185. சக்தி தாரணை
# சக்தி தாரணை
(பிரபஞ்ச சக்தியை உள்வாங்குதல்)
இந்த உத்தி, தந்திர சாஸ்திரத்தில் உள்ள குலாவன தந்திரம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவு கொள்ள இது ஒரு அழகிய உத்தியாகும். சக்தி தாரணையின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களை இந்தத் தியானம், மனம் கடந்த நிலை என்ற துரிய நிலையின் நுழை வாயிலுக்குள் அழைத்துச் செல்லும்.
சாஸ்திர சஸ்திரங்கள் (நானக் கேடயங்கள்)
தினமும் ஒரு அரைமணி நேரம் அனுபூதி அடைந்த ஞானியால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படியுங்கள் அல்லது அவரது சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.
ஒரு ஞானியின் மொழிகள் நேரடியான சாஸ்திரங்கள். அவை இறுதியான அறிவுப் பெட்டகம் மற்றும் சக்தியங்கள்; ஞானியின் வார்த்தைகள், நமது அறியாமையை வேரறுக்கும் ஆயுதங்கள்.
இவை அறியாமையை நேரடியாக வேரறுக்க வல்லவை.
ஒரு ஞானி, தொடர்ந்து நிறைய உத்திகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
திடீரென்று அதில் ஏதேனும் ஒரு யுக்தியை இந்த தீகைஷ்யை யார் உணர்கிறார்களோ, அவர்கள் பாக்கியசாலிகள்.
குருவின் மொழிகளைக் கேட்டு உங்கள் வாழ்க்கையோடு அவற்றை மேன்மேலும் இணைத்து விடுங்கள்.
குருவின் வார்த்தைகள் சாஸ்திர சஸ்திரங்கள். எப்பேர்பட்ட துக்கத்திலிருந்தும் உங்களை மீட்டெடுத்துவரும் குானக் கேடயங்கள்கான் சாஸ்திரங்கள்.
நீங்கள் உங்களின் இல்லத்தில், அலுவலகத்தில் எங்கெல்லாம் ஒய்வாக அமருகிறீர்களோ, அந்த இடங்களிலெல்லாம் குானியால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தையாவது வைத்துவிடுவது வாழ்விற்கான எளிய முதலீடு.
எப்போதெல்லாம் துக்கம், சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற இடங்களில்தான் நீங்கள் அமர்வீர்கள்.
அப்போதெல்லாம், துக்கத்திலிருந்து, வோர்விலிருந்து வெளிவருவதற்காக நீங்கள் செய்யும் முதல்வேலை, ஏதாவது ஒரு பத்திரிக்கையையோ, நாளிதழையோ எடுத்து புரட்டுவதுதான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... கலவரம் பற்றிய செய்திகளையும், கவார்ச்சி, இச்சை, ஆசை சம்பந்தபட்ட செய்திகளையும், மனம் சோர்ந்திருக்கும் நேரங்களில் படிப்பது, நேரடியாக உங்களின் மன நலத்தைப் பாதிக்கும்.
அந்த நேரங்களில், நீங்கள் அமரும் இடங்களிலிருந்து ஞானிகளின் வாழ்வியல் தீர்வுகள் கொண்ட புத்தகங்களை எடுத்துப் படித்தால், உங்களின் பாதிப்பிலிருந்து வெளி வருவதற்கான தீர்வே அங்குக் காத்திருக்கும்.
