்த்துவதே, பூமி எனும் கிரகத்தைப் படைத்ததின் நோக்கம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல கிரகங்களில் பூமியை நீங்கள் தேர்வு செய்து வந்து பிறந்ததின் காரணமே, அந்த ரசத்தை அனுபவிக்கத்தான்.

வம்பின் ரகசியம்

வம்பளப்பவர்களை என்ன செய்வது?

ஆவலோடு விளையாடுங்கள்.

● கோபப்பட்டால் ?

சிரியுங்கள்.

· இன்றும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால் ?

அங்கிருந்து ஒடிவிடுங்கள்.

· இது என்ன வம்பில் போய் முடியும் போலிருக்கிறதே?

இதுவரை சொன்னது ... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்தலீலை.

® கேட்க அருமையாக இருக்கிறது செய்ய முடியுமா?

'செய்ய முடியுமா?' என்று பெரிய மனித தோரணையில் கேட்காமல் 'செய்து பார்த்தால் என்ன?' என்று குழந்தையின் குதூகலத்தோடு செய்து பாருங்கள். வெற்றி காண்பீர்கள். வம்புகூட விளையாட்டாகும்.