Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

166. 'மேடைப் பேச்சு' நினைத்தாலே பயமாயிருக்கிறது ...

# 'மேடைப் பேச்சு' நினைத்தாலே பயமாயிருக்கிறது

Just the thought of stage. talk scares me

  1. மேடைப்பேச்சை பற்றி நினைத்தாலே கைகால்கள் நடுங்குகின்றன. செயல்பட முயற்சித்தால், தொண்டை கட்டிக்கொள்ளுகிறது. ர்ஜ்யி நா வறண்டுவிடுகிறது. தியானத்தால் சரி செய்ய முடியுமா?
  • யாகவ், பெங்களுர்

சரி செய்ய முடியும். இதை பியர் ஆப் பா்பெக்ஷன் (Fear fo perfection) எனக் குறிப்பிடுவார்கள். எதைச் செய்தாலும் துல்லியமாகச் செய்தாகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை. எப்போதுமே எதையுமே கற்றக்கொள்ள முடியாது. எந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் வல்லுநராகும் முன் பல தோல்விகளைச் சந்தித்திருப்பார். அசிங்கமாகவும், தவறுதலாகவும் முடிந்த தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்களே நிபுணர்களாகிறார்கள்.

என முறையே வேண்டும் (மத்ல் தோல்விகளைக்கூட சந்திக்காத துரதிர்ஷ்டசாலிகள். ஒருவகையில் அதிர்ஷ்டமே. கைகால் நடுக்கத்தையும், வாய் குளறுதலையும் பற்றித் தயங்காதீர்கள். அவற்றைச் சந்தியுங்கள். தோல்விகள் வந்தாலும் அவை அதிாஷ்டங்களே. தொடர்ந்து போராடுங்கள். 'மேடைப் பேச்சு' உடல் சம்பந்தப்பட்டதல்ல. அது மனம் சம்பந்தப்பட்டது.

17. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

  • புவனேஷ், கோவை

இளைஞர்களுக்கு... எண்ணிக்கையையும், பெருகிவுரும் தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கையையும் ஆழ்ந்து பார்க்கும் போது, இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், தன்னைச் சுற்றியிருக்கும் சமுதாயத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்து, ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ள அவர்களுக்குள் மலரச் செய்யவில்லை என்றால், அவர்களுக்குள் இருக்கும் கட்டுக்கடங்காத கக்தியைக் கட்டவிழ்த்து நெறிபடுத்தவில்லையென்றால், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்...

30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வீட்டையோ, அலுவலகத்தையோ வைத்திருக்கலாம். ஆனால், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையே இருக்கும் பாதையில் நிம்மதியாக உங்களால் பயணிக்க முடியாது. இன்றைய அளவில் உயா்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்தப் பயமும், பாதுகாப்பின்மையும் வந்து விட்டது.

நாள் ஆக ஆக, காலம் செல்லச் செல்ல, நாம் பொறுப்பெடுக்காமல் இருந்தோமானால் அந்தப் பயம், அந்த அச்சம், மேல்தர மக்களிடமிருந்து மெதுமெதுவாக ஊடுருவி நடுத்தர மக்களுக்கும் வந்து விடுமானால், உங்களால் நிம்மதியாக வீதியில் உலவக்கூட முடியாது. உங்களால் நிம்மதியாக வாழ்க்கையை வாழ முடியாது.

மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நினைக்கின்ற பணத்தையும் அழையும் அடையலாம். உங்கள் வீடு இருக்கும். அலுவலகம் இருக்கும். ஆனால், வீட்டையும், அலுவலகத்தையும் இணைக்கின்ற சாலையில் நீங்கள் நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

தயவுசெய்து இந்த வார்த்தைகளை சாதாரண வார்த்தைகள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு அளிக்கப்படும் எச்சரிக்கை!

இதைப்படிக்கும் நீங்கள் முதியவர்களாக இருந்தால் ... எல்லோர்க்கும் இந்தக் கருத்தும், இந்த வாழ்க்கை முறையும் பொருந்தும், உங்கள் பொறுப்பை உணர்ந்து, உங்களுக்கு அடுத்துவரும். சமூதாயத்திற்கும், தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக உழையுங்கள் !

உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதற்காக உங்கள் வாழ்க்கையில் இந்தக் கருத்துகள் இளமையில் கிடைக்காமல் போய்விட்டதற்காகக் கவலைப்பட வேண்டாம்.

குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவது, இவையெல்லாம் கிடைக்கட்டும் என்று உத்வேகத்தோடு எடுத்துச் செல்லுங்கள்.

ஒரு அழகான கருத்தைப் படித்தேன். ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஒரு அன்பர், ஆசிரியர் எழுதியிருக்கிறார், ''நான் எப்படியெல்லாம் வாழ்க்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு, '' என்று.

நீங்கள் முதியவராக இருந்தாலும். சரி, வாழ்வை தவறால் வாழ்ந்தவராய் இருந்தாலும் சரி வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும் சரி, அடுத்த சமூதாயத்திற்கு, அடுத்த தலைமுறையினருக்கு இந்த வாழ்வியல் கருத்துகள் சென்று சேர்வதற்கு, உங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.

நீங்கள் இளைஞர்களாக இருந்தால், உங்களுக்கோர் அற்புதமான வாய்ப்பு. கவறவிடாகீர்கள்!

ஒராண்டு உங்களுக்குள், உங்கள் வாழ்க்கையைப் பற்றி, உங்கள் மனத்தைப் பற்றி, உங்களுடைய உணர்வுகளைப் பற்றி, ஆழ்ந்த ஒரு ஆராய்ச்சிக்குள் மூழ்குங்கள்.

ஒராண்டிற்குப் பிறகு உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும், எதை நோக்கிச் செல்வதனால் உங்கள் வாழ்க்கை மலரும் என்கின்ற தெளிவு உங்களுக்குள் பிறக்கும்.

அதை அடிப்படையாக வைத்து, உங்களுக்குள் மலரும் தெளிவை அடிப்படையாக வைத்து, நீங்கள் முடிவெடுக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் சக்தியிலிருந்து பொங்கி, சக்கியை நோக்கி மலர்வீர்கள்.

18. இவ்வளவு உயர்ந்த எுரனத்தை உணர்ந்து வாழ வாய்ப்பிருக்கிறதா? சாத்தியமானதா ?

  • புவனேஷ், கோவை

ஜாதி, மத, இன இன பேதமில்லாமல் அனைவருக்கும் வாழ்க்கையைப் பெற்றி ஆராய்வதற்காக, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவா்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுவதற்காக, வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொள்வதற்காக, ஒராண்டு உணவு, உடை, இருப்பிடத்தோடு இலவசமாக இந்த LBT என்கின்ற நிகழ்ச்சி யை நடத்திவருகிறது தியானபீடம்.

இது சமூகத்திற்கு நாங்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய பாங்களிப்பாகவும், எங்களுடைய அன்பின் கருதுகிறோம்.

மற்ற எல்லாச் சேவையையும்விட நிலையானது. ஞானதானம்!

மூன்று விதமான தானமுண்டு அன்னதானம், ஞானதானம், ஞானதானம். அன்னதானம் என்றால் உணவளித்தல்! அன்னதானத்தினால் மூன்று மணி நேரத்திற்குத் திருப்தியாக இருப்பார்.

வித்யாதானம் என்றால் கல்வி கொடுத்தல். இதனால் 30 ஆண்டுகளுக்கு அவர்கள் தங்களுக்குத் தாங்களாகவே சம்பாதித்து வெளியுலக வாழ்க்கைக்குத் தேவையானதையும் சம்பாகிக்குக் கொள்வார்கள்.

ஞானதானம் என்பது ஜென்ம ஜென்மத்திற்கும் தரப்படும் வாழ்க்கைப் பரிசு. வாழ்வைப் பற்றிய தெளிவைத் தரும் வாழ்க்கைக் கல்வி. உள்ளுலக வாழ்க்கையின் சொத்துகளையும், வெளியுலக வாழ்க்கையின் சொத்துகளையும் குவிக்க இலவசமாக வழங்கப்படுகிறது.

அன்னதானத்தை விடவும், வித்யாதானம் உயர்ந்தது; வித்யாதானத்தை விடவும் ஞானதானம் உயா்ந்தது.

ஞான தானமாக, இதை ஒரு மிகப் பெரிய சேவையாக, இந்த நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்கிறேன்.

இந்த அற்புதமான வாய்ப்பை இளைஞர்கள் முன் வைப்பதன் மூலமாக, இந்தச் சமூகத்திற்கு நம்மால் ஆன மிகப்பெரிய ஒரு சேவையைச் செய்ய முடியும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

வாழ்க்கையைப் பற்றிய பொறுப்பை உணர்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தை முழுமையாகத் தங்களுக்குள் உணர்ந்து கொண்டு, தங்களுக்குள் மலாவதுதான் உலகத்திற்குச் செய்யும் சேவை. 'தனக்குள் தான்' மலாவதற்கு, மலர வைக்கும் சூழ்நிலை தேவை, வாழ்க்கை முறை தேவை.

அந்த வாய்ப்ப்பை இலவசமாகத் தருவதை எங்களுடைய சேவையாகக் கருதுகிறோம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஜீவன் முக்தியை ஒருவர் தம்முள் மலர்த்துவதற்கு இந்த வாய்ப்பே போதுமானது

வேகவேகமாக ஒடும் குழப்பம் மிகுந்த இன்றைய வாழ்வில் சாத்தியமில்லாமல் போன இந்தச் சூமலை, துடிப்பு மிக்க வீர இளஞைநா்களுக்காக உருவாக்கித் தருவதை எங்களின் அன்பின் வெளிப்பாடாகச் செய்கிறோம்.

எப்படி ஒரு தொழிற்சாலையில் விஞ்ஞானரீதியாக பொருட்களை உருவாக்குகிறார்களோ, அப்படி ஜீவன் முக்தர்களை உருவாக்கும் ஞானத் தொழிற்சாலையைத்தான் LBT என்று சொல்கிறோம்.

உங்களை ஜீவன் முக்தராக்க உங்களுக்கு நீங்கள்தான் நேரடியாய் உதவ முடியும்.

எங்களால் அன்பு கரங்களைத்தான் நீட்ட முடியும்.

அதைப் பிடிப்பது நிச்சயம் உங்கள் கையில்தான் இருக்கிறது.