164. தியான சிகிச்சையாளரும் அதே சக்தி
# தியான சிகிச்சையாளரும் அதே சக்தி
படைத்தவரா... ?
Does the healer also carry the same energy?
1 4. ஞானிகள் தொட்டால் நோய்கள் குணமடையும் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. ஆனால், நீங்கள் தீதை கொடுத்த சாதாரண மனிதர்களும் தியான சிகிச்சையாளராக மாறியபின், நோய்களைக் குணப்படுத்துகிறார்களே! அதை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எப்படிச் சாதாரண மனிதர்களுக்கும் சாத்தியம் ஆகிறது ?
- பக்மாவதி, சேலம்.
ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், திருமதி பத்மாவதி.
ஞானிகள் நோய்களைக் குணப்படுத்துவதில்லை. குணப்படுத்துவதற்காக தனி மாயாஜாலங்கள் எதுவும் செய்வதில்லை.
ஞானிகள் தொடும் போது நோய்கள் குணமாகிறது.
இந்த இரண்டுக்கும் பெரிய விக்கியாசம் இருக்கிறது.
ஞானிகளின் ஆனந்த நிலையில் இருந்து வெளிப்படும் ஆனந்த சக்தி மனிதர்களுக்குள் பாயும் போது, சக்திக் குறைபாடுகள் சரியாகி நோய்கள் குணமாகிறது.
அற்பதங்கள் நிகழ்த்தப்படக் கூடாது.
அற்பதங்கள் நிகழ வேண்டும்.
தானாக நிகழ்ந்தால் அது அற்புதம். நிகழ்த்தப்பட்டால் அது மாயாஜாலம்.
நோய்கள் ஞானிகளால் குணப்படுத்தப்படுகிறது என்பதை விட, குணமாகிறது என்பதுதான் உண்மை.
NSP, BSP தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகு, மக்களுக்கு ஆனந்த சேவை செய்யும் துடிப்பு கொண்டவா்களுக்கு - தியானபீடத்தில் ஆனந்த தியான சிகிச்சைக்கான தீகைஷ் இலவசமாக அளிக்கப்படுகிறது
தீகைஷ் பெற்றவா்களுக்கு, அவர்களுக்கு உள்ளே ஆனந்த சக்தியோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான குட்சும சக்கி திறக்கப்படும். சக்கி நிரம்பியிருக்கும்.
ஆனந்த கந்த சக்கரத்திலிருந்து. ஆனந்த சக்கியைப் பெற, தியானம் ஒன்று கற்றுத் கரப்படுகிறது. ஞானத்திற்குச் சுலபமாக அமைத்துச் செல்லும் தியானங்களில் இதுவும் ஒன்று. தீகைஷ் பெற்றவர்கள், ஆனந்த கந்த தியானத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
சில நிமிட தியானத்திற்குப் பிறகு, அவா்களின் உள்ளிருந்து பொங்கும் ஆனந்த சக்தி, அதாவது தியான சக்தி, அவர்களை முழுவதுமாக நிரப்பிய பின், அது மிகுந்து பொங்கி வெளிப்பட ஆரம்பிக்கும்.
நீங்களே சுயமாக அனுபவித்து உணரும் வரை, இதைத் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும்.
அவர்களை நிரப்பிய பின், தொடர்ந்து வழிந்து வெளிப்படும் தியான சக்திதான் -நோயாளியின் மீது சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.
இந்தச் சக்தி, சக்கரங்கள் (Energy Centres) மூலமாக நோயாளிக்குள் செல்கிறது.
காற்று கீழிருந்து மேலே செல்ல முயற்சிக்கும்,
தண்ணீர் தாழ்வான பகுதி நோக்கி பரவ முயற்சிக்கும்,
மின்சாரம் பாய்வதற்கு தோதான இடம் நோக்கி பாய முயற்சிக்கும்,

தியான சக்தி (ஆனந்த சக்தி), சக்தி குறைபாடு (Low energy) இருக்கும் இடம் நோக்கி நிரம்ப முயற்சிக்கும்.
சக்திக்கென்று தனி ஞானம் உண்டு. தேவைப்படும் இடத்திற்குத் தானே சென்று சேரும். காற்று. தண்ணீர். மின்சாரம்போல் சக்கி செயல்பாட்டையம். அறிவியல்பர்வமாக விளக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தியான சிகிச்சையாளர்கள், அவர்களின் ஞானப் பாதையில் முன்னேற செய்யும் தியானத்தின் ஒரு அருமையான பக்க விளைவுதான் நோய் குணமாகுதல்.
நோய்கள் குணப்படுத்தப்படுவதில்லை; குணமாகிறது. எனவேதான், இது அற்புதமாய்த் தெரிகிறது.
இந்த அற்புதம் உங்கள் மூலமாக நிகழ்ந்து நீங்களே அனுபவப்படாத வரை, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கத்தான் செய்யும். ஆனால், இது ஆச்சரியப்படும் அளவுக்கு மாயாஜாலம் அல்ல, இது ஒரு தியான வெளிப்பாடு அவ்வளவே. யார் வேண்டுமானாலும் தியான சிகிச்சைக்கான தீகைஷைப் பெற்று தியான சிகிச்சையை தர முடியும்.