Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

171. யாரும் புரிந்து கொள்வதில்லை ஏன்... ?

# யாரும் புரிந்து கொள்வதில்லை ஏன்... ?

No one understands... Why?

26.என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்?

  • முருகேசன்,கடப்பா

உங்களை மற்ற எல்லோரும் புரிந்துகொள்வது என்பது, இந்த ஜென்மத்தில் அல்ல.

எந்த ஜென்மத்திலும் நடக்காத காரியம்.

முதலில் உங்களை நீங்கள் புரிந்துகொண்டீர்களா ?

அதுவே அரைகுறையாக இருக்கும்பொழுது, ''மற்றவரெல்லாம் என்னைப் புரிந்துகொள்ள என்று வற்புறுத்துவதும், எதிர்பார்ப்பதும் வறட்டுப் பிடிவாதம்.

புரிந்துகொள்வார்கள் என நினைக்காதீர்கள். ''புரிந்து கொண்டேன்,புரிந்து கொள்வேன்,'' என வாழ ஆரம்பியுங்கள். இதனால் பிரச்சினை தீர்ந்தது. பிரகாசம் வந்தது, உங்கள் வாழ்வில் !

காம உணர்ச்சிகள் வாட்டுகிறது ... Lustful feelings are torturing me ...

27.காம உணர்ச்சிகள் என்னை வாட்டுகிறது. அவற்றை அடக்க நினைக்கி றன் முடியவில்லை வழி சொல்லுங்கள்.

  • இராகுல், காஞ்சி.

காமக்கை அடக்க முயற்சிக்காதீர்கள்,

கடக்க முயற்சியுங்கள்.

முதலில் எந்தவொரு உணர்ச்சியையும் அடக்குவது பாம்பை சும்மா அடிப்பதற்குச் சமம். அடிபட்டதும் அடியில் படுத்திருக்கும் பாம்பு, ஆறடி கூட எழும்பும், ஆச்சரியப்படுவதிற்கில்லை.

கோபத்தைக் கூட அடக்கக் கூடாது. கடக்க வேண்டும்.

யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே ...

Why no one is understanding Me?

28.நான் நல்லவன் என்பதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டங்கறாங்க ? எல்லாம் கலி முத்திப்போச்சு ... மட மனிதர்கள் மாறுவார்களா?

  • ஜேம்ஸ், திருச்சி.

கலிகாலங்க. இது நீங்கள் நல்லவா என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். நீங்கள் நல்லவர் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருப்பதே மாபெரும் முன்னேற்றம்தான்.

நல்லவன் நான் என சொல்வதும்

நல்லவன்போல் நடிப்பதும் - உங்களைக்

கெட்டவனாக்கிக் காண்பிக்கும்

நல்லவன் நான் என

சொல்லாதீர்! காண்பிக்காதீர்!

நல்லவனாகவே மாறிவி(டுங்கள்.

அதை உங்கள் செயல் முகபாவங்களில் முழுமையாய் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் குறை சொல்வதால் உங்கள் குறை நீங்காது.

மற்றவர் யாராயிருந்தாலும் அவரை மகான்போல் மதிக்கும் சத்ய யுகம் அல்ல இது இது கலிகாலம்.

நல்லவனாயிருப்பதோடு - புரியும் வகையில்

நல்லவனாய் வாழ்ந்து காட்டவேண்டும்.

  • இது கலியுக நெறி.

நரகம் செல்வேனா ?

Will I go to hell?

29. தவறு செய்தால் நரகம் செல்வேனா?

  • மணிமேகலை, மதுரை

தவறு செய்வதால் நரகம் செல்ல மாட்டீர்கள். நரகத்தில் வாழ்வதால்தான் தவறுகள் பல செய்வீர்கள். நொடிக்கு நொடி உங்களைத் துடிக்க வைக்கும் மன வேதனைகளே நரகம்

நரகம் புவியியல் ரீதியானது அல்ல ;

மனவியல் ரீதியானது.

எனவே, நரகம் பற்றித் துளிகூட பயம் வேண்டாம். நரக உணர்வுகளிலிருந்து வெளிவந்தாலே தவறு செய்ய மாட்டீர்கள். உயர்ந்த உணர்வுகளில் வாழ ஆரம்பியுங்கள்.

சொர்க்கத்திலேயே வாம்வீர்கள்.

தியானம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஜீவன் முக்தராயிருக்கிறீர்கள்.

எனக்கெல்லாம் தியானம் செய்ய நேரமில்லை என்று சொல்வது ...

எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் வர நேரமில்லை ...

எனக்கெல்லாம் நல்லது நடக்க நேரமில்லை ... என்று சொல்வது!

அந்தரங்க சக்திகளை திறக்கும் சாவி தியானம்

ஜென் ஞானியிடம்... "எது தியானம் ?" எனக் கேட்டார்கள் ''எது தியானமல்ல ?'' எனத் திருப்பிக் கேட்டாராம்.

''இது தியானம்,'' என வரையறுக்குமளவுக்கு வாழ்வின் பாகமல்ல தியானம் வாழ்வே தியானம்தான் !

வாழ்வில் தியானத்தைச் சேர்க்கக் கூடாது. தியானத்தில் வாழ்வைச் சேர்க்க வேண்டும்.

ஒரு கரு குழந்தையாகும் புனிதமான காலம் கா்ப்ப காலம். ஒரு மனிதன் ஜீவன் முக்தனாகும் புனிதமான காலம் தியான காலம்.