Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

180. சக்தி தாரணை

# சக்தி தாரணை

Sakthi dharana

பலன்கள்:

1: புத்துணர்ச்சி அதிகம் பெற்றவர்களாக உணர்வீர்கள்.

2: உடலின் குட்சுமான சக்கரங்களைச் சக்தியூட்டும் சக்தி தாரணை தியானம்.

இந்தத் தியானத்தைப் பற்றி : சொல்லுக்கடங்காத அழகிய தியானம் இது.

இதைத் தியானம் என்பதை விட, ஒரு பிரார்த்தனை எனலாம்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம்.

இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

பகலில் செய்வதானால், செய்த பிறகு பதினைந்து நிமிட ஓய்வு வேண்டும். அந்த ஒய்வுப்பொழுதில்தான் தியானத்தில் பெற்ற சக்தி ஒன்று திரளும். இல்லாவிட்டால், பல மணி நேரம் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்!

செயல்முறைக்கான குறிப்புகள் :

குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள, இருண்ட அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் விரும்பினால் வெளியிலும் செய்யலாம்.

தரையில் மண்டியிடுங்கள். உறுத்தலாகத் தோன்றினால் பாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முமங்காலிட்டு நிமிர்ந்து கைகளை வானை நோக்கி உயர்த்தவும்.

முகத்தை வானை நோக்கிப் பார்த்தபடி வைத்துக் கொண்டு, சற்று காத்திருக்கவும்.

விரைவில் இயற்கையின் சக்தி உங்களுக்குள் பாய்வதை உணரலாம். அதைக் தடுக்காமல் அப்படியே இருக்க வேண்டும்.

இயற்கை சக்தி உங்களுக்குள் பாயட்டும்.

கைகளில் ஒரு நடுக்கம் தோன்றும். மெல்ல, உங்கள் உடல் முழுவதுமே நடுங்கும். அப்போது உங்களுக்குள் பிரவேசிக்கும் சக்தியோடு இணைந்து உடல் முன்னும் பின்னும் அசையும். அவற்றையெல்லாம் அனுமதியுங்கள்.

நீங்கள் மிதப்பதாக உணர்வீர்கள். உடலே இல்லாததைப் போல் உணர் வீர்கள்.

தியானம்

நீங்கள் முற்றிலும், இனி நிரம்ப முடியாத அளவுக்குச் சக்தியால் நிறைந்து விட்டதாகத் தோன்றும்போது, முத்தமிடுங்கள். உங்கள் உள்ளங்கைகளைப் புமியின் உங்கள் அன்பையெல்லாம் பூமிக்கு வழங்குங்கள்!

உங்கள் வழியாகவும், அன்பு, பூமி நோக்கிப் பாய்வதை உணருங்கள்.

பிரபஞ்ச சக்திகள் அணைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம். இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

தெய்வீக சக்தியைப் பூமிக்கு வழங்கும் ஒரு கருவியாக மாறி விடுங்கள். இதை ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.

ஒவ்வொரு முறையும் ஏழு சக்தி சக்கரங்களில் ஒன்று, சக்தி ஏறப்பெறும்.

ஏழுமுறைக்கு மேல் அதிகம் செய்தால், சக்தி அதிகரித்து, நிம்மதியின்மை ஏற்பட்டு விடும்.

ஏழுமுறைக்குக் குறைவாகச் செய்ய வேண்டாம். சக்திச் சுற்று முழுமை பெறாமலே நின்று விடும். எனவே, ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.

சக்தி தாரணை என்னும் வழிபாடு முடிந்தவுடன், அந்த வழிபாட்டு நிலையிலேயே உறங்கி விடுங்கள்.

அந்தச் சக்கிக்குள் மூழ்கி, அதற்குள்ளேயே உரங்கி விடுங்கள். நீங்கள் கண் விழிக்கும்போது, புத்துணர்ச்சியோடு அதிகம் சக்தி பெற்றவர்களாக உணர்வீர்கள்.

தியான சிகிச்சை ஒரு விஞ்ஞானப்பூர்வமான சேவை

மக்களின் துன்பத்திற்குக் குணமளிக்கும் தியான சிகிச்சை செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சேவை.

யார் வேண்டுமானாலும் உணவு, உடை, வெளிப்பொருட்களைத் தர இயலும், ஆனால், எல்லோராலும் மற்றவர்களைக் குணப்படுத்த இயலுமா? முடியாது.

இந்த வார்க்கைகள் எல்லாம் உண்மையைத் தவிர வேறெதுவும் கிடையாது.

மின்சார சக்திக்குத் தனியாக எந்தவொரு அறிவாற்றலும் கிடையாது.

ஆனால், நீங்கள் அதில் பல்பை இணைத்தவுடன் வெளிச்சம் தரும். நீங்கள் அதில் கையை வைத்தால், கையை வைத்தவுடன் மின்சார தாக்குதலையும் தரும்.அதுபோல், இந்தத் தியான சிகிச்சையானது, நோயாளிக்குள் ஆரோக்கியத்தையும், கையை வைத்து தியான சிகிச்சையைச் செய்பவருக்குள் ஜீவன் முக்த தாக்குதலையும் ஏற்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான சேவை.