168. வேத தா்மத்தை உருவாக்கியவர் யார்?
# வேத தா்மத்தை உருவாக்கியவர் யார்?
Who created the vedic dharma
20. இந்து தா்மத்தை வேத தர்மத்தை உருவாக்கியவர் என்று யாரும் இல்லையே, காரணம் என்ன ?
- சாந்தி, உடுமலைபேட்டை
இதே கேள்வியை வேறு ஒரு இடத்தில் என்னிடம் கேட்டபோது...
''சனாதன தா்மத்தில் உருவான ஒவ்வொருவரும், ஒரு மதத்தையே உருவாக்குகின்ற அளவுக்கு திறமையானவர்கள். அதனால், ஒரு ஆள்தான் இந்த மதத்தை உருவாக்கினார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதுதான் உண்மை,'' என்று சொன்னோம்.
சனாதன தாமத்திலிருந்து உருவான ஒவ்வொரு ஞானியுமே, ஒவ்வொரு மதத்தை உருவாக்குகின்ற தெளிவையும், ஆழத்தன்மையையும் உடையவர்கள். அந்தளவிற்கு ஞானத்தன்மையோடு வெளிப்பட்டவர்கள்.
யாரைச்
சொல்வது ?
யாரை விடுவது ?
உண்மையில் பார்த்தீர்களானால், சனாதன தர்மம் என்பது ...
Group of religions. It is not a single religion to be pointed by one person as a creater on founder.
பல மதங்களின், பல தா்மங்களின் பல குழுக்களின் ஒரு குழுமம்தான், நம்முடைய ச னாதன தர்மம். இந்து மதம்.
