170. ரன் இத்தனை மதங்கள் ?
# ரன் இத்தனை மதங்கள் ?
Why so many religions?
22. நம்முடைய கலாச்சாரத்தில் ஏன் இத்தனை மதங்கள் ?
- தேவதூத், சண்டிகார்
ஏனென்றால், நமது வேத பாரம்பரியம் அவ்வளவு வெளிப்படையானது.
வேத பாரம்பரியத்தைப்போல் திறந்த தன்மை (openess) வேறு எந்த மதத்திற்கும் கிடையாது.
சரணம் சொல்லிக்கொண்டு நேற்று வரைக்கும் என்று
இருந்து, ஒருவேளை இன்றைக்கு வேறு யாராவது ஒருவர், நமக்கு 'அதைவிட ஆழமான சத்தியத்தை உணர்த்துவேன்' என்று சொன்னால், உடனடியாக அதைக் கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது ..
சுதந்திரம் மட்டுமல்ல, அது நமக்குக் குறிக்கோளாகவே உரைக்கப்பட்டும் இருக்கிறது.
கோட்பாடுகள் இல்லாத மதம், நமது கலாச்சாரம்.
தேடுதல் ஒன்றையே ஆணிவேராகவும், அடித்தளமாகவும் கொண்டது நம் சனாதன தர்மம்.
யாராவது ஒருவர், நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் மதத்தை விட, ஆழமான ச த்தியத்தை உணர்த்துவேன் என்று சொன்னால், உடனடியாக முழுமையாக அவரைக் கடைபிடிப்பதற்கான சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆழமான ஒரு சத்தியத்தைக் காட்டுவார்களேயானால், அவர்களை முழுமையாக பின்பற்றுவதை உத்வேகப்படுத்துகின்ற காமம் நம் தா்மம்.
அதனால்தான், நமது தாமம் மனித மனத்தின் மிக உயர்ந்த முதிர்ச்சியையும். மிக உயர்ந்த பொறுப்புத் தன்மையையும், மிக உயர்ந்த இனிமைத் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற தர்மமாக இருக்கிறது.
நேற்று வரைக்கும் புத்தமதத்தில் இருந்து, இன்றைக்கு வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒரு ஞானி, உங்களுக்குச் சத்தியத்தை, அதைவிட ஆழமாகக் காட்டுவாரென்றால், வேத பாரம்பரியத்தைத் தழுவுவதை புத்தமதம் எதிர்க்கவில்லை.
அதேமாதிரி, இன்றுவரை வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவராக இருந்து, நாளை புத்தமதத்தை சேர்ந்த ஒரு ஞானி உங்களுக்கு ஞானத்தின் உச்சியை, உங்களுக்குத் தெரிந்ததைவிட, ஆழமாக ஒரு உச்சிக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியுமானால், நீங்கள் அவரை முழுமையாகக் கடைப்பிடிப்பதை வேத பாரம்பரியம் ஒருகாலும் மறுக்கவில்லை. மனிதனுக்குத் தேவையான முக்கியமான இந்தச் சுதந்திரத்தை அறிவதற்காகத்தான் இத்தனை மதங்கள் இந்தத் தாமத்தில் இருக்கிறது.

புத்தகப் பைத்தியமாக இருப்பது தவறா?
Is it wrong to be a book fanatic?
23.நான் ஒரு புத்தகப் பைத்தியம். படித்துப் படித்து இப்போது எதைப்பார்த்தாலும் அதைப்பற்றி நான்கு விஷயங்கள் தெரிகிறது. அதனாலேயே எதையும் அனுபவிக்க முடியவில்லை. என்னைவிட கம்மியாகப் படித்தவர்களெல்லாம் எல்லாவற்றையும் அரைபவிக்கிறார்கள். எனக்கு வர வர வர பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது?''
-பெனிட்டா, அஸ்ஸாம்.
அளவிற்கு மீறி தெரிந்து வைத்துக்கொண்டு, அது அனுபூதியாக மாறாதபோது, அவை நமக்குச் சுமையாகவே மாறிவிடுகிறது.
காலையில் எழுந்ததும், நாம் எல்லோரும் சாப்பிடுகிறோம். அந்தச் சாப்பிட்ட உணவு செரித்துவிட்டால், நம் உடம்பிற்கும் நல்லது, உடம்பிற்குச் சக்தி கிடைக்கும். நம் வயிற்றுக்கும் நல்லது. வயிறு சுலபமாக, இனிமையாக, காலியாக இருக்கும்.
அந்த உணவானது செரிக்கவில்லை என்றால் என்னவாகும் ?
நம் வயிற்றுக்கும் நல்லது அல்ல. வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்படும். அது மட்டுமின்றி நம் அருகில் யாராவது இருந்தால், அவா்கள் மேல் வாந்தி எடுப்போம். அந்தச் செயல் நமக்கும் நல்லது அல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது அல்ல.
நீங்கள் படிக்கும் கருத்துகள் உங்கள் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் சக்தியாக மாற வேண்டும். ஆனால், அந்த வார்த்தைகள் செரிக்கப்படாமல் இருந்தால், செரிக்கப்படாத உணவு வயிற்றில் பாரமாக இருப்பதைப் போல, இக்கருத்துகள் தலையில் பாரமாக இருக்கும்.
தலையின் பாரம், தலையில் கனமாக மாறினால் நமக்கும் தலைக்கனம் அதிகமாகும். பிறகு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு மேல் இந்தக் கருத்துகளை வாந்தி எடுத்துக் கொண்டே இருப்போம்.
செரிக்காத உணவுபோல், செரிக்காத கருத்துகளும் பாதகம் தரும். அது தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கு விளைவித்துக் கொண்டே இருக்கும்.
வாழ்க்கையில் பெரும் பகுதியைப் புத்தகம் படிப்பதில் செலவு செய்திருக்கிறீர்கள்.
நல்லது !
வார்த்தைகளில் இரண்டு வகை உண்டு.
முதலாவது : மனத்திற்கு அஜீரணத்தைத் தரும் வார்த்தைகள்.
இரண்டாவது : மனத்தையே ஜீரணிக்கும் வார்த்தைகள்.
முதல் வகை வார்க்கைகள், சாதாரண உணர்வு இருக்கும் மனிதர்களின் மனத்திலிருந்து வருவது. இது மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துச் சேகரித்து மனத்தைச் சிக்கலாக்கும். மனவோட்டத்தை அதிகரிக்கும்.
இரண்டாவது வகை வார்த்தைகள், உயர்ந்த உணர்வு நிலையில், மனம் கடந்த நிலையில் இருக்கும் ஞானிகளிடமிருந்து வருவது. அதனால்தான் ஞானிகளின் வார்த்தைகளை மந்திரங்கள் என்று சொல்வோம்.
ஞான வார்த்தைகள், வார்த்தைகளைச் சேகரிக்காது. அந்த வார்த்தைகளை சேகரிக்கும் மனத்தையே காலிசெய்துவிடும். மனத்தையே ஹீரணித்து விடும்.
எனவே, சொற்பொழிவுகளையும் படியுங்கள். பைத்தியம் பிடிக்குமளவிற்கு இருக்கும் மனத்தையே இது ஜீரணித்துவிடும்.
கடவுள் எப்பழ இருப்பார் ?
How will God be?
24. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருந்தால் அந்தக் கடவுள் எப்படியிருப்பார்? மனிதணைப்போல் இருப்பாரா?
- புபேஷ் கான்பூர்.
விவேகானந்தரிடம் ஒரு அன்பர் கேள்வி கேட்டார், ''சாமி! ராமகிருஷ்ணரை நீங்கள் ஒரு ஞானி என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். அவரைக் கடவுள் என்றும், அவதாரம் என்றும் சொல்கிறீர்களே அது சரியா?''
விவேகானந்தர் அந்த அன்பரைப் பார்த்து, ''அப்பா? கடவுள் என்றால் உனக்கு என்ன கெரியம் சொல் ?''
அதற்கு அவர், "கடவுள் என்பவர் எல்லாம் தெரிந்தவர்.
அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
எல்லாச் சக்திகளும் வாய்ந்தவர்.
எல்லா இடத்திலும் இருப்பவர்," என்று சொன்னார்.
அதற்கு, விவேகானந்தர் கேட்கிறார். ''எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம் ?''
அந்த அன்பர், "கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்," என்று சொன்னார்.

''தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றால் என்ன அர்த்தம்? எப்படி இருப்பார் ?' என்று கேட்டார்.
அந்த அன்பருக்குப் பரியவில்லை.
''நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று பரியுவில்லையே சாமி?'' என்றார்.
அடுத்து, விவேகானந்தர், செய்யக்கூடியவர், நீங்கள் சொன்னீர்கள் அல்லவா! அப்படி என்றால் நீங்கள் எந்த அளவு புரிந்துகொண்டீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.
அதற்கு அந்த அன்பர் ''உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை சாமி! ஏதோ எங்கேயோ புத்தகங்களில் இரண்டு மூன்று வார்த்தைகள் படித்து இருக்கிறேன். அதுதான் ஞாபகம் இருக்கிறது, '' என்று சொன்னார்.
விவேகானந்தர் ரொம்ப அழகாகச் சொல்கிறார், ''கடவுள் என்கிற வார்த்தைக்கு உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய விளக்கம் தெரியாது. கடவுள் என்றால் நாம் என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அதைவிடவும் ராமகிருஷ்ணா் உயர்ந்தவர்.
கடவுள் என்கிற வார்த்தைக்கு உங்களுக்கு என்ன பொருள் தெரியுமோ, அதைவிடவும் ராமகிருஷ்ணர் உயர்ந்தவர்,'' என்று விவேகானந்தர் சொல்கிறார்.
கடவுளை விட உயர்ந்தவர் என்றால், கடவுள் என்கிற வார்த்தைக்கு நாம் என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அந்தக் கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ராமகிருஷ்ணர். அதைத்தான் விவேகானந்தர் சொல்கிறார்.
பொதுவாக, நமக்கும் கடவுள் என்கின்ற வார்த்தைக்கும் மிகப்பெரிய விளக்கம் தெரிவது இல்லை.
யார் கடவுள் ? அவர் எங்கிருக்கிறார் ?
Is God there? or not there?
25. எந்தச் சத்சங்கத்திலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி, "கடவுள் இருக்கிறாரா, இல்லையா?"
'இல்லை' என்று சொல்பவர்களும் முட்டாள்கள். 'இருக்கிறார்' என்று சொல்லி வாதம் செய்பவர்களும் முட்டாள்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாதத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பொருள் அல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது வாத, பிரதிவாதங்களின் மூலமாகத் தெரிந்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு பொருள் அல்ல!
கடந்து, உள்ளிருந்து ... உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு.
'கடவுள் என்கிற வார்த்தைக்கு நமக்கு என்ன தெரியுமோ, அதைவிடவும் தாண்டிய நிலையில் இருப்பவர் ராமகிருஷ்ணர்,'' என்று விவேகானந்தா் சொல்கிறார்.
அதனால்தான், அவரைக் கடவுள் என்கின்ற வார்த்தையையும் தாண்டிய அவதாரப்புருஷர் என்று அழைக்கிரோன் என்கிறார்.