186. நித்ய தியானம்
# நித்ய தியானம்
Nithya Dhyaan
நம்மை நம் மனத்திலிருந்து விடுவித்து, அதையும் தாண்டிய எண்ணங்களற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தியானம், நித்ய தியானம்.
நித்ய தியானத்தை 'ஞானத்தில்' வாழுதல் பகுதியில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நித்ய தியானத்தின் ஐந்து படிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள, 'ஞானத்தை வாழ்தல்' எனும் பகுதியில் பார்க்கவும்
பாஸ்சாணம் Purascharana
'நீங்கள் கடவுள்!' என்பதற்குக் குறைவாய் உங்களை நம்ப வைக்கும் எந்த ஒரு எண்ணமும் அகங்காரமே!
உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, உங்களுக்குள்ளேயும் வெளியேயும் அபூர்ணத் தன்மையை, குறைகளை உருவாக்கும் சக்தியோட்ட குறைபாடுகள் சரி செய்யப்படவேண்டும் என்பதே. அண்டம், பிண்டமாகும். அறிவியல் பரிந்தாலே, கடவுள் சக்திதான் எல்லாமாகப் பரிணமிக்கிறது எனும் சக்தியம் பரிந்து விடும்.
பிரபஞ்ச உணர்வுதான், அதாவது பிரம்ம தத்துவம்தான், பிரபஞ்ச சக்தியாக வெளிப்பட்டது. (பார்க்க பக்கம் 576)
வலியும். எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது.
அந்தப் பிரபஞ்ச சக்தி, பாாசக்தி அதாவது தேவி தத்துவம்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. அதுதான் காடு, மலை, மரம், மனிதன் என்ற எல்லாமாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் பஞ்ச பூதமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
இவை எல்லாவற்றையும் மொத்தமாக இயக்கும் பிரபஞ்ச ஞான சக்தியைத்தான் குரு சக்தி, அதாவது குரு தத்துவம் என்கிறோம்.
இன்னும் இதை அழகாகப் புரிந்து கொள்வோம்.
நான் உங்களோடு பேச உதவும் இந்த மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வும் (consciousness), உங்களுக்குள் இருக்கும் விழிப்புணாவும் ஒன்றுதான். உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் விழிப்புணர்வும் ஒன்றுதான். இந்த நிலையைத்தான் 'அத்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.
ஆனால், நிச்சயம் இந்த மைக்கை விட, நீங்கள் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறீர்கள். உங்களைவிட ஒரு அவதாரப் புருஷர் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறார். இதைத்தான் 'த்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.
த்வைதம், அத்வைதம் என்ற பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நேரடியாகப் பார்த்தோமென்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தில் இரண்டே இரண்டு அம்சங்கள்தான் இருக்கின்றன.
-
- விழிப்புணர்வு (consciousness)
-
- நானம் (intelligence)
மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வுக்கும், உங்களுக்குள் இருக்கும் intelligence-க்கும் சம்பந்தமே கிடையாது. அதேபோல, ஒரு அவதார புருஷரின் உடலை இயக்கும் cosmic intelligence, ஒரு மனிதருக்குள் இருக்காது.

எல்லாப் பொருளுக்குள்ளும் இருக்கும் Awereness ஒன்றுதான் அதை உணரும் inteligence-தான் வேறு.
ஒரு மனிதன் தன்னுடைய விழிப்புணர்வையும், ஞானத்தன்மையையும் நேரடியாக இறைசக்தியோடு இணைத்துக் கொள்வதின் மூலமாக, அந்த அவதார சக்தியின் நிலைக்குத் தன்னை உயா்த்திக் கொள்ள முடியும். தன்னுள் பூரணத் தன்மையை மலர்த்திக் கொள்ள முடியும்.
இதற்கு நேரடியாக உதவும் நுட்பத்தைத்தான் புரஸ்சரணம் என்கிறோம்.
புரஸ்சரணம் என்பது பூரணத்துவ தியானம்.
நம்மைப் படைத்து, நம்மை இயக்கும் பிரபஞ்ச சக்தி முழுமையானது பூரணமானது. அந்தச் சக்தியின் ஒட்டம் நம்முள் பொங்கியோடுவது குறையும்போது ஏற்படும் முதல் குறை உணர்வுதான் 'மனிதன்' என்ற உணர்வு; அதற்குக் கீழும் குறையும் போதுதான் மன்நோய்கள், உடல் நோய்கள் என்ற எல்லாமே பிறக்கின்றன. புரஸ்சரணம், அபூரணத்தை சரிசெய்து, பூரணத்தன்மையை உங்களுக்குள் மலா்த்தும் சக்தி படைத்தது.
புரஸ்சரணம் உங்களுக்குள் பல உன்னதமான மாற்றங்களையும் மங்களத் தன்மையையும் எடுத்து வருகிறது.
புரஸ்சரணத்தில் உபயோகிக்கப்படும் பூர்ண மூலமந்திரமானது, உங்களை நேரடியாகப் பிரபஞ்ச சக்தியோடு, இறை சக்தியோடு இணைத்து மகோன்னத மயமான மாற்றங்களை உங்களுக்குள் உருவாக்கும் சக்தி படைத்தது.
படிப்படியாக இந்த மூலமந்தாத்தை உச்சாடனம் செய்வதனால் ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம்.
உன்னத மாற்றம் 1:
புரஸ்சரணத்தால், பிரம்மத்தத்துவம்… பிரபஞ்சசக்தி உங்களுக்குள்உயிர்ப்பிக்கப்படுகிறது.
Big bang theory-யில் இந்த மொத்த பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு என்ன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலின் அடிப்படை அலகு, செல். பொருளின் அடிப்படை அலகு, அணு. அதே போல், 'பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு அதிர்வுகள். அது HUM என்ற நாதமாக இருக்கிறது' என்று B1g bang theory-ல் விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.
ஒம் எனும் நாதத்தை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்தால், அது HUM என்றுதான் வருகிறது.
ஒம் எனும் பிரணவம், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறது என்று உபநிடதங்கள் சொல்லும்போது எளிதாய்ப் புரிந்து கொள்கிறார்கள்.
அதனால்தான் 'ஒம்' என்கிற மந்திரத்தை உச்சாடனம் செய்வதை அருமையான தியானமாக உலகளவில் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அண்டம் பிண்டான்டமாகும் அறிவியல்
Science of Macrocosom becoming Microcosom

Primordial sound theraphy, Root sound technique, Om chanting என்ற பல்வேறு விதமான சிகிச்சை முறைகளாகவே, இன்று 'ஒம்' எனும் மந்திர உச்சாடனமானது, மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கிறது.
'ஒம்' எமை மந்திரத்தை உச்சாடனம் செய்வதினால் ஏற்படும் உன்னதமான மாற்றம், உங்களுக்குள் அபரிமிதமான விழிப்புணர்வை அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.
Om chanting awakens super consciuosness and rest full awareness ... என்று அவர்கள் இப்போது சொல்வதைத்தான்... ''ஓம் எனும் பிரணவத்தை எப்போதும் உச்சாடனம் செய்தால், உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஆரோக்கிய நிலையிலேயே இருக்க முடியும்,'' என்று நம் ரிஷிகள் அப்போதே சொல்லியிருக் கிறார்கள்.
பூரண மந்திர உச்சாடனத்தில் இந்தப் பிரணவ மந்திரத்தைத்தான் முதல் பாகத்தில் உச்சரிப்போம். இது நம்முள் இருக்கும் பிரம்ம தத்துவத்தை விழிக்கச் செய்கிறது. எல்லா இடத்திலும் நிரம்பியிருக்கும் பிரம்ம உணர்வை, பிரம்ம அதிர்வை உங்களுக்குள் செறிவூட்டும் சக்தி படைத்தது இந்த 'ஒம்' உச்சாடனம்.
பரஸ்சாணத்தால் பிரம்ம தத்துவமும் பிரபஞ்ச உணாவும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப் படுகிறது.
உன்னத மாற்றம் 2:
தேவி புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.
'ஹரீம்' பீஜத்தை உச்சரிப்பதனால் நம்முடைய உடலுக்குள் இருக்கும் 3rd layer energy கிறக்கப்படுகிறது.
தொண்டைக்குழியிலிருக்கும் விசுத்தி சக்கரத்தை இந்த 'ஹரீம்' பீஜமானது திறக்கிறது.
சின்ன பரிசோதனை.
இப்போதே முயற்சி செய்து பார்க்கலாம்.
இருக்குமிடத்திலேயே நிமிர்ந்து அமர்ந்து, உங்களின் கவனம் முழுவதையும் தொண்டைக் குழியில் ஒன்றாக்கி, 'ஹ்ரீம்' எனும் பீஜத்தை ஆழமாக, சப்தமாக, நீளமாகத் தொடர்ந்து 11 நிமிடங்களுக்கு உச்சாடனம் செய்து பாருங்கள்.
11 நிமிடங்கள் 'ஹ்ரீம், ஹரீம்' எனும் பீஜத்தை, தொடர்ந்து உச்சாடனம் செய்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள் ஒய்வாகத் தொண்டைக்குழியில் கவனம் முழுவதையும் ஒன்றாக்கி அமர்ந்திருங்கள்.
எவ்வளவு பெரிய சக்திப்பெருக்கு உங்களுக்குள் ஏற்படுகிறது என்பதை அனுபவமாகப் பார்ப்பீர்கள்.
3 மணி நேர தூக்கம் தரும் புத்துணர்வை, இந்த 11 நிமிட உச்சாடனம் தந்துவிடும்.
தியானம்
அவ்வளவு சக்தி வாய்ந்தது.
உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்ச சக்தியைத்தான் 3rd laver energv என்கிறோம் இதைத்தான் பராசக்தி என்றும், தேவி தத்துவம் என்றும் சொல்கிறோம்.
பாஸ்சாணத்தில் பயன்படுத்தும் பாண மலமந்திரத்தின் இரண்டாவது 'ஹீம்' எனும் மந்திர உச்சாடனம். இதை உச்சரிப்பதினாலேயே, பராசக்தியின் சக்திப் பெருக்கை உங்களுக்குள் உருவாக்க முடியும்.
தேவி தத்துவமும், புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உன்னத மாற்றம் 3:
புரஸ்சரணத்தால் குருதத்துவமும் ஞானசக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
நீங்கள் எப்படி நித்யானந்தம் என்ற நிலையை வழிபடுகிறீர்களோ, நானும் அந்த நிலையை, அதை விட ஆழ்ந்த பக்தியோடு வழிபடுகிறேன்.
ஒரே ஒரு சின்ன வித்யாசம்...
நீங்கள் நித்யானந்தம் எழை அந்த நிலையான, எதனாலும் மாறாத, தெவிட்டாத ஞானப் பெருக்கின் உச்சமான, நித்யானந்த நிலையை அடைவதற்கு பிரார்த்திக்கிறீர்கள் தியானம் செய்கிறீர்கள்.
அதாவது, நித்யானந்தத்தை அடைவதற்காக நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். அந்த நிலையை அடைந்ததினால், நான் பிரார்த்திக்கிறேன்.
ராமகிருஷ்ணருடைய படத்திற்கு ஒரு முறை ராமகிருஷ்ணரே பூஜை செய்கிறார்.
அப்போது ஒருவர் கேட்கிறார். உங்களுடைய படத்திற்கு நாங்கள் பூஜை செய்தால் அது பக்தி. ஆனால், உங்களுடைய படத்திற்கு நீங்களே பூஜை செய்தால் ....
ராமகிருஷ்ணர் மிக அழகாகத் தந்த பதிலின் சாரத்தைத் தருகிறோம்.
''என்னடைய உடல் எப்படி உங்களுடைய உடல் அல்லவோ, அப்படித்தான் எனக்கும். இது என்னுடைய உடல் அல்ல.
இது எப்போதோ தேவிக்குச் சொந்தமாகிவிட்டது. இது தேவிக்குச் சொந்தமான உடல் . அதனால்தான் நானும் இதைப் பூஜிக்கிறேன்,'' என்று சொல்கிறார்.
ஞானமடையும்போது
மனிதன் இறக்கிறார்!
கடவுள் பிறக்கிறார்!
அதனால்தான் அவரே அவருடைய உடலைப் பூஜித்தார்.

அண்ணாமலை சுவாமிகள் ரமணரைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்ட அருமையான சம்பவம் ஒன்று ...
ஒரு முறை ரமண மகரிஷியும், அவருடைய பக்தர்களோடு சேர்ந்து கொண்டு 'ரமண ச த்குரு! ரமண சத்குரு! ரமண சத்குருராயனே' எனும் பாடலைப் பாடுகிறார்.
பக்தா்கள் ஆனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப்போல அவரும் அனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப் பார்த்த பக்தர் ஒருவர் ஆச்ச ர்யப்பட்டுக் கேட்கிறார்.
Section 2
''பகவானே ! நாங்கள் ரமண சத்குருராயனே! என்று பாடுவது சரி. இது ஒரு ஆழமான தியானம், புரிகிறது.பலநூறு தியானங்களைச் செய்வதை விட இந்த ஒரு தியானம் செய்வதே போதுமானது.நீங்கள் இருக்கும் நிலைக்கு நாங்கள் வரவேண்டும். அதற்கு மிக எளிதான வழி குரு மந்திர உச்சாடனம் என்று பாகவதத்தில் படித்து உணர்ந்ததால், நாங்கள் உச்சரிக்கிறோம். எங்களுக்குள் மிக ஆழமான மாற்றங்களை இந்த உச்சாடனம் உருவாக்குவதால் நாங்கள் இதை செய்கிறோம்.
தனிமனிதனாய்க் கடுந்தவம் செய்து, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும் அல்லது ஏற்கெனவே பிரபஞ்ச சக்தியோடு தம்மை இணைத்துக் கொண்ட குரு சக்தியோடு, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
இதையெல்லாம் எங்களுக்குச் சொல்லிப் புரிய வைத்ததே நீங்கள்தான்.
நாங்கள் பிரார்த்திக்கலாம் அது சரி. அது புரிகிறது. ஆனால் நீங்களும் அதையே பிரார்த்திக்கிறீர்களே அதுதான் எங்களுக்குப் பரியவில்லை!' என்று கேட்டதற்கு, மிக அழகாக ரமண மகரிஷி இந்தப் பதிலளித்தாராம்,
''அப்பனே ரமணன் எனும் சக்தியை, ஏன் இந்த ஆறடி உடலுக்குள் அடைத்துப் பார்க்கிறீர்? எல்லாவற்றையும் இயக்கும் குரு கக்திதான், இந்த உடலையும் இயக்குகிறது.
நீங்கள் கூட கூட என்னை வழிபடுவது, என்னுள் குடியிருக்கும் தெய்வ சக்தியால்தானே! அந்தத் தெய்வ சக்திதான் தக்ஷிணாமூர்த்தியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்ட நாளிலிருந்து, இன்று வரை அந்தந்த காலத்திற்கு உதவும் அவதார புருஷர்களாக இறங்கி வந்துகொண்டே இருக்கிறது.
நானும், என்னுள் குடியிருக்கும் அந்தச் சக்தியை, எப்போதும் வழிபட்டுக் கொண்டே இருக்கிறேன்.
இறை சக்தியை எப்பொழுதாவது வழிபட்டால் அவன் மனிதன்.''
இறை சக்தியை எப்போதும் வழிபட்டுக் கொண்டிருந்தால் அவன் ஞானி!
ரமணராய் உங்களுக்கு வந்து உதவி கொண்டிருக்கும் அந்தச் சக்தியை, ஏனப்பா இந்த ஆறடி சாீரத்திற்குள் அடைத்துப் பார்க்கிறீர்கள் ?
தியானம்
அந்தச் சக்தி எங்குமல்லவா பரவி இருக்கிறது!
நீங்கள் பக்கியோடு பிரார்க்கிக்கிறீர்கள்.
நான் நன்றியோடு பிரார்த்திக்கிறேன்,' என்று ரமண மகரிஷி மிக அழகாகச் சொன்னாாாம்.
நிஜத்தில் குரு சக்தியோடு நம்மை இணைத்துக் கொள்வதால், குருவுக்கு நேரடியாக எந்த பலனும் இல்லை.
சொல்லப் போனால் அவருக்கு அதனால் இன்னும் வேலை அதிகமாகிவிடும்.
நீங்கள் ஒரு புது ஊருக்குச் செல்ல வேண்டுமானால், ஏற்கெனவே சென்றவரிடம் வமிகேட்டு அவரின் உதவியோடு அங்குச் செல்வீர்கள்.
அதேபோல, ஏற்கெனவே இறைசக்தியோடு இணைத்து இறைசக்தியின் ஸ்வரூபமாக வாழும் சத்குருநாதரின் உதவியை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கெனவே அனுபவம் பெற்ற அவரின் ஞானத்தை பயன்படுத்திக் கொள்வதுதான் குருபக்தி.
நித்யாளந்தம் எனும் மந்திரத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும்போது நேரடியாக குருசக்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். நேரடியாகப் பிரபஞ்ச ச க்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.
புரஸ்சரணத்தால் குருசக்தியும் ஞான சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உன்னத மாற்றம் 4:
புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.
எதைச் செய்தாலும், பேசினாலும், நான், எனது' என்று மட்டுமே எல்லோரும் செயல்படுகிறார்கள்.
Attitude of I and mine strengthens your ego.
புரஸ்சரணத்தின் நான்காவது பாகமான 'நமஹ' எனும் மந்திரம் உங்களின் ஆன்ம கத்துவத்தை விழிப்படைய வைக்கிறது.
'நமஹ' என்றால்'நான் இல்லை' என்றா்த்தம்.
ஒவ்வொரு முறையும் இந்த 'நமஹ' எனும் மந்திரத்தை உச்சரிக்க, உங்களிக்க உங்களின் அகங்காரம் வலுவிழந்து கொண்டே இருக்கும்.
'நான், நான்' என நம் உயிரையே குடித்துக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மை விட்டு அகல ஆரம்பிக்கும்.
'நமஹ, நமஹ'

'நான் அல்ல, நான் அல்ல' என்று பக்திப்பூர்வமாகச் சொல்ல, இதுவரை நீ ங்கள் பார்த்த மூன்று தத்துவங்கள் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும். அந்தச் சக்தியாகவே நீங்கள் மாற ஆரம்பிப்பீர்கள்.
நான்காவது பகுதியை உச்சாடனம் செய்யச் செய்ய துக்க சக்தி மறைந்து ஆனர்த சக்கி பொங்க ஆரம்பிக்கு விடும்.
புரஸ்சரணத்தால் உயிர்ப்பிக்கப்படுகிறது.
பூரணத் தியானம்
பிரம்ம தத்துவம்
தேவி தத்துவம்
குரு தத்துவம்
ஆத்ம தத்துவம்
இந்த நான்கு தத்துவங்களையும் உங்களுக்குள் உயிர்ப்பித்தும் மந்திரம்தான் புரண மூலமந்திரம். இந்தப் பூரண மூல மந்திரத்தைத்தான் பூரணத் தியானம் என்றழைக்கி றாம்.
ஒம் - பிரம்ம தத்துவம்
ஹ்ரீம் - தேவி தக்துவம்
நித்யானந்தாய - குரு தத்துவம்
நமஹ - ஆத்ம தத்துவம்
இந்த நான்கு மந்திரங்களைப் பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்பவர் யாராக இருந்தாலும், அவருக்குள் இந்த நான்கு தத்துவங்களும் விழிப்படைய ஆரம்பிக்கும்
'ஒம் ஹ்ரீம் நித்யானந்தாய நமஹ' எனும் மந்திரத்தை தொடர்ந்து 21 நிமிடத்திற்குப் பக்கிப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்வது புரஸ்சாணம்.
இது மிகவும் சக்தி வாய்ந்த தியானம்.
பல தெய்வ தரிசனங்களையும், அன்மீக அனுபவங்களையும் அற்புதுங்களையும் உங்களுக்குத் தரவல்ல தியானம்.
நான்கு தத்துவங்களையும் ஒன்றாய் இது உயிர்ப்பிப்பதனாலும், நேரடியாக குருசக்தி உடலில் இருக்கும்போது, இந்த மந்திரங்களை உச்சரிப்பதனாலும் ... அற்புதங்கள் உங்களுக்கு நிகழ்வது மட்டுமல்லாமல், அற்புதங்களை நிகழ்த்தும் பலவிதமான ச க்திகளும் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும்.
தியானம்
ஆனால், இதையெல்லாம் தாண்டிய அற்புதம் ... இந்த மனத்தையே மாயமாக்கும் அஜபாஜெப நிலைக்கு, மனம் கடந்த பக்தி நிலைக்கு இந்தத் தியானம் உங்களை எடுத்துச் செல்லும். எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக, இந்தத் தியானத்தில் மூழ்குங்கள். மீதம் நடக்க வேண்டிய அனைத்தையும் நான்கு தத்துவங்களும் பார்த்துக் கொள்ளும்.



ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அடைவதற்கான அடிப்படை தகுதி – ஜீவன் முக்தி