169. இந்தியாவின் பலம்
# இந்தியாவின் பலம்
India's strength
21. இந்தியாவின் பலம் எது?
- சார்லஸ், பெங்கால்
தங்களுக்குள் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் ஆழத்தைத் தேடுவதற்கும் திறந்த மனத்தோடு இருக்கும் சனாதன தா்மம்தான் இந்தியாவின் பலம்
இதுதான் நம்முடைய பாரத கலாச்சாரத்தின் ஆணி வேர்.
வேறு எந்த மதத்திலும், எந்தத் துறையிலும் இருப்பது போல, பயத்தாலோ ஆசைகாட்டுவதன் மூலமாகவோ வளர்க்கப்படாக தாமம்.
சத்தியத்தின் தேடுதல் ஒன்றையே ஆணிவேராகக் கொண்டு, ... ஆசையாலோ அச்ச த்தாலோ வளர்க்கப்படாமல், சத்தியத்தை உணர்த்துவதனாலேயே வளர்ந்த தா்மம் இது.
நமது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. நமது தாமத்தில் கடவுளேகூட சத்தியத்தை அடைவதற்கான ஒருபடிதான்.
கடவுள் என்கின்ற கருத்து எதற்காக என்றால், ஞானமடைவதற்காக உபயோகமாகும் ஒரு படியாகத்தான் இருக்கிறது. கடவுள்கூட சத்தியத்தை அடைகின்ற பாதையில் இருக்கின்ற ஒருபடிதான். கடவுளை நாம் இறுதியாக வைக்கவில்லை. சத்தியத்தை உணர்வதைத்தான் இறுதியாக வைத்தோம். அதற்கு ஒரு வழிதான் கடவுள். வாழ்வின் இலட்சியத்தை மீண்டும், மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும் தாமம்தான், இந்தியாவின் பலம்